பொருளடக்கத்திற்கு தாவுக

தேவி மாஹாத்ம்யம் – தேவியின் மகிமை

பிப்ரவரி 22, 2014

தேவி மாஹாத்ம்யம் – தேவியின் மகிமை

தேவி மாகாத்ம்யம், துர்கா சப்த சதி என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தோத்திரம் ஆறு அங்கங்கள் கொண்டது. கவசம், அர்களா, கீலகம், ரஹுஸ்யத்ரயம் என்ற மூன்று. சங்கல்பம் செய்யும் பொழுது மற்ற மந்திரங்களுக்கு உள்ளது போலவே, கவசம் – இதுவே பீஜம் , அர்களம் – சக்தி, கீலகம் – கீலகம். கவசம் அல்லது பீஜம், நமது உலகை ரக்ஷiக்கும்.

மார்கண்டேயர் சொன்னார். பரம்மாவை பார்த்து, பிதாமஹு (பாட்டனாரே) எது உலகில் ரஹுஸ்யமானதோ, அரசர்களையும், மற்றவர்களையும் காப்பாற்றக் கூடியதோ, இது வரை யாரும் அறியாததோ, அதை எனக்குச் சொல்லுங்கள்.

ப்ரும்மா சொன்னார். அப்படி ஒரு பரம ரகசியமான மந்திரம் இருக்கிறது.  எல்லா ஜீவன்களுக்கும் உபயோகமானது. அது தான் தேவியின் கவசம். சொல்கிறேன் கேள். முதலாவது, சைலபுத்ரி, (2) ப்ரும்மசாரிணீ (3) சந்த்ர கண்டா, (4) கூஷ்மாண்டா (5) ஸ்கந்த மாதா (6) காத்யாயனி, (7) காளராத்ரி, (8) மகா கௌரி, (9) சித்தி தாத்ரி – என்று நவதுர்கா என்ப்படுவர்.
ப்ரும்மா சொன்ன இந்த பெயர்களே மந்திர சக்தி வாய்ந்தவை. எனவே இவைகளை, தீ விபத்தில் அகப்பட்டுக் கொண்டாலோ, சத்ருக்கள் மத்தியில் செய்வதறியாது நிற்க நேர்ந்தாலோ, மிக கடினமான பாதை, வழி தவறி விட்டது என்றாலும், வேறு எந்த கஷ்டம் என்று சரணடைந்தாலும் பக்தியுடன் இந்த தேவியை, இந்த பெயர்களை நினைப்பவர்களுக்கு எந்த தீங்கும் நேராது. அவர்களுக்கு மேன் மேலும் ஸம்ருத்தி – எல்லா விதமான செல்வங்களை, நிறைவை தேவி அளiக்கிறாள்.

தேவர்களுக்கும் தலைவியானவளே, உன்னை நினைந்து வேண்டுபவர்களுக்கு நீ, நிச்சயம் காப்பாற்றுவாய் அல்லவா.
1.    ப்ரேத ஸம்ஸ்தா – உயிர் பிரிந்த  உடலை வாகனமாக கொண்டவள் –           சாமுண்டா  
2.    மகிஷத்தை ஆஸனமாக கொண்டவள் – வாராஹி
2.    கஜத்தின்(யானை) மேல் ஏறி வருபவள் – ஐந்த்ரி
3.    கருடனை ஆஸனமாக உடையவள் – வைஷ்ணவி
4.    ரிஷபத்தின் மேல் ஆரோஹித்து பவனி வருபவள், மாகேஸ்வரி
5.    சிகி (மயில்) வாகனாவாக வருபவள், கௌமாரி
6.    பத்மஸனாவாக லக்ஷfமி, பத்மங்களை கையில் வைத்திருப்பவள், (அல்லது) பத்மம் போன்ற கைகளை உடையவளான லக்ஷfமி- ஹுரிப்ரியா
7.    ரிஷப வாகனாவான தேவி ஈஸ்வரி, வெண்ணிறத்தவள்.
8.    ஹும்ஸ வாகனா என்பவள் – ப்ராஹுfம்மி     
    
    எல்லா விதமான ஆபரணங்களுடன் விளங்கும் இவர்களை மாதர|| – தாய் மார்கள் என்று சொல்வார்கள்.
    
    
    எல்லோருமே எல்லா வித யோக சாதனைகளும் நிரம்பியவர்கள். பலவிதமான ஆபரணங்கள், ரத்னங்கள் உள்ளவர்கள். போர் என்றதும், ரதங்களiல் ஏறி, வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் வந்து சேர்ந்தனர். சங்கம், சக்ரம், கதா, சக்தி, முஸலம், கேடகம், தோமரம், பரசு, பாசம், குந்தாலம், த்ரிYசூலம், சார்ங்கம் என்ற உத்தமமான ஆயுதம், இவைகளை பக்தர்களுக்கு அபயமளiத்து, காக்கவும், எதிரிகளான தைத்யர்களை அழிக்கவும் தேவி இவ்வளவு ஆயுதங்களைத் தாங்கி வருகிறாள். அதில் தான் தேவர்களiன் நன்மையும் அடங்கியிருக்கிறது.
    
    அந்த மகாரௌத்ரே உனக்கு நமஸ்காரம். மகா பயங்கரமான பராக்ரமம் உடையவளே, மகா மாயே, மகோத்ஸாEஹு, மகா பய விநாசினி
    பயம் எங்களை நெருங்காமல் காப்பாற்று. மகா பலசாலிகளான சத்ருக்களுக்குத் தான் நீ பய வர்தினீ-பயத்தை வளர்ப்பவள். பக்தர்களுக்கு வரம் அளiப்பவள் நீ.
    1. ஐந்த்ரி- இந்திரனுடைய சக்தி – கிழக்கு திசையில் எங்களை காக்கட்டும்  2. அக்னீ தேவதா          –  ஆக்னேயம் (தென் கிழக்கு)  
                                      திசையில் எங்களை காக்கட்டும்
    3. வாராஹி                –  தெற்கு திசையில் எங்களை  காக்கட்டும்
    4. கட்க தாரிணி –  நிர்ருதி (தென் மேற்கு) திசையில் எங்களை காக்கட்டும்
    5. வாருணீ     –   மேற்கு திசையில் எங்களை காக்கட்டும்
    6. ம்ருக வாஹிணீ (சிங்க வாகனம்) – வாயவ்யம் (வட மேற்கு) திசையில் எங்களை காக்கட்டும்
    7. கௌமாரி    –    வடக்கு திசையில் எங்களை காக்கட்டும்
    8. Yசூலதாரிணீ –  ஈசானம் (வட கிழக்கு) திசையில் எங்களை காக்கட்டும்.
    9. மேல் நோக்கி – (ஆகாயம்  ஒரு திசை) ப்ரும்மாணீ
9.    கீழ் நோக்கி  – (பூமி ஒரு திசை) வைஷ்ணவி

இப்படி பத்து திசைகளiலும் சாமுண்டா காக்கட்டும். அவளோ சவ வாகனா என்று பெயர் பெற்றவள். உயிர் பிரிந்த சரீரத்தை தன் வாகனமாக கொண்டவள். ஜயா என் முன்னால் காக்கட்டும். விஜயா – பின்னால், அஜிதா – இடது பாகம், தெற்கில் அபராஜிதா காக்கட்டும்.

என் கேசத்தை உத்யோதினி ரக்ஷiக்கட்டும். உமா உச்சம் தலையில் இருந்து காக்கட்டும். நெற்றியில் மாலா தரியும், புருவங்களை யஸஸ்வினியும், புருவ மத்தியில் த்ரி நேத்ராவும், மூக்கை யம கண்டாவும், காக்கட்டும்.

கண்களுக்கு மத்தியில் சங்கிணீ, காதுகளை துவார வாஸினீ, கபாலத்தை காளiகா, காதின் உள் பாகத்தை, சாங்கரி, மூக்கினுள் சுகந்தா என்பவளும், மேல் உதடுகளை சர்ச்சிகா என்பவளும், அதரத்தில் அம்ருத கலா, நாக்கில் சரஸ்வதி, பற்களை கௌமாரி காக்கட்டும்.

கழுத்து பிரதேசத்தை சண்டிகா ரக்ஷiக்கட்டும். சித்ர கண்டிகா என்பவள் கண்டிகாவில் இருக்கட்டும். மகா மாயா வாயினுள் அண்ணத்திலும், முகவாயை காமாக்ஷi காக்கட்டும்.

என் வார்த்தைகளை சர்வ மங்களா காக்கட்டும்.  கழுத்தில் பத்ரகாளi வாசம் செய்யட்டும். பின் புறம் தனுர்தரி, நீலக்ரீவா என்பவள் வெளi கழுத்தை, நளகூபரி என்பவள் கழுத்து நாளம், புஜங்களiல் கட்கிணீ காப்பாற்றட்டும். என் கைகளை வஜ்ர தாரிணியும், கை, கால் சந்திகளை கட்கிணியும், முன் கையை வஜ்ர தாரிணியும், கைகளை தண்டிணியும், விரல்களை அம்பிகாவும் காக்கட்டும். Yசூலேஸ்வரி நகங்களை காக்கட்டும். வயிற்றுப் பகுதியை குலேஸ்வரியும், ஸ்தனங்களை மகா தேவியும் ரக்ஷiக்கட்டும். மனதை சோக வினாசினி, ஹுfருதயத்தில் லலிதாவாக, உதரத்தில் (வயிற்றில்) Yசூலதாரிணியும், மேட்ரம் என்ற பகுதியை பூதனா,
குதத்தை மகிஷ வாஹினியும், இடுப்பில்  பகவதியும், முழங்கால்களை விந்த்ய வாசினியும், மகா பலா துடைகளையும், குல்பங்களை நாரசிம்ஹியும், பாதத்தின் பின் பகுதியை, தேஜஸியும், காக்கட்டும்.  பாத விரல்களiல் ஸ்ரீ வஸிக்கட்டும், தம்ஷ்ட்ராகராளi நகங்களை ரக்ஷiக்கட்டும். ஊர்த்வ கேசினியாக எங்கள் கேசத்தை ரக்ஷiக்கட்டும். ரோம கால்களiல், கௌபேரி என்பவளாக, தோல் பகுதியை வாகீஸ்வரியும், தக்தம், மஜ்ஜ, மாம்ஸ,அஸ்தி (எலும்பு) மேதஸ் இவைகளை, பார்வதி ரக்ஷiக்கட்டும். அந்த்ரங்களை காள ராத்ரியும், பித்தம் என்பதை முகுடேஸ்வரியும், பத்மகோசத்தில் பத்மாவதியும், கபத்தில், Yசூடாமணியும், ஜ்வாலாமுகீ நகங்களiன் ஒளiயாகவும், அபேத்யா என்பவள், கை கால் சந்திகளiலும், சுக்ரம் ப்ரும்மாணீ ரக்ஷiக்கட்டும், சாயா (நிழலை) சத்ரேஸ்வரி என்பவள், தர்ம தாரிணியாக, அஹுங்காரம், என் மனம், புத்தி இவைகளை காக்கட்டும். ப்ராண.அபான, வ்யான, உதான, ஸமானகம் இவைகளை, வஜ்ர ஹுஸ்தா காக்கட்டும். கல்யாண சோபனா என்பவளாக என் ப்ராணனை காக்கட்டும்.
ரஸம், ரூபம், கந்தம், சப்தம், ஸ்பர்ஸம் என்ற குணங்களை யோகினீயாக, நாராயணியாக, சத்வ, ரஜஸ், தமஸ் என்ற குணங்களையும், காக்கட்டும். என் ஆயுளை, வாராஹியும், வைஷ்ணவி என் தர்மத்தையும், சக்ரிணியாக, என் புகழ், கீர்த்தி, லக்ஷfமி, தனம், வித்யா முதலியவைகளை காக்கட்டும். இந்த்ராணீ கோத்ரத்தைக் காக்கட்டும். சண்டிகா என் பசுக்களை ரக்ஷiக்கட்டும். மகாலக்ஷfமி புத்ரர்களையும், பைரவி, மனைவியையும் காக்கட்டும். நான் போகும் வழிகளை சுபதாவாக, (சுபத்தை தருவதாக) மார்கங்களை Eக்ஷமகரியும், ராஜத்வாரங்களiல் நிற்க நேரிடும் பொழுது, மகாலக்ஷfமியும், விஜயா எல்லா இடங்களiலும் நின்றும் காக்கட்டும். கவசம் இல்லாமலோ,  வேறு பாதுகாப்பு இல்லாமலோ, நான் இருக்க நேர்ந்தால், அங்கெல்லாம், ஜயந்தி, பாபநாசினியாக இருந்து ரக்ஷiக்க வேண்டும் தாயே. தனக்கு சுபமானது நடக்க வேண்டும் என்று விரும்பினால், ஓரடி கூட கவசம் இல்லாமல் போகக் கூடாது. (இந்த ) கவசத்துடன் போகும் இடமெல்லாம் அர்த்தம் (பொருள்) லாபம், விஜயம் (வெற்றி) மற்றும் விருப்பங்கள் அனைத்தும் நிச்சயமாக அடைவான்.  பரமைஸ்வர்யம் என்பதை பூலோகத்திலேயே அடைவான். யுத்தம் என்றால் பயமின்றி எதிர்த்தவர்களை வெல்வான். இந்த கவசம் பாதுகாப்பாக இருக்கும் பொழுது, உலகில் பெரிதும் மதிக்கப்படுவான். இந்த தேவி கவசம் தேவர்களுக்கு கூட எளiதில் கிடைக்காது. பக்தி ஸ்ரத்தையுடன் மூன்று வேளையும் யார் படிக்கிறார்களோ, அவர்கள் தெய்வீகமான அருளை பெறுவார்கள். தோல்வி என்பதே இல்லாமல் வாழ்வார்கள். நுaறு ஆன்டுகள் வாழ்நாளும், அபம்ருத்யு என்ற அல்பாயுள் அண்டாமல் திருப்தியாக வாழ்வார்கள். வியாதிகள் போகும், வெடி, திருட்டு முதலானவைகளiல் செல்வத்தை பறி கொடுக்க நேரிடாது. ஸ்தாவரம், (அசையாத) ஜங்கம (அசையும்), செயற்கையான விஷம், எல்லாவிதமான அபிசாரம் (ஏவல், வினை), மந்த்ர, யந்த்ரங்கள் (கெடுதலை விளைவிக்க பயன்படுபவை, – இவை பூலோகத்திலும், ஆகாயத்திலும், (தேவ லோகத்திலும்), நீர் வாழ்வன, மற்ற தேசங்களiல் வாழ்பவர்கள்,  இவர்கள் மூலம் பயமோ, ஆபத்தோ வராது. ஸஹுஜா, குலஜா, மாலா, டாகினீ, சாகினீ, அந்தரிக்ஷத்தில் சஞ்சரிப்பவர்கள்,  கோரமான டாகினிகள், மகா பலம் பொருந்திய ப்ரும்ம ராக்ஷஸ, வேதாளங்கள், கூஷ்மாண்டா, பைரவர்கள், இந்த தேவி கவசத்தை மனதில் ஸ்மரித்துக் கொண்டிருக்கும் பக்தர்களை தரிசித்த மாத்திரத்தில் நாசம் அடைவார்கள்.   அரசர்கள் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள், மேன் மேலும் தேஜஸ் வளரும். புகழ் பரவும். உலகில் புகழோடு வாழ்வார்கள்.

கவசத்தை படித்தபின், சப்த சண்டி என்ற துதியை படியுங்கள். மலைகளும், மரங்களும், வனங்களுமாக இந்த பூமி உள்ள வரை உங்கள், புத்ர, பௌத்ர என்று சந்ததி நிலைத்து நிற்கும். தேகத்தை விட்ட பின்னும், பரம்-உயர்ந்த ஸ்தானம் கிடைக்கும். தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய ஸ்தானம் இது.  இதை மகா மாயாவின் அருளiனால் பெறுவதோடு, சாக்ஷaத் சிவபெருமானுக்கு சமமான ஆனந்தமான ரூபத்தையும் பெறுவார்கள்.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக