அத்யாயம் – 13
த்யானம் – இளம் சூரிய மண்டலத்தில் விளங்குபவள். நான்கு புஜங்களும், மூன்று கண்களும் உடையவள். பாச, அங்குசம், வர, அபீதி, முத்ரைகளைத் தாங்கியவள், சிவ பத்னியான சிவா – மங்களாவான தேவியை பஜிக்கிறேன்.
ரிஷி சொன்னார் – அரசனே ! இதுவரை உத்தமமான தேவி மாகாத்ம்யத்தைச் சொன்னேன். இந்த உலகையே தாங்குகிற தேவியின் பிரபாவம் மிக உயர்ந்தது பகவான் விஷ்ணுவின் மாயையால், வித்யா என்று தோன்றுகிறாள். அவளே நீயும் இந்த வைஸ்யனும், விவேகம் உள்ளவர்களான மற்ற பலரும் மோகத்தில் ஆழ காரணமாக இருக்கிறாள். ஏற்கனவே மோகத்தில் மூழ்கி இருப்பவர்களும், வேறு விதமான மோகத்தை அடைகிறார்கள். மகா ராஜா, அவளை சரணம் அடையுங்கள். பரமேஸ்வரியான அவள், தன்னை வணங்குபவர்களுக்கு, அரசர்களோ யாரானாலும் போகங்களை, ஸ்வர்கங்களை தருபவள்.
மார்கண்டேயன் சொன்னார் – இப்படி அவர் சொல்லவும், சுரதன் என்ற வைஸ்யனும், அரசனும், மகா பா4கா என்று போற்றப் படும் தேவியை வணங்கினர். விரதங்களை செய்து, கனிந்து இருந்த ரிஷியிடமும் வணங்கி விடை பெற்றனர். ராஜ்யத்தை பறி கொடுத்ததால் வருந்தியவன், அதற்கு காரணம், தன்னுடையது, தான் என்ற அபிமானம் தான் என்று உணர்ந்து தவம் செய்வதில் ஈடுபட்டான். அந்த வைஸ்யனும், அம்பாளை தரிசிக்க விரும்பி, நதி மணலில் இருந்து தவம் செய்தான். உயர்ந்ததான தேவி சூக்தத்தை ஜபித்தான். மணலிலேயே தேவியின் மூர்த்தத்தை ஸ்தாபனம் செய்து, புஷ்பம், தூபம், அக்னி இவைகளை அளித்து, பூஜித்தான்.
ஆகாரத்தை விட்டும், மிதமாக சாப்பிட்டும், தேவியை மனதில் இருத்தி, ஒருமைப் பாட்டுடன், பலி கொடுத்து, அதுவும் தங்கள் சரீரத்திலிருந்து கீறிக் கொண்டு, இப்படி மூன்று வருஷங்கள் ஒரே நினைவோடு ஆராதித்து வந்தனர். உலக நாயகியான சண்டிகா, மிக மகிழ்ந்து ப்ரத்யக்ஷமானாள்.
தேவி சொன்னாள் – அரசனே, குல நந்தனனான வைஸ்யனே நீயும் எதை எண்ணி தவம் செய்தீர்களோ, அதை என்னிடம் கேளுங்கள். மிக்க மகிழ்ச்சியுடன் அனைத்தையும் தருகிறேன். – என்றாள்.
மார்கண்டேயர் சொன்னார் – உடனே அரசன் இழந்த ராஜ்யம் வேண்டும். சத்ரு பயம் நீங்க வேண்டும். அடுத்த பிறவியிலும், குறைவில்லாத ராஜ்யம் வேண்டும் என்று வேண்டினான். f வைஸ்யனோ, ஞானம் வேண்டும் என்றான். மனதில் வருத்தமே இல்லாமல், நான் எனது என்ற அபிமானம் தோன்றாமல், சங்கத்தால் வரும் உயர்வு தாழ்வு எதுவும் இல்லாமல் சிறந்த ஞானியாக வேண்டும் என்றான்.
தேவி சொன்னாள். – அரசனே, சில நாட்களிலேயே, உன் ராஜ்யத்தை திரும்பப் பெறுவாய். உன் எதிரிகளை அடியோடு அழித்து, உன் ராஜ்யத்தை நலமாக ஆண்டு வருவாய். இறந்த பின் விவஸ்வத தேவர்களிடமிருந்து திரும்ப ஜன்மம் பெற்று, சாவர்ணிகன் என்ற பெயருடன், மனுவாக நீ பூமியில் தோன்றுவாய். வைஸ்யவரனே, நீ கேட்ட வரமும் தருகிறேன். என்னிடம் நீ விரும்பி கேட்டபடி, உன் தவத்தின் சித்தி (நிறைவு) நல்லபடியாக அமைய ஞானம் தருகிறேன். அந்த ஞானமே உன் மேன்மைக்கு காரணமாக அமையும்.
மார்கண்டேயன் சொன்னார் – இப்படி அவர்கள் விரும்பியபடி வரங்களைக் கொடுத்து விட்டு மறைந்தாள். உடனே அவர்களும் பக்தியுடன் துதி செய்தனர். இப்படியாகத் தான், தேவியிடமிருந்து சுரதன் என்ற க்ஷத்திரியன் விவஸ்வான் என்ற சூரியனிடமிருந்து ஜன்மம் கிடைக்கப் பெற்று, சாவர்ணீ என்ற மனுவாக பிறப்பான்.
இப்படியாகத் தான், தேவியிடமிருந்து சுரதன் என்ற க்ஷத்திரியன் விவஸ்வான் என்ற சூரியனிடமிருந்து ஜன்மம் கிடைக்கப் பெற்று, சாவர்ணீ என்ற மனுவாக பிறப்பான்.
ஓம் தத் ஸத் ||