பொருளடக்கத்திற்கு தாவுக

அத்யாயம் – 5

பிப்ரவரி 24, 2014

  

த்யானம் – மணி, சூலம், ஹுலம் (கலப்பை), சங்கம், சக்ரம், முஸலம், வில், அம்புகள் இவைகளை, பூ போன்ற தன் கைகளால் தரித்துக் கொண்டிருப்பவளும், இருளை அகற்றும் குளiர்ந்த நிலவொளி போன்ற ஒளியுடையவளும்,  கௌரியின் சரீரத்திலிருந்து தோன்றியவளும், மூவுலகத்திற்கும் ஆதாரமாக இருப்பவளும், மஹா என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவளுமான சரஸ்வதியை தினமும் வணங்குகிறேன். சும்பன் முதலான அசுரர்களை வதைத்தவள் இவளே.

ரிஷி சொன்னார் (1)

முன்னொரு காலத்தில், சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களால், சசிபதி= சசியின் பதியான இந்திரனிடமிருந்து மூவுலகமும், யாகத்தில் பங்கு பெறும் உரிமையும் அபகரிக்கப் பட்டன. அவர்களது அளவில்லாத உடல் பலமே இவ்வகையில் அக்கிரமம் செய்யத் தூண்டியது எனலாம். தவிர, இந்த இருவர்களே, சூரியனுடைய அதிகாரம், சந்திரனுடைய, குபேரனுடைய, யமனுடைய, வருணனுடைய அதிகாரங்களையும் கைப்பற்றினர். அந்த இருவரே வாயுவின் அதிகாரத்தையும் கைப்பற்றி, அக்னி காரியங்களையும் தாங்களே செய்யலாயினர். தேவர்கள் தவித்தனர். ராஜ்யம் போயிற்று.  தோல்வியின் அவமானத்தால் வாடினர்.    அதிகாரங்களை இழந்து விட்டதால், உடன் இருந்த மற்ற தேவர்களாலேயே ஒதுக்கப் பட்டனர்.

அந்த சமயம் தேவியின் அருள் வாக்கு நினைவுக்கு வந்தது. ஆபத்து காலத்தில் நினைத்தாலே வந்து பாலிப்பதாக வரம் அளித்திருக்கிறாளே. எப்படிப்பட்ட ஆபத்தானாலும் அந்த க்ஷணத்திலேயே நாசம் செய்து விடுகிறேன் என்றல்லவா சொல்லியிருந்தாள். அவளே மற்ற யாராலும் வெல்ல முடியாத பராக்ரமம் உடையவள். மகா அசுரர்கள் இருவராலும் இந்த நிலைக்குத் தள்ளப் பட்டோம். இந்த சமயம் காப்பாற்றக் கூடியவள் அவளே. இந்த புத்தி வந்தவுடன், தேவர்கள் மலையரசனான ஹிமவானை நாடிச் சென்றனர். விஷ்ணு மாயையான தேவியை துதிக்கலானார்கள்.

தேவர்கள் சொன்னார்கள் – (8)

 

1. சிவா – சிவ பத்னியான, (மங்களமான) தேவியை வணங்குகிறோம். மகா தேவி அவளே.  அவளை வணங்குகிறோம். ப்ரக்ருதி – இயற்கையாக இருப்பவள், ப4த்3ரா – நன்மைகளைத் தருபவள், அவளை என்றும் வணங்கி நிற்கிறோம்.

2. ருத்ரனுடைய குணம் உடைய ரௌத்ரா, நித்யா, கௌரீ, தா3த்ரி என்ற பெயர்களையுடைய தேவிக்கு அனேக கோடி நமஸ்காரங்கள்.  ஜ்யோத்ஸ்னா – Yசூரியனின் ஒளiயாக,  சந்திரனின் உருவமாக, சுகா2 – சௌக்யமே உருவானவள்.

3. கல்யாணி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுபவள் இவள். வணங்கும் அடியார்களுக்கு நிறைந்த செல்வத்தை அளிப்பவளான இந்த தேவிக்கு திரும்பத் திரும்ப நமஸ்காரங்கள். நிர்ருதி (தென் மேற்கு திசை) யாக இருப்பவள், அரசர்களின் ஐஸ்வர்யமாக இருப்பவள், சர்வாணீ என்ற பெயருடையவளான உனக்குத் திரும்பத் திரும்ப நமஸ்காரங்கள்.

4. துர்கா, கடக்க முடியாத கோட்டைகளை கடக்க அருளுபவள், சாரா, (முழுமையானவள்) சர்வ காரிணீ, க்2யாதி (புகழ்) க்ருஷ்ணா, து4ம்ரா இந்த பெயர்களுடன் இருப்பவளைத் திரும்பத் திரும்ப வணங்குகிறேன்.

5.            அதி சௌம்யமாக இருப்பவள்.  இவளே, சமயங்களiல், அதி ரௌத்ரமாகவும் காட்சி தருபவள், என்று உலகில் வணங்கப் படுபவள். அவளுக்கு நமஸ்காரம்.  உலகை நிலை நிறுத்தி வைப்பவள். தேவி, க்ருதி என்றும் சொல்லப்படுகிறாள். அவளுக்குப் பல பல நமஸ்காரங்கள்.

6.            எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களiல், மாயையாக இருப்பதால், விஷ்ணு மாயா என்று போற்றப் படுகிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம். அவளுக்கு நமஸ்காரம்.

7.            எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களiல் அறியும் உணர்வாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

8.            எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் புத்தி ரூபமாக இருக்கிறாளோ,    அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

9.            எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் நித்ரா ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

10.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் க்ஷுதா4 (பசி) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

11.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் சா2யா (நிழல்) ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

12.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் சக்தி ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

13.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் த்ருஷ்ணா (தாகம்) ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

14.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் க்ஷாந்தி ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

15.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் ஜாதி ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

16.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் லஜ்ஜா  ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

17.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் சாந்தி  ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

18.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் ஸ்ரத்தா (ஈடுபாடு) ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

19.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் காந்தி (ஒளி)  ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

20.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் லக்ஷ்மி ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

21.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் வ்ருத்தி (தொழில்,செய்கை)  ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

22.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் ஸ்ம்ருதி (நினைவு)  ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

23.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் தயா (கருணை)  ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

24.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் துஷ்டி (திருப்தி)  ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

25.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் மாத்ரு (தாய்)  ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

26.          எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் ப்4ராந்தி (மன பிரமை)   ரூபமாக இருக்கிறாளோ,   அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.

27.          ஜீவன்கள் அனைத்துக்கும், அவர்கள் புலன்களை நடத்திச் செல்லும் சக்தியுடையவள், உலகம் முழுவதும் பரவி நிற்கும் (வியாபித்து நிற்கும்) வ்யாப்தி தேவியை, வணங்குகிறேன்.

28.          சித் – என்ற ரூபத்துடன், உலகில் (சராசரங்கள்) ஒன்று விடாமல் நிறைந்து நிற்பவளான தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன். 

29.          இவ்வாறு தேவர்கள் துதித்தனர்.  முன்பும் தங்கள் தேவைகள் நிறைவேற வேண்டி நாள் தோறும் துதித்தவன் தானே சுரேந்திரன். தற்சமயம், தேவர்கள் கூட்டமாக வந்து துதிக்கின்றனர். ஈஸ்வரி, அவள் தான் எங்களுக்கு நன்மை செய்யக் கூடியவள். ஆபத்துக்களை நீக்கி அருளை வழங்குபவள். அவளே எங்களுக்கு சுபமான ஆசிகளை வழங்கட்டும்.

இப்பொழுது நாங்கள் யாரை நமஸ்கரிக்கிறோமோ,  அசுரர்களின் உபாதை தாங்காமல் வந்து நிற்கிறோமோ, அவள் எங்களுக்கு சொந்தமான தெய்வமேதான். அவளை நினைத்த மாத்திரத்தில் எல்லா ஆபத்துக்களையும் போக்கி விடுவாள். ஆகவே, பக்தியோடு, உடலும் உள்ளமும் இசைய வணங்குகிறோம்.

ரிஷி சொன்னார். (83)

இப்படி துதி செய்து கொண்டிருக்கும் பொழுதே, பார்வதி தேவி, ஸ்நானம் செய்ய கங்கை நதிக் கரைக்கு வந்தாள். அரசனே, அவள் அவர்களைப் பார்த்து, தேவர்களே, யாரை ஸ்தோத்திரம் செய்கிறீர்கள்? என்று கேட்டாள். அந்த சமயம் பார்வதியின் சரீரத்திலிருந்து, வெளி வந்த சிவா பதில் சொன்னாள். என்னைத் தான் துதிக்கிறார்கள். சும்பன் என்ற அசுரனால் துன்புறுத்தப் பட்டவர்கள். தேவர்கள் அனைவரையும் நிசும்பன் யுத்தத்தில் தோற்கடித்து விட்டான். இதன் பின், பார்வதியின் சரீர கோசத்திலிருந்து வந்தவள் ஆதலால், கௌசிகி என்று அழைக்கப் பட்டாள். அவள் வெளியேறியதும் பார்வதி தேவி, க்ருஷ்ணா – கரும் நிறத்தை அடைந்து விட்டாள். ஹிமாசலத்தில் வசிப்பவளாக, உலகில், காளிகா என்று புகழ் அடைந்தாள். இப்படி அம்பிகா, விசேஷமான ரூபம் தரித்து, தேவர்களை காக்க வந்ததை, சும்ப, நிசம்பர்களின் அடியாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும் கண்டனர். உடனே ஓடிச் சென்று சும்பனிடம் தெரிவித்தனர். ஒப்பற்ற அழகுடன், சௌந்தர்யமே உருக் கொண்டாற் போல ஒரு பெண், ஹிமாலயத்தையே ஒளி மயமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறாள், மகாராஜா. இது போல ஒரு ரூப லாவண்யத்தை கண்டதுமில்லை. கேட்டதும் இல்லை.  யார் அந்த தேவி என்று தெரிந்து கொள்ளுங்கள். அவளை அபகரித்துக் கொள்ளுங்கள். அசுர ராஜனே, அவள் ஸ்திரீ ரத்னம். அத்யந்த அழகிய அவயவங்களை உடையவள். தன் அழகால் திசைகளை பிரகாசமாக்குகிறாள். தைத்யேந்திரா, அதோ, அவள் நின்று கொண்டிருக்கிறாள். அவளை தாங்கள் அவசியம் காண வேண்டும். ப்ரபோ, ரத்னங்களோ, மணிகளோ, யானை, குதிரைகளோ, மூவுலகிலும் எங்கு இருந்தாலும், உங்கள் வீட்டை அலங்கரிக்க வந்து விட்டன. புரந்தரனின் ஐராவதம் என்ற கஜரத்னம் அபகரிக்கப் பட்டது. பாரிஜாத மரமும், உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையும் அபகரிக்கப் பட்டது. ஹம்ஸம் பூட்டிய விமானம் இதோ, உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறது. மகா பத்மம் என்ற நிதி, குபேரனிடமிருந்து அபகரிக்கப் பட்டது. சமுத்திரம், என்றும் வாடாத தாமரை மலர்களால் ஆன மாலையையும், கிஞ்சல்கினீம் என்பவைகளையும், தந்தது. வருணனுடைய சத்ரம் உங்கள் வீட்டில் பொன் மயமான கதிர்களை வீசிய படி கிடக்கிறது.  ரதங்களiல் சிறந்த இந்த ரதம், முன்பு பிரஜாபதியின் சொத்தாக இருந்தது. யமனிடமிருந்து, உத்3க்3ராத்தா என்ற சக்தியை, நாம் கைப் பற்றிக் கொண்டோம். அரசனே, சமுத்திர ராஜனுடைய பாசம், மற்றும் சமுத்திரத்தில் தோன்றும் எல்லா ரத்ன ஜாதிகளும் உன் சகோதரன் நிசும்பனுடைய வசம் ஆகி விட்டது. அக்னியை கூட விட்டு வைக்கவில்aல. அக்னியும் தன் பங்குக்கு, உன் வஸ்திரங்களில், தன் பரிசுத்த தன்மையைத் தந்தது. இப்படி தைத்யேந்திரா, உலகில் உள்ள மதிப்பு மிகுந்த வஸ்துக்கள் எங்கு இருந்தாலும் தன் வசமாக்கிக் கொள்பவன், ஸ்திரீ ரத்னம் இவள், இவளை ஏன் இன்னம் விட்டு வைத்திருக்கிறாய் ?

ரிஷி சொன்னார் (101)

சண்ட முண்டர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டு சும்பன், மகா அசுரனான சுக்ரீவன் என்பவனை தூதாக, தேவியிடம் அனுப்பினான். நான் சொன்னதாகச் சொல்லு. – இப்படி இப்படி என்று.- நீயே விரும்பி வந்து விட்டால் நல்லது. வேலை சுலபமாக ஆகி விடும்.  அவனும் தேவி இருக்கும் இடம் வந்து அழகிய மலையடியில் சந்தித்து, அதே போல சொன்னான். தேவியும் மதுரமான குரலில் இழுத்தாற் போல் பதில் சொன்னாள். 

தேவி சொன்னாள். வாஸ்தவம் தான். நீ சொன்னதில் தவறு ஏதுமில்லை. மூவுலக நாயகன் சும்பன், நிசம்பனும் தான். ஆனால் நான் ஒரு பிரதிக்ஞை செய்திருக்கிறேனே. அதை எப்படி மீற முடியும். கேளுங்கள். முன்னொரு காலத்தில்,  ஏதோ ஒரு வேகத்தில் பிரதிக்ஞை செய்தது. என்னை எவன் யுத்தம் செய்து ஜயிக்கிறானோ, அவனே என் கணவனாவான். எனக்கு சமமான வீரனாக இருந்து, என்னை அடக்குபவனே,  நான் விரும்பும் மணாளன். போய் சொல்லுங்கள். சும்பனோ, நிசம்பனோ வரட்டும். என்னை ஜயித்து என் கை பிடிக்கட்டும்.

தூதன் சொன்னான். நீ இப்படி பேசக் கூடாது. விஷயம் தெரியாமல் பிதற்றுகிறாய். எங்கள் அரசன் முன்னால் நின்று போரிட யாரால் முடியும்? சும்ப நிசும்பர்கள் எப்படிப்பட்ட வீரர்கள் தெரியுமா ?  மகா தைத்யர்களோ, தேவர்களோ, எதிரில் நிற்க கூட பயப்படுவார்கள். பெண்ணான நீ எம்மாத்திரம்? அதுவும் தனியாக. இந்திரன் முதலான தேவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அனைவருமாக ஓடி விட்டனர்.  சும்பன் முதலானவர்கள் முன் ஸ்த்ரீயான நீ எப்படி நின்று போரிடுவாய் ? நான் சொல்வதைக் கேள், வா என்னுடன். சும்ப நிசும்பர்களiடம் போவோம். இல்லையெனில் தலை கேசத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு போவோம் – தேவையா உனக்கு இந்த அவமானம் ?

தேவி சொன்னாள்.

அப்படியா, சும்பன் பலசாலி. நிசும்பனும் தான். ஆனால் யோசிக்காமல் செய்த பிரதிக்ஞை. அதனால் நீ போ, போய் நான் சொன்னபடி உன் எஜமானர்களiடம் சொல். அசுரேந்திரன், எது யுக்தமோ, அப்படி செய்யட்டும்.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக