சுந்தர காண்டம்
ராம நவமி வருகிறது. அந்த ஒன்பது நாட்களில் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது முறை. இதற்கு நவாஹம் என்றே பெயர். அந்த கிரமத்தில் வால்மீகியின் சுந்தர காண்டத்தை ஸம்ஸ்க்ருதம் டமில் இரண்டிலும் மூல பாடமும், தமிழில் வசன நடையாகவும் தொடர்ந்து பார்க்கலாம்.
முதல் நாள் பாராயணம் ஒன்று முதல் ஐந்து சர்கங்கள் அதாவது அத்யாயங்கள்:-
॥श्रीमद्वाल्मीकिरामायणम्॥
॥अथ सुन्दरकाण्डः॥
प्रथमः सर्गः सागरलङ्धनम्
ततो रावणनीतायाः सीतायाः शत्रुकर्शणः।
इयेष पदमन्वेष्टुं चारणाचरिते पथि।। 5.1.01
दुष्करं निष्प्रति ध्वन्दम् चिकीर्षन् कर्म वानरः।
समुदग्रशिरोग्रीवो गवां पतिरिवाबभौ।। 5.1.02
अथ वैदूरयवर्णेषु शाद्वलेषु महाबलः।
धीरः सलिलकल्पेषु विचचार यथासुखम्।। 5.1.03
द्विजान् वित्रासयन् धीमानुरसा पादपान् हरन्।
मृगांश्च सुबहून्निघ्नन् प्रवृद्ध इव केसरी।। 5.1.04
नीललोहितमाञ्जिष्ठपत्रवर्णैः सितासितैः।
स्वभावविहितैरश्चित्रैर्धातुभिः समलंकृतम्।। 5.1.05
कामरूपिभिराविष्टमभीक्ष्णं सपरिच्छदैः।
यक्षकिंनरगन्धर्वैर्देवकल्पैश्च पन्नगैः।। 5.1.06
स तस्य गिरिवर्यस्य तले नागवरायुते।
तिष्ठन् कपिवरस्तत्र ह्रदे नाग इवाबभौ।। 5.1.07
स सूर्याय महेन्द्राय पवनाय स्वयंभुवे।
भूतेभ्यश्चाञ्जलिं कृत्वा चकार गमने मतिम्।। 5.1.08
अञ्जलिं प्राङ्मुखः कुर्वन् पवनायात्मयोनये।
ततो हि ववृधे गन्तुं दक्षिणो दक्षिणां दिशम्।। 5.1.09
प्लवङ्गप्रवरैर्दृष्टः प्लवने कृतनिश्चयः।
ववृधे रामवृद्ध्यर्थं समुद्र इव पर्वसु।। 5.1.10
निष्प्रमाणशरीरः सँल्लिलङ्घयिषुरर्णवम्।
बाहुभ्यां पीडयामास चरणाभ्यां च पर्वतम्।। 5.1.11
स चचालाचलश्चापि मुहूर्तं कपिपीडितः।
तरूणां पुष्पिताग्राणां सर्वं पुष्पमशातयत्।। 5.1.12
ஸ்ரீமத்3 ராமாயணம் – சுந்த3ர காண்டம்
அத்யாயம் -1 – சாகர லங்கணம் – சமுத்திரத்தை கடத்தல்
ததோ ராவண நீதாயா: சீதாயா: சத்ரு கர்ஸன: | இயேஷ பத3மன்வேஷ்டும் சாரணாசரிதே பதி2 ||
து3ஷ்கரம் நிஷ்ப்ரதி த்3வந்த4ம் சிகீர்ஷன் கர்ம வானர: | சமுத3க்3ர சிரோ க்3ரீவோ க3வாம் பதிரிவாப3பௌ4 ||
அத2 வைடூர்ய வர்ணேஷு சாத்3வலேஷு மஹாப3ல: | தீ4ர: சலில கல்பேஷு விசசார யதாசுகம் ||
த்3விஜான் வித்ராஸயன் தீ4மான் உரஸா பாதபான் ஹரன் | ம்ருகாம்ஸ்ச சுப3ஹூன் நிக்னன் ப்ரவ்ருத்3த4 இவ கேஸரி ||
நீல லோஹித மாஞ்சிஷ்டை: பத்ர வர்ணை: சிதாசிதை: | ஸ்வபாவ விஹிதைர் சித்ரை: தா4துபி4ர் ஸ்மலங்க்ருதம் ||
காம ரூபிபி4ராவிஷ்டம் அபீ4க்ஷ்ணம் சபரிஸ்சதை: | யக்ஷ கின்னர கந்த4ர்வைர் தேவ கல்பைஸ்ச பன்னகை3:||
ஸ் தஸ்ய கி3ரிவர்யஸ்ய தலைர் நாக3 வராயுதே | திஷ்டன் கபிவரஸ்தத்ர ஹ்ரதே நாக3 இவாப3பௌ4 ||
சூர்யாய மஹேந்த்ராய பவனாய ஸ்வயம்புவே | பூ4தேப்4யஸ்சாஞ்சலிம் க்ருத்வா சகார க3மனே மதிம் ||
அஞ்ஜலிம் ப்ராரங்முக2:குர்வன் பவனாயாத்ம யோனயே | ததோ2 ஹி வவ்ருதே4 க3ந்தும் த3க்ஷிணோ த3க்ஷிணாம் தி3சம் ||
ப்லவங்க3 ப்ரவரைர் த்3ருஷ்ட: ப்லவனே க்ருத நிஸ்சய: | வவ்ருதே4 ராம வ்ருத்4யர்த2ம் சமுத்3ர இவ பர்வசு ||
நிஷ்ப்ரமாண ஸரீர: ஸல்லிலங்க3யிஷுரர்ணவம் | பா3ஹுப்4யாம் பீட3யாமாஸ சரணாப்4யாம் ச பர்வதம் ||
ஸ சசாலாசலஸ்சாபி முஹூர்தம் கபி பீடித: | தரூணாம் புஷ்பிதாக்3ராணாம் சர்வம் புஷ்பம ஸாதயத் || 1-12
அத்தியாயம் 1 (339) சாகர லங்க4ணம் (கடலை கடத்தல்)
தத:-இதன் பின், சாரணர்கள் புழங்கும் பாதையில், சத்ருக்களை ஒடுக்கும் வீரனான ஹனுமான், சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, ராவணன் அவளை அழைத்துச் சென்றதாக அறிந்த தென் திசையில் செல்லத் தயாரானான். 1-1 மிகவும் கடினமான காரியம். ஒப்பில்லாத சாகஸம். இந்த செயலை செய்யத் துணிந்த வானரன் தலையைத் தூக்கி, கழுத்தை சாய்த்து, பசுக்களின் தலைவனான காளை போல நின்றான். 1-2 வைமூடுரியம் போல ஜ்வலித்த பசும் புற் தரைகளுக்கிடையில் நீர் பள பளக்க இருந்த பூமியில் தீரனும் மகா பலசாலியுமான ஹனுமான் நடந்தான். 1-3 பறவைகள் பயந்து சிறகடித்து பறக்கலாயின. மரங்கள் ஆடின. பல மிருகங்கள் கீழே விழுந்தன. பெரிய கேசரி (சிங்கம்) நெடிதுயர்ந்து நிற்பது போல நின்றான். 1-4 வெண்மையும் கருப்பும், நீலமும் சிவப்பும், மஞ்சளுமாக இலைகள் பல வர்ணங்க ளில் தென்பட்டன. இயல்பான நிறங்களில் தா4து பொருட்கள் அலங்காரமாகத் தெரிந்தன. 1-5 யக்ஷ கின்னர, தேவர்களுக்கு இணையான க3ந்த4ர்வர்கள், பன்னகர்கள் தங்கள் விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவர்கள், சூழ்ந்து நிற்க, அவர்கள் பரிவாரமும் உடன் நின்றனர். 1-6 நாகங்கள் நிறைந்த அந்த சிறப்பான மலையின் உச்சியில், நீர் நிலையில் யானை நிற்பது போல தனித்து தெரிந்தான். 1-7 இதன் பின் அவன், சூரியனுக்கு, மகேந்திரனுக்கு, வாயுவுக்கு, ப்ரும்மாவுக்கு, மற்றும் பஞ்ச பூதங்கள், இவர்களுக்கு அஞ்சலி செய்து வணங்கி விட்டு தன் யாத்திரையைத் தொடர தீர்மானித்தான். 1-8 கிழக்கு நோக்கி நின்று, தன்னை ஈ.ன்ற வாயுவுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, தென் திசையில் செல்லத் தயாராக வளர ஆரம்பித்தான்.1-9 மற்ற வானரங்கள் கீழே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தன. இதற்குள் தன் பிரயாணத்தை மனதினுள் ஒருவிதமாக திட்டமிட்டுக் கொண்டு விட்ட வகையில், ராம காரியம் நிறைவேறும் பொருட்டு, மலையின் மேல் சமுத்திரம் பொங்கி எழுவது போல எழுந்தான். 1-10 அளவிட முடியாத, ஒப்பிட முடியாத பெரிய சரீரம். கடலைக் கடந்து செல்லவும் துணிந்த உயரிய எண்ணம். அரிய செயலைச் செய்யத் துணிந்தவன் தன் புஜங்களால் மலையை தடவிக் கொடுத்தும், கால்களால் உதைத்தும் அந்த மலையை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது போலவும், தானே அசைந்து கொடுத்ததோ எனும் படி அந்த மரங்கள், தங்கள் நுனியிலிருந்து புஷ்பங்களை உதிர்த்தன. (1-12)
तेन पादपमुक्तेन पुष्पौघेण सुगन्धिना।
सर्वतः संवृतः शैलो बभौ पुष्पमयो यथा।। 5.1.13
तेन चोत्तमवीर्येण पीड्यमानः स पर्वतः।
सलिलं संप्रसुस्राव मदं मत्त इव द्विपः।। 5.1.14
पीड्यमानस्तु बलिना महेन्द्रस्तेन पर्वतः।
रीतीर्निर्वर्तयामास काञ्चनाञ्जनराजतीः।। 5.1.15
मुमोच च शिलाः शैलो विशालाः सुमनःशिलाः।
मध्यमेनार्चिषा जुष्टॊ धूमराजीरिवानलः।। 5.1.16
गिरिणा पीड्यमानेन पीड्यमानानि सर्वतः।
गुहाविष्टानि भूतानि विनेदुर्विकृतैः स्वरैः।। 5.1.17
स महासत्त्वसंनादः शैलपीडानिमित्तजः।
पृथिवीं पूरयामास दिशश्चोपवनानि च।। 5.1.18
शिरोभिः पृथुभिः सर्पा व्यक्तस्वस्तिकलक्षणैः।
वमन्तः पावकं घोरं ददंशुर्दशनैः शिलाः।। 5.1.19
तास्तदा सविषैर्दष्टाः कुपितैस्तैर्महाशिलाः।
जज्वलुः पावकोद्दीप्ता बिभिदुश्च सहस्रधा।। 5.1.20
यानि चौषधजालानि तस्मिञ्जातानि पर्वते।
विषघ्नान्यपि नागानां न शेकुः शमितुं विषम्।। 5.1.21
भिद्यतेऽयं गिरिर्भूतैरिति मत्वा तपस्विनः।
त्रस्ता विद्याधरास्तस्मादुत्पेतुः स्त्रीगणैः सह।। 5.1.22
पानभूमिगतं हित्वा हैममासवभाजनम्।
पात्राणि च महार्हाणि करकांश्च हिरण्मयान्।। 5.1.23
लेह्यानुच्चावचान् भक्ष्यान् मांसानि विविधानि च।
आर्षभाणि च चर्माणि खडगांश्च कनकत्सरून्।। 5.1.24
कृतकण्ठगुणाः क्षीबा रक्तमाल्यानुलेपनाः।
रक्ताक्षाः पुष्कराक्षाश्च गगनं प्रतिपेदिरे।। 5.1.25
हारनूपुरकेयूरपारिहार्यधराः स्त्रियः।
विस्मिताः सस्मितास्तस्थुराकाशे रमणैः सह।। 5.1.26
दर्शयन्तो महाविद्यां विद्याधरमहर्षयः।
सप्रियास्तस्थुराकाशे वीक्षांचक्रुश्च पर्वतम्।। 5.1.27
தேன பாத3ப முக்தேன புஷ்பௌகே3ன சுகந்தி4னா | சர்வத: சம்வ்ருத: சைலோ ப3பௌ புஷ்பமயோ யதா2 |
தேனசோத்தம வீர்யேன பீட்யமான: ஸ பர்வத: | சலிலம் சம்ப்ரசுஸ்ராவ மதம் மத்த இவ த்3விப:||
பீட்யமானஸ்து ப3லினா மஹேந்த்ரஸ்தேன பர்வத: | ரீதிர் நிர்வர்தயாமாஸு: காஞ்சனாஞ்ஜன ராஜதீ: ||
முமோச ச ஸிலா:சைலோ விஸாலா: சுமன: ஸிலா: | மத்யமேனார்சிஷா ஜுஷ்டோ தூ4மராஜீரிவானல: ||
கி3ரிணா பீட்யமானேன பீட்யமானானி சர்வத:| கு3ஹாவிஷ்டானி பூதானி வினேது3ர் விக்ருதைர் ஸ்வரை: ||
ஸ மஹா ஸத்வ ஸன்னாத: ஸைல பீடா நிமித்தஜ: | ப்ருது2வீ பூரயாமாஸ திஸஸ்சோபவனானி ச ||
ஸிரோபி: ப்ருதுபி: சர்ப்பா: வ்யக்த ஸ்வஸ்திக லக்ஷணை: | வமந்த: பாவகம் கோ4ரம் த3த3ம்சு: த3ஸனை: ஸிலா: ||
தாஸ்ததா3 ஸவிஷைர் த3ஷ்டா: குபிதைர்தை: தை: மஹாஸிலா: | ஜஜ்வலு: பாவகோத்3தீ4ப்தா பி3பி4து3ஸ்ச சஹஸ்ரதா ||
யானி ஔஷத4 ஜாலானி தஸ்மிஞ் ஜாதானி பர்வதே | விஷக்4னான்யபி நாகா3னாம் ந ஸேகு: ஸமிதும் விஷம் ||
பித்3த்4யதே (அ) யம் பூ4தைரிதி மத்வா தபஸ்வின: | த்ரஸ்தா: வித்4யாத4ரா: தஸ்மாதுத்பேது: ஸ்த்ரீக3ணை:ஸஹ ||
பானபூ4மிக3தம் ஹித்வா ஹைமமாஸவ பா4ஜனம் | பாத்ராணி ச மஹார்ஹாணி கரகாம்ஸ்ச ஹிரண்மயான் ||
லேஹ்யான் சோச்சாவசான் ப4க்ஷ்யான் மாம்ஸானி விவிதா4னி ச | ஆர்ஷபா4னி ச சர்மானி க2ட்காம்ஸ்ச கனகத்ஸரூன் ||
க்ருத கண்ட கு3ணா: க்ஷீபா ரக்த மால்யானுலேபனா: | ரக்தாக்ஷா: புஷ்கராஸ்ச க3க3னம் ப்ரதிபேதிரே ||
ஹார நூபுர கேயூர பாரிஹார்ய த4ரா: ஸ்த்ரிய: | விஸ்மிதா: ஸஸ்மிதா: தஸ்துராகாஸே ரமணை: ஸஹ ||
த3ர்ஸயந்தோ மஹாவித்4யாம் வித்4யாதர மஹர்ஷய: | ஸப்ரியா: தஸ்துராகாஸே வீக்ஷாம் சக்ருஸ்ச பர்வதம் ||
கைகளாலும், கால்களாலும் ஹனுமான் மலையின் திடத்தை சோதனை செய்வது போல தட்டிப் பார்த்தது போலவும், மலையும் தன் ஒப்புதலை தந்தது போலவும் அந்த காட்சி அமைந்தது. 1- 14 மலை முழுவதும் அந்த புஷ்பங்களின் சிதறல் அர்ச்சனை செய்யப் பட்டது போல கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மலர்களின் மணம் பரவியது. மதம் கொண்ட மத்த கஜத்தின் முகத்தில் துளிர்க்கும் வியர்வைபோல மலையின் மேலிருந்து நீர் வடிந்தது. 1-13 ஹனுமானின் கால்கள் அழுந்த பிடித்ததால், பலமாக யானைப் பாகன் மிதிப்பதால் துன்புறுவது போல மகேந்திர பர்வதம் துன்புற்றது. 1-15 பித்தளை, பொன், வெள்ளி, கரும் பொன் (இரும்பு) இவை மலையிலிருந்து சிதறின. விசாலமான சுமன:சிலம் எனும் பாறையும் கீழே விழுந்து சிதறியது. கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நடுவில் புகைந்து எழும் புகை மூட்டம் போல தெரிந்தது. 1-16 மலையே, ஹனுமானின் பாதத்தால் உதைக்கப் பட்ட சமயம், மலை குகையிலிருந்த மிருகங்களும் பாதிக்கப் பெற்றன. வித விதமான குரலில் கூக்குரலிட்டன. 1-17 இந்த பெரும் மலையில் வசித்த ஏராளமான ஜீவ ஜந்துக்கள் ஏக காலத்தில் எழுப்பிய ஒலி, அலை அலையாக பரவி உலகம் முழுவதும் எல்லா திசைகளிலும், உப வனங்களிலும் எதிரொலித்தன. 1-18 பளீரென்று நிமிர்ந்த தலையுடன், நாகங்கள், ஒளி வீசும் தங்கள் படங்களுடன் நிமிர்ந்து நின்றன. விஷத்தைக் கக்கின. 1-19 அகப்பட்ட பாறைகளை பல்லால் கடித்து உமிழ்ந்தன. இப்படி கடிபட்ட பாறைகள் சில உடைந்து சிதறின. சில பள பளவென மின்னின. 1-20 கோபம் கொண்டு விஷமுடைய பற்களால் கடிக்கப் பெற்ற பாறைகள், நெருப்பு பற்றிக் கொண்டது போல தோற்றமளித்தன. அந்த மலையில் உற்பத்தியாகும் ஆயிரக் கணக்கான மூலிகைகள், அவற்றில் பல பாம்பு விஷத்தை அடக்கும் சக்தியுடையவை, இருந்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. பயனற்றுப் போயின. 1-21 தபஸ்வி ஜனங்கள், ஏதோ பூத கணங்கள் வந்து மலையை பிளக்கின்றனவோ என்று ஐயுற்றனர். வித்யாதர கணங்கள் தங்கள் ஸ்திரீகளுடன் பயந்து அலறியபடி மலையை விட்டு வெளியேற முயற்சி செய்யலாயினர். 1-22 பான பூமியில் (கள் குடிக்கும் இடம்) வண்ண மயமான பாத்திரங்களில் மதுவை அருந்திக் கொண்டு இருந்தவர்கள், விலையுயர்ந்த அந்த பாத்திரங்களை, கரண்டிகளை, லேகியங்கள், ஊருகாய்கள், பக்ஷணங்கள், மாமிசங்கள் இன்னும் பல உணவு வகைகளையும், பழமை வாய்ந்த தோல் வாள், பொன்னாலான கரண்டிகள், இவைகளை கையில் வைத்தபடி, கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த வஸ்திரங்களுடன், சிவந்த மாலைகளையும் அணிந்து, அங்க ராகங்களை பூசி மகிழும் இயல்புடையவர்கள், சிவந்த மஞ்சள் நிற கண்கள் உடையவர்கள், என்ன நடக்கிறது என்று பார்க்க ஆகாயத்தில் வந்து நின்றார்கள். ஹாரங்கள், நூபுரங்கள், இடுப்பு ஒட்டியாணம் என்று பலவிதமான ஆபரணங்களுடனும் வளைய வந்த ஸ்த்ரீகள், ஆச்சர்யத்துடன், தங்கள் கணவன்மாரோடு சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க வந்து நின்றனர். (1-27)
शुश्रुवुश्च तदा शब्दमृषीणां भावितात्मनाम्।
चारणानां च सिद्धानां स्थितानां विमलेऽम्बरे।। 5.1.28
एष पर्वतसंकाशो हनूमान् मारुतात्मजः।
तितीर्षति महावेगः सागरं मकरालयम्।। 5.1.29
रामार्थं वानरार्थं च चिकीर्षन् कर्म दुष्करम्।
समुद्रस्य परं पारं दुष्प्रापं प्राप्तुमिच्छति।। 5.1.30
इति विद्याधराः श्रुत्वा वचस्तेषां तपस्विनाम्।
तमप्रमेयं ददृशुः पर्वते वानरर्षभम्।। 5.1.31
दुधुवे च स रोमाणि चकम्पे चाचलोपमः।
ननाद सुमहानादं स महानिव तोयदः।। 5.1.32
आनुपूर्व्येण वृत्तं च लाङ्गूलं रोमभिश्चितम्।
उत्पतिष्यन् विचिक्षेप पक्षिराज इवोरगम्।। 5.1.33
तस्य लाङ्गूलमाविद्धमात्तवेगस्य पृष्ठतः।
ददृशे गरुडेनेव ह्रियमाणो महोरगः।। 5.1.34
बाहू संस्तम्भयामास महापरिघसंनिभौ।
ससाद च कपिः कट्यां चरणौ संचुकोच च।। 5.1.35
संहृत्य च भुजौ श्रीमांस्तथैव च शिरोधराम्।
तेजः सत्त्वं तथा वीर्यमाविवेश स वीर्यवान्।। 5.1.36
मार्गमालोकयन् दूरादूर्ध्वं प्रणिहितेक्षणः।
रुरोध हृदये प्राणानाकाशमवलोकयन्।। 5.1.37
पद्भ्यां दृढमवस्थानं कृत्वा स कपिकुञ्जरः।
निकुञ्च्य कर्णौ हनुमानुत्पतिष्यन् महाबलः।। 5.1.38
वानरान् वानरश्रेष्ठ इदं वचनमब्रवीत्।
यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः।। 5.1.39
गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।
न हि द्रक्ष्यामि यदि तां लङ्कायां जनकात्मजाम्।। 5.1.40
अनेनैव हि वेगेन गमिष्यामि सुरालयम्।
यदि वा त्रिदिवे सीतां न द्रक्ष्यामि कृतश्रमः।। 5.1.41
बद्ध्वा राक्षसराजानमानयिष्यामि रावणम्।
सर्वथा कृतकार्योऽहमेष्यामि सह सीतया।। 5.1.42
ஸுஸ்ருவுஸ்ச ததா3 சப்தம் ருஷீணாம் பா4விதாத்மனாம் | சாரணானாம் ச சித்3தா4னாம் ஸ்தி2தானாம் விமலே (அ)ம்பரே || (1-28 )
ஏஷ பர்வத சங்காஸோ ஹனூமான் மாருதாத்மஜ: | திதீர்ஷதி மஹாவேக3: சாக3ரம் மகராலய: ||
ராமார்த2ம் வானரார்த2ம் ச சிகீர்ஷன் கர்ம து3ஷ்கரம் |சமுத்3ரஸ்ய பரம் பாரம் து3ஷ்ப்ராபம் ப்ராப்துமிச்சதி ||
இதி வித்3யாத4ரா: ஸ்ருத்வா வசஸ்தேஷாம் தபஸ்வினாம் | தமப்ரமேயம் த3த்3ருஸு: பர்வதே வானர்ஷபம்
து3து4வே ச ஸ ரோமானி சகம்பே ச அசமலோபம: | நனாத3 சுமஹா நாத3ம் ஸ மஹானிவ தோயத3: ||
ஆனுபூர்வ்யேன வ்ருத்தம் ச லாங்கூ3லம் ரோமபிஸ்சி2தம் | உத்பதிஷ்யன் விசிக்ஷேப பக்ஷிராஜ இவோரக3ம்||
தஸ்ய லாங்கூ3லமாவித்3த4மாத்த வேக3ஸ்ய ப்ருஷ்டத: | த3த்3ருஸே க3ருடே3னேவ ஹ்ரியமானோ மஹோரக3: ||
பா3ஹூ சம்ஸ்தம்ப4யாமாஸ மஹாபரிக3 ஸன்னிபௌ4 | சசாத ச கபி: கட்யாம் சரணௌ சம்சுகுசோச ச ||
சம்ஹ்ருத்ய ச புஜௌ ஸ்ரீமான்ஸ் ததைவ ச சிரோதராம் | தேஜஸ் ஸத்வம் ததா3 வீர்யமாவிவேஸ ச வீர்யவான் ||
மார்க3மாலோகயன் தூ3ராதூ4ர்த்3வம் ப்ரணிஹிதேக்ஷண: | ருரோத3 ஹ்ருத3யே ப்ராணானாகாச மவலோகயன் ||
பத்3ப்4யாம் த்4ருடமவஸ்தானம் க்ருத்வா ஸ கபி குஞ்ஜர: | நிகுஞ்ஜ்ய கர்ணௌ ஹனுமானுத்பதிஷ்யன் மஹாப3ல: ||
வானரான் வானர ஸ்ரேஷ்ட இத3ம் வசனமப்3ரவீத் | யதா2 ராகவ நிர்முக்த: சர: ஸ்வஸன விக்ரம: |
தத்3வத் க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் | ந ஹி த்3ரக்ஷ்யாமி யதி3 தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம் ||
அனேனைவ ஹி வேகே3ன க3மிஷ்யாமி சுராலயம் || யதி3 வா த்ரிதி3வே சீதாம் ந த்3ரக்ஷ்யாமி க்ருத ஸ்ரம: ||
ப3த்4வா ராக்ஷஸ ராஜானமானயிஷ்யாமி ராவணம் | சர்வதா3 க்ருத கார்யோஹம் ஏஷ்யாமி ஸஹ சீதயா | 1-42
மகா வித்யையை அறிந்து கொண்டு கடை பிடித்து வந்த வித்யாதர மகரிஷிகள், தங்கள் மனைவிமாருடன், ஆகாயத்தில் வந்து நின்று, மலையை நோக்கினர். 1-28 தவ வலிமை மிக்க ரிஷிகள், சாரணர்கள், சித்தர்கள் என்று ஆகாயத்தில் குழுமியிருந்தோர் பேசும் பேச்சுக்களைக் கேட்டனர். விமலமான ஆகாயத்தில் முனிவர்களின் பேச்சுக் குரல் ஓங்கி ஒலித்தது. 1-29 இதோ இந்த ஹனுமான் தானே பர்வதாகாரமாக நிற்கிறான். மகா வேகத்துடன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான். 1-30 மகரங்கள் நிறைந்த இந்த கடலைத் தாண்ட ஆயத்தம் செய்வது தான் இவ்வளவு பர பரப்புக்கு காரணம். இந்த அரிய செயலை ராமனுக்காகவும், தன் தலைவனான வானர ராஜனின் பொருட்டும் செய்யத் துணிந்திருக்கிறான். 1-31 எளிதில் கடக்க முடியாத இந்த கடலின் அக்கரையைத் தொட்டுவிட துடிக்கிறான், என்றிவ்வாறு ரிஷிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதை வித்யாதரர்கள் கேட்டனர். 1-32 ஒப்புவமை இல்லாத வானர வீரன் மலையின் மேல் நிற்பதைக் கண்டனர். அந்த மலையின் மேல் மற்றொரு மலை குலுங்கி ஆடியது போல ஒரு உலுக்கலில் தன் பெரிய உடலின் ரோமங்கள் சிதறி விழச் செய்தான், ஹனுமான். 1-33 மகா மேகம் போல கர்ஜித்து, திக்குகளை அதிரச் செய்தான். சாட்டையை விசிறி அடித்தது போல சுழற்றவும், சுருட்டி வைக்கப் பட்டிருந்த ரோமங்கள் அடர்ந்த வால், பக்ஷி ராஜனான கருடனின் கால்களில் சிக்கிய பெரு நாகம் போல நீண்டது. 1-34 நாகத்தை கவ்விக் கொண்டு வேகமாக செல்லும் பக்ஷிராஜனின் வாயிலிருந்து தொங்கும் நாகம் போல அந்த வால் நீண்டு தொங்கியது. 1-35 புஜங்கள் இரண்டையும் விரித்து, பரிக4ம் என்ற ஆயுதத்தைப் போல நீண்ட கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டான். (பரிக4ம்-கதவுக்கு தடுப்பாக உபயோகிக்கும் மரக் கட்டை). 1-36 கால்களைக் குறுக்கிக் கொண்டான். தன் புஜங்களையும் கழுத்தையும் சுருக்கிக் கொண்டு, தலையை நிமிர்த்தி, தன் உடலில் தேஜஸ், ஆற்றல் இவற்றை நிரப்பிக் கொள்வது போல நிமிஷ நேரம் நின்றான். 1-37 கண்களை இடுக்கி வெகு தூரம் வரை தான் செல்ல வேண்டிய பாதையை நோட்டம் விட்டு கணித்துக் கொண்டவனாக, தன் ஹ்ருதயத்தில் பிராணனை நிலை நிறுத்தி, மூச்சை அடக்கி, யோக சாதனையை செய்தான். 1-38 ஆகாயத்தை பார்த்தபடி, கால்களை திடமாக ஊன்றி அந்த கபிகுஞ்சரன், காதுகளை மடக்கியபடி வேகமாகத் தாவி, ஆகாய மார்கத்தில் நுழைந்தான். கீழே நின்ற வானரங்களைப் பார்த்து, எப்படி ராகவன் கையிலிருந்து, பாணங்கள் சீறிக் கொண்டு பாயுமோ, அதே போல வேகத்துடன் நானும் போகிறேன். 1-39 ராவணன் பாலித்து வரும் லங்கா நகரை நோக்கிச் செல்கிறேன். ஜனகாத்மஜாவை அந்த லங்கா நகரில் நான் காணவில்லையெனில், இதே வேகத்தோடு தேவர்கள் வசிக்கும் தேவ லோகம் செல்வேன். 1-40 த்ரிதிவம் எனும் தேவலோகத்திலும் சீதையைக் காணவில்லையெனில், என் சிரமம் வீணாகாமல், ராக்ஷஸ ராஜனான ராவணனை கட்டி இழுத்துக் கொண்டு வருவேன். நிச்சயமாக என் காரியம் வெற்றியாகி, சீதையோடுதான் வருவேன். 1-42
आनयिष्यामि वा लङ्कां समुत्पाट्य सरावणाम्।
एवमुक्त्वा तु हनुमान् वानरान् वानरोत्तमः।। 5.1.43
उत्पपाताथ वेगेन वेगवानविचारयन्।
सुपर्णमिव चात्मानं मेने स कपिकुञ्जरः।। 5.1.44
समुत्पतति तस्मिंस्तु वेगात्ते नगरोहिणः।
संहृत्य विटपान् सर्वान् समुत्पेतुः समन्ततः।। 5.1.45
स मत्तकोयष्टिभकान् पादपान् पुष्पशालिनः।
उद्वहन्नूरुवेगेन जगाम विमलेऽम्बरे।। 5.1.46
ऊरुवेगोद्धता वृक्षा मुहूर्तं कपिमन्वयुः।
प्रस्थितं दीर्घमध्वानं स्वबन्धुमिव बान्धवाः।। 5.1.47
तदूरुवेगोन्मथिताः सालाश्चान्ये नगोत्तमाः।
अनुजग्मुर्हनूमन्तं सैन्या इव महीपतिम्।। 5.1.48
सुपुष्पिताग्रैर्बहुभिः पादपैरन्वितः कपिः।
हनूमान् पर्वताकारो बभूवाद्भुतदर्शनः।। 5.1.49
सारवन्तोऽथ ये वृक्षा न्यमज्जल्ँलवणाम्भसि।
भयादिव महेन्द्रस्य पर्वता वरुणालये।। 5.1.50
स नानाकुसुमैः कीर्णः कपिः साङ्कुरकोरकैः।
शुशुभे मेघसंकाशः खद्योतैरिव पर्वतः।। 5.1.51
विमुक्तास्तस्य वेगेन मुक्त्वा पुष्पाणि ते द्रुमाः।
अवशीर्यन्त सलिले निवृत्ताः सुहृदो यथा।। 5.1.52
लघुत्वेनोपपन्नं तद्विचित्रं सागरेऽपतत्।
द्रुमाणां विविधं पुष्पं कपिवायुसमीरितम्॥ 5.1.53
पुष्पौघेनानुविद्धेन नानावर्णेन वानरः।
बभौ मेघ इवोद्यन् वै विद्युद्गणविभूषितः।। 5.1.54
तस्य वेगसमाधूतैः पुष्पैस्तोयमदृश्यतँ।
ताराभिरभिरामाभिरुदिताभिरिवाम्बरम्।। 5.1.55
तस्याम्बरगतौ बाहू ददृशाते प्रसारितौ।
पर्वताग्राद्विनिष्क्रान्तौ पञ्चास्याविव पन्नगौ।। 5.1.56
पिबन्निव बभौ श्रीमान् सोर्मिमालं महार्णवम्।
पिपासुरिव चाकाशं ददृशे स महाकपिः।। 5.1.57
तस्य विद्युत्प्रभाकारे वायुमार्गानुसारिणः।
नयने संप्रकाशेते पर्वतस्थाविवानलौ।। 5.1.58
ஆனயிஷ்யாமி வா லங்காம் சமுத்பாட்ய ஸராவணாம் | உத்பபாதாத வேகே3ன வேக3வானவிசாரயன் ||
ஏவமுக்த்வா து ஹனுமான் வானரான் வானரோத்தம: | சுபர்ணமிவ சாத்மானம் மேனே ஸ கபிகுஞ்ஜர: ||
சமுத்பததி ச தஸ்மின்ஸ்து வேகாத்தே நகரோஹிண: | சம்ஹ்ருத்ய விடபான் சர்வான் சமுத்பேதது: சமந்தத: ||
ஸ மத்த கோயஷ்டி பகான் பாதபான் புஷ்ப ஸாலின: | உத்வஹன்னூருவேகேன ஜகாம விமலே அம்பரே ||
ஊருவேகோ3த்3த4தா வ்ருக்ஷா: முஹூர்தம் கபிமன்வயு: | ப்ரஸ்தி2தம் தீ4ர்கமத்4வானம் ஸ்வ ப3ந்து4மிவ பா3ந்த4வா: ||
ததூ3ருன்மதி2தா: சாலாஸ் சான்யே நகோ3த்தமா: | அனுஜக்3முர் ஹனூமந்தம் சைன்யா இவ மஹீபதிம் ||
சுபுஷ்பிதாக்3ரை: ப3ஹுபி4: பாத3பைரன்வித: கபி: | ஹனூமான் பர்பவதாகாரோ ப3பூ4வாத்3பு4த த3ர்ஸன: ||
சாரவந்தோ(அ) த2 யே வ்ருக்ஷா: ந்யமஜ்ஜன் லவனாம்ப4சி | ப3யாதி3வ மஹேந்த்3ரஸ்ய பர்வதா வருணாலயே ||
ஸ நானா குசுமை: கீர்ண: கபி: சாங்குர கோரகை: | ஸுஸுபே மேக4 சம்காஸ: க2:த்3யோதைரிவ பர்வத: ||
விமுக்தா: தஸ்ய வேகே3ன முக்த்வா புஷ்பாணி தே த்3ருமா:| அவஸீர்யந்த ஸலிலே நிவ்ருத்தா: சுஹ்ருதோ3 யதா2 ||
லகு3த்வேனோபபன்னம் தத் விசித்ரம் சாக3ரே(அ)பதத் | த்3ருமாணாம் விவித4ம் புஷ்பம் கபி வாயு சமீரிதம் ||
புஷ்பௌகே3னானுவித்3தே4ன நானா வர்ணேன வானர: | ப3பௌ4 மேக4 இவோத்3த்4யன் வை வித்3யுத் க3ண விபூ4ஷித: ||
தஸ்ய வேக3 ஸமாதூ4தை: புஷ்பை: தோயமத்3ருஸ்யத | தாராபி4ரபி4ராமாபி4ருதி3தாபி4ரிவாம்ப3ரம் ||
தஸ்ய அம்ப3ரக3தௌ பா3ஹூ த3த்ருஸாதே ப்ரசாரிதௌ | பர்வதாக்3ராத் வினிஷ்க்ராந்தௌ பஞ்சாஸ்யாவிவ பன்னகௌ3 ||
பிப3ன்னிவ ப3பௌ4 ஸ்ரீமான் ஸோர்மிமாலம் மஹார்ணவம் | பிபாசுரிவாகாஸம் த3த்ருஸே ஸ மஹா கபி:
தஸ்ய வித்4யுத் ப்ரபா4காரே வாயு மார்கே3 வாயுமார்கா3னுசாரிண: | நயனே சம்ப்ரகாஸேதே பர்வதஸ்தா2விவானலௌ | 1-58
ராவணனையும் சேர்த்து, லங்கா நகரையே பெயர்த்து கொண்டு வந்தாலும் வருவேன். இவ்வாறு வானரோத்தமனான ஹனுமான் மற்ற வானரங்களைப் பார்த்து சூளுரைத்து விட்டு, மேலும் தாமதியாமல் சட்டென்று தாவி, ஆகாயத்தில் குதித்தான். தானே சுபர்ணம் எனும் கருடன் என்று நினைத்துக் கொண்டான். 1-44 வேகமாக அந்த வானர வீரன் தாவி குதித்த பொழுது, மலையிலிருந்த மரங்கள், வேரோடு சாய்ந்து எதிரில் விழுந்தன. 1-45 பூக்கள் நிறைந்து, வண்டுகள் மதுவை குடித்து மயங்கி ரீங்காரம் செய்தபடி இருந்த அந்த மரங்களைத் தன் கால்களின் வேகத்தில் தள்ளிக் கொண்டே சென்றான். கால் (துடை) வேகத்துக்கு ஈ.டு கொடுக்க முடியாமல் மரங்கள் சற்று தூரம் தொடர்ந்து சென்றபின் விழுந்தன. 1-46 வெகு தூரம் செல்லக் கிளம்பிய நெருங்கிய உறவினர்களை, வழியனுப்பச் செல்பவர் போல உடன் சென்று வழியனுப்பியதோ, பெரிய சால மரங்கள், கால்களை உதைத்து ஹனுமான் கிளம்பிய வேகத்தில், அரசனை எப்பொழுதும் பின் தொடர்ந்து செல்லும் பாதுகாவலர்கள் போல சென்றனவோ, எனும்படி இருந்தது. 1-47 நுனியில் புஷ்பங்களுடன் கூடிய மரங்களின் கிளைகள், ஹனுமானை பின் தொடர்ந்து செல்வதைப் பார்க்க, பர்வதாகாரமான பெரிய உருவமும், இந்த புஷ்பங்களும் வித்யாசமாக மகா அத்புதமாக தெரிந்தன 1-48 ஈ.ரப்பசையுடன், ஜீவனுடன் இருந்த மரங்களே உப்பு நீரில் விழுந்தனவே, என்ன காரணம்? மகேந்திர மலையிடம் பயமா? மலையை விட்டு நகர்ந்ததால் கோபிக்கக் கூடும் என்ற எண்ணமா? அதை விட சமுத்திரத்தில் விழுவது மேல் என்று விழுந்தனவா. இளம் தளிர்களும், மொட்டுகளும், மலர்களுமாக ஹனுமானின் மேலும் விழுந்து, மகேந்திர மலையில் மின் மினி பூச்சிகள் வட்டமிடுவது போல, பர்வதாகாரமான சரீரத்தை மறைத்தன. கை கால்களை உதறியதும் அந்த புஷ்பங்கள் கீழே விழுவதைக் காண, நண்பர்கள் வழியனுப்பி விட்டுத் திரும்பியதைப் போல இருந்தது. 1-52 வாயு உடனே துணை போவது போல இப்படிச் சிதறிய புஷ்பங்களை கீழே நீரில் கொண்டு சேர்த்தது. மேகத்தின் இடையில் மின்னல் தெறித்தாற்போல இந்த புஷ்பங்கள் பல வண்ணங்களில் வானர வீரனின் உடலில் கிடந்தன. இப்பொழுது திடுமென சமுத்திரத்தில் விழுந்து, நக்ஷத்திரக் கூட்டங்களுடன் ஆகாயமே தெரிவது போல சமுத்திரத்தின் மேற்பரப்பில் பரவித் தெரிந்தன. 1-53 வீசி எறிவது போல தன் புஜங்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி, நின்ற பொழுது இரு பெரும் நாகங்கள் திடுமென சீறி நின்றது போல இருந்தன. 1-56 தாகம் எடுத்தவன் நீரைக் கண்டது போல, கடல் நீரை விழுங்குவது போல பார்த்தான். அதே போல நிமிர்ந்து ஆகாயத்தையும் கண்களால் அளந்தான். 1-57 வாயு மார்கத்தில் மின்னல் பரவுவது போல நின்ற ஹனுமானின் கண்கள், மலையின் மேல் கொழுந்து விட்டெரியும் நெருப்பு ஜ்வாலையை ஒத்திருந்தது. 1-58
பிங்கே3 பிங்கா3க்ஷ முக்2யஸ்ய ப்3ருஹதீ பரிமண்டலே|சக்ஷுஷீ சம்ப்ரகாஸேதே சந்த்ர சூர்யாவிவாமலௌ ||
முகம் நாசிகயா தஸ்ய தாம்ரயா தாம்ரமாப3பௌ4 | சந்த்3யயா சமபி4ஸ்ப்ருஷ்டம் யதா2 சூர்யஸ்ய மண்டலம்|| (1-60)
லாங்கூ3லம் ச ஸமாவித்3த4ம் ப்லவமானஸ்ய ஸோபதே | அம்பரே வாயு புத்ரஸ்ய ஸக்ரத்4வஜ இவோச்ஸ்ரித: ||
லாங்கூ3ல சக்ரேண மஹான் சுக்லத்ம்ஷ்ட்ரோ (அ)நிலாத்மஜ: | வ்யரோசத ப்ராக்ஞ:பரிவேஷீவ பா4ஸ்கர: ||
ஸ்பிக்தேஸேனாபி4தாம்ரேண ரராஜ ஸ மஹாகபி: |மஹதா தா3ரிதேனேவ கிரிர்கைரிக தா4துனா ||
தஸ்ய வானர சிம்ஹஸ்ய ப்லவமானஸ்ய சாக3ரம்| கக்ஷாந்தரக3தோ வாயுர் ஜீமூத இவ க3ர்ஜதி ||
கே2 யதா2 நிபதந்த்யுல்கா ஹ்யுத்தராந்தாத் வினிஸ்ருதா | த்3ருஸ்யதே சானுபந்தா ச ததா2 ஸ கபி குஞ்ஜர: ||
பதத்பதங்க3 சங்காஸோ வ்யாயத: ஸுஸுபே கபி: | ப்ரவ்ருத்3த4 இவ மாதங்க3: கக்ஷ்யயா ப3த்4யமானயா ||
உபரிஷ்டாச்சரீரேண ச்சா2யயாவகா4டயா | சாக3ரே மாருதாவிஷ்டா நௌரிவாசீத் ததா3 கபி: ||
யம் யம் தேஸம் சமுத்3ரஸ்ய ஜகா3ம ஸ மஹா கபி: | ஸ ஸ தஸ்யோருவேகே3ன சோன்மாத3 இவ லக்ஷ்யதே ||
சாக3ரஸ்ய ஊர்மி மாலானாம் உரஸா ஸைல வர்ஷ்மணாம் | அபிக்4னம்ஸ்து மஹா வேக3: புப்லுவே ஸ மஹாகபி: ||
கபிவாதஸ்ச பலவான் மேகவாதஸ்ச நிச்ஸ்ருத: |ஸாகரம் பீம நிர்கோஷம் கம்பயாமாசதுர் ப்ருஸம் ||
விகர்ஷ்ன்னூர்மி ஜா3லானி ப்3ருஹந்தி லவணாம்பஸ: | புப்லுவே ஹரி ஸார்தூலோ விகிரன்னிவ ரோதஸி ||
மேருமந்தர சம்காஸானுத்கதான் ஸ மஹார்ணவே | அத்யக்ராமன்மஹாவேகஸ்தரங்கான் க3ணயன்னிவ ||
தஸ்ய வேக3 சமுத்தூ4த்தம் ஜலம் ஸ்ஜலதம் ததா3 | அம்ப3ரஸ்த2ம் விப3ப்4ராஜ ஸாரதாப்4ரமிவாததம் ||1-73
நீள் வட்டமான மஞ்சள் நிறக் கண்கள், அணுவிலும், ப்ருஹத்திலும் பிரகாசமாகத் தெரியும் சந்திர சூரியர்களை ஒத்திருந்தது. 1-59 மூக்கின் நிறம் மட்டும் தனித்து தாமிர வர்ணமாகத் தெரிந்தது, சந்த்யா கால சூரிய மண்டலம் போல. 1-60 வேகமாக கிளம்பிய சமயம் சுருண்டு கிடந்த வால் மேல் நோக்கி எழும்பியது இந்திரன் தன் த்வஜத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டு போவதைப் போல இருந்தது. 1-61 வெண்மையான பற்களையுடைய ஹனுமான், உடலைச் சுற்றி வாலுடன், பாஸ்கரனைச் சுற்றி ஒளி வட்டம் அமைந்தது போல இருந்தான். 1-62 மலைப் பிளவுகளில் தாமிர தாது தெரிவது போல முதுகுத் தண்டின் கீழ் சிவந்து காணப்பட்டது.1-63 வானர சிம்மத்தின் கட்கத்தில் அமுக்கப் பட்ட காற்று, அதன் வேகத்தில் மேகம் போல கர்ஜித்தது. 1-64 நெருப்புப் பொரி பறப்பது போல ஆகாயத்தில் திடுமென ஒரு தோற்றம் எழவும், யாரோ மத்தாப்பு கொளுத்துவது போல இருந்தது. 1-65 பறக்கும் பட்டம் போல வானரம் ஆகாயத்தில் அந்தரத்தில் நின்றான். வளர்ந்து பெரிதாகிக் கொண்டு போகும் யானை ஒன்று கயிற்றின் பலத்தில் நிற்பது போல இருந்தது. மேலே பறந்த வானரத்தின் நிழல் கீழே சாகர ஜலத்தில் விழ, படகு போவது போல நிழலின் தோற்றம் சமுத்திரத்தின் மேல் மட்டத்தில் தெரிந்தது. 1-66 எந்த எந்த திசையில் மாருதன் வேகமாக போகிறானோ, அந்த அந்த இடத்தில் ஜலம் கலக்கப் பட்டு கொந்த ளித்தது. 1-67 மலைச் சிகரம் போன்ற தன் மார்பு பிரதேசத்தால் சாகரத்தின் அலைகளை முட்டித் தள்ளிக் கொண்டும், கைகளால் அலைகளை அடித்துக் கொண்டும் ஹனுமான் முன்னேறினான். 1-68 மேலே மேகத்திலிருந்து வந்த காற்றும், கபி கிளப்பிய காற்றும் சேர்ந்து சமுத்திரத்தின் அலகளை கொந்தளிக்கச் செய்தது. சாகரமே நடுங்குவது போல இருந்தது. 1-69 பெரிய பெரிய அலைகளை கைகளால் தள்ளிக் கொண்டே சென்றான். ஒரு சமயம் ஹனுமான் குனிந்த தலையுடன், அலைகளை எண்ணிக் கொண்டே செல்வது போல இருந்தது. 1-71 சரத் கால ஆகாயம் போல கடல் காட்சியளித்தது. 1-72 ஹனுமனால் கிளப்பப் பட்ட நீர்த்திவலைகள் மேகமாக திரண்டு நிற்க, கீழே சமுத்திரத்தின் பரப்பு ஆகாயமோ எனும்படி இருந்தது. 1-73
तिमिनक्रझषाः कूर्मा दृश्यन्ते विवृतास्तदा।
वस्त्रापकर्षणेनेव शरीराणि शरीरिणाम्।। 5.1.74
प्लवमानं समीक्ष्याथ भुजङ्गाः सागरालयाः।
व्योम्नि तं कपिशार्दूलं सुपर्ण इव मेनिरे।। 5.1.75
दशयोजनविस्तीर्णा त्रिंशद्योजनमायता।
छाया वानरसिंहस्य जले चारुतराभवत्।। 5.1.76
श्वेताभ्रघनराजीव वायुपुत्रानुगामिनी।
तस्य सा शुशुभे छाया वितता लवणाम्भसि।। 5.1.77
शुशुभे स महातेजा महाकायो महाकपिः।
वायुमार्गे निरालम्बे पक्षवानिव पर्वतः।। 5.1.78
येनासौ याति बलवान् वेगेन कपिकुञ्जरः।
तेन मार्गेण सहसा द्रोणीकृत इवार्णवः।। 5.1.79
आपाते पक्षिसङ्घानां पक्षिराज इवाबभौ।
हनूमान् मेघजालानि प्रकर्षन् मारुतो यथा।। 5.1.80
प्रविशन्नभ्रजालानि निष्पतंश्च पुनः पुनः।
प्रच्छन्नश्च प्रकाशश्च चन्द्रमा इव लक्ष्यते।। 5.1.81
पाण्डुरारुणवर्णानि नीलमाञ्जिष्ठकानि च।
कपिना कृष्यमाणानि महाभ्राणि चकाशिरे।। 5.1.82
प्लवमानं तु तं दृष्ट्वा प्लवगं त्वरितं तदा।
ववर्षुः पुष्पवर्षाणि देवगन्धर्वचारणाः।। 5.1.83
तताप न हि तं सूर्यः प्लवन्तं वानरेश्वरम्।
सिषेवे च तदा वायू रामकार्यार्थसिद्धये।। 5.1.84
ऋषयस्तुष्टुवुश्चैनं प्लवमानं विहायसा।
जगुश्च देवगन्धर्वाः प्रशंसन्तो महौजसम्।। 5.1.85
नागाश्च तुष्टुवुर्यक्षा रक्षांसि विविधाः खगाः।
प्रेक्ष्याकाशे कपिवरं सहसा विहतक्लमम्।। 5.1.86
तस्मिन् प्लवगशार्दूले प्लवमाने हनूमति।
इक्ष्वाकुकुलमानार्थी चिन्तयामास सागरः।। 5.1.87
साहाय्यं वानरेन्द्रस्य यदि नाहं हनूमत:।
करिष्यामि भविष्यामि सर्ववाच्यो विवक्षताम्।। 5.1.88
अहमिक्ष्वाकुनाथेन सगरेण विवर्धितः।
इक्ष्वाकुसचिवश्चायं नावसीदितुमर्हति।। 5.1.89
திமி நக்ர ஜஷா: கூர்மா த்3ருஸ்யந்தே விவ்ருதாஸ்ததா | வஸ்த்ராப கர்ஷணேன(இ)வ ஸரீராணி ஸரீரிணாம் ||
ப்லவமானம் ஸமீக்ஷ்யாத2 பு4ஜங்கா3: சாக3ராலயா: | வ்யோம்னி தம் கபி ஸார்தூ3லம் சுபர்ண இதி மேனிரே ||
த3ஸ யோஜன விஸ்தீர்ணா த்ரிம்ஸத்யோஜனமாயதா | ச்சா2யா வானர சிம்ஹஸ்ய ஜலே சாருதராபவத் || (1-76)
ஸ்வேதாப்4ரக4னராஜீவ வாயுபுத்ரானுகா3மினீ |தஸ்ய ஸா ஸுஸுபே ச்சா2யா விததா லவனாம்ப3ஸி ||
ஸுஸுபே4 ஸ மஹாதேஜா மஹாகாயோ மஹாகபி: | வாயுமார்கே3 நிராலம்பே3 பக்ஷவானிவ பர்வத: ||
யேனாஸௌ யாதி ப3லவான் வேகே3ன கபிகுஞ்ஜர: | தேன மார்கேன ஸஹஸா த்3ரோணி க்ருத இவார்ணவ: ||
ஆபாதே பக்ஷி ஸங்காணாம் பக்ஷிராஜ இவாப3பௌ4 |ஹனூமான் மேக4 ஜாலானி ப்ரகர்ஷன் மாருதோ யதா2 ||
ப்ரவிஸன்னப்4ர ஜாலானி நிஷ்பதம்ஸ்ச புன: புன: || ப்ரச்2சன்னஸ்ச ப்ரகாஸஸ்ச சந்த்3ரமா இவ லக்ஷ்யதே ||
பாண்டராருண வர்ணானி நீல மாஞ்ஜிஷ்டகானி ச | கபினா க்ருஷ்யமாணானி மஹாப்4ராணி சகாஸிரே ||
ப்லவமானம் து தம் த்3ருஷ்ட்வா ப்லவக3ம் த்வரிதம் ததா3 | வவர்ஷு: புஷ்ப வர்ஷாணி தே3வ கந்த4ர்வ சாரணா: ||
ததாப நஹி தம் சூர்ய: ப்லவந்தம் வானரேஸ்வரம் | ஸிஷேவே ச ததா3 வாயூ ராம கார்யார்த2 சித்3த4யே ||
ரிஷய: துஷ்டுவுச்சைனம் ப்லவமானம் விஹாயஸா | ஜக்3முஸ்ச தே3வக3ந்த4ர்வா: ப்ரஸம்ஸந்தோ மஹௌஜஸம் ||
நாகாஸ்ச துஷ்டுவுர்யக்ஷா ரக்ஷாம்ஸி விவிதா4: க2கா3: | ப்ரேக்ஷ்யாகாஸே கபிவரம் ஸஹஸா விஹத க்லமம் ||
தஸ்மின் ப்லவக3 ஸார்தூ3லே ப்லவமானே ஹனூமதி | இக்ஷ்வாகு குல மானார்தீ2 சிந்தயாமாஸ ஸாக3ர: ||
ஸாஹாய்யம் வானரேந்த்3ரஸ்ய யதி3 நாஹம் ஹனூமத: | கரிஷ்யாமி பவிஷ்யாமி ஸர்வ வாச்யோ விவக்ஷதாம் ||
அஹமிக்ஷ்வாகு நாதே2ன ஸகரேண விவர்தி4த:| இக்ஷ்வாஸகு ஸசிவஸ்சாயம் நாவஸீதி3துமர்ஹதி 1-89
திமிங்கிலங்கள், மீன்கள், கூர்மங்கள், நக்ரம், முதலைகள், முதலியவை பரபரப்புடன் இங்கும் அங்குமாக அலைந்தன. சரீரம் உடைய மனிதர்கள், திடுமென வஸ்திரத்தை யாரோ பறித்தால் பரபரப்படைவது போல,1-74 திடுமென ஆகாயத்தில் தோன்றி கடலைத் தாண்டும் பெரிய உருவத்தை இதுவரை கண்டறியாத கடல் வாழ் ஜந்துக்கள், பதறின. நாகங்கள், சுபர்ணன், கருடன் என்று ஹனுமானை பார்த்து நடுங்கின 1-75. வானர சிம்மத்தின் நிழலே, பத்து யோஜனை விஸ்தீர்ணமும், முப்பது யோஜனை நீளமும், அதுவே கண்டறியாத புதுமையாக இருந்தது. 1-76 வெண்மையான மேகங்களை கரு மேகம் தொடர்வது போல, வானரத்தை அதன் நிழல் தொடர்ந்து ஜல பரப்பில் விரிந்து தெரிந்தது. 1-77 எந்த விதமான பிடிமானமோ, ஆதாரமோ இல்லாமல், வாயு மார்கத்தில், தானே ஏற்றுக் கொண்ட ப்ரும்மாண்டமான சரீரத்துடன் வாயு புத்திரன், மகா தேஜஸுடன், கவர்ச்சியுடன் இருந்தான். மலைக்கு இறக்கை முளைத்து விட்டது போல், 1-78 வேகம் எடுத்துச் சென்ற திசைகளில் பெரும் கடல் த்3ரோணஎ அளவு, (படி என்பதுபோல அளக்கும் அளவு), ஆயிற்று. 1-79 கூட்டம் கூட்டமாக பறக்கும் பறவைகளின் நடுவில் பக்ஷிராஜனாகத் தெரிந்தான். மாருதன் போலவே அவன் மகனும் மேகங்களை வருத்திக் கொண்டே சென்றான். 1-80 ஆகாயத்தை துளைத்துக் கொண்டு செல்வது போல மேல் நோக்கி ஒரு சமயம், திரும்ப கீழே விழுந்து விடுவது போல மறு நிமிடம் என்று, தெரிவதும் மறைவதுமாக சந்திரமா போல இருந்தான். 1-81 வெண்மை, அருண நிறம், நீலம், மஞ்சள் என்று பல வர்ணங்களிலும் விளங்கும் ஆகாயம், கபி இழுக்க, இழுக்க, உடன் வருவது போல வளைந்து கொடுத்ததோ. 1-82 தேவ, கந்தர்வ, சாரணர்கள், இதற்குள், ஹனுமான் லங்கையை அடைய பெரும் கடலைத் தாவித் தாண்டி கடக்க ஆரம்பித்திருக்கிறான் என்று தெரிந்து, புஷ்பமாரி பொழிந்தனர். 1-83 வேகமாக செல்பவனை வாழ்த்தினர். சூரியன் அவனை சுடவில்லை. வாயு அவனை நகர்த்தி அலைக்கழிக்கவில்லை. ராம காரியம் நல்ல விதமாக நிறைவேற, வாழ்த்தி அனுப்பினார்கள். 1-84 ஆகாய மார்கமாக துணிந்து புறப்பட்ட அனுமனை, ரிஷிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வழியனுப்பினர். தேவ, கந்தர்வர்கள், புகழ் பாடினர்.1-85 நாகர்கள், மகிழ்ந்தனர். யக்ஷ, ராக்ஷஸர்கள், பலவிதமான பறவைகள், ஆகாயத்தில் நிமிர்ந்து பார்த்து, கடலைத் தாண்டும் பெரிய வானரம் களைப்பின்றி செல்வதைக் கண்டனர். 1-86 இப்படி வானர வீரன் ஆகாயத்தை மறைத்துக் கொண்டு செல்லும் பொழுது, சாகர ராஜன், இக்ஷ்வாகு குலத்திற்கு பந்தம் உடையவன், யோசிக்கலானான். 1-87 ஹனுமானுக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமே, எதுவும் செய்யாமல் விட்டால், எல்லோரிடமும் பொல்லாப்பு வரும். 1-88 நான் இக்ஷ்வாகு குல அரசனால் சகரனால் வளர்க்கப் பட்டவன். இவன் இக்ஷ்வாகு குல மந்திரி. இவன் வருந்தாமலிருக்க வேண்டும். இவன் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, செல்ல நான் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். 1-89
तथा मया विधातव्यं विश्रमेत यथा कपिः।
शेषं च मयि विश्रान्तः सुखेनातिपतिष्यति।। 5.1.90
इति कृत्वा मतिं साध्वीं समुद्रश्छन्नमम्भसि।
हिरण्यनाभं मैनाकमुवाच गिरिसत्तमम्।। 5.1.91
त्वमिहासुरसङ्घानां पातालतलवासिनाम्।
देवराज्ञा गिरिश्रेष्ठ परिघः संनिवेशितः।। 5.1.92
त्वमेषां ज्ञातवीर्याणां पुनरेवोत्पतिष्यताम्।
पातालस्याप्रमेयस्य द्वारमावृत्य तिष्ठसि।। 5.1.93
तिर्यगूर्ध्वमधश्चैव शक्तिस्ते शैल वर्धितुम्।
तस्मात् संचोदयामि त्वामुत्तिष्ठ नगसत्तम।। 5.1.94
स एष कपिशार्दूलस्त्वामुपैष्यति वीर्यवान्।
हनूमान् रामकार्यार्थं भीमकर्मा खमाप्लुतः।। 5.1.95
अस्य साह्यं मया कार्यमिक्ष्वाकुहितवर्तिनः।
मम हीक्ष्वाकवः पूज्याः परं पूज्यतमास्तव।। 5.1.96
कुरु साचिव्यमस्माकं न नः कार्यमतिक्रमेत्।
कर्तव्यमकृतं कार्यं सतां मन्युमुदीरयेत्।। 5.1.97
सलिलादूर्ध्वमुत्तिष्ठ तिष्ठत्वेष कपिस्त्वयि।
अस्माकमतिथिश्चैव पूज्यश्च प्लवतां वरः।। 5.1.98
चामीकरमहानाभ देवगन्धर्वसेवित।
हनूमांस्त्वयि विश्रान्तस्ततः शेषं गमिष्यति।। 5.1.99
काकुत्स्थस्यानृशंस्यं च मैथिल्याश्च विवासनम्।
श्रमं च प्लवगेन्द्रस्य समीक्ष्योत्थातुमर्हसि।। 5.1.100
हिरण्यनाभो मैनाको निशम्य लवणाम्भसः।
उत्पपात जलात्तूर्णं महाद्रुमलतायुतः।। 5.1.101
स सागरजलं भित्त्वा बभूवाभ्युत्थितस्तदा।
यथा जलधरं भित्त्वा दीप्तरश्मिर्दिवाकरः।। 5.1.102
स महात्मा मुहूर्तेन पर्वतः सलिलावृतः।
दर्शयामास शृङ्गाणि सागरेण नियोजितः।। 5.1.103
शातकुम्भमयैः शृङ्गैः सकिंनरमहोरगैः।
आदित्योदयसंकाशैरालिखद्भिरिवाम्बरम्।। 5.1.104
ததா2 மயா விதா4தவ்யம் விஸ்ரமேத யதா2 கபி: | ஸேஷம் ச மயி விஸ்ராந்த: சுகே2னாதி4பதிஷ்யதி ||
இதி க்ருத்வா மதிம் ஸாத்4வீம் ஸமுத்3ரச்ச2ன்னமம்ப3ஸி | ஹிரண்யனாபம் மைனாகமுவாச கி3ரிசத்தமம் || (1-91)
த்வமிஹாசுர ஸங்கா4னாம் பாதால தல வாசினாம் | தே3வராஜா கி3ரிஸ்ரேஷ்ட பரிக3: ஸன்னிவேசித: ||
த்வமேஷாம் ஜாத வீர்யாணாம் புனரேவோத்பதிஷ்யதாம் | பாதாலஸ்யாப்ரமேயஸ்ய த்3வாரமாவ்ருத்ய திஷ்டஸி|| த்வமிஹா ஸுர ஸங்கானாம் பாதால தல வாஸினாம் | திர்யகூ3ர்த்4வமத4ஸ்சைவ ஸக்திஸ்தே ஸைல வர்திதும் ||
தஸ்மாத் சம்சோதயாமி த்வாமுத்திஷ்ட நக3 சத்தம||
ஸ ஏஷ கபி ஸார்தூ3லஸ்த்வாமுபைஷ்யதி வீர்யவான் | ஹனூமான் ராமகார்யார்த2ம் பீ4மகர்மா க2மாப்லுத: ||
அஸ்ய ஸாஹ்யம் மயா கார்யமிக்ஷ்வாகு ஹித வர்தின: | மம இக்ஷ்வாகவ: பூஜ்யா: பரம் பூஜ்யதமாஸ்தவ ||
குரு ஸாசிவ்யமஸ்மாகம் ந ந: கார்யமதிக்ரமேத் |
கர்தவ்யமக்ருதம் கார்யம் ஸதாம் மன்யுமுதீ3ரயேத் ||
ஸலிலாதூ3ர்த்4வமுத்திஷ்ட திஷ்டத்வேஷ கபிஸ்த்வயி | அஸ்மாகமதி2திஸ்சைவ பூஜ்யஸ்ச ப்லவதாம் வர: ||
சாமீகர மஹா நாப4 தே3வ கந்த4ர்வ ஸேவித | ஹனூமான்ஸ்த்வயி விஸ்ராந்த: தத: ஸேஷம் க3மிஷ்யதி ||
காகுஸ்த2ஸ்யான்ருஸம்ஸ்யம் ச மைதில்யாஸ்ச விவாஸனம் | ஸ்ரமம் ச ப்லவகேந்த்3ரஸ்ய ஸமீஸ்க்ஷ்யோத்தாதுமர்ஹசி ||
ஹிரண்யனாபோ4 மைனாகோ நிஸம்ய லவனாம்ப3ஸ: | உத்பபாத ஜலாத்தூர்ணம் மஹாத்3ரும லதாயுத:||
ஸ ஸாகர ஜலம் பி4த்வா ப3பூ4வாப்யுத்தி2தஸ்ததா | யதா3 ஜலத4ரம் பி4த்வா தீ3ப்தரஸ்மிர் தி3வாகர: ||
ஸ மஹாத்மா முஹூர்தேன பர்வத: ஸலிலாவ்ருத: | த3ர்ஸயமாஸ ச ஸ்ருங்கா3னி ஸாக3ரேண நியோஜித: ||
ஸாதகும்ப4மயை: ஸ்ருங்கை3: ஸகின்னர மஹோரகை3: | ஆதி3த்யோத3ய சங்காஸை: ஆலிக2த்பிரிவாம்ப3ரம் || 1-104
சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பயணத்தை தொடர்ந்தால், புத்துணர்ச்சி பெற்றவனாக, ஆவான். 1-90 இப்படி எண்ணி, சமுத்திர ஜலத்தில் மறைந்து இருந்த மைனாகம் என்றும், ஹிரண்ய நாப4 என்றும் அழைக்கப் பட்ட மலையை அழைத்தான். 1-91 இந்திரனால் விரட்டப் பட்டு கடலில் மூமூழ்கி இருந்த மலை. நக3 சத்தமா, (மலைகளுள் சிறந்தவனே,) பாதாளத்தின் வாயிலை மறைத்துக் கொண்டு நிற்கிறாய். 1-92 மேலும், கீழும், பக்க வாட்டிலும் நகர உனக்கு சக்தியுள்ளது. 1-93 அதனால் உனக்கு ஒரு வேலை தருகிறேன். எழுந்திரு. இதோ பார். இந்த வானர வீரன் ஹனுமான், ராம காரியமாக கிளம்பி இருக்கிறான். ஆகாய மார்கமாக வந்து கொண்டிருக்கிறான். 1-94 இதோ அருகில் வந்து விடுவான். எனக்கு இக்ஷ்வாகு குலத்தின் அரசர்களிடம் நன்றிக் கடன் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் உனக்கும் இக்ஷ்வாகு குலத்தினர் மரியாதைக் குரியவர்கள். 1-95 உனக்கு நன்மை செய்தவர்கள். அதனால் ஒரு காரியம் செய். செய்ய வேண்டிய கடமையை செய்யாது விட்டால், நல்லவர்கள் கூட கோபம் கொள்வார்கள். 1-96 இந்த நீருக்கு வெளியில் தெரியும்படி நின்று கொள். உன் மேல் முஹுர்த்த நேரம் இந்த வானர வீரன் நின்று சிரம பரிகாரம் செய்து கொள்ளட்டும் 1-97. காகுத்ஸனுடைய நல்ல குணம், அவனுடைய தயை, அவனுக்கு நேர்ந்த கஷ்டம், சீதை காணாமல் போனது. இந்த வானரம் ராம காரியமாக கிளம்பியிருக்கிறான், பயணத்தின் சிரமம் இவற்றை நினைத்து, நீ எழுந்திரு. 1- 98 இதைக் கேட்டு, ஹிரண்யனாபனான மைனாகம் நீருக்குள்ளிருந்து புறப்பட்டு மேலே வந்து, ஹனுமானை வரவேற்க தயாராகியது. மலையின் மேல் இருந்த மலை நிறைந்த மரங்களும், பழ மரங்களும் வெளியே தெரியலாயிற்று. 1-99 சமுத்திர ஜலத்தை கிழித்துக் கொண்டு மேல் எழும்பிய மைனாக மலை மேகங்களை பிளந்து கொண்டு, கடுமையான கிரணங்களுடன் தி3வாகரன் (பகலவன்) உதித்தது போல இருந்தான். 1-100 சாகரத்தின் கட்டளைப்படி, நாலா புறமும் ஜலம் சூழ்ந்த அந்த பிரதேசத்தில், கால் ஊன்ற தன் தலையையே கொடுக்கத் தயாராக இருப்பது போல, தன் சிகரத்தை மட்டும் வெளியே தெரியும் படி வைத்து நின்று கொண்டான். -101 கின்னரர்களும், மகா உரகங்களும் (நாகங்கள்) வசிப்பதும், உதய சூரியன் போன்ற பிரகாசத்துடன், மேகத்தை தொட்டு விடும் உயரத்துடன், காஞ்சன மயமான சிகரங்கள் திடுமெனெ நீர்ப் பரப்பில், தெரியலாயின. 1-102 ஹிரண்யனாபன் என்ற பெயருக்கு ஏற்ப, பொன் நிறமான அந்த சிகரங்கள் ஆகாயத்தையே பொன் நிறமாக்கின. நூறு ஆதித்யர்கள் ஒரே சமயத்தில் உதித்த பிரமையை உண்டு பண்ணியது. 1- 103-104
तप्तजाम्बूनदैः शृङ्गैः पर्वतस्य समुत्थितैः।
आकाशं शस्त्रसंकाशमभवत् काञ्चनप्रभम्।। 5.1.105
जातरूपमयैः शृङ्गैर्भ्राजमानैः स्वयंप्रभैः।
आदित्यशतसंकाशः सोऽभवद्गिरिसत्तमः।। 5.1.106
तमुत्थितमसङ्गेन हनुमानग्रतः स्थितम्।
मध्ये लवणतोयस्य विघ्नोऽयमिति निश्चितः।। 5.1.107
स तमुच्छ्रितमत्यर्थं महावेगो महाकपिः।
उरसा पातयामास जीमूतमिव मारुतः।। 5.1.108
स तथा पातितस्तेन कपिना पर्वतोत्तमः।
बुद्ध्वा तस्य कपेर्वगं जहर्ष च ननंद च।। 5.1.109
तमाकाशगतं वीरमाकाशे समुपस्थितः।
प्रीतो हृष्टमना वाक्यमब्रवीत् पर्वतः कपिम्।। 5.1.110
मानुषं धारयन् रूपमात्मनः शिखरे स्थितः।
दुष्करं कृतवान् कर्म त्वमिदं वानरोत्तम।। 5.1.111
निपत्य मम शृङ्गेषु विश्रमस्व यथासुखम्।
राघवस्य कुले जातैरुदधिः परिवर्धितः।। 5.1.112
स त्वां रामहिते युक्तं प्रत्यर्चयति सागरः।
कृते च प्रतिकर्तव्यमेष धर्मः सनातनः।। 5.1.113
सोऽयं तत्प्रतिकारार्थी त्वत्तः संमानमर्हति।
त्वन्निमित्तमनेनाहं बहुमानात्प्रचोदितः।। 5.1.114
योजनानां शतं चापि कपिरेष खमाप्लुतः।
तव सानुषु विश्रान्तः शेषं प्रक्रमतामिति।। 5.1.115
तिष्ठ त्वं हरिशार्दूल मयि विश्रम्य गम्यताम्।
तदिदं गन्धवत् स्वादु कन्दमूलफलं बहु।। 5.1.116
तदास्वाद्य हरिश्रेष्ठ विश्रम्य श्वो गमिष्यसि।
अस्माकमपि संबन्ध: कपिमुख्य त्वयास्ति वै।। 5.1.117
प्रख्यातस्त्रिषु लोकेषु महागुणपरिग्रहः।
वेगवन्तः प्लवन्तो ये प्लवगा मारुतात्मज।। 5.1.118
तेषां मुख्यतमं मन्ये त्वामहं कपिकुञ्जर।
अतिथिः किल पूजार्हः प्राकृतोऽपि विजानता।। 5.1.119
தப்த ஜாம்பூ3னதை3: ஸ்ருங்கை3: பர்வதஸ்ய ஸமுத்திதை: | ஆகாஸம் ஸஸ்த்ர ஸ்ம்காஸமபவத் காஞ்சனப் ப்ரபம் ||
ஜாதரூபமயை: ஸ்ருங்கை3: ப்4ராஜ மானை: ஸ்வயம்ப்ரபை4: | ஆதித்ய ஸத ஸம்காஸ: ஸோ(அ)பவத்கி3ரிசத்தம: || 1-106)
தமுத்திதம்ஸங்கே3ன ஹனூமானக்3ரத: ஸ்தி2தம் | மத்4யே லவண தோயஸ்ய விக்3னோ(அ)யமிதி நிஸ்சித: ||
ஸ தமுச்2ச்ரிதமத்யர்த2ம் மஹாவேகோ3 மஹாகபி: | உரஸா பாதயாமாஸ ஜீமூதமிவ மாருத: ||
ஸ ததா3 பாதிதஸ் தேன கபினா பர்வதோத்தம: | புத்3த்4வா தஸ்ய கபேர்வேக3ம் ஜஹர்ஷ ச நனந்த3 ச ||
தமாகாஸ க3தம் வீரமாகாஸே சமுபஸ்தி2த: | ப்ரீதோ ஹ்ருஷ்டமனா வாக்யமப்3ரவீத் பர்வத: கபிம் ||
மானுஷம் தா4ரயன் ரூபமாத்மன: ஸிகரே ஸ்தி2த: | து3ஷ்கரம் க்ருதவான் கர்ம த்வமித3ம் வானரோத்தம ||
நிபத்ய மம ஸ்ருங்கே3ஷூ விஸ்ரமஸ்வ யதா2 சுகம் | ராக4வஸ்ய குலே ஜாதைருத3தி4: பரிவர்தி4த: ||
ஸ த்வாம் ராம ஹிதே யுக்தம் ப்ரத்யர்சயதி ஸாக3ர: |
க்ருதே ச ப்ரதிகர்தவ்யம் ஏஷ த4ர்ம சனாதன: ||
ஸோ(அ)யம் தத்ப்ரதிகாரார்தீ த்வத்த: ஸம்மானமர்ஹதி |
த்வன்னிமித்தமனேனாஹம் பஹுமானாத்ப்ரசோதி3த: ||
யோஜனானாம் ஸதம் சாபி கபிரேஷ க2மாப்லுத: | தவ ஸானுஷு விஸ்ராந்த: ஸேஷம் ப்ரக்ரமதாமிதி ||
திஷ்ட த்வம் ஹரிஸார்தூ3ல மயி விஸ்ரம்ய க3ம்யதாம் |
ததி3தம் கந்த4வத் ஸ்வாது3 கந்த3மூலபலம் ப3ஹு ||
ததாஸ்வாத்3ய ஹரி ஸ்ரேஷ்ட விஸ்ரம்ய ஸ்வோ க3மிஷ்யசி | அஸ்மாகமபி சம்பந்த4: கபிமுக்2ய த்வயாஸ்தி வை |
ப்ரக்யாதஸ்திரிஷு லோகேஷு மஹாகு3ண பரிக்3ரஹ: | வேக3வந்த: ப்லவந்தோ யே ப்லவகா மாருதாத்மஜ ||
தேஷாம் முக்யதமம் மன்யே த்வாமஹம் கபி குஞ்ஜர | அதி2தி: கில பூஜார்ஹ: ப்ராக்ருதோ(அ)பி விஜானதா|| 1-119
எதிர்பாராமல் தன் எதிரில் வந்து நின்ற, இந்த மலையை ஹனுமான் ஏதோ இது ஒரு தடை என்றே எண்ணினான். 1-105 விக்னம், இதை கடந்து செல்ல வேண்டும் என்று மகா வேகமாக தன் மார்பினால் அதை தள்ளிக் கொண்டு சென்றான். தந்தையான மாருதி, மேகங்களை நெட்டித் தள்ளுவது போல. 1-106 தன்னைத் தள்ளியதிலிருந்தே மகா கபியின் வேகத்தை புரிந்து கொண்ட மைனாகம், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். 1-107 ஆகாயத்தில் நின்ற வீரனைப் பார்த்து, மலையுச்சியில் தானும் மனித உருவம் எடுத்துக் கொண்டு நின்றபடி வானரோத்தமா, அரிய செயலைச் செய்கிறாய். சற்று என் சிகரத்தில் தங்கி சிரம பரிகாரம் செய்து கொள். 1-108-109 ராகவனுடைய குலத்தில் பிறந்தவர்களால் தான் இந்த சமுத்திரம் உண்டானது. அதனால் சாகரன், ராம காரியத்திற்காக செல்லும் உனக்கு உபசாரம் செய்ய விரும்புகிறான். 1-110 ஒருவன் செய்த உதவிக்கு பிரதி உதவி செய்தே ஆக வேண்டும். இது பழமையான தர்மம். அதனால் சாகர ராஜன் உனக்கு சேவை செய்து, ராகவ குலத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விழைகிறான். 1-111 என்னை அனுப்பியிருக்கிறான். மிகவும் மரியாதையுடனும் சிரத்தையுடனும், என்னை உனக்கு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்து கொள்ள இடம் தரும்படி சொல்லியனுப்பினான். 1-112 நூறு யோஜனை தூரம் கடலைத் தாண்டும் முயற்சியில், வானர ராஜன் இறங்கியிருக்கிறான். உன் சாரலில் தங்கி இளைப்பாறிச் செல்லட்டும் என்றான். 1-113 அதனால் ஹரிசார்தூ3லா, சற்று நில். இதோ, காய்கறி பழ வகைகள். இவைகளைப் புசித்து, சிரம பரிகாரம் செய்து கொண்டு நாளை செல்வாய். 1-114 வானரனே, எங்களுக்கும் உன்னுடன் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. 1-115 மூன்று உலகிலும் தேடினாலும் உன்னைப் போல வானரங்களை காண்பது அரிது 1-116 . மாருதாத்மஜா, நீ பூஜிக்கத் தகுந்த அதிதி. சாதாரணமாகவே, அதிதி என்று யார் வந்தாலும் உபசரிக்க வேண்டியது சாதாரண தர்மம். 1-117 அதிலும், உன் போன்றவர்களை அதிதியாக பெறுவதே பாக்கியம். 1-118 கபிகுஞ்சரா, நீயோ மாருதனின் புதல்வன். அவனைப் போலவே ஆற்றலும், வேகமும் உடையவன். உன்னை நான் உபசரித்தால் உன் தந்தையை உபசரித்தது போலாகும்.1-119
धर्मं जिज्ञासमानेन किं पुनर्यादृशो भवान्।
त्वं हि देववरिष्ठस्य मारुतस्य महात्मनः।। 5.1.120
पुत्रस्तस्यैव वेगेन सदृशः कपिकुञ्जर।
पूजिते त्वयि धर्मज्ञ पूजां प्राप्नोति मारुतः।। 5.1.121
तस्मात्त्वं पूजनीयो मे शृणु चाप्यत्र कारणम्।
पूर्वं कृतयुगे तात पर्वताः पक्षिणोऽभवन्।। 5.1.122
तेऽभिजग्मुर्दिशः सर्वा गरुडानिलवेगिनः।
ततस्तेषु प्रयातेषु देवसङ्घा: सहर्षिभिः।। 5.1.123
भूतानि च भयं जग्मुस्तेषां पतनशङ्कया।
ततः क्रुद्धः सहस्राक्षः पर्वतानां शतक्रतुः।। 5.1.124
पक्षांश्चिच्छेद वज्रेण ततः तत्र सहस्रशः।
स मामुपागतः क्रुद्धो वज्रमुद्यम्य देवराट्।। 5.1.125
ततोऽहं सहसा क्षिप्तः श्वसनेन महात्मना।
अस्मिँल्लवणतोये च प्रक्षिप्तः प्लवगोत्तम।। 5.1.126
गुप्तपक्षसमग्रश्च तव पित्राभिरक्षितः।
ततोऽहं मानयामि त्वां मान्यो हि मम मारुतः।। 5.1.127
त्वया मे ह्येष संबन्धः कपिमुख्य महागुणः।
अस्मिन्नेवं गते कार्ये सागरस्य ममैव च।। 5.1.128
प्रीतिं प्रीतमनाः कर्तुं त्वमर्हसि महाकपे।
श्रमं मोक्षय पूजां च गृहाण कपिसत्तम।। 5.1.129
प्रीतिं च बहु मन्यस्व प्रीतोऽस्मि तव दर्शनात्।
एवमुक्तः कपिश्रेष्ठस्तं नगोत्तममब्रवीत्।। 5.1.130
प्रीतोऽस्मि कृतमातिथ्यं मन्युरेषोऽपनीयताम्।
त्वरते कार्यकालो मे ह्यहश्च व्यतिवर्तते।। 5.1.131
प्रतिज्ञा च मया दत्ता न स्थातव्यमिहान्तरा।
इत्युक्त्वा पाणिना शैलमालभ्य हरिपुंगवः।। 5.1.132
जगामाकाशमाविश्य वीर्यवान् प्रहसन्निव।
स पर्वतसमुद्राभ्यां बहुमानादवेक्षितः।। 5.1.133
पूजितश्चोपपन्नाभिराशीर्भिरनिलात्मजः।
अथोर्ध्वं दूरमुत्पत्य हित्वा शैलमहार्णवौ।। 5.1.134
पितुः पन्थानमास्थाय जगाम विमलेऽम्बरे।
ततश्चोर्ध्वं गतिं प्राप्य गिरिं तमवलोकयन्।। 5.1.135
த4ர்மம் ஜிஞாஸமானேன கிம் புனர் யாத்3ருஸோ ப4வான் | த்வம் ஹி தே3வ வரிஷ்டஸ்ய மாருதஸ்ய மஹாத்மன: ||
புத்ரஸ்தஸ்யைவ வேகே3ன சத்3ருஸ: கபி குஞ்ஜர | பூஜிதே த்வயி த4ர்மஞ பூஜாம் ப்ராப்னோதி மாருத: ||(1-121)
தஸ்மாத்த்வம் பூஜனீயோ மே ஸ்ருணு சாப்யத்ர காரணம் |பூர்வம் க்ருத யுகே3 தாத பர்வதா: பக்ஷிணோ(அ)ப4வன் ||
தே(அ)பி4ஜக்3முர்தி3ஸ: சர்வா க3ருடானில வேகி3ன: | ததஸ்தேஷு ப்ரயாதேஷு தேவ சங்கா4: ஸமஷர்ஷிபி:||
பூ4தானி ச ப4யம் ஜக்3முஸ்தேஷாம் பதன ஸங்கயா | தத: க்ருத்3த4: ஸஹஸ்ராக்ஷ: பர்வதானாம் ஸதக்ரது: ||
பக்ஷாம்ஸ்சிச்சேத3 வஜ்ரேண தத்ர தத்ர ஸஹஸ்ரஸ: || ஸ மாமுபக3த: க்ருத்3தோ4 வஜ்ரமுத்3த்4யம்ய தே3வராட் |
ததோ(அ)ஹம் ஸஹஸா க்ஷிப்த: ஸ்வஸனேன மஹாத்மனா | அஸ்மில்லவண தோயே ச ப்ரக்ஷிப்த: ப்லவகோ3த்தம ||
குப்தபக்ஷ ஸமக்ரஸ்ச தவ பித்ராபிரக்ஷித: | ததோ(அ)ஹம் மானயாமி த்வாம் மான்யோ ஹி மம மாருத: ||
த்வயா மே ஹ்யேஷ சம்பந்த4: கபிமுக்ய மஹாகு3ண: | அஸ்மின்னேவம் க3தே கார்யே ஸாக3ரஸ்ய மமைவ ச |
ப்ரீதிம் ப்ரீதமனா: கர்தும் த்வமர்ஹஸி மஹாகபே | ஸ்ரமம் மோக்ஷய பூஜாம் ச க்ருஹாண கபிசத்தம ||
ப்ரீதிம் ச ப3ஹு மன்யஸ்வ ப்ரீதோ(அ)ஸ்மி தவ த3ர்ஸனாத் | ஏவமுக்த: கபிஸ்ஸ்ரேஷ்ட: தம் நகோ3த்தமமப்3ரவீத் ||
ப்ரீதோ(அ)ஸ்மி க்ருதமாதித்யம் மன்யுரேஷோ(அ)பனீயதாம் | த்வரதே கார்ய காலோ மே ஹ்யஹஸ்ச வ்யதிவர்ததே ||
ப்ரதிக்ஞா ச மயா த3த்தா ந ஸ்தா2தவ்யமிஹாந்தரா | இத்யுக்த்வா பாணினா ஸைலமாலப்4ய ஹரிபுங்க3வ: ||
ஜகா3மாகாஸமாவிஸ்ய வீர்யவான் ப்ரஹஸன்னிவ | ஸ பர்வதசமுத்3ராப்4யாம் ப3ஹுமானாதவேக்ஷித: ||
பூஜிதஸ்சோபபன்னாபி: ஆஸீபிரனிலாத்மஜ: | அதோர்த்4வம் தூ3ரமுத்பத்ய ஹித்வா ஸைல மஹார்ணவௌ ||
பிது: பந்தா2னமாஸ்தாய ஜகா3ம விமலே(அ)ம்ப3ரே | ததஸ்சோர்த்4வம் க3திம் ப்ராப்ய கி3ரிம் தமவலோகயன் ||1-135
இப்படி நான் உன்னை உபசரிக்க விரும்புவதன் காரணம் சொல்கிறேன் கேள். 1-120 முன்பு க்ருத யுகத்தில் மலைகள் இறக்கைகளுடன் இருந்தன. நாலா திசைகளிலும் அவை சென்றன. கருடனோ, காற்றோ, எனும்படி வேகமாக சென்றன.1-121 இப்படி இவர்கள் செல்லும் பொழுது தேவர்களும், ரிஷிகளும், மற்ற ஜீவராசிகளும் பயந்து நடுங்கின. எந்த நிமிடமும் விழலாம் என்ற சந்தேகம்.1-122 இதனால் சஹஸ்ராக்ஷன் கோபம் கொண்டான். தன் வஜ்ராயுதத்தை எடுத்து கிடைத்த இடத்தில் பர்வதங்களின் இறக்கையை வெட்டி எறிந்தான். 1-123 என்னை நோக்கி வஜ்ராயுதத்தை தூக்கிக் கொண்டு வந்த சமயம், உன் தந்தையான வாயுவினால் தள்ளப்பட்டு இந்த உப்புக் கடலினுள் போடப் பட்டேன் 1-124 . என் இறக்கைகளோடு உன் தந்தையினால் ரக்ஷிக்கப் பெற்றேன். அதனால் உன்னை உபசரிக்கிறேன். 1-125 நீ என்னால் உபசரிக்கப் பட வேண்டியவனே. நமக்குள் உள்ள இந்த சம்பந்தமும் குறிப்பிடத் தக்கதே. ஆகையால், சாகரத்தில், என்னுடைய இந்த விருந்தோம்பலை, உபசாரத்தை ஏற்று, 1-126 இந்த சிகரத்தில் சிரம பரிகாரம் செய்து கொள். உன்னைக் கண்டதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். 1-127 என்று இவ்வாறு மைனாக பர்வதம் சொல்வதைக் கேட்ட ஹனுமான், 1-128 பர்வதமே, நீ பேசியதிலேயே ஆதித்யம் (விருந்தோம்பல்) ஆகி விட்டது. நானும் மகிழ்ச்சியடைந்தேன். தவறாக எண்ண வேண்டாம். வீணாக கவலைப் படாதே. என் காரியம் அவசரமானது. 1-129 இதோ, பொழுதும் சாய்ந்து கொண்டிருக்கிறது. நான் பிரதிக்ஞை செய்து இருக்கிறேன். வழியில் எங்கும் தங்கக் கூடாது என்பது என் விரதம், 1-130 என்று சொல்லி கைகளால் மலையைத் தள்ளி விட்டு, சிரித்துக் கொண்டே ஆகாயத்தில் ஏறி தன் பயணத்தைத் தொடர்ந்தான். 1-131 பர்வதமும், சாகரமும், மதிப்பும் மரியாதையுமாக ஏறிட்டு நோக்கி, ஆசிகளும் வழங்க, 1-132 இன்னும் வேகமாக மேல் நோக்கிச் சென்று, தன் தந்தையின் மார்கத்தில், விமலமான வானத்தில் பயணித்தான். 133-134 மேலே இருந்தபடி மலையைக் கண்டு, தன் போக்கில் வேகமாக செல்லலானான். இது ஹனுமானின் இரண்டாவது அரிய செயல். -135
वायुसूनुर्निरालम्बे जगाम विमलेऽम्बरे।
तद् द्वितीयं हनुमतो दृष्ट्वा कर्म सुदुष्करम्।। 5.1.136
प्रशशंसुः सुराः सर्वे सिद्धाश्च परमर्षयः।
देवताश्चाभवन् हृष्टास्तत्रस्थास्तस्य कर्मणा।। 5.1.137
काञ्चनस्य सुनाभस्य सहस्राक्षश्च वासवः।
उवाच वचनं श्रीमान् परितोषात् सगद्गदम्।। 5.1.138
सुनाभं पर्वतश्रेष्ठं स्वयमेव शचीपतिः।
हिरण्यनाभ शैलेन्द्र परितुष्टोऽस्मि ते भृशम्।। 5.1.139
अभयं ते प्रयच्छामि तिष्ठ सौम्य यथासुखम्।
साह्यं कृतं त्वया सौम्य विक्रान्तस्य हनूमतः।। 5.1.140
क्रमतो योजनशतं निर्भयस्य भये सति।
रामस्यैष हितायैव याति दाशरथेर्हरिः।। 5.1.141
सत्क्रियां कुर्वता तस्य तोषितोऽस्मि भृशं त्वया।
ततः प्रहर्षमगमद्विपुलं पर्वतोत्तमः।। 5.1.142
देवतानां पतिं दृष्ट्वा परितुष्टं शतक्रतुम्।
स वै दत्तवरः शैलो बभूवावस्थितस्तदा।। 5.1.143
हनुमांश्च मुहूर्तेन व्यतिचक्राम सागरम्।
ततो देवाः सगन्धर्वाः सिद्धाश्च परमर्षयः।। 5.1.144
अब्रुवन् सूर्यसंकाशां सुरसां नागमातरम्।
अयं वातात्मजः श्रीमान् प्लवते सागरोपरि।। 5.1.145
हनूमान्नाम तस्य त्वं मुहूर्तं विघ्नमाचर।
राक्षसं रूपमास्थाय सुघोरं पर्वतोपमम्।। 5.1.146
दंष्ट्राकरालं पिङ्गाक्षं वक्त्रं कृत्वा नभःस्पृशम्।
बलमिच्छामहे ज्ञातुं भूयश्चास्य पराक्रमम्।। 5.1.147
त्वां विजेष्यत्युपायेन विषादं वा गमिष्यति।
एवमुक्ता तु सा देवी दैवतैरभिसत्कृता।। 5.1.148
समुद्रमध्ये सुरसा बिभ्रती राक्षसं वपुः।
विकृतं च विरूपं च सर्वस्य च भयावहम्।। 5.1.149
प्लवमानं हनूमन्तमावृत्येदमुवाच ह।
मम भक्षः प्रदिष्टस्त्वमीश्वरैर्वानरर्षभ।। 5.1.150
வாயுசூனுர்னிராலம்பே ஜகா3ம விமலே(அ)ம்ப3ரே | தத் த்3விதீயம் ஹனுமதோ த்3ருஷ்ட்வா கர்ம ஸுது3ஷ்கரம் ||
ப்ரஸம்ஸஸு: ஸுரா: சர்வே சித்தா4ஸ்ச பரமர்ஷய: | தே3வதாஸ்சாபவன் ஹ்ருஷ்டா: தத்ரஸ்தாஸ் தஸ்ய கர்மணா || (1-137)
காஞ்சனஸ்ய ஸுனாப4ஸ்ய ஸஹஸ்ராக்ஷஸ்ச வாஸவ: | உவாச வசனம் ஸ்ரீமான் பரிதோஷாத் ஸக3த்3க3த3ம் ||
ஸுனாப4ம் பர்வத ஸ்ரேஷ்டம் ஸ்வயமேவ ஸசீபதி:| ஹிரண்யனாப4 ஸைலேந்த்3ர பரிதுஷ்டோ(அ)ஸ்மி தே ப்4ருஸம் ||
அப4யம் தே ப்ரயச்சாமி திஷ்ட சௌம்ய யதா2 சுகம் | ஸாஹ்யம் க்ருதம் த்வயா சௌம்ய விக்ராந்தஸ்ய ஹனூமத: ||
க்ரமதோ யோஜன ஸதம் நிர்ப4யஸ்ய ப4யே ஸதி | ராமஸ்யைஷ ஹிதாயைவ யாதி தா3ஸரதேர்ஹரி: ||
ஸத்க்ரியாம் குர்வதா தஸ்ய தோஷிதோ(அ)ஸ்மி ப்4ருஸம் த்வயா | தத: ப்ரஹர்ஷமக3மத்விபுலம் பர்வதோத்தம: ||
தே3வதானாம் பதிம் த்3ருஷ்ட்வா பரிதுஷ்டம் ஸதக்ரதும் | ஸ வை த3த்த வர: ஸைலோ ப3பூ4வாவஸ்தி2தஸ்ததா3 ||
ஹனூமான்ஸ்ச முஹூர்தேன வ்யதிசக்ராம ஸாக3ரம் | ததோ தே3வா: ஸக3ந்த4ர்வா: சித்3தா4ஸ்ச பரமர்ஷய: ||
அப்3ருவன் ஸூர்யஸங்காஸாம் சுரஸாம் நாக3மாதரம் | அயம் வாதாத்மஜ: ஸ்ரீமான் ப்லவதே ஸாக3ரோபரி ||
ஹனூமான் நாம தஸ்ய த்வம் முஹூர்தம் விக்4னமாசர | ராக்ஷஸம் ரூபமாஸ்தா2ய ஸுகோ4ரம் பர்வதோபமம்
தம்ஷ்ட்ரா கராலம் பிங்கா3க்ஷம் வக்த்ரம் க்ருத்வா நப4ஸ்ப்ருஸம் | ப3லமிச்சாமஹே ஞாதும் பூயஸ்சாஸ்ய பராக்ரமம் ||
த்வாம் விஜேஷ்யத்யுபாயேன விஷாதம் வா க3மிஷ்யதி | ஏவமுக்த்வா து ஸா தேவி தை3வதைரபி ஸத்க்ருதா ||
ஸமுத்3ரமத்4யே ஸுரஸா பி3ப்4ரதீ ராக்ஷஸம் வபு: | விக்ருதம் ச விரூபம் ச ஸர்வஸ்ய ச ப4யாவஹம் ||
ப்லவமானம் ஹனூமந்தம் ஆவ்ருத்ய இத3முவாச ஹ | மம ப4க்ஷ: ப்ரதிஷ்டசஸ்த்வம் ஈஸ்வரைர் வானர்ஷப4 | 1-150
இதை சுரர்களும், சித்தர்களும் வியந்து பாராட்டினர். தேவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 1-136 மற்றும் அங்கு இருந்த அனைவரும் இந்த செயலால் வியப்பு எய்தினர். 1-137 சஹஸ்ராக்ஷன், தானே குரல் தழ தழக்க, ஹிரண்யனாபன் எனும் மைனாக மலையை பாராட்டினான். 1-138 உன் உபசாரம் செய்யும் இந்த உயரிய நோக்கமே பாராட்டுக்குரியதே. 1-139 நான் உனக்கு அபயம் அளிக்கிறேன். இப்படியே இரு சௌம்யனே,. ஹனுமானுக்கு நீ உதவி செய்தாய். அரிய செயலைச் செய்யத் துணிந்த வீரனுக்கு இதுவும் ஒரு உதவியே. 1-140 பயப்பட வேண்டிய இந்த நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடக்கத் துணிந்திருக்கிறான். ராமனுடைய நன்மைக்காக, தசரத மகனின் காரியமாக இந்த வானரம் இந்த பெரும் செயலைச் செய்யக் கிளம்பியிருக்கும்பொழுது, நாமும் நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டியது அவசியமே. உன் செயலால் நான் உன்னிடமும் திருப்தியடைந்தேன். 1-141 இப்படி சஹஸ்ராக்ஷனும் பாராட்ட, மைனாக பர்வதம் பெரும் சந்தோஷம் அடைந்தது. உபரியாக பெற்ற வரதானம், இதனால் மலை திரும்ப கடலினுள் மூழ்காமல், அப்படியே நின்றது. 1-142 ஒரு முஹுர்த்த நேரம், எந்த வித தடங்கலும் இன்றி, ஹனுமான் தன் பயணத்தை தொடர்ந்தான். 1-143 அச்சமயம் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், சுரஸா என்ற நாக மாதாவை அணுகி, ஒரு திட்டத்தை செயல் படுத்த அவள் உதவியைக் கோரினர். 1-144 இந்த வாதாத்மஜன், ஸ்ரீமான், சாகரத்துக்கு மேல் பறக்கிறான். ஹனுமான் என்ற பெயருடைய வானரம். நீ முஹுர்த்த நேரம் அவனுக்கு தடை உண்டு பண்ணுவாய். பர்வதம் போன்ற உருவமும், கோரமான ராக்ஷஸ ரூபத்தை எடுத்துக் கொண்டு, கூர்மையான பற்களும், மஞ்சள் நிறக் கண்களும், அகலமாக திறந்த வாயுடன் அவன் முன் நின்று தடுக்கப் பார். 1-145 அவன் பலத்தை எடை போட விரும்புகிறோம். பராக்ரமம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம் என்றனர். 1-146 உன்னை உபாயத்தால் வெற்றி கொள்வான் அல்லது வாட்டமடைவான் என்றனர். அவளும் சம்மதித்து, தேவர்களின் விருப்பத்துக்கு இணங்க 1-147 சமுத்திர மத்தியில் பயங்கரமான ராக்ஷஸ உருவத்தை எடுத்துக் கொண்டு, கண்டவர் நடுங்கும்படியான தோற்றத்துடன், தாவித் தாண்டிச் செல்லும் ஹனுமானை நாலாபுறமும், சுற்றி வளைத்தபடி கொக்கரித்தாள். 1-148 வானரர்ஷப4, எனக்கு ஆகாரமாக வந்து சேர்ந்தாய். 1-149 விதி தான் உன்னை எனக்கு கொண்டு வந்து தந்திருக்கிறது. நான் உன்னை சாப்பிடப் போகிறேன். என் வாயில் நுழை 1-150
अहं त्वां भक्षयिष्यामि प्रविशेदं ममाननम्।
एवमुक्तः सुरसया प्राञ्जलिर्वानरर्षभः।। 5.1.151
प्रहष्टवदनः श्रीमान् सुरसां वाक्यमब्रवीत्।
रामो दाशरथिः श्रीमान् प्रविष्टो दण्डकावनम्।। 5.1.152
लक्ष्मणेन सह भ्रात्रा वैदेह्या चापि भार्यया।
अन्यकार्यविषक्तस्य बद्धवैरस्य राक्षसैः।। 5.1.153
तस्य सीता हृता भार्या रावणेन यशस्विनी।
तस्याः सकाशं दूतोऽहं गमिष्ये रामशासनात्।। 5.1.154
कर्तुमर्हसि रामस्य साह्यं विषयवासिनि।
अथवा मैथिलीं दृष्ट्वा रामं चाक्लिष्टकारिणम्।। 5.1.155
आगमिष्यामि ते वक्त्रं सत्यं प्रतिशृणोमि ते।
एवमुक्ता हनुमता सुरसा कामरूपिणी।। 5.1.156
अब्रवीन्नातिवर्तेन्मां कश्चिदेष वरो मम।
तं प्रयान्तं समुद्वीक्ष्य सुरसा वाक्यमब्रवीत्।। 5.1.157
बलं जिज्ञासमाना वै नागमाता हनूमतः।
प्रविश्य वदनं मेऽद्य गन्तव्यं वानरोत्तम।। 5.1.158
वर एष पुरा दत्तो मम धात्रेति सत्वरा।
व्यादाय वक्त्रं विपुलं स्थिता सा मारुतेः पुरः।। 5.1.159
एवमुक्तः सुरसया क्रुद्धो वानरपुंगवः।
अब्रवीत् कुरु वै वक्त्रं येन मां विषहिष्यसे।। 5.1.160
इत्युक्त्वा सुरसां क्रुद्धो दशयोजनमायताम्।
दशयोजनविस्तारो बभूव हनूमांस्तदा।। 5.1.161
तं दृष्ट्वा मेघसंकाशं दशयोजनमायतम्।
चकार सुरसाप्यास्यं विंशद्यॊजनमायतम्।। 5.1.162
तद् दृष्ट्वा व्यादितं त्वास्यं वायुपुत्रः स बुद्धिमान्।
दीर्घजिह्वं सुरसया सुघोरं नरकोपमम्।। 5.1.163
स संक्षिप्यात्मनः कायं जीमूत इव मारुतिः।
तस्मिन् मुहूर्ते हनुमान् बभूवाङ्गुष्ठमात्रकः।। 5.1.164
सोऽभिपत्याशु तद्वक्त्रं निष्पत्य च महाजवः।
अन्तरिक्षे स्थितः श्रीमानिदं वचनमब्रवीत्।। 5.1.165
प्रविष्टोऽस्मि हि ते वक्त्रं दाक्षायणि नमोऽस्तु ते।
गमिष्ये यत्र वैदेही सत्यश्चासीद्वरस्तव।। 5.1.166
அஹம் த்வாம் ப4க்ஷயிஷ்யாமி ப்ரவிஸேதம் மமானனம் ||
ஏவமுக்த: ஸுரஸயா ப்ராஞ்ஜலிர்வானர்ஷப4: | ப்ரஹ்ருஷ்டவத3ன: ஸ்ரீமான் ஸுரஸாம் வாக்யமப்3ரவீத் |
ராமோ தா3ஸரதி: ஸ்ரீமான் ப்ரவிஷ்டோ த3ண்டகாவனம் | லக்ஷ்மணேன ஸஹ ப்4ராத்ரா வைதே3ஹ்யா சாபி பா4ர்யயா |
அன்ய கார்ய விஷக்தஸ்ய ப3த்3த4 வைரஸ்ய ராக்ஷஸை: | தஸ்ய சீதா ஹ்ருதா பா4ர்யா ராவணேன யஸஸ்வினி |
தஸ்யா: ஸகாஸம் தூதோ(அ)ஹம் க3மிஷ்யே ராம ஸாஸனாத் || 154
கர்துமர்ஹஸி ராமஸ்ய ஸாஹ்யம் விஷய வாஸினீ | அத2வா மைதிலீம் த்3ருஷ்ட்வா ராமம் சாக்லிஷ்ட காரிணம் ||
ஆக3மிஷ்யாமி தே வக்த்ரம் சத்யம் ப்ரதி ஸ்ருணோமி தே |ஏவமுக்தா ஹனுமதா ஸுரஸா காம ரூபிணீ ||
அப்3ரபவீன்னாதிவர்தேன்மாம் கஸ்சிதேஷ வரோ மம |தம் ப்ரயாந்தம் ஸமுத்வீக்ஷ்ய ஸுரஸா வாக்யமப்ரவீத் ||
ப3லம் ஜிஞாஸமானா வை நாக3மாதா ஹனூமத: | ப்ரவிஸ்ய வத3னம் மே(அ)த்3ய க3ந்தவ்யம் வானரோத்தம ||
வர ஏஷ புரா ததோ மம தா4த்ரேதி ஸத்வரா | வ்யாதா4ய வக்த்ரம் விபுலம் ஸ்தி2தா ஸா மாருதே: புர: ||
ஏவமுக்த: ஸுரஸயா க்ருத்3தோ4 வானர புங்க3வ: | ஸாப்ரவீத் குரு வை வக்த்ரம் யேன மாம் விஷஹிஷ்யஸே || 160
இத்யுக்த்வா ஸுரஸாம் க்ருத்3தோ4 த3ஸ யோஜனமாயதாம் |த3ஸ யோஜன விஸ்தாரோ ப3பூ4வ ஹனுமான்ஸ்ததா3 ||
தம் த்3ருஷ்ட்வா மேக4 சங்காஸம் த3ஸ யோஜனமாயதாம் | சகார ஸுரஸாப்யாஸ்யம் விம்ஸத்யோஜனமாயதம் ||
தத் த்3ருஷ்ட்வா வ்யாதி4தம் த்வாஸ்யம் வாயு புத்ர: ஸ புத்திமான் | தீ3ர்க4 ஜிஹ்வம் ஸுரஸாயா: ஸுகோ4ரம் நரகோபமம் ||
ஸ சம்க்ஷிப்யாத்மன: காயம் ஜீமூத இவ மாருதி: | தஸ்மின் முஹூர்தே ஹனூமான் ப3பூ4வாங்குஷ்ட மாத்ரக: ||
ஸோ(அ)பி4பத்யாஸு தத்வக்த்ரம் நிஷ்பத்ய ச மஹாஜவ: | அந்தரிக்ஷே ஸ்தி2தஸ் ஸ்ரீமானித3ம் வசனமப்3ரவீத் ||
ப்ரவிஷ்டோ(அ)ஸ்மி ஹி தே வக்த்ரம் தா3க்ஷாயணி நமோ(அ)ஸ்து தே | க3மிஷ்யே யத்ர வைதே3ஹீ சத்யஸ்சாஸீத்வரஸ்தவ || 1-166
எனவும், பணிவுடன் ஹனுமான் சொன்னான். 1-151 ராமன் என்ற ராஜகுமாரன், தசரத ராஜாவின் மைந்தன், தண்டகாவனம் வந்தான். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் வசித்து வந்தான். 1-152 வேறு ஏதோ காரணமாக ராக்ஷஸர்களுடன் விரோதம். அதை வைத்து அவன் மனைவி சீதையை ராவணன் அபகரித்தான். 1-153 அவளிடம் நான் ராமனின் ஆணைப்படி தூது செல்கிறேன். 1-154 விஷயவாஸினி, நீயும் ராமகாரியத்திற்கு சகாயம் செய். அல்லது நான் போய் சீதையைக் கண்டு ராமனிடம் சொல்லி, 1-154 என் கடமையை முடித்தவுடன் நானே உன் வாயில் வந்து விழுகிறேன். இது சத்யம். நான் பிரதிக்ஞை செய்கிறேன். வார்த்தை மீற மாட்டேன். இதைக் கேட்டு நாகமாதா, 1-155 வானரத்தின் பலத்தை எடை போடும் உத்தேசத்துடன் என் வாயில் விழுந்து புறப்பட்டுச் செல்வாய். வானரமே, இன்றே, இப்பொழுதே. எனக்கு இப்படி ஒரு வரம் ப்ரும்மா கொடுத்திருக்கிறார் 1-156. என்று சொல்லியபடி வேகமாக வளர்ந்து தன் வாயை பூதாகாரமாக விரித்து அவன் முன் நின்றாள். 1-157 ஹனுமானும் ஆத்திரத்துடன், சரி, என்னை தாங்கும் அளவு உன் வாயை அகலமாக விரித்துக் கொள், என்றான். 1-158 சுரஸா பத்து யோஜனை தூரம் விஸ்தாரமாக தன் வாயை திறக்கவும், ஹனுமான் தானும் அதே அளவு பெரிதாக வளர்ந்தான். 1-159 மேகம் போல எதிரில் நின்றவனைப் பார்த்து சுரஸா மேலும் வளர்ந்து இருபது யோஜனை தூரம் பெரிதாக வாயைத் திறந்தாள். 1-160 வாயு புத்திரன் அவள் மேலும் மேலும் வளருவதை பார்த்துக் கொண்டே இருந்தவன், 1-161 சட்டென்று தன் உருவத்தை குறுக்கி, மகா மேகம் போல இருந்தவன், கட்டை விரல் மாத்திரமாக ஆகி, அவள் வாயில் புகுந்து, கிழித்துக்கொண்டு வெளியே வந்து அந்தரிக்ஷத்தில் நின்றவன் 1-162 தா3க்ஷாயணி, நமஸ்காரம். உன் வாயில் புகுந்து வெளி வந்து விட்டேன். நான் வைதேஹியைத் தேடி போகிறேன். 1-163-165 உன் வரமும் சத்யமாயிற்று. ராகு முகத்திலிருந்து விடுபட்ட சந்திரன் போல வெளியே வந்து நின்ற ஹனுமானை, 1-166
तं दृष्ट्वा वदनान्मुक्तं चन्द्रं राहुमुखादिव।
अब्रवीत् सुरसा देवी स्वेन रूपेण वानरम्।। 5.1.167
अर्थसिद्ध्यै हरिश्रेष्ठ गच्छ सौम्य यथासुखम्।
समानयस्व वैदेहीं राघवेण महात्मना।। 5.1.168
तत् तृतीयं हनुमतो दृष्ट्वा कर्म सुदुष्करम्।
साधु साध्विति भूतानि प्रशशंसुस्तदा हरिम्।। 5.1.169
जगामाकाशमाविश्य वेगेन गरुडोपमः।
सेविते वारिधाराभिः पतगैश्च निषेविते।। 5.1.170
चरिते कैशिकाचार्यैरैरावतनिषेविते।
सिंहकुञ्जरशार्दूलपतगोरगवाहनैः।। 5.1.171
विमानैः संपतद्भिश्च विमलैः समलंकृते।
वज्राशनिसमाघातैः पावकैरूपशोभिते।। 5.1.172
कृतपुण्यैर्महाभागैः स्वर्गजिद्भिरलंकृते।
वहता हव्यमत्यर्थं सेविते चित्रभानुना।। 5.1.173
ग्रहनक्षत्रचन्द्रार्कतारागणविभूषिते।
महर्षिगणगन्धर्वनागयक्षसमाकुले।। 5.1.174
विविक्ते विमले विश्वे विश्वावसुनिषेविते।
देवराजगजाक्रान्ते चन्द्रसूर्यपथे शिवे।। 5.1.175
विताने जीवलोकस्य वितते ब्रह्मनिर्मिते।
बहुशः सेविते वीरैर्विद्याधरगणैर्व रैः।। 5.1.176
जगाम वायुमार्गे च गरुत्मानिव मारुतिः।
हनुमान् मेघजालानि प्राकर्षन् मारुतॊ यथा।। 5.1.177
कालागुरुसवर्णानि रक्तपीतसितानि च।
कपिना कृष्यमाणानि महाभ्राणि चकाशिरे।। 5.1.178
प्रविशन्नभ्रजालानि निष्पतंश्च पुनः पुनः।
प्रावृषीन्दुरिवाभाति निष्पतन् प्रविशंस्तदा।। 5.1.179
प्रदृश्यमानः सर्वत्र हनुमान् मारुतात्मजः।
भेजेऽम्बरं निरालम्बं लम्बपक्ष इवाद्रिराट्।। 5.1.180
प्लवमानं तु तं दृष्ट्वा सिंहिका नाम राक्षसी।
मनसा चिन्तयामास प्रवृद्धा कामरूपिणी।। 5.1.181
தம் த்3ருஷ்ட்வா வத3னான்முக்தம் சந்த்3ரம் ராஹுமுகாதிவ |அப்3ரவீத் ஸுரஸா தே3வீ ஸ்வேன ரூபேண வானரம் ||
அர்த3 சித்3த்4யை ஹரிஸ்ரேஷ்ட க3ச்ச ஸௌம்ய யதாசுகம் |ஸமானயஸ்வ வைதே3ஹீம் ராக4வேண மஹாத்மனா || (1-168)
தத் த்3ருதீயம் ஹனுமதோ த்ருஷ்ட்வா கர்ம சுது3ஷ்கரம் | சாது4 சாது4விதி பூ4தானி ப்ரஸஸம்ஸுஸ்ததாததாததா3 ஹரிம் ||
ஜகா3மாகாஸமாவிஸ்ய வேகே3ன கருடோபம: | ஸேவிதே வாரிதா4ராபி4: பதாகைஸ்ச நிஷேவிதே | 170
சரிதே கைஸிகாசார்யை: ஐராவத நிஷேவிதே | சிம்ஹ குஞ்ஜர ஸார்தூ3ல பதகோ3ரக3 வாஹனை: ||
விமானை: சம்பதத்3பி4ஸ்ச விமலை: சமலங்க்ருதே | வஜ்ராஸனி சமாகா3தை: பாவகையருபஸோபி4தே ||
க்ருத புண்யைர்மஹாபா4கை3: ஸ்வர்க3ஜித்பிரலங்க்ருதே | வஹதா ஹவ்யமத்யர்த2ம் சேவிதே சித்ரபா4னுனா ||
க்ரஹ நக்ஷத்ர சந்த்3ரார்க தாராக3ண விபூ4ஷிதே | மஹர்ஷி க3ண க3ந்த4ர்வ நாக3 யக்ஷ ஸமாகுலே ||
விவிக்தே விமலே விஸ்வே விஸவாசு நிஷேவிதே | தே3வ ராஜ க3ஜாக்ராந்தே சந்த்3ர சூர்ய பதே2 ஸிவே ||
விதானே ஜீவலோகஸ்ய விததே ப்3ரஹ்ம நிர்மிதே | ப3ஹுஸ: சேவிதே வீரைர் வித்3யாத4ரக3ணைர் வரை: || 175
ஜகா3ம வாயு மார்கே3 ச க3ருத்மானிவ மாருதி: | ஹனுமான் மேக4ஜாலானி ப்ராகர்ஷன் மாருதோ யதா2 ||
காலாக3ரு ஸவர்ணானி ரக்த பீத ஸிதானி ச | கபினா க்ருஷ்யமானானி மஹாப்4ராணி சகாஸிரே ||
ப்ரவிஸன்னப்4ர ஜாலானி நிஷ்பதம்ஸ்ச புன: புன: | ப்ராவ்ருஷீரிந்து3ரிவாபா4தி நிஷ்பதன் ப்ரவிஸன் ததா3 ||
ப்ரத்ருஸ்யமான: சர்வத்ர ஹனுமான் மாருதாத்மஜ: |பே4ஜே(அ)ம்ப3ரம் நிராலம்ப3ம் லம்ப3 பக்ஷ இவாத்3ரிராட் || 180
ப்லவமானம் து தம் த்3ருஷ்ட்வா சிம்ஹிகா நாம ராக்ஷஸி| மனஸா சிந்தயாமாஸ ப்ரவ்ருத்3தா4 காம ரூபிணீ || 1-181
தன் சுய உருவில் சுரஸா வாழ்த்தினாள். 1-167 ஹரிஸ்ரேஷ்ட, சௌம்யனே, சௌகர்யமாக போய் வா. வைதேஹியை அழைத்துக் கொண்டு வந்து ராகவனோடு சேர்த்து வை. 1-168 இந்த மூன்றாவது அரிய செயலைப் பார்த்து உலகமே வியந்தது. சாது, சாது என்று ஜீவ ஜந்துக்கள் அனைத்தும் புகழ்ந்தன. 1-169 கருடன் போன்ற வேகத்துடன் ஹனுமான் வான வெளியில் திரும்பவும் பறக்கலானான். 1-170 பக்ஷிகளும், நீர்த் திவலைகளும் ஒன்றாக பறந்தன. சந்திர சூரியர்கள் பாதையில் ஹனுமான் கண்ட காட்சிகள் புதுமையானவை. நடந்து செல்லும் ஐராவதம் சிம்மம், யானை, சார்தூலம், பறவைகள், பாம்புகள் இவற்றின் உருவ அமைப்பில் வாகனங்களில் செல்பவர், விமானங்களில் செல்பவர், வஜ்ரம் அடித்தது போல வெப்பம் தாக்கும் முக்யமான பாதை, ஸ்வர்கம் செல்லும் அளவு புண்யம் செய்த மகாத்மாக்கள் வசிக்கும் அல்லது நடமாடும் பாதை, சித்ரபானு வணங்கும், 1-173 (ஹவ்யவாஹண-ஹவ்யம் எனும் தேவர்களின் உணவை எடுத்துச் செல்லும் அக்னியின் பாதை,) க்3ரஹ, நக்ஷத்திர, சந்திர, சூரிய, தாரகைகள் நிறைந்ததும், மகரிஷிகள், கந்தர்வ, நாக, யக்ஷர்கள் சூழ்ந்திருப்பதும்,1-174 விஸ்வாவசு வசிக்கும் விசாலமான, விமலமான இடம், தேவராஜனின் யானை கம்பீரமாக நடக்கும் சுபமான சந்திர, சூரிய பாதை (மார்கம்) இதைத் தாண்டி ப்ரும்மாவால் நிர்மாணிக்கப்பட்ட மங்களமான வாயு மார்கத்தில் ஹனுமான் நுழைந்தான்.1-174 வித்யாதர கணங்கள் சிறப்பாக பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். 1-175 கருடன் போல பறந்தான். தன் தந்தையைப் போல மேகங்களை கிழித்து சீறிக் கொண்டு சென்றான். 1-176 வானத்தில் வண்ணங்கள் மாறி மாறி காட்சியளித்தன. சில சமயம் அக3ருவின் புகை போன்ற நிறத்திலும், சிவப்பு, மஞ்சள், வெண்மை என்றும் மாறி, மாறி கபியின் வேகத்தில் மேகம் நகர, 1-177 வானத்தின் நிறம் தெரிந்தது. மேலே ஏறியும், இறங்கியும் சென்ற ஹனுமான், மழைக்கால சந்திரன் போல சில சமயம் மறைந்தும், சில சமயம் வெளிப்பட்டும், 1-178 கீழேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்குத் தெரிந்தான். எங்கும் மாருதாத்மஜனே நிறைந்து இருந்தான். பார்க்கும் இடம் எல்லாம், இதோ, இதோ எனும்படி நீளமான இறக்கையுடன் ஒரு பர்வத ராஜன் ஏறி இறங்கி வானத்தில் விளையாடுவது போல 1-179 தோற்றமளித்தான். இப்படி நிச்சைந்தையாக பறந்து கொண்டிருந்த ஹனுமானைப் பார்த்து சிம்ஹிகா என்ற ராக்ஷஸி, தன் மனதில் நினைத்தாள். 1-180-181
अद्य दीर्घस्य कालस्य भविष्याम्यहमाशिता।
इदं हि मे महत् सत्त्वं चिरस्य वशमागतम्।। 5.1.182
इति संचिन्त्य मनसा छायामस्य समाक्षिपत्।
छायायां गृह्यमाणायां चिन्तयामास वानरः।। 5.1.183
समाक्षिप्तोऽस्मि सहसा पङ्गूकृतपराक्रमः।
प्रतिलोमेन वातेन महानौरिव सागरे।। 5.1.184
तिर्यगूर्ध्वमधश्चैव वीक्षमाणस्ततः कपिः।
ददर्श स महत् सत्त्वमुत्थितं लवणाम्भसः।। 5.1.185
तद् दृष्ट्वा चिन्तयामास मारुतिर्विकृताननम्।
कपिराजेन कथितं सत्त्वमद्भुतदर्शनम्।। 5.1.186
छायाग्राहि महावीर्यं तदिदं नात्र संशयः।
स तां बुद्ध्वार्थतत्त्वेन सिंहिकां मतिमान् कपिः।। 5.1.187
व्यवर्धत महाकायः प्रावृषीव वलाहकः।
तस्य सा कायमुद्वीक्ष्य वर्धमानं महाकपेः।। 5.1.188
वक्त्रं प्रसारयामास पातालान्तरसंनिभम्।
घनराजीव गर्जन्ती वानरं समभिद्रवत्।। 5.1.189
स ददर्श ततस्तस्या विवृतं सुमहन्मुखम्।
कायमात्रं च मेधावी मर्माणि च महाकपिः।। 5.1.190
स तस्या विवृते वक्त्रे वज्रसंहननः कपिः।
संक्षिप्य मुहुरात्मानं निपपात महाबलः।। 5.1.191
आस्ये तस्या निमज्जन्तं ददृशुः सिद्धचारणाः।
ग्रस्यमानं यथा चन्द्रं पूर्णं पर्वणि राहुणा।। 5.1.192
ततस्तस्या नखैस्तीक्ष्णैर्मर्माण्युत्कृत्य वानरः।
उत्पपाताथ वेगेन मनः संपातविक्रमः।। 5.1.193
तां तु दिष्ट्या च धृत्या च दाक्षिण्येन निपात्य हि।
स कपिप्रवीरॊ वेगाद्ववृधे पुनरात्मवान्।। 5.1.194
हृतहृत्सा हनुमता पपात विधुराम्भसि।
स्वयंभुवैव हनुमान् सृष्टस्तस्या विनाशने।। 5.1.195
तां हतां वानरेणाशु पतितां वीक्ष्य सिंहिकाम्।
भूतान्याकाशचारीणि तमूचुः प्लवगोत्तमम्।। 5.1.196
அத்3ய தீ3ர்க3ஸ்ய காலஸ்ய ப3விஷ்யாம்யஹமாஸிதா | இத3ம் ஹி மே மஹத் சத்வம் சிரஸ்ய வஸமாக3தம் ||
இதி சன்சித்ய மனஸா சா2யாமஸ்ய ஸமாக்ஷிபத் | சா2யாயாம் க்ருஹ்யமானாயாம் சிந்தயாமாஸ வானர: ||
ஸமாக்ஷிப்தோ(அ)ஸ்மி ஸஹஸா பங்கூ3க்ருத பராக்ரம: | ப்ரதிலோமேன வாதேன மஹானௌரிவ ஸாகரே || (1-184)
திர்யகூ3ர்த்வமத4ஸ்சைவ வீக்ஷமாணஸ்தத: கபி: | த3த3ர்ஸ ஸ மஹத் ஸத்வமுத்2திதம் லவணாம்ப3ஸ: ||
தத்3ருஷ்ட்வா சிந்தயாமாஸ மாருதிர் விக்ருதானனம் | கபிராஜேன கதி2தம் சத்வமத்பு4த த3ர்ஸனம் ||
சா2யாக்ராஹி மஹாவீர்யம் ததி3தம் நாத்ர ஸம்ஸய: | ஸ தாம் பு3த்3த் 4வார்த தத்வேன சிம்ஹிகாம் மதிமான் கபி: ||
வ்யவர்த4த மஹாகாய: ப்ராவ்ருஷீவ ப3லாஹக: | தஸ்ய ஸா காயமுத்வீக்ஷ்ய வர்த4மானம் மஹாகபே: ||
வக்த்ரம் ப்ரஸாரயாமாஸ பாதாலாந்தர ஸன்னிப4ம் | கனராஜீவ கர்ஜந்தீ வானரம் ஸமபி4த்3ரவத் |
ஸ த3த3ர்ஸ ததஸ்தஸ்யா: விவ்ருதம் ஸுமஹன்முகம் | காயமாத்ரம் ச மேதா4வீ மர்மானி ச மஹா கபி: || 190
ஸ தஸ்யா விவ்ருதே வக்த்ரே வஜ்ர ஸம்ஹனன: கபி: | ஸம்க்ஷிப்ய முஹுராத்மானம் நிபபாத மஹாப3ல: ||
ஆஸ்யே தஸ்ய நிமஜ்ஜந்தம் த3த்3ருஸு: சித்3த4சாரணா: || க்3ரஸ்யமானம் யதா2 சந்த்3ரம் பூர்ணம் பர்வணி ராஹுணா ||
ததஸ்தஸ்யா: நகை2ர்தீக்ஷ்ணை: மர்மான்யுக்ருத்ய வானர: | உத்பபாதாத வேகே3ன மன: ஸம்பாத விக்ரம: ||
தாம் து தி3ஷ்ட்யா ச த்4ருத்யா ச தா3க்ஷிண்யேன நிபாத்ய ஹி | ஸ கபிர்வீரோ வேகா3த் வவ்ருதே4 புனராத்மவான் || 194
ஹ்ருதஹ்ருத் ஸா ஹனுமதா பபாத விது4ராம்பஸி | ஸ்வயம்பு4வைவ ஹனுமான் ஸ்ருஷ்டஸ்தஸ்யா வினாஸனே || 195
தாம் ஹதாம் வானரேந்த்3ரேணாஸு பதிதாம் வீக்ஷ்ய சிம்ஹிகாம் | பூ4தான்யாகாஸ சாரீணி தமூசு: ப்லவகோ3த்தமம் || 1-196
இஷ்டம் போல வளரக் கூடியவள், பெரிதாக வளர்ந்து வெகு நாட்களுக்குப் பின் இன்று நான் திருப்தியாக சாப்பிடப் போகிறேன் என்று எண்ணிக் கொண்டாள். ஏதோ ஒரு மிகப் பெரிய ஜீவன் வேகமாக வருகிறது. 1-182 என் பசியைத் தீர்க்கத்தான் வருகிறது போலும் என்று நினைத்தாள். இப்படி எண்ணிக் கொண்டே ஹனுமானின் நிழலை இறுக்கிப் பிடித்தாள். தன் நிழல் பிடிக்கப் பட்டு கதியில் தடை உண்டாவதைக் கண்டு வானரம் யோசித்தது. 1-183 என் பராக்ரமத்தில் திடீரென இது என்ன தடை? எதிர்க் காற்றினால் தாக்கப் பட்டு அலை பாயும் கப்பல் போல என் வேகத்தை ஏதோ சக்தி எதிர்த்து தடுக்கிறதே. 1-184 குறுக்காக, மேலே கீழே என்று எல்லா திசைகளிலும் பார்வையை ஓட விட்ட வானர வீரன், ஏதோ ஒரு பெரிய ஜீவன் உப்புக் கடலின் பரப்பில் தெரிவதைக் கண்டான். 1-185 கோரமாக, காணத்தகாத உருவமும், அதன் இருப்பிடமும், வானர ராஜன் சுக்ரீவன் சொன்னது சரிதான். 1-186 நிழலைப் பிடித்து இழுக்கும் ராக்ஷஸ ஜாதியைச் சார்ந்தது தான் இது. சிம்ஹிகா என்று சுக்ரீவன் சொன்னது இவளைத்தான் என்று நொடியில் புரிந்து கொண்டவன், 1-187 மழைக் கால மேகம் போல தன் உருவத்தை மேலும் பெருக்கிக் கொண்டான். கீழேயிருந்து ராக்ஷஸியும், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப. தன் வாயையும் அகல பிளந்து கொண்டாள். 1-188 பாதாளம் வரை ஆக்ரமித்துக் கொண்டாற் போல நின்றாள். இடி இடிப்பது போல சிரித்தாள். 1-189 வானரத்தை நெருங்கி வந்தாள். அவளது பெரிய உருவத்தையும், பிளந்த வாயையும் வைத்து அவள் உடலின் மற்ற பாகங்களை ஊகித்துக் கொண்ட ஹனுமான்,1-190 திடுமென தன் உடலை குறுக்கிக் கொண்டு அவள் வாயினுள் நுழைந்தவன், தன் நகத்தால் அவள் மர்மஸ்தானத்தை கிழித்து அவளை வீழ்த்தி விட்டு மனோ வேகத்தில் வெளியே வந்தான். 1- 191 சித்த சாரணர்கள், அவள் வாயில் நுழைந்தவனைக் கண்டு கவலையுடன் காத்திருந்தனர். 192 தீர்மானமாக, அதே சமயத்தில் தாக்ஷிண்யத்தோடு உதறி தள்ளி விட்டு, வான வெளியில் திரும்பவும் தன் பெரிய சரீரத்துடன் பயணத்தைத் தொடங்கினான். 1-193 அவள் தடாலென்று உப்புக் கடலில் விழுந்தாள். 1-194 ஸ்வயம்பூவான ப்ரும்மாவே, அவள் முடிவுக்கு ஹனுமானை பயன் படுத்திக் கொண்டிருந்தார் போலும். 1-195 ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஜீவ ராசிகள், அனுமனின் கையால் கிழிபட்டு கீழே விழுந்த அவளைப் பார்த்து வானரேந்திரனை வாழ்த்தினர். 196
भीममद्य कृतं कर्म महत् सत्त्वं त्वया हतम्।
साधयार्थमभिप्रेतमरिष्टं प्लवतां वर।। 5.1.197
यस्य त्वेतानि चत्वारि वानरेन्द्र यथा तव।
स्मृतिर्धृतिर्मतिर्दाक्ष्यं स कर्मसु न सीदति।। 5.1.198
स तैः संभावितः पूज्यैः प्रतिपन्नप्रयोजनः।
जगामाकाशमाविश्य पन्नगाशनवत् कपिः।। 5.1.199
प्राप्तभूयिष्ठपारस्तु सर्वतः प्रतिलोकयन्।
योजनानां शतस्यान्ते वनराजिं ददर्श सः।। 5.1.200
ददर्श च पतन्नेव विविधद्रुमभूषितम्।
द्वीपं शाखामृगश्रेष्ठो मलयोपवनानि च।। 5.1.201
सागरं सागरानूपं सागरानूपजान् द्रुमान्।
सागरस्य च पत्नीनां मुख्यान्यपि विलोकयत्।। 5.1.202
स महामेघसंकाशं समीक्ष्यात्मानमात्मवान्।
निरुन्धन्तमिवाकाशं चकार मतिमान् मतिम्।। 5.1.203
कायवृद्धिं प्रवेगं च मम दृष्ट्वैव राक्षसाः।
मयि कौतूहलं कुर्यरिति मेने महाकपिः।। 5.1.204
ततः शरीरं संक्षिप्य तन्महीधरसंनिभम्।
पुनः प्रकृतिमापेदे वीतमोह इवात्मवान्।। 5.1.205
तद्रूपमतिसंक्षिप्य हनूमान् प्रकृतौ स्थितः।
त्रीन् क्रमानिव विक्रम्य बलिवीर्यहरो हरिः।। 5.1.206
स चारुनानाविधरूपधारी परं समासाद्य समुद्रतीरम्।
परैरशक्यं प्रतिपन्नरूपः समीक्षितात्मा समवेक्षितार्थः।। 5.1.207
ततः स लम्बस्य गिरेः समृद्धे विचित्रकूटे निपपात कूटे ।
सकेतकोद्दालकनारिकेले महाद्रिकूटप्रतिमो महात्मा।। 5.1.208
ततस्तु संप्राप्य समुद्रतीरं समीक्ष्य लङ्कां गिरिराजमूर्ध्नि।
कपिस्तु तस्मिन्निपपात पर्वते विधूय रूपं व्यथयन् मृगद्विजान्।। 5.1.209
பீ4மமத்3ய க்ருதம் கர்ம மஹத் ஸத்வம் த்வயா ஹதம் | ஸாத4யார்த்மபி4ப்ரேதமரிஷ்டம் ப்லவதாம் வர ||
யஸ்ய த்வத்யேதானி சத்வாரி வானரேந்த்3ர யதா2 தவ | ஸ்ம்ருதிர் த்4ருதிர் மதிர்தா3க்ஷ்யம் ஸ கர்மஸு ந ஸீத3தி ||
ஸ தை: ஸம்பா4வித: ப்ரதிபன்ன ப்ரயோஜன: | ஜகா3மாகாஸமாவிஸ்ய பன்னகா3ஸனவத் கபி: || (1-199)
ப்ராப்த பூ4யிஷ்ட பாரஸ்து சர்வத: ப்ரதிலோகயன் | யோஜனானாம் ஸதஸ்யாந்தே வனராஜிம் த3த3ர்ஸ ஸ: ||
த3த3ர்ஸ ச பதன்னேவ விவித4 த்3ரும பூ4ஷிதம் |த்3வீபம் ஸாகாம்ருக3 ஸ்ரேஷ்டோ மலயோபவனானி ச ||
ஸாக3ரம் ஸாக3ரானூபம் ஸாக3ரானூபஜான் த்3ருமான் | ஸாக3ரஸ்ய ச பத்னீனாம் முக்3யான்யபி விலோகயத் ||
ஸ மஹா மேக4 ஸங்காஸம் ஸமீ க்ஷ்யாத்மான மாத்வமவான் | நிருந்த3ந்தமிவாகாஸம் சகார மதிமான் மதிம் ||
காயவ்ருத்3தி4ம் ப்ரவேக3ம் ச மம த்3ருஷ்ட்வைவ ராக்ஷஸா:| மயி கௌதூஹலம் குர்யுரிதி மேனே மஹா கபி: ||
தத: ஸரீரம் ஸம்க்ஷிப்ய தன்மஹீத4ர ஸன்னிப4ம் | புன: ப்ரக்ருதிமாபேதே வீதமோஹ இவாத்மவான் ||
தத்ரூபமதிஸம்க்ஷிப்ய ஹனூமான் ப்ரக்ருதௌ ஸ்தி2த: | த்ரீன் க்ராமானிவ விக்ரம்ய ப3லிவீர்ய ஹரோ ஹரி: ||
ஸ சாரு நானாவித4 ரூப தா4ரி பரம் ஸ்மாசாத்4ய ஸமுத்3ர தீரம் | பரைரஸக்2யம் ப்ரதிபன்ன ரூப: | ஸ்மீக்ஷிதாத்மா ஸமவேக்ஷிதார்த2: ||
தத: ஸ லம்ப3ஸ்ய கி3ரே: ஸம்ருத்3தே4 விசித்ர கூடே நிபபாத கூடே | ஸகேதகோத்தா3லக நாரிகேலே மஹாத்3ரிகூட ப்ரதிமோ மஹாத்மா ||
ததஸ்து ஸம்ப்ராப்ய ஸமுத்3ர தீரம் ஸமீக்ஷ்ய லங்காம் கிரிராஜ மூர்த்னி | கபிஸ்து தஸ்மின்னிபபாத பர்வதே விதூ4ய ரூபம் வ்யத2யன் ம்ருக3த்விஜான் || 1-209
சாது சாது என்றனர். இன்று நீ மிகப் பெரிய காரியம் சாதித்திருக்கிறாய். இந்த பெரிய ஜீவன் உன் கையால் வதம் செய்யப்பட்டு மடிந்தது அரிய செயல். 1-197 மேலும் எதுவும் தடையின்றி நீ உன் காரியத்தை முடிக்க வாழ்த்துகிறோம். ஸ்ம்ருதி, த்ருதி, மதி, தா3க்ஷ்யம்- நல்ல ஞாபக சக்தி, திடமான கொள்கை, புத்தி, சாமர்த்யம் இந்த நான்கு குணங்களும் உன்னிடம் பொருந்தியிருப்பது தான் இப்படி நீ வெற்றி வீரனாக செயல்படக் காரணம், 1-198 இந்த நான்கு குணங்கள் கொண்டவன் யாரும் தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் பின் வாங்குவதில்லை. இவர்கள் இவ்வாறு மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்த்தி வழியனுப்பவும், தன்னம்பிக்கையுடன், பன்னகம் எனும் பாம்பைத் தின்னும் கருடன் போல 1-199 வான வெளியில் தாவிக் கிளம்பினான். வெகு தூரம் பிரயாணம் செய்து நூறு யோஜனை தூரத்தில் முடிவில் அடர்ந்து இருந்த வனத்தைக் கண்டான். 1-200 தன் வேகத்தை குறைக்காமலேயே, மரங்களும், பலவிதமான தாவரங்களும் நிறைந்து இருந்த அந்த அழகிய வளமான பிரதேசத்தை கண்ணுற்றான். 1-201 சாகா ம்ருகம், மரக் கிளைகளில் வாழும் விலங்கு இனம் எனும் வானர ஜாதியைச் சேர்ந்த ஹனுமான் அந்த அழகிய தீவைக் கண்டான். 1-202 மலய மலை, உபவனங்கள் இவற்றைக் கண்டான். சாகரத்தை, சாகரத்தின் கரையை, கரையில் வளரும் விசேஷமான மரங்களை சாகரத்தின் பத்னிகள் எனும் நதிகளின் முகத்வாரத்தையும் கண்டபடி இறங்கினான். 1-203 தன் உருவை, மகா மேகம் போல வானத்தின் பரவியிருந்த பெரும் உருவத்தை ராக்ஷஸர்கள் பார்த்தால் சந்தேகம் கொள்வர். அல்லது ஆவலுடன் என்னை கூர்ந்து கவனிப்பர். குதூகலத்துடன் யார் இது என்று விவரம் அறிய முயலுவர். தேவையில்லாமல் சங்கடங்கள் வரலாம். என்று எண்ணி. உடனே தன் உருவத்தை குறுக்கிக் கொண்டு,1-204-205 மேலும் சிறியதாக ஆக்கிக் கொண்டு, பலி சக்ரவர்த்தியின் வீர்யத்தை அடக்க வந்த ஹரி மூன்று அடிக்குள் உலகத்தை அளந்தது போல, வாமனனாக நின்றான். 1- 206 பலவிதமான ரூபங்களை எடுத்தும் அழகு குன்றாமல் நின்றவன், சமுத்திர தீரத்தில் வேறு யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத கார்யாகாரியம் அதன் பலன்கள் இவற்றை ஆராய்ந்து தன் உருவை நிர்ணயித்துக் கொண்டான். 1-207 அதன் பின் அந்த பெரிய மலையில் சிகரத்தில் இருந்து குதித்து கீழே இறங்கினான். கேதக, உத்துங்க, நாரிகேள என்று பலவிதமான மரங்களைக் கண்டான். 1-208 இந்த மரங்களின் வளர்ச்சியே அசாதாரணமாக இருந்தது. இலங்கையை அடைந்து மலையுச்சியில் இருந்து சமுத்திரத்தை நோக்கினான். அருகில் தென்பட்ட பக்ஷிகளையும், மிருகங்களையும் பயமுறுத்தியபடி, மலையின் மேல் சஞ்சரித்தான். 1-209
स सागरं दानवपन्नगायुतं बलेन विक्रम्य महोर्मिमालिनम्।
निपत्य तीरे च महोदधेस्तदा ददर्श लङ्काममरावतीमिव।। 5.1.210
इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम् सुन्दरकाण्डे सागरलङ्घनं नाम प्रथमः सर्गः