அம்ருதாவின் நாவல்
Dissidents of perfection- பொது விதியும், விதி மீறலும் or விலங்குலகம்-சிலருக்கு தாயகம் எல்லோருக்கும் அல்ல
பகுதி-1
தனியாக நடந்து வந்து ஓரிடத்தில் நின்றபடி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்த நீலா இமைக்கும் நேரத்தில் தன்னைச் சுற்றி திரவமாக எதோ சூழ்வதை உணர்ந்தாள். தானும் அதில் அடித்துச் செல்லப் படுவது போல் இருந்தது. கண்களை மூடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டு சுற்றிலும் பார்வையை செலுத்தினாள். பெரிய காடு – ஆனால் இது வரை இவ்வளவு வண்ணமயமான இடத்தைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை. மரங்கள் புதுமையாக, கிளைகள் வளைந்து வளைந்து மிருகங்களுக்கு வீடாக சிறு சிறு அடக்கமான பெட்டகங்கள் போல தெரிந்தன, ஒவ்வொரு மரத்திலும் பொந்துகள், அது தவிர யாரோ, கிளைகளை வளைத்து தனக்கு வீடாக செய்து கொண்டிருந்தனர். தரையெல்லாம் குகைகள். புல் புதர்கள் மூடி மறைவிடமாக இருந்தன.
ருசியான பழங்கள் பழுத்து தொங்கின. ஆங்காங்கு அழகான நீரூற்றுக்கள். ஓடி வரும் வேகத்தில் நுரைபொங்க, நீர்த் திவலைகளை விசிறியடித்த படி அந்த இடமே குளுமையாக இருந்தது. அனைத்துக்கும் மேல் வளைந்த நுழை வாயில்கள். விலை உயர்ந்த மணிகளோ, அதே போன்ற வண்ணக் கற்களோ அந்த வளைவுகளை அலங்கரித்தன. ஒரு பெரிய எலியோ அதன் ஜாதியோ பள்ளம் பறித்துக் கொண்டிருந்தது. இவளை கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்து திகைத்து நின்றது.
ஒரு டின்னர் ப்ளேட் அளவு கண் விரிய என்று நீலா நினைத்தாள். ஒருவழியாக தான் எங்கோ வந்து விட்டிருக்கிறோம் என்பது மனதில் உறைக்க நீலா சுற்றும் முற்றும் பார்த்தாள். பூலோகம் அல்ல இது விலங்குகள் வாழும் வேறு உலகம்.
பகுதி-2
எவ்வளவு முயன்றும் அன்று காலை பிக்னிக் என்று ஏதோ ஒரு இடத்திற்கு போவதற்காக தன் பொருட்களைத் தேடி பையில் வைத்துக் கொண்டிருந்தாள்.. அதற்கு முன் நினைவுக்கு வரவில்லை.
நீலா, எந்த உலகத்தில் இருக்க, அம்மா கூப்பிடுவது கேட்டது. உன் சாமான்கள் எடுத்து வைத்துக் கொண்டாயா? இதோ நாங்கள் எல்லோரும் தயாராக கிளம்பிவிட்டோம், வா
நீலா பெருமூச்சு விட்டபடி எழுந்தாள். கையில் இருந்த புத்தகத்தில் அடையாளம் வைத்து அதன் இடத்தில் வைத்தாள். இதோ வரேம்மா.. என்றபடி மாடிப் படிகளில் இறங்கி வந்தாள். அம்மா திரும்பவும் அழைத்தாள். இரண்டு நிமிஷத்தில் வண்டி வந்து விடும், சீக்கிரம் வா –
நீலா அவசரம் அவசமாக தன் துணிமணிகள், முக்கியமான சாமான்கள். சில புத்தகங்கள் இவற்றை கிடைத்த சிறிய பெட்டியில் போட்டுக் கொண்டு கீழே வந்தாள். காரில் செல்லும் பொழுதும் நீலா கையிலிருந்த புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தாள்
அவளுக்கு ஊர் சுற்றுவது என்பதே ஆகாது. சிறு பூச்சிகள் சுற்றும். பழக்கமில்லாத நாடோடி வாழ்க்கை. ஊர் சுற்றவாம், அதுவும் ஏதோ மலைப் ப்ரதேசத்திற்கு. டென்ட் போட்டுக் கொண்டு மலை ஏறுவதும், இந்த நகர வாழ்க்கையின் அலுப்பை கழற்றிவிடுவது போல ஒரு நாடகம்.
மற்ற எல்லோருக்கும் உற்சாகமாக இருக்க, இவளுக்கு கிளம்பவே மனமில்லை. சாய்வு நாற்காலியில் கையில் புத்தகத்துடன் தான் அவள் எப்பொழும் இருப்பாள். சில சமயம் பைக்கில் போக பிடிக்கும். இறங்கும் இடம் வந்தும் மெதுவாக தன் போக்கில் காலடியில் சருகுகளை மிதித்து நசுக்கியபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் நினைத்தது போலவே அந்த இடம் வெறுமையாக காட்சியளித்தது.
அவள் அம்மா சர்க்கரை வள்ளிக் கிழங்கு இன்னும் கொண்டு வந்த சில சாமான்களை வைத்துக் கொண்டு சமைத்ததே அமிர்தமாக இருந்தது.
மாலா சொன்னாள்: இதைப் பார் அழகான பப்பி- நாய்க் குட்டி
எட்டிப் பார்த்த நீலா சின்னஞ் சிறு நாய்க் குட்டி, இல்லையில்லை இது இளம் செந்நிற ரோமம் பரவிய உடலுடன், ஓநாய் – காது மடல்கள் விறைத்து இவர்களின் கூச்சலைக் கேட்டு கண்களில் சற்றே எரிச்சல் தெரிய நின்றிருந்தது. வலது காது மடல்களில் சிராய்ப்பு தெரிந்தது. சுற்றிலும் நின்றவர்களை நோட்டம் விட்டபடி உறுமியது. தனக்குள் சிங்கத்தின் கர்ஜனையாக நினைத்துக் கொண்டதோ என்னவோ. மாலா அதை வெகு பிரியமாக கட்டி அணைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அனவருமாக அதற்கு ஒரு இரும்பு கூண்டை தயார் செய்தனர்.
வெளியில் சற்று காலார நடக்கலாம் என்று நீலா வெளியே வந்தாள். மாலாவுக்கு புது வருகையான பப்பியுடன் சரியாக இருந்தது. நீலாவோ அதை சந்திப்பதை தவிர்ப்பதே காரணமாக வெளியில் நடந்தாள். அப்பாடா என்று ஒரு சிறிய மண் மேட்டின் மீது அமர்ந்தாள். அதிக நேரம் அந்த நிம்மதி நீடிக்கவில்லை. நீலாவுக்கு அலுப்பாக இருந்தது. சுற்று முற்றும் பார்த்தவள் அவளுக்குப் பின்னால், மரங்களின் இடையில் ஒரு நீல வண்ண ஒளி தனித்து தெரிவதைக் கண்டாள்.
யாராவது செல்போனை விட்டுச் சென்றிருப்பார்கள். நாம் செய்வது சரிதானா என்று ஒரு நிமிடம் யோசித்தவள், அடி மேல் அடி வைத்து அந்த ஒளியை நோக்கிச் சென்றாள். செய்/செய்யாதே என்று ஒரு கட்டம் போட்டு எழுதி வைப்பது போல மனதினுள் திட்டமிட்டபடி, அதன் மேல் படர்ந்திருந்த தழைகளை நீக்கிப் பார்த்தாள். ஒரு அழகிய நீல மணி சிறப்பாக நால் புறமும் அமையப் பெற்ற மதிப்பு மிக்க நல்மணி. பக்கங்களிலிருந்து பொன்னிறமும், நீல நிறமும் கலந்து ஒளிச் சிதறலாக தெரிந்தது. நீலக்கல் என்று அருகில் செல்லச் செல்ல அதன் வண்ணங்கள் கண்களை பறித்தது. அது வரை கண்டிராத அதிசயக் கல். கையில் எடுத்தவுடன் வண்ணங்கள் மாறி மாறி சிவப்பு, நீலம், வெள்ளியின் வெண்மை, காவி அல்லது ஆரஞ்சு வண்ணம், கருநீலம் , மற்ற வண்ணங்களின் பெயர் அவளுக்குத் தெரியவில்லை. ஆ என்று அலறத் தான் முடிந்தது.
பகுதி-3
சிரமப் பட்டு முன் நடந்தவைகளை நினைவுக்கு கொண்டு வந்தாள்.
ஒருவரும் இல்லாத பொழுது நீலா கூண்டை திறந்து விட முயன்றாள். யாரோ வரும் காலடி கேட்டு நகர்ந்து சென்றாள். அவளை சந்தேகத்துடன் பார்த்த அந்த ஜீவன், அவளை சற்று நட்புடன் ஏறிட்டது. நீலா எந்த அனுதாபமும் இன்றி வெளியேறினாள். இது என்ன புது உலகம் – எப்படி வெளியேருவது என்று அந்த ஓநாய் கூண்டுக்குள் வளைய வந்தது.
வெளியில் சற்று காலார நடக்கலாம் என்று நீலா வெளியே வந்தாள். மாலாவுக்கு புது வருகையான பப்பியுடன் சரியாக இருந்தது. நீலாவோ அதை சந்திப்பதை தவிர்ப்பதே காரணமாக வெளியில் நடந்தாள். ஏனோ அதை கண்டாலே பிடிக்கவில்லை. Flash light ம் நொறுக்குத் தீனி பொட்டலத்துடனும் – கவனமாக நடந்தாள். ஒரு ஓரத்தில் இருந்த காட்டுப் பல்லிகளை மிதித்து விடாமல் நகர்ந்து சென்றாள். அப்பாடா என்று ஒரு சிறிய மண் மேட்டின் மீது அமர்ந்தாள். அதிக நேரம் அந்த நிம்மதி நீடிக்க விடாமல் நத்தைகள் கண்ணில் பட்டன. புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கலாம். காட்டு வாசிகள், இந்த ஜந்துக்கள் ஒன்றும் பிரமாதமாக இல்லை என்று சூள் கொட்டினாள். அட, இந்த நத்தையைத் தான் பார்ப்போமே, அது மெதுவாக நகருவதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன நினைத்தோ அந்த ஜீவன் தன் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது – சரி போ, நான் போகிறேன் என்று சொல்லியபடி நீலா எழுந்து மண் மேட்டின் மேலேயே நடந்தாள். அங்கும் இங்குமாக ஓடிய அணில்களைப் பார்த்து கை ஆட்டியபடி, ஹலோ என்றும் சொல்லிபடி கையில் கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனியை வாயில் போட்டபடி அதற்கும் கொடுத்தாள். அவளை ஏறிட்டுப் பார்த்த அணில் அதை தொடவே இல்லை. ஏதோ தெரியாத சாமான் என்று விலகி ஓடியது, நீலாவுக்கு அலுப்பாக இருந்தது. சுற்று முற்றும் பார்த்தவள் அவளுக்குப் பின்னால், மரங்களின் இடையில் ஒரு நீல வண்ண ஒளி தனித்து தெரிவதைக் கண்டாள்.
இமைக்கும் நேரத்தில் தன்னைச் சுற்றி திரவமாக எதோ சூழ்வதை உணர்ந்தாள். தானும் அதில் அடித்துச் செல்லப் படுவது போல் இருந்தது. கண்களை மூடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டு சுற்றிலும் பார்வையை செலுத்தினாள். பெரிய காடு – ஆனால் இது வரை இவ்வளவு வண்ணமயமான இடத்தைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை. மரங்கள் புதுமையாக, கிளைகள் வளைந்து வளைந்து மிருகங்களுக்கு வீடாக சிறு சிறு அடக்கமான பெட்டகங்கள் போல தெரிந்தன, ஒவ்வொரு மரத்திலும் பொந்துகள், அது தவிர யாரோ, கிளைகளை வளைத்து தனக்கு வீடாக செய்து கொண்டிருந்தனர். தரையெல்லாம் குகைகள். புல் புதர்கள் மூடி மறைவிடமாக இருந்தன.
ருசியான பழங்கள் பழுத்து தொங்கின. ஆங்காங்கு அழகான நீரூற்றுக்கள். ஓடி வரும் வேகத்தில்
நுரைபொங்க, நீர்த் திவலைகளை விசிறியடித்த படி அந்த இடமே குளுமையாக இருந்தது.
அனைத்துக்கும் மேல் வளைந்த நுழை வாயில்கள். விலை உயர்ந்த மணிகளோ, அதே போன்ற
வண்ணக் கற்களோ அந்த வளைவுகளை அலங்கரித்தன. ஒரு பெரிய எலியோ அதன் ஜாதியோ பள்ளம்
பறித்துக் கொண்டிருந்தது. இவளை கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்து திகைத்து நின்றது.
ஒரு டின்னர் ப்ளேட் அளவு கண் விரிய என்று நீலா நினைத்தாள். ஒருவழியாக தான் எங்கோ
வந்து விட்டிருக்கிறோம் என்பது மனதில் உறைக்க நீலா சுற்றும் முற்றும் பார்த்தாள்.
பூலோகம் அல்ல இது விலங்குகள் வாழும் வேறு உலகம்.
பகுதி – 4
இது சரியாக இல்லை . ஏதோ தவறு. மிகப் பெரிய தவறு. நினைத்தே பார்த்திராத மாபெரும் விபத்து.
ஆம். விபத்து தான். ஜொயி ஃபாக்ஸ் -அது தான் அந்த பிடிபட்ட ஓநாயின் பெயர். மனிதர்கள்
கையில் பிடிபடுவதாவது – அவர்கள் வீட்டு மிருகம் போல நடத்த அனுமதித்து அடங்கி இருப்பதாவது- குட்டி ஓநாய் நினைத்து நினைத்து பொருமியது. ஒரு பெரிய பையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்த கூண்டே தேவலை – வெளியே பேச்சு சத்தம் கேட்டது. புரியாத பேச்சு – புரிந்து தான் என்ன ஆகப் போகிறது. பையின் ஓரத்தை கடித்து கிழித்து பார்த்தது. எல்லோரும் கவலையுடன் இருப்பதாக பட்டது. ஒரு வார்த்தை அடிக்கடி சொல்லப் பட்டதால் கவனித்து கேட்து. நீலா – நீலா – யாரையோ அழைக்கும் விதமாக-
யாரோ நமக்கென்ன, இப்போதைக்கு இந்த பையிலிருந்து வெளியேற வேண்டும். மூச்சு முட்டுகிறது. பையுடன் தன்னை எங்கு கொண்டு போகிறார்கள்? மட்டமான ஜீவன்கள். அருவருக்கச் செய்யும் குரலும், உடல் அமைப்பும். மனிதர்கள். எதற்காக என்னை என் வீட்டை விட்டு கிளப்பி தூக்கிக் கொண்டு போகிறார்கள். எல்லாம் அந்த நீலக் கல்லால் வந்த விணை. எங்கிருந்து வந்ததோ – பள பளவென்று கண்களைப் பறித்தது. தொட்டது தான் தாமதம் நான் இங்கே கிடக்கிறேன்.
சொல்லிக் கேட்டிருந்து. நீல மணி பற்றியும் அதன் எண்ணற்ற வர்ண ஜாலங்களையும் அலுக்காமல் சொல்வார்கள். கூடவே ஒரு மஞ்சள் நிற மணி – அது தான் ஜோயியை அந்த மனிதர்களற்ற ஆழுலக ஜீவன்களின் உலகிற்கு கொண்டு சென்றது. சொல்லப் போனால் பூமியை விடவும் அந்த ஆழுலகம் நன்றாக இருந்தது. எல்லா புத்தங்களிலும் தேடித் தேடி படித்தேனே, எதிலும் இதன் தோற்றம் பற்றியோ, குணம் பற்றியோ அறிந்தவர்கள் யாருமில்லை. அங்கே இருந்த பெரியவர்கள், அதிலும் பொறுப்பில் இருந்த முக்கியமான முதியவர்கள் (Grand Elders) நியாயமாக விவரங்கள் தெரிந்தவர்கள் என்று பெயர், கேட்டாலே சிடுசிடுத்தனர். – வேற வேலை இல்லை உனக்கு? என்று அதட்டுவர்.
அதுவும் தான் ஏமாற்றமாக இருந்தது. இவர்கள் என்ன பெரியவர்கள் என்ற பெயர் வைத்துக் கொண்டு அதட்டுவது என்று கோபமாக வந்தது. ஜோயி தானே படித்ததைக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ந்தது. மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து. திரும்ப ஆராய்ந்து – இதே தான் வேலை, அனவரதமும் மனதில் இருந்த எண்ணம். ஒருமுறை அவர்கள் அறியாமல் அவர்களுடைய இருப்பிடம் போய் தேடியது. நீர் வீழ்ச்சியின் பின்னால் – ஒரு முறை மழையின்றி உலர்ந்து கிடந்தது. சில மஞ்சள் நிற காகிதம் போன்ற வஸ்துவில் ஆனி அடித்து மாட்டியிருந்தது. Fiona Flammingo:how she disappeared
காற்றில் மிதப்பது போல ஏதோ ஒன்றில் பிரயாணம் செய்கிறோம் என்று ஜோயிக்கு தோன்றியது. மாலா தூக்கிக் கொண்டு ஒரு இடத்தில் கீழே விட்டாள். மட்ட ரக நாய்க் குட்டிகள், கழுத்தை சுற்றி பட்டைகளுடன், சீ, ஓநாய் நான் என்னையும் இந்த அல்ப ஜந்துக்களையும் ஒன்றாக நினைப்பதா? போதாக் குறைக்கு அங்குள்ளோர் பப்பி – நாய் குட்டி – என்று தன்னையும் அழைத்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் எரிச்சலடைந்தது. ஊரில் இருந்த வரை மரியாதைக்குரிய, நம்பகமான ஓநாய் என்று பெயர் பெற்ற தன்னை, இந்த அல்ப நாய்களுடன் சேர்த்து இந்த அவமானம் வேறு – என் விருப்பமின்றி தூக்கிச் சென்று அடைத்து வைத்ததை விட பெரிய அவமானம்…..ஜோயி அந்த கூண்டுக்குள் ஆக்ரோஷத்துடன் வளைய வந்தது. சுற்று முற்றும் பார்த்து மனித ஜீவன் எதுவும் இல்லை -மீண்டும் உறுதி செய்து கொண்டபின், தன் சட்டை பையிலிருந்து ஒரு பொருளை வெளியில் எடுத்தது. அது ஒரு நகல் – தானே யோசித்து மஞ்சள் மணீயை போலவே செய்த ஒரு போலியான மஞ்சள் மணி. அந்த மணி ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்காது. வாழ் நாள் முழுவதும் இதே கவனமாக உழைத்து தயாரித்தது. அதன் வாழ்வே அதைச் சுற்றியே இருந்து எனலாம். அவனைத் தவிர வேறு யாரும் அந்த மணியைப் பற்றியோ அதன் சக்தியையோ அறிந்தவர்கள். இல்லை. மஹா பெரியவர்கள் கூட அப்படி ஒன்று இருப்பதை உணரவேயில்லை. மணி மற்றும் நகைகள் 101 என்ற விஷயத்தை எடுத்துக் கோண்டு ஆழ்ந்து படித்தும், தானே மேற்கொண்டு ஆய்வுகள் செய்தும் கூட ஓரளவு தான் அறிந்து கொள்ள முடிந்தது.
பொதுவாக எல்லொருக்கும் தெரிந்த விஷயம் – அந்த மணி அவர்களுக்கு உணவை தயாரித்து கொடுத்து வந்தது என்பதே. அது ஒரு மாயம். அசைவ உணவு, சைவ உணவு இரண்டுமே அவர்களுக்கு கிடைத்தது. Bhindarian Thistle – (ஒரு தாவரம்). மாமிச பிரியர்களுக்கு எந்த மிருகத்தையும் கொல்லாமலே, அவர்கள் விரும்பிய ருசியுடன் இறைச்சி போலவே பார்வைக்கும் தெரியும் ஒரு பொருள். அதை உண்டவர்கள் திருப்தி அடைந்தனர். எந்த ஜீவனையும் கொல்லாமல், விளை பொருள்களில் சமைத்த உணவே வேண்டும் என்று விரும்பும் சைவ உணவு பிரியர்களுக்கு அது வேறு விதமாக காட்சியளிக்கும், அவர்கள் விரும்பும் உணவின் வண்ணம், ருசி எதுவும் குறையாமல் பட்டர் கப் என்ற தாவரத்திலிருந்து தயாரித்ததாக தோன்றும்.
ஊதா நிறத்தில் இந்த உணவு சைவமாக இருக்கும், அதுவே கிளிப் பச்சை நிறத்தில் மற்றவர்களுக்கு தெரியும். மற்ற எதோ ஒரு ஜீவனை துன்புறுத்தி உண்ணுவதை வழக்கம் கொண்ட காட்டு விலங்குகளும் கூட இந்த உணவில் திருப்தியை அடைந்தனர். எந்த மிருகமும் நோயினால் வாடவில்லை. நோய் தடுப்பு மருந்தாகவும் அதுவே பயன்பட்டது.
உடனே தன் இருப்பிடமான ஆழுலகம் போக வேண்டும் என்று ஜோயி துடித்தது. தன் கையெழுத் து பிரதியை எடுத்து படித்து பார்த்தது. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டும். இங்கு மாட்டிக் கொண்டிருக்கிறோமே என்று வருந்தியது.
தன் ஆராய்ச்சியின் நடுவில் இப்படி ஒரு சோதனை. மஞ்சள் மணியை மேலும் ஆராய்ந்து தன் இனத்தாருக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எப்படி நிறைவேறும். மற்றும் ஒரு புரட்சி திட்டமும் இருந்தது.
“மனித இனம் நம்மை நசுக்குவதை அனுமதிக்க மாட்டோம்’ என்ற பெயரில். அவர்களால் கண்டு பிடிக்கவே முடியாதபடி தங்கள் வாழ்விடத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய வேலைகள். முதலில் இந்த தளையிலிருந்து விடுபட வேண்டுமே. ஆகா, தன் வீடு தான் எவ்வளவு சுகம்.
பகுதி-5
ஆ மனித இனம் !
வேண்டாம், வேண்டவே வேண்டாம்
ஏன் தான் கடவுள் மனிதனை படைத்தாரோ
எப்படி மற்றவர்களிடம் சொல்வேன்- ஒரு மனித ஜீவன் நமக்குள் வந்து விட்டது – நல்லதல்லவே
அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்- ஓ ஃபெர்டினண்ட், பேசாமல் இரு- அமர்க்களம் பண்ணாதே.
பூமியிலிருந்து வந்து விட்டதா – எதற்காக, எதுவும் புரியவில்லை
ஃபெர்டினண்ட்- சும்மா இரு
இது போன்ற கூக்குரல்கள் மரங்களின் பின்னாலிருந்து ஒலித்ததைக் கேட்டாள் நீலா. மணல் மேட்டிலிருந்து இறங்கி தானும் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். சிங்கங்கள் முதல் குட்டி முயல்கள், மான்கள், மாடுகள், பறவைகள்
அருகே ஒரு குண்டு கோழி அவளைப் பார்த்து ஏய், மனிதப் பெண்ணே, ஏதாவது சொல் – என்றது. என்ன தைரியம். குழப்பத்துடன் அவைகளை ஏறிட்டுப் பார்த்தாள்.
நீலா எதுவும் சொல்லவில்லை – எப்படியோ இங்குள்ள மிருகங்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை – அவளை ஒரு வித பயம் ஆட்கொண்டது. புது புது பெயர் தெரியாத ஜீவன்கள். சுற்றிலும் மிருகங்கள், ஆனால் அவை பேசுகின்றன. ஒரு சிறிய முயல் அவளை கிழே தள்ளப் பார்த்து. அதால் முடியவில்லை. நீலா அதை தூக்கி கீழே இருந்த மற்ற மிருகங்களுடன் விட்டாள். ஒரு புறா அந்த வழியே சென்றது. அவளிடம் ஜோயி எங்கே? என்றது.
ஜோயியா, யாரது என்று வினவினாள்.
எல்லா மிருகங்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. அவளுக்கு பதில் சொல்லாமல் ஓடின, ஒளிந்தன கூக்குரலிட்டன – தங்களூக்குள் ஓசையின்றி பேசிக் கொண்டன. திடுமென ஒரு நெருப்புக் கோழி அங்கு வந்து ஒரு பன்றியுடன் தீவிரமான சர்ச்சையில் மூழ்கியது. சில வார்த்தைகள் மற்றவை கோடிட் ட இடங்களை நிரப்புக என்று பள்ளியில் கேள்வி வருமே, அது போல அவளே நிரப்பிக் கொண்டாள். உனக்குத் தெரியுமா… அவன் ஏதோ செய்யப் போவதாக .. இது அக்கிரமம்.
, Pyrenean Ibexes – பைரனியம் இபெக்ஸ் – (சில நாடுகளில் அதிகமாக காணப் பட்ட இந்த வகை மான் இனத்தினர் சமீபத்தில் மறைந்த இனமாக அறிவிக்கப் பட்டுள்ளது) நீலா அதை அடையாளம் கண்டு கொண்டாள். ஆகா, இது எப்படி இங்கு இருக்கிறது. இதை ஒட்டு மொத்தமாக உலகில் மறைந்து விட்டதாக அறிவித்தார்களே. நீலாவின் ஆர்வம் அதிகரித் தது. ஓவ்வொன்றாக கவனித்துப் பார்த்தாள். பல வகையான ஜீவன்கள், மறைந்து விட்டதாக அவள் கற்றது megalodons in water spheres. Dodo birds screaming, ostrich burying its head in the ground – a beaver chewed on a massivelog- இவையெல்லாம் அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டவை- தற்சமயம் உலகில் இவை இல்லையென்று – அருகே ஒரு குண்டு கோழி அவளைப் பார்த்து ஏய், மனிதப் பெண்ணே, ஏதாவது சொல் – என்றது. என்ன தைரியம். குழப்பத்துடன் அவைகளை ஏறிட்டுப் பார்த்தாள்.
சமுத்திரங்களில் மட்டுமே காணப் படும் ஆக்ரோஷமான கடல் வாழ் ஜீவன்- திமிங்கிலம் போன்றது – கடல் கொள்ளையன் என்றே பெயர் பெற்றது- அதையும் மறைந்த ஜந்துக்கள் என்று நீலா அறிந்திருந்தாள். அதைப் பார்த்து, ஹலோ, நீ மேகா லொடொன் தானே, எப்படி இருக்கிறாய், உன் இனமே உலகில் எங்குமே இல்லை மறைந்து விட்டதாக கேள்விப் பட்டோமே….
அது உங்க ஊர்ல, இங்க நான் சௌக்யமாக இருக்கேன், என் பெயர் என்ன தெரியுமா? மிஸ்டர் மேக மெகலோடொன் – ம்.. உங்க ஊர் மாதிரியா இது.. பொல்லாத இடம் அந்த பூமி, யார் இருப்பார் அங்கே..
நீலா எதுவும் சொல்லவில்லை – எப்படியோ இங்குள்ள மிருகங்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை – அவளை ஒரு வித பயம் ஆட்கொண்டது. புது புது பெயர் தெரியாத ஜீவன்கள். சுற்றிலும் மிருகங்கள், ஆனால் அவை பேசுகின்றன. ஒரு சிறிய முயல் அவளை கிழே தள்ளப் பார்த்து. அதால் முடியவில்லை. நீலா அதை தூக்கி கீழே இருந்த மற்ற மிருகங்களுடன் விட்டாள். ஒரு புறா அந்த வழியே சென்றது. அவளிடம் ஜோயி எங்கே? என்றது.
ஜோயியா, யாரது என்று வினவினாள்.
எல்லா மிருகங்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. அவளுக்கு பதில் சொல்லாமல் ஓடின, ஒளிந்தன கூக்குரலிட்டன – தங்களூக்குள் ஓசையின்றி பேசிக் கொண்டன. திடுமென ஒரு நெருப்புக் கோழி அங்கு வந்து ஒரு பன்றியுடன் தீவிரமான சர்ச்சையில் மூழ்கியது. சில வார்த்தைகள் மற்றவை கோடிட் ட இடங்களை நிரப்புக என்று பள்ளியில் கேள்வி வருமே, அது போல அவளே நிரப்பிக் கொண்டாள். உனக்குத் தெரியுமா… அவன் ஏதோ செய்யப் போவதாக .. இது அக்கிரமம்.
எதுவும் உருப்படியாக இல்லை.. அவள் கீழே குதித்து அந்த கூட்டத்தின் எதிரில் போய் நின்றாள். அவளை பொருட்படுத்தாமல் எல்லா மிருகங்களும் மூலைக்கு ஒன்றாக சிதறின, ஏதோ உரத்த குரலில் சொல்லிக் கொண்டே… கவலையுடன் விவாதித்துக் கொண்டன – அப்படிக்கு என்ன நடந்தது ?
சில பெருச்சாளிகள் வந்து அவர்களை அந்த மிருகங்களின் கூட்டத்துக்கு வரும்படி அழைத்தன. தத்தி தத்தி வாத்து நடையில், சில நடந்தன சில பெரு நடையாக (குதிரை போல) சில நீந்தி சென்றன . எங்கே அந்த கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிந்து கொள்ள தான் இருந்த மண் மேட்டின் மேலே ஏறி நீலா சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு முயல் மென்னடையாக அருகில் வந்து அதிகாரம் செய்வது போல தோரணையாக ஏய் ஏய், கேள் என்றது. நீலா சிரிப்பை அடக்கிக் கொண்டு நான் என்ன கேட்க ? ஏன் எப்படி இங்கு வந்து மாட்டிக் கொண்டேன் என்று, குழப்பம் எதுவுமே புரியவுமில்லை, அது சரி, நண்பனே, நீ யார், என்ன சொல்ல வந்தாய் என்றாள்.
பேசிக் கொண்ட அந்த முயலைப் பார்த்தாள். மற்றொரு சமயம் ஆனால் அதை கவனித்திருக்கவே மாட்டாள். நல்ல ப்ரௌன் நிறம். முன்னங்காலில் ஒரு வெட்டுக் காயம், தலையில் பூ போட்ட துணி போன்ற ஒரு வளையம், அழகுக்காகவோ என்னவோ …
அவள் எதுவும் சொல்லும் முன் அது ஏளனம் செய்வது போல அழகு காட்டி விட்டு, ஒரு குடிசை போல தோன்றிய இடத்தை நோக்கி வேகமாக ஓடியது. அங்கே மேலும் பல மிருகங்கள் வந்து சேர்ந்திருந்தன.அங்கு வந்திருந்த பல வண்ண மீன் ஒன்றை அதிசயமாக பார்த்தபடி இருக்க, ஒரு கழுகு, ஒரு பெருச்சாளி என்று அங்கத்தினர்கள் வந்து சேர்ந்தனர். பெருச்சாளி, கழுகுடன் கூட்டத்தைப் பார்த்து ஏதோ நீளமாக விளக்கம் சொல்லியது. சில வாத்துக்கள் சிறு கூட்டமாக கழுகு சொல்வதை கேட்க தயாராக இருந்தன. வண்ண மீன் தன் பங்குக்கு நீண்ட சொற்பொழிவை செய்தது. அதன் கையில் ஒரு அறிவிப்பு – போஸ்டெர் போல இருந்தது.
ஜோயி பிரச்னை
அடுத்து என்ன நடக்கும்
தயவு செய்து உங்கள் பதிலையும்
மற்றும்
என்ன செய்யலாம் என்பதன் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்
நீலாவுக்கு எதுவும் புரியவில்லை. யாரது ஜோயி? நான் எப்படி இங்கு வந்தேன். அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஆமை ஒன்று தன் முதுகில் போஸ்டரை தாங்கியபடி கடந்து சென்றது.
மனித இனத்தை மறுக்கும் போராட்டம்
நீலா அருகில் போய் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினாள். பெரிய குடிசை போன்ற இருப்பிடம்- அதில் ஒர் ஓநாயின் படம் மாட்டப் பட்டிருந்து. அதே இளம் செந்நிற ரோம் படர்ந்த, மேல் நோக்கி கூரிய காதுகள், ஒரு பக்க காதில் சிராய்ப்பு –
அவள் வயிற்றை பிசைந்தது. முதல் முறையாக எங்கோ சென்று, எதையோ தின்று, வயிறு ஏற்காமல், குடைந்து வாந்தி வரும் போல என்று நினைத்து பாருங்கள். நாளைக்கே கடைசி நாள், உங்களுடைய அசைன்மெண்டை கொடுத்தாக வேண்டும், ஆனால் எழுதியிருப்பதோ, வலது ஓரத்தில் சில குறிப்புகள் மட்டுமே, உடனடியாக தோன்றும் உணர்வு, ஆசிரியர் கடுமையாக எச்சரிக்கிறாள், போர்டில் கொட்டை எழுத்தில், எழுதி வேறு வைக்கிறாள்- இந்த அசைன்மென்ட் அல்லது ப்ராஜெக்ட் உங்கள் அறிவியல் பாட தேர்வில் 80% மதிப்பெண்களுக்கானது – உங்கள் நிலைமை எப்படி இருக்கும்? அதைப் போல ஆயிரம் மடங்கு – எப்படி உணர்வீர்கள்? அது தற்சமயம் நீலாவின் அதிர்ச்சியில் 0.000000000001% பங்கு தான் இருக்க முடியும்.
பகுதி-6
இந்த ஓநாய் என் வீட்டில் அல்லவா இருக்கிறது. அவள் பெற்றோரும் தமக்கையும் கட்டி வைத்திருக்கிறார்கள். வாவ், நான் வந்த பொழுது தானாக விரும்பியோ, எந்த ஒரு கெட்ட எண்ணத்தோடும் வரவில்லை என்பதும் எவ்வளவு உண்மையோ, அதைப் போலவே இவர்கள் மத்தியில் நான் ஏதோ ஒரு கெடுதலை செய்பவள் என்று இந்த கூட்டம் தற்சமயம் நினைக்கப் போவதும் உண்மையே. என்ன உணர்வு என்று சொல்ல முடியவில்லை. அனைத்தும் எதிர்பாராமல் நடந்ததே – அவள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டிருக்கிறாள். காடு, மரங்கள் நிறைந்த அந்த இடத்தில் பதட்டத்தோடு அங்கு வசித்த ஜீவன்கள் இங்கும் அங்குமாக அலைந்தன. வீடுகளுக்கு எதுவுமே போகவில்லை.
நடந்து சென்றாள். ஒரு பெரிய ஓக் மரம் அவள் கவனத்தை ஈர்த்தது. மிகப் பெரிய கிளைகளுடன் அந்த மரமே அதிசயமாக இருந்தது. அதன் பெரிய கிளைகளும் உயரமும் ஏறிச் செல்ல வசதியாக இருந்தது அதிசயமே. அதை விட அதிகமாக அவள் கவனத்தைக் கவர்ந்தது கிளைகள் குவிந்தும், கவிழ்ந்தும் வீடுகள் போன்ற அமைப்பை கொண்டிருந்ததே. நடு நடுவில் உட்கார வசதியாக தட்டையான இடம், பொந்துகள் அலமாரிகள் போல, பொருள்களை பாதுகாப்பாக வைக்க, அடர்ந்த இலை மறைவில் ஓய்வு எடுக்கலாம் என்று ஒவ்வொன்றாக பார்த்து அதிசயித்தாள். அந்த வீட்டின் கூரையிலிருந்து தொங்க விடப் பட்டிருந்த பழங்கள் நாக்கில் ஜலம் ஊறச் செய்பவனாக ருசியாக இருந்தன – பறவைகளுக்கான தானியங்கள் -அவ்வளவாக ருசியாக இல்லாவிட்டாலும் பறவைகள் விரும்பி உண்டன. நீலா எட்டிப் பார்த்தாள். பறவைகளின் படங்கள் வித விதமாக பறவை இனங்களை அடையாளம் காட்டுவதாக இருந்தன. அதைப் பார்த்து புன்முறுவலோடு நீலா இறங்கி வந்தாள்.
தரையில் கால் வைத்தவள், மரத்தில் திரை கட்டி மறைத்துக் கொண்டு அணில்கள் வசித்தன போலும். இளம் அணில்கள் உறங்கிகொண்டிருக்க, அந்த அணில்களின் உயரதிற்கே இருந்த பீப்பாயகளில் அகார்ன் – (ஓரு பழ விதை) நிரம்பியிருந்தன. அட, இந்த அணில்களின் வீடு எவ்வளவு அழகு- தாங்களே கட்டிக் கொண்டு வேண்டிய வசதிகளையும் செய்து கொண்டு- சின்னச் சின்ன மிதியடிகள், பள பளவென்று பாலீஷ் செய்யப்பட்ட மேசை, அதில் பாதி உண்ட மிச்சம், ஓக் மரத்தின் பழங்களைக் கொண்டு தயாரித்த உணவு –
திடுமென தன் நிணைவு வர, நீலா திடுக்கிட்டாள். அனேகமாக எல்லா குட்டி வீடுகளையும் பார்த்தாயிற்று. மேடையை நோக்கிச் சென்றாள். பெருச்சாளி இன்னமும் பேசிக் கொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே இடித்து பிளந்துகொண்டு அருகே சென்றாள். ஸ்பீக்கர் மாட்டியிருந்த மரத்தின் அருகில் கேட்கும் படியாக அமர்ந்து கொண்டாள்.
“… பிரச்னைகள்.. நாமே தான் அதை தீர்க்கவும் வேண்டும் நாம் அறிவோம் நம் ஜோயி காணவில்லை. அதன் இடத்தில் ஒரு மனித ஜீவன் நுழைந்து விட்டது..
மிகைலா – அந்த பெருச்சாளியின் பெயர். மனித இனம் என்ற வார்த்தை அவள் வாயிலிருந்து வந்தவுடனேயே எல்லா ஜீவன்களும் ஆ வென்று நெட்டுயிர்த்தன. சில கத்திக் கொண்டு வட்டமடித்தன. இரண்டு சிறிய விலங்குகள் ரோமம் அடர்ந்த உடலுடன் மிங்க் – என்று நினைத்துக் கொண்டாள் – அவை சில நாணயங்களை வைத்து பெட் கட்டின போலும்- மனிதர்கள் நம்மை ஆக்ரமிப்பார்களா? -மாட்டார்களா – பெட் கட்ட விரும்புபவர்கள் இங்கு கட்டலாம்.
கூட்டத்தின் தலைவி பெருச்சாளி உஷ், அமைதி, அமைதி – எல்லோரும் அமைதியாக இருந்து கேளுங்கள்.பெட் கட்ட வந்தவர்களிடம் வசூலித்துக் கொண்டிருந்த குட்டி விலங்குகளைப் பார்த்து,
மார்கஸ்! மார்தா! நிறுத்துங்கள். அந்த நாணயங்களை கீழே வையுங்கள். முதலில் நாம் செய்ய வேண்டியது – ஜோயி எப்படி காணாமல் போனான் என்று கண்டு பிடிப்பதே. இந்த விலங்கு உலகத்திலிருந்து காணாமல் போகக் கூட முடியுமா என்பதே பிரச்னை. அவன் போக் கூடிய ஒரே இடம்.. ஆம், .உங்களுக்கு
பிடிக்காவிட்டாலும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும் – பெருச்சாளி தலைவி நிறுத்தினாள். வரிசையாக கூடியிருந்த பிரஜைகளைப் கூர்ந்து பார்த்து விட்டு, ஒரு பெரு மூச்சுடன் “அ…
அவன் போகக் கூடும் என்று சொல்லக் கூடிய ஒரே இடம் .. பூமி தான்”
நம்ப முடியாமல் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. திரும்பி பூவுலகம் போவதென்பது அவர்களைப் பொறுத்தவரை, மலையுச்சியிலிருந்து “POTATOES !!!” என்று கத்திக் கொண்டு குதிப்பது போலத்தான்.
ஓரே இரைச்சல், அமைதி, அமைதி என்று தலைவி கத்தினாள். இதுவரை நாம் அறிந்து பூமிக்குச் சென்ற ஒரு பிரஜை Fiona Flamingo – மட்டுமே. யார் தான் அந்த பயங்கர பிரதேசத்துக்கு விரும்பி போவார்கள்? அதனால் தான் இந்த ப்லெமிங்கொ போனதும் நமது நீல மணி சிவப்பாக ஆகி விட்டது. யாரோ அதை எடுத்து சிதைத்துப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் தற்சமயம் அந்த நீல மணி அப்படியே இருக்கிறது. நிறம் மாறவில்லை. ஒரே சொல். குறிச் சொல்- ஒரு தீர்க்க தரிசனம் – மேலும் கேளுங்கள். இந்த முன் உணர்ந்து சொல்லும் சூசக சொல் இதற்கு முன்னும் சில சமயம் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. யாராவது அந்த சொல்லைக் கேட்டீர்களா?
Gertrude gopher – முன்னால் வந்து நின்றது.
நான் கேட்டேன் madam! நான் பிண்டரியன் திசில் என்ற நமது உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அது சொல்லிற்று.
AN ENEMY SHALL COME, IN PLACE OF A FRIEND,
TO STOP THE TWO SPECIES FIGHTING TILL THE END.
THE ENEMY WILL CURE THE STONE.
AND THE FRIEND SHALL MAKE A CHANGE, NOT ALONE
இது தான்.
ஒரு எதிரி, நமது நண்பனின் இடத்தில் வருவான்.
தமக்குள் சதா சண்டை போடும் இருவரை தடுப்பான்.
மணியை மாற்றி அமைப்பான் அந்த எதிரி
நமது நண்பனும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவான், தனியாக அல்ல
அவன் மணியின் சிவப்பு ஒளிச் சிதறலில் தான் மறைந்தான். வழக்கம் போல் பல வண்ணக் கலவையாக அது இருக்கவில்லை. அந்த மந்திர ஸ்படிகம் … அது முன் பியோனா பூமிக்கு போகு முன் நடந்ததே தான், எனக்கு நினைவு இருக்கிறது. நான் பார்த்தேனே. – அவள் தெரிந்து தான் போனாள். இந்த பாறை வழியாக போவதை நான் பார்த்தேன். அந்த நிகழ்ச்சி முழுவதையும் திருப்பி நடப்பது போல இந்த மணி காட்டியது. அவள் முகம்.. இன்னும் நினைவு இருக்கிறது. என் கண் முன் நிற்கிறது. இந்த ஜோயியும் அதே போல இளித்துக் கோண்டு தான் சென்றது. ஒரு வித்தியாசம். அந்த சிவப்பு ஒளி இல்லை. பியோனா போன போது சிவப்பானது போல இல்லை. ஜோயி அகன்றதும் இது பழையபடி நீல வண்ணமாக மாறி விட்டது. அந்த ஆமை முழங்காலை கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டு விட்டது.
ஓ.. சரிதான். அது நல்லது இல்லையே. கவலை தரும் செய்தி இல்லையா.. நாம் நம்பும் நமது மந்திர ஸ்படிகம் ஏமாற்றி விட்டதே. நீ சொன்ன வார்த்தைகளில் ஜோயி தான் நமது நண்பன். அந்த எதிரி.. உள்ளே வந்த மனித பெண். என்ன மாறுதல்கள் வரும்? எப்படி வரும் நாம் எதுவும் நினைக்க கூட முடியாது. அமைதி, அமைதி – பெரிய மனிதர்கள் நாங்கள் கூடிப் பேசி அந்த மனித பெண்ணையும் விசாரிக்கிறோம். நீங்கள் அனைவரும் அமைதியாக இருங்கள். நாம் நலமாய் இருக்க ஆவன செய்வோம். கவலை வேண்டாம்.
தலைவியான பெருச்சாளி சற்று அழுத்தமாகவே நாம் நலமாய் இருப்போம், கவலை வேண்டாம் என்றது.
நீலா சட்டென்று விழித்துக் கொண்டாள். அலுப்பை விலக்கி விட்டு நிமிர்ந்து பார்த்தாள். விலங்குகள் தங்கள் இருப்பிடம் நோக்கிச் சென்றன. பெரும்பாலோர் கவலையுடன், மற்றவர்கள் நெடு நேரம் உழைத்த களைப்புடன், இதுவரை அவர்களை ஆட்கொண்டிருந்த பெரும் பயம் விலகி விட்டது போல கலைந்தனர்.
பகுதி -8
இது சரியாக இல்லை . ஏதோ தவறு. மிகப் பெரிய தவறு. நினைத்தே பார்த்திராத மாபெரும் விபத்து.
ஆம். விபத்து தான். ஜொயி ஃபாக்ஸ் -அது தான் அந்த பிடிபட்ட ஓநாயின் பெயர். மனிதர்கள்
கையில் பிடிபடுவதாவது – அவர்கள் வீட்டு மிருகம் போல நடத்த அனுமதித்து அடங்கி இருப்பதாவது- குட்டி ஓநாய் நினைத்து நினைத்து பொருமியது. ஒரு பெரிய பையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்த கூண்டே தேவலை – வெளியே பேச்சு சத்தம் கேட்டது. புரியாத பேச்சு – புரிந்து தான் என்ன ஆகப் போகிறது. பையின் ஓரத்தை கடித்து கிழித்து பார்த்தது. எல்லோரும் கவலையுடன் இருப்பதாக பட்டது. ஒரு வார்த்தை அடிக்கடி சொல்லப் பட்டதால் கவனித்து கேட்து. நீலா – நீலா – யாரையோ அழைக்கும் விதமாக-
யாரோ நமக்கென்ன, இப்போதைக்கு இந்த பையிலிருந்து வெளியேற வேண்டும். மூச்சு முட்டுகிறது. பையுடன் தன்னை எங்கு கொண்டு போகிறார்கள்? மட்டமான ஜீவன்கள். அருவருக்கச் செய்யும் குரலும், உடல் அமைப்பும். மனிதர்கள். எதற்காக என்னை என் வீட்டை விட்டு கிளப்பி தூக்கிக் கொண்டு போகிறார்கள். எல்லாம் அந்த நீலக் கல்லால் வந்த விணை. எங்கிருந்து வந்ததோ – பள பளவென்று கண்களைப் பறித்தது. தொட்டது தான் தாமதம் நான் இங்கே கிடக்கிறேன்.
சொல்லிக் கேட்டிருந்து. நீல மணி பற்றியும் அதன் எண்ணற்ற வர்ண ஜாலங்களையும் அலுக்காமல் சொல்வார்கள். கூடவே ஒரு மஞ்சள் நிற மணி – அது தான் ஜோயியை அந்த மனிதர்களற்ற ஆழுலக ஜீவன்களின் உலகிற்கு கொண்டு சென்றது. சொல்லப் போனால் பூமியை விடவும் அந்த ஆழுலகம் நன்றாக இருந்தது. எல்லா புத்தங்களிலும் தேடித் தேடி படித்தேனே, எதிலும் இதன் தோற்றம் பற்றியோ, குணம் பற்றியோ அறிந்தவர்கள் யாருமில்லை. அங்கே இருந்த பெரியவர்கள், அதிலும் பொறுப்பில் இருந்த முக்கியமான முதியவர்கள் (Grand Elders) நியாயமாக விவரங்கள் தெரிந்தவர்கள் என்று பெயர், கேட்டாலே சிடுசிடுத்தனர். – வேற வேலை இல்லை உனக்கு? என்று அதட்டுவர்.
அதுவும் தான் ஏமாற்றமாக இருந்தது. இவர்கள் என்ன பெரியவர்கள் என்ற பெயர் வைத்துக் கொண்டு அதட்டுவது என்று கோபமாக வந்தது. ஜோயி தானே படித்ததைக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ந்தது. மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து. திரும்ப ஆராய்ந்து – இதே தான் வேலை, அனவரதமும் மனதில் இருந்த எண்ணம். ஒருமுறை அவர்கள் அறியாமல் அவர்களுடைய இருப்பிடம் போய் தேடியது. நீர் வீழ்ச்சியின் பின்னால் – ஒரு முறை மழையின்றி உலர்ந்து கிடந்தது. சில மஞ்சள் நிற காகிதம் போன்ற வஸ்துவில் ஆனி அடித்து மாட்டியிருந்தது. Fiona Flammingo:how she disappeared
காற்றில் மிதப்பது போல ஏதோ ஒன்றில் பிரயாணம் செய்கிறோம் என்று ஜோயிக்கு தோன்றியது. மாலா தூக்கிக் கொண்டு ஒரு இடத்தில் கீழே விட்டாள். மட்ட ரக நாய்க் குட்டிகள், கழுத்தை சுற்றி பட்டைகளுடன், சீ, ஓநாய் நான் என்னையும் இந்த அல்ப ஜந்துக்களையும் ஒன்றாக நினைப்பதா? போதாக் குறைக்கு அங்குள்ளோர் பப்பி – நாய் குட்டி – என்று தன்னையும் அழைத்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் எரிச்சலடைந்தது. ஊரில் இருந்த வரை மரியாதைக்குரிய, நம்பகமான ஓநாய் என்று பெயர் பெற்ற தன்னை, இந்த அல்ப நாய்களுடன் சேர்த்து இந்த அவமானம் வேறு – என் விருப்பமின்றி தூக்கிச் சென்று அடைத்து வைத்ததை விட பெரிய அவமானம்…..ஜோயி அந்த கூண்டுக்குள் ஆக்ரோஷத்துடன் வளைய வந்தது. சுற்று முற்றும் பார்த்து மனித ஜீவன் எதுவும் இல்லை -மீண்டும் உறுதி செய்து கொண்டபின், தன் சட்டை பையிலிருந்து ஒரு பொருளை வெளியில் எடுத்தது. அது ஒரு நகல் – தானே யோசித்து மஞ்சள் மணீயை போலவே செய்த ஒரு போலியான மஞ்சள் மணி. அந்த மணி ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்காது. வாழ் நாள் முழுவதும் இதே கவனமாக உழைத்து தயாரித்தது. அதன் வாழ்வே அதைச் சுற்றியே இருந்து எனலாம். அவனைத் தவிர வேறு யாரும் அந்த மணியைப் பற்றியோ அதன் சக்தியையோ அறிந்தவர்கள். இல்லை. மஹா பெரியவர்கள் கூட அப்படி ஒன்று இருப்பதை உணரவேயில்லை. மணி மற்றும் நகைகள் 101 என்ற விஷயத்தை எடுத்துக் கோண்டு ஆழ்ந்து படித்தும், தானே மேற்கொண்டு ஆய்வுகள் செய்தும் கூட ஓரளவு தான் அறிந்து கொள்ள முடிந்தது.
பொதுவாக எல்லொருக்கும் தெரிந்த விஷயம் – அந்த மணி அவர்களுக்கு உணவை தயாரித்து கொடுத்து வந்தது என்பதே. அது ஒரு மாயம். அசைவ உணவு, சைவ உணவு இரண்டுமே அவர்களுக்கு கிடைத்தது. Bhindarian Thistle – (ஒரு தாவரம்). மாமிச பிரியர்களுக்கு எந்த மிருகத்தையும் கொல்லாமலே, அவர்கள் விரும்பிய ருசியுடன் இறைச்சி போலவே பார்வைக்கும் தெரியும் ஒரு பொருள். அதை உண்டவர்கள் திருப்தி அடைந்தனர். எந்த ஜீவனையும் கொல்லாமல், விளை பொருள்களில் சமைத்த உணவே வேண்டும் என்று விரும்பும் சைவ உணவு பிரியர்களுக்கு அது வேறு விதமாக காட்சியளிக்கும், அவர்கள் விரும்பும் உணவின் வண்ணம், ருசி எதுவும் குறையாமல் பட்டர் கப் என்ற தாவரத்திலிருந்து தயாரித்ததாக தோன்றும்.
ஊதா நிறத்தில் இந்த உணவு சைவமாக இருக்கும், அதுவே கிளிப் பச்சை நிறத்தில் மற்றவர்களுக்கு தெரியும். மற்ற எதோ ஒரு ஜீவனை துன்புறுத்தி உண்ணுவதை வழக்கம் கொண்ட காட்டு விலங்குகளும் கூட இந்த உணவில் திருப்தியை அடைந்தனர். எந்த மிருகமும் நோயினால் வாடவில்லை. நோய் தடுப்பு மருந்தாகவும் அதுவே பயன்பட்டது.
உடனே தன் இருப்பிடமான ஆழுலகம் போக வேண்டும் என்று ஜோயி துடித்தது. தன் கையெழுத் து பிரதியை எடுத்து படித்து பார்த்தது. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டும். இங்கு மாட்டிக் கொண்டிருக்கிறோமே என்று வருந்தியது.
தன் ஆராய்ச்சியின் நடுவில் இப்படி ஒரு சோதனை. மஞ்சள் மணியை மேலும் ஆராய்ந்து தன் இனத்தாருக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எப்படி நிறைவேறும். மற்றும் ஒரு புரட்சி திட்டமும் இருந்தது.
“மனித இனம் நம்மை நசுக்குவதை அனுமதிக்க மாட்டோம்’ என்ற பெயரில். அவர்களால் கண்டு பிடிக்கவே முடியாதபடி தங்கள் வாழ்விடத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய வேலைகள். முதலில் இந்த தளையிலிருந்து விடுபட வேண்டுமே. ஆகா, தன் வீடு தான் எவ்வளவு சுகம்.
ஜோயி தன் முன் வைக்கப் பட்டிருந்த உணவை வெறுப்புடன் பார்த்து, முகத்தைத் திருப்பிக் கொண்டது. ஒன்றிரண்டாக உடைத்த தானியங்கள். அடுத்து கஞ்சியை முகர்ந்து பார்த்து அதுவும் பிடிக்காமல், தன் பையில் ரகசியமாக வைத்திருந்த திசில் என்ற தாவர உணவை ஒரு கடி கடித்து த்ருப்தியாக நகர்ந்தது. வீட்டுத் தலைவன் போல இருந்த வாட்ட சாட்டமான ஆள் தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல பேசுவான். அவன் ஜோயிக்கு உணவு என்று கொண்டுவந்து வைத்த பையில் சிக்கன் நெடி- ஜோயிக்கு தெரிந்து விட்டது. விலங்குகளை வதைக்காமல் இவர்களால் சாப்பிட முடியாதா? என்று தனக்குள் பேசிக் கொண்டது. அது நாய்களுக்கான உணவாம். பையில் வெளியில் என்ன என்ன பொருட்களைக் கொண்டு தயாரித்தது, எந்த ஜீவனையும் துன்புறுத்தவில்லை என்பது போன்ற பிரமாண வாக்கியங்களும் இல்லை. கொண்டு போய் தோட்டத்தில் கொட்டிவிட்டு, தன் பிண்டேரியன் திசில் – துண்டை கடித்தே பொழுது போக்கியது. அது எவ்வளவு ஆரோக்யமான உணவு. மிக குறைந்த அளவு, ஒரு அங்குலம் தான் இருக்கும், அதிலிருந்து கிள்ளி எடுத்து வாயில் போட்டுக் கொண்டது. மனதிற்குள் அருமையான டின்னர் என்று சொல்லிக் கொண்டது. அந்த சிறிய அறைக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு அமர்ந்தபடி தன் இருப்பிடத்தை நினைத்து வருந்தியது. எவ்வளவு அருமையான இடம். நான் ஆரம்பித்த செய்தித் தாள் எப்படி யாரால் தொடர முடியும்? அந்த செய்தித் தாள் மிக பிரபலம். நம்பகமான செய்திகளைத் தரும். அது தரும் செய்திகள் கண்டிப்பாக ஆதாரபூர்வமாக, தவிர பொழுபோக்கு செய்திகள். அந்த விலங்குகளின் உலகத்தில் ஒரு விமரிசனம் செய்பவன், மற்ற எல்லா எடிட்டர்களும் அவனிடம் நடுங்குவர். ராய்னா ராகூன், அவனே ஜோயியின் பத்திரிகைக்கு நல்ல விமரிசனம் தருவான்.
திரும்ப வீட்டு நினைவு. எல்லோரும் நண்பர்களாக, மனம் விட்டு பேசுபவராக, இருப்பர். உணவு இது போல ஒரு பாடாவதி இல்லை. நான் எந்த அளவு என் ஊரில் மதிக்கப்பட்டேன் என்பது இங்கு யாருக்குத் தெரியும்? தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவே காட்டிக் கொள்ள விழைந்த து. எனினும் இங்குள்ளோர் ஒரு பெண் நீலா என்பவளை தேடித் தேடி கவலையுடன் காஸர் வுட் (CASSER Woods) என்ற இடம் பற்றி பேசிக் கோண்டிருக்கிறார்கள். அந்த பெயரை கேட்டதுண்டு. அந்த பெயர் பலகையை அடையாளம் தெரிந்தது. அவ்வளவு தான். அங்கு போய் தேடப் போகிறார்களா. அந்தபெண் நீலா வாகத் தான் இருக்கும். தனது கூண்டை திறந்து விட முயன்ற பெண். தன்னை விடுவிக்க வந்தவள். ஆ, அந்த நல்ல மனம் கொண்ட பெண் காணவில்லையா? மற்றவர்களிடமும் என்னை விடுவிக்கச் சொல்லி தோற்றாள்.
திடுமென ஒரு எண்ணம். அந்த மாயக்கல் வருடம் தோறும் ஒரு செய்தியைச் சொல்லும். தான் இந்த பூமிக்கு வரும் முன், சில மாதங்களுக்கு முன் என்பது நமக்குத் தான். அந்த மந்திர ஸ்படிகம் உடனடியாக நடப்பதைத் தான் சொல்லும். மந்திர ஸ்படிகம் – அதற்கு நேரக் கணக்கெல்லாம் தெரியாது. மற்ற விலங்குகள் போலவே ஜோயியும் அதை பற்றி அதிகம் அலட்டிக் கோண்தில்லை. இதற்கு முன் நம்ப முடியாத சில செய்திகளை கூடச் சொல்லிற்று. நாளடைவில் பிசு பிசுத்துப் போயிற்று. ஏதோ சொல்லித்தே “EVEN THE KINDEST SHALL BE TURNED TO EVIL, AND ALL SHALL ROT” பிரமாதமாக ஒன்றும் ஆகவில்லை. பாரி (Barry bear) அதனுடைய ஐந்து காரட் அழுக்குத் தண்ணியில் விழுந்து வீணாயிற்று. அவ்வளவு தான். அதனால் விலங்குகள் அதன் பெரும்பாலான எச்சரிக்கைகளை பெரிதாக நினைப்பதில்லை. ஏதோ விளையாட்டுப் பொருள் தொலைந்து போனால் கவலை படுவோமே அந்த அளவு தான் அதன் மதிப்பு. அதனால் தற்சமயம் ஒரு குறிச் சொல் சொன்னதே, அதையும் ஒரு கவிதையாக எடுத்துக் கொண்டன. பாட தோதாக இருக்கவே அதை பாடி மகிழ்ந்தனர்.
AN ENEMY SHALL COME, IN PLACE OF A FRIEND,
TO STOP THE TWO SPECIES FIGHTING TILL THE END.
THE ENEMY SHALL CURE THE STONE,
AND THE FRIEND SHALL MAKE A CHANGE, NOT ALONE.
ஒரு எதிரி, நமது நண்பனின் இடத்தில் வருவான்.
தமக்குள் சதா சண்டை போடும் இருவரை தடுப்பான்.
மணியை மாற்றி அமைப்பான் அந்த எதிரி
நமது நண்பனும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவான், தனியாக அல்ல
இது வரை அதை அலட்சியமாக எண்ணி, மற்றவர்களைப் போலவே இதுவும் வழக்கமான ஒன்று அழகான வாக்கியங்கள், சுலபமான புதிர், என்று எண்ணியிருந்த ஜோயி சிந்தனை வயப் பட்டது. தன்னையும், இந்த காணாமல் போன சிறுமியையும் பற்றியதோ என்ற கவலை தோன்றியது. தான் எப்படி அந்த காஸர் வுட் என்ற இடத்திற்கு போனோம் என்று முன் நடந்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வந்து யோசித்த து. சம்பந்தமேயில்லையே- காலையில் நடந்து கொண்டிருந்தோம். அந்த மந்திர ஸ்படிகம் ஒளி தெரிந்து அதன் அருகில் போனோம். ஏனோ சற்று பதட்டமாக இருந்த து. எதையாவது வெளியில் அனுப்ப வேண்டுமென்றால் தான் இந்தக் கல் இப்படி ஓளியை வாரியிரைக்கும். இருந்தும் அதை எடுக்கப் போன பொழுது தான் இந்த பாட்டைச் சொல்லியது. இரு ஒரு குறி சொல் என்பது அந்த சமயம் உரைக்கவேயில்லையே. கையால் தொட்ட உடனேயே அதன் நிறம் சிவப்பின் பல வித பரிமாணங்களில் ஒளிச் சிதறல்களாக மாறியது. தான் இந்த விலங்குகளின் உலகம் வந்த பொழுது பல வண்ணங்கள் தெரிந்ததையும், தற்சமயம் சிவப்பு வண்ணமே மேலோங்கி இருக்க, தாமரை, ரோஜா போன்ற அதன் பல வகைகளில் மிக அழகாக இருந்தாலும் மனதை கவரவில்லை. காரணம் அது வேறு ஏதோ ஒரு விளைவை தரும் என்று கவலையே அதிகமாக மனதை அரித்தது.
“ஓ, நீ அந்த நல்ல பையன் தானே..”
மேற்கொண்டு எண்ண விடாமல் அந்த மனிதன் வந்து விட்டான். அவனைக் காணவே கொடூரமாக இருந்தது. வந்ததோடு இல்லாமல் முதுகில் தட்டினான்- அவன் வரையில் பிரியமாக செய்கிறான் போலும் – எனக்கு பயங்கரமான அடி – கூடவே அந்த ருசியான? உணவு பொருள்.
அரை மனதுடன், நட்பாக சிரித்தாலும், தனக்குள்ளே முடங்கியது. அவன் அகன்றதுமே, வாயில் அடக்கியிருந்தை துப்பி விட்டு திசில் துண்டை வாயில் போட்டுக் கொண்டது.
சரி, இது தான் நமக்கு என்று தெரிந்தபின் அதையே நினைத்து பொருமுவானேன். அன்று நடந்ததை மேலும் நினைவுக்கு கொண்டு வர முடியுமா பார்க்கலாம். ஜோயி தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு, யோசித்தது. எப்பொழுதெல்லாம் அந்த மந்திர ஸ்படிகம் வித்தியாசமாக ஏதாவது செய்து நம்மை திசை திருப்பியது. சட்டென்று ஒரு பொறி தட்டினாற் போல ஒரு எண்ணம். ஃப்யோனா ஃப்லெமிங்கொ – தன் கைப்பையில் (சுருட்டி ஒரு சிறு ஓக் பழம் அளவுக்கு வைத்திருந்தது) ஒரு பத்திரிகை – அதிலிருந்து உருவி தான் பல காலமாக நடத்தி வந்த செய்தித் தாள்- “Critter’s Chronicle” – க்ரிட்டெர்ஸ் க்ரோனிகிள்- காப்பியை எடுத்து பிரித்து பார்த்தது.
the Critter’s Chronicle
. Fiona Flammingo: disappeared
விலங்குகளின் வாழ்க்கை- நிகழ்ச்சி நிரல்
ஃபியோனா ஃப்லெமிங்கொ காணவில்லை
நம்முடன் இருந்த ஃப்யொனா ஃப்லெமிங்கொ சில நாட்களாக காணவில்லை. அதிக பரிச்சயமில்லாத பறவை தான் என்றாலும், கவலை தரும் விஷயம் இது. காணவில்லை என்று நாம் சொன்னாலும் உள்ளூர நம் அனைவருக்கும் எப்படி போனாள் என்பது தெரியும். ஃப்ரெடெரிக் ஃப்லெம்ங்கொ,மற்றும் ஃபெலிஸ் ஃப்லெமிங்கொ இருவரையும் சந்தித்து பேசினோம். அந்த பெண் சற்று அடாவடியாக நடந்து கொள்வதாக சொன்னார்கள். தன் இஷ்டப்படி தான் நடந்து கொள்வாள், என்றனர். தெளிவாக எதுவும் சொல்லவில்லை. இந்த ஏரி அவளுக்கு போதவில்லை. இன்னும் பெரிய நீர்ப் பரப்பு வேண்டும், அவளுக்கு எதிர்பார்ப்புகள் நிறையவே இருந்தன என்றனர்.
மற்ற உறுப்பினர்களுக்கும் அவளிடம் ஏதோ மனத் தாங்கல் இருந்தது. அதனால் அவளை காணவில்லை என்று பெரிதாக யாரும் வருந்தவில்லை. கொஃபர் தான் அவள் திரும்பி போவதை பற்றி யோசித்தாள் என்பதைச் சொன்னான்.
அப்படி விரும்பி விலங்குலகை விட்டு போனாள் என்பது நமக்கு பெருத்த ஏமாற்றமே. அவள் மறைவும், இந்த புதிய குறிச் சொல்லும், அவளை எண்ணி சொன்னது போல தொனிக்கிறது. அங்குள்ள ஒரு தலைமை பெருச்சாளி- பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு, அவளை கண்டு பிடிக்க வேண்டும், விசாரிக்கவேண்டும் என்று முணைந்திருந்ததே – அதற்கும் ஒன்றும் சொல்லும்படி தரவு கிடைக்கவில்லை.
பகுதி-9
“ஹே, ஹ்யூமன், மனிதப் பெண்ணே, இங்க வா”
Speak of the devil – நினைத்தேன் – என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று எண்ணியபடி நீலா அருகே சென்றாள். தலைமை பெருச்சாளி, இடுப்பில் கை வைத்தபடி நின்றிருந்தாள்.
“நிறைய பேசனும் பெண்ணே, என்னுடன் வா” என்றாள்.
அந்த சின்னஞ்சிறு பெருச்சாளி முன்னால் நடக்க நீலா வேடிக்கை பார்த்தபடியே நடந்தாள். பெரிய்ய்ய்ய மரம். அந்த மரத்தில் பல வடிவங்களில் கண்ணாடி ஜன்னல்கள் போல பள பளக்கும் பாறைதுண்டுகள் இருந்தன. ஒவ்வொரு கிளையும் ப்ரும்மாண்டம். கிளைகளில் வீடுகள். அதன் இடது பக்கம் ஒரு குளம். அதில் பாதி உப்பு நீர்/ அடுத்த பாதி தெளிந்த நன்னீர். எங்கு பார்த்தாலும் ஃபௌன்டங்கள் – நீரை தெளித்தபடி – சிலவற்றில் வண்ணங்களும் அழகாக இருந்தன.
“உள்ளே வா. நமக்கு நிறைய பேசனும்”
கண்களைச் சுழற்றிப் பார்த்தாள் நீலா. தலைமை பெருச்சாளியிடம் மற்ற விலங்குகள் நட்பாக இருந்தன. ஆனால் அவள் நீலாவை எதிரியாக கண்டாள். ஒரு சிங்கம் அவளிடம் ஏதோ கேட்டது. கவனமாக கேட்டு, தலையாட்டி, அதற்கு சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள். உள்ளே நுழைந்த நீலா வியப்புடன் அதன் கட்டமைப்பை நோக்கினாள். பல வண்ணங்களில் பாறை கிரிஸ்டல்கள் கொண்டு மாடிப்படிகள் அமைத்திருந்தார்கள். ஒரு படி ஏறி பெருச்சாளியுடன் ஒரு பெரிய அறை போன்ற இடத்தை அடைந்தாள். பெயர் பலகை மாட்டியிருந்தது. மிகல்யா முஸ்க்ரட்: க்ராண்ட் எல்டெர் – அவள் பெயரும், பெரியவர்களின் தலைமை –
பள பளத்த மேசையின் பின் தன் இருக்கையில் அமர்ந்த படி கேள்விக் கணைகளை தொடுத்தது.
“ப்ரொஃபஸி- குறிச் சொல் பற்றி உனக்கு என்ன தெரியும்? “
நீலா திகைத்தாள். குறிச் சொல், வருமுன் சொல்லுதல் என்று எதுவுமே அவள் கேட்டதுமில்லை, நம்பியதும் இல்லை. அப்படி இருக்க அவள் ஏதோ ஒரு கெட்ட திட்டத்துக்கு உடன் போனது போல என்ன தீர்மானமாக குற்றம் சாட்டுகிறாள்.
சத்யமாக, நான் முதன் முதலில் இந்த வார்த்தையை கொஃபர் லேடி சொல்லி கேட்டேன். யாரையாவது விசாரிக்க விரும்பினால் நான் அல்ல அது. நீங்கள் தவறான நபரை சாடுவது சரியல்ல.
பெருச்சாளி உறுமியது.
இதோ பார். நீதான் அந்த எதிரி. குறிச் சொல் தெளிவாக சொல்லியிருக்கிறதே. நீ எங்களுடன் நட்பாக இருந்து கெடுதலைச் செய்யத் தான் வந்திருக்கிறாய். எனக்குத் தெரியும் இந்த மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று. அரிதாக உள்ள விலங்குகளைக் கொன்று, பஞ்சு வைத்து அடைத்து காட்சி சாலைகளில் வைத்து மகிழ்வார்கள்.
நீலா அந்த பெருச்சாளியை உற்றுப் பார்த்தாள். என்ன ஆனாலும் சரி, இந்த மனித பெண் இங்கு இருக்க விட மாட்டேன் என்று தீர்மானமாக இருப்பது தெரிந்தது.
“ஓரு கேள்வி – நீ யார் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? அந்த சிங்கம் ஏன் உன்னை லஞ்ச் சுக்கு அழைத்தது. சாதாரணமாக உன்னையே லஞ்ச் ஆக விழுங்குவது தானே அதன் வழக்கம். தவிர, ஏதோ Grand Elders – மூத்தவர்கள் அதிலும் பெரியவர்கள் என்று சொல்வது யாரை அல்லது எவர்களைக் குறிக்கும்? அந்த முயல் தலையில் எதற்கு அந்த அலங்கார வளையம்? நீ எதற்கு இவ்வளவு பெரிய மூக்கு கண்ணாடி அணிந்திருக்கிறாய் ? அப்படி ஒன்றும் எடுப்பாகவும் இல்லை- பூணைக் கண் போல, தவிர, “
“ஊஷ்.. ஒரு கேள்வி என்று தானே சொன்னாய், இப்பொழுது அடுக்குகிறாயே.. என்னை எப்படி புரிந்து கொள்கிறாய் தெரியுமா? அந்த மந்திர ஸ்படிகத்தின் மகிமை. எங்களிடம் ஒரு சிறப்பான உணவு உண்டு – அதன் பெயர் பிண்டரியன் திசில் – அதை இந்த கல்லின் உதவியால் பெறுகிறோம். மாமிச உணவுக்கு அது மாற்று. Leah – அந்த சிங்கம் என்னை லஞ்சு க்கு கூப்பிடவில்லை அது Brunch – காலை உணவை தாமதமாக உண்பது – அது லஞ்ச் அல்ல – எங்களுக்குள்ளேயே சிலரை பொறுக்கி Grand Elders என்று நியமித்திருக்கிறோம்.
காற்று, நிலம், கடல் என்று சில துறைகள், ஒவ்வொன்றும் ஒரு தலைவர் கீழ். நான் நிலத்திற்கு பொறுப்பு. Edward Eagle, வானத்திற்கு , Tina Trout, கடல் மற்றும் நீர் நிலைகள். தனித்தனியாக அடையாளம் தெரிய எனக்கு இந்த பூணை கண் கண்ணாடி அந்த முயலுக்கு தலையில் வளையம். – சீருடை என்று மனிதர்கள் சொல்வார்களே, அது போல். புரிந்ததா? குறுக்கே பேசாதே.
நீலா தன் இருக்கையில் வசதியாக சாய்ந்து அமர்ந்தாள்.
ஓ, விலங்குகள் உலகில் இவ்வளவு விரிவான அமைப்பு கேட்டதே இல்லையே என்று மலைத்தாள். பெருச்சாளியின் விளக்கம் மேலும் அவள் ஆவலைத் தூண்டி விட்டன.
ஆனால், நீ பெருச்சாளி இனம் தானே. எப்படி நிலத்தையும் நீரையும் சமாளிப்பாய்?
என்னை நிலத்துக்கு அதிகாரியாக நியமிக்க வேண்டிய் அவசியம் வந்தது Fiona Flamingo காணாமல் போன பொழுதான். அது ஒரு சாதாரண விஷயம் அல்ல. எங்களுக்கு தலை குனிவு அப்படி ஒருவர் இங்கிருந்து வெளியேறுவது என்பது. நில வாழ் விலங்குகள் வோட்டு கணிசமாக குறைந்து விட்டது. இதெல்லாம் நீண்ட அரசியல் நிர்பந்தங்கள். உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு கேட்க பொறுமையிருக்காது.
மர மண்டை ஃபியானோ இப்படி திடுமென தானாக வெளியேறியதும், சில கட்டுப் பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு துறைக்கும் குறைந்த பக்ஷம் பத்து பேர் வேண்டும். நான் நீர் நிலம் இரண்டின் உறுப்பினர்கள் நலனையும் பாதுகாக்க முடியும் என்று என்னை இந்த Grand Elders கூட்டத்தில் சேர்த்தனர்.
ஒரு கழுகு அறைக்குள் தன் தலையை நுழைத்து ஏதோ சொல்லியது.
Mikayla தன் சுழல் நாற்காலியை திருப்பி அதனை வரவேற்றது. என்ன விஷயம் எட்?
Tina டீனா எதோ சொல்ல வேண்டுமாம். அவளை சில விஷயங்களை விசாரிக்கச் சொன்னீர்களே – அது சம்பந்தமாக – மேலும் ஏதோ சொல்ல இருவரும் – ஆ என்றனர்.
இப்பொழுது தான் எட்வர்ட் கழுகு நீலா அங்கு வாயை பிளந்து தன்னை ஆச்சர்யத்துடன் பார்ப்பதை கவனித்தது . அதனுடைய ப்ரும்மாண்டமான உடல் தான் அவளது பிரமிப்புக்கு காரணம் என்று அதற்கு தெரியுமா?
“ஹ்யூமன், என் தலையை வெட்டி உன் வீட்டை அலங்கரிக்க வைத்து விடாதே…”
மிகால்யா அதை அதட்டியது ..கண்ணால் ஜாடை காட்டியது.
“சே சே – சும்மா இரு. இது சாது. கையில் ஆயுதங்களோ, வெடிக்க துப்பாகியோ இவளிடம் இல்லை .”
இவ்வளவு சொல்லியும் எட்வர்டின் பயம் அகலவில்லை. தரை விரிப்பின் அடியில் முகத்தை ஓளித்துக் கொள்வது போல முகத்தை கவிழ்த்த படி நின்றது.
அங்கு வந்த டீனா – என்ற மீன் தான் சொல்ல வந்ததை சொல்லிற்று. சில சாமான்கள் வேண்டும் – தேங்காய், இன்னும் சில சாமான்கள்… பாதியில் நிறுத்தி “இந்த மனித சிறுமி ஏன் இன்னும் இங்கு இருக்கிறாள் ?”
எட்வர்ட் கழுகையே பார்த்துக் கொண்டிருந்த நீலா அது ஓட்டமும் நடையுமாக விரைந்து அகன்றபின், அந்த சிறிய பெருச்சாளியை நோக்கி திரும்பினாள்.
“நான் போகட்டுமா?”
“ஓரே ஒரு கடைசி கேள்வி – நீ எப்படி இங்கு வந்தாய்”?
“அங்கேயும் ஒரு பொருள் இந்த நீல மணி போலவே இருந்தது. நான் தொட்டவுடன் பட்டென்று வெடிப்பது போல பல வண்ணங்கள் சிதற – அவ்வளவு தான் எனக்குத் தெரியும் – அடுத்த நொடியில் நானே அதன் வண்ணங்களில் ஒன்றாக ஆனது போல இருந்தது. என்னை இழுத்துக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது.
மிகல்யா அவள் சொன்னதை திருப்பி தானும் சொல்லி பார்த்தாள்.
“இங்கு வந்தபின் அந்த மணியைப் பார்த்தாயா?”
“இல்லை. நான் கண்டதெல்லாம் சில விலங்குகள். சில கத்தின, சில உறுமின..”
மிகால்யா திடுமென நினைவு வந்தது போல நிமிர்ந்து பார்த்து கேட்டது.
“அந்த மணி என்ன வர்ணம், சொல்ல முடியுமா? வெடித்து வண்ணங்கள் சிதறியதாகச் சொன்னாயே, அவை என்ன வண்ணங்கள்? சிவப்பா? அல்லது வான வில் போல பல வண்ணங்களா?”
“நீலமும் வான வில்லும்”
மிகைலா பயமா, ஆச்சர்யமா, இரண்டும் கலந்ததா ? என்ற உணர்ச்சிகளின் கலவையாகத் தெரிந்தாள்.
“நிஜமாகவா சொல்கிறாய்” அது ஃபியொனா வின் தலையை அல்லது வேறு எதையாவது காட்டியதா?”
“இதோ பார் மிகைலா – நான் பயந்து அலறிக் கோண்டிருந்தேன். யாரோ என்னை அபகரித்துக் கொண்டு போகிறார்கள் என்று தெரிந்தது. அடுத்து என்னவாகும் என்று புரியாமல் கண் மூடியதை இங்கே வந்து தான் திறந்தேன். ஆனால், இது வரை நிச்சயம். ஃபிலமெங்கோ தலையெல்லாம் இல்லை.
மிகைலா எதுவும் பேசும் நிலையில் இல்லை. மேலும் கேள்வி கேட்கவும் இல்லை.
“அப்ப சரி, நீ போகலாம்.” இரு இரு ஒரு கடைசி கேள்வி. ஜோயி பற்றி ஏதாவது தெரியுமா? அவன் இங்கிருந்து போனது பற்றி தெரியுமா?
நீலா பிரமித்தாள். நடுக் காட்டில் தனியாக நடந்து கொண்டிருந்த குட்டி மான், திடுமேன ஹெட்லைட் கண்ணில் பட்டாள் மிரளுமே, அது போல.
“ம்ம் ..இருக்கலாம்”
சற்று முன் ஏமாற்றத்தில் முகம் வாடி இருந்த மிகைலா இதைக் கேட்டு துள்ளினாள். பசித்த எலி சீஸ் கட்டியைப் பார்த்து துள்ளுமே, அது போல.
“ என்ன அர்த்தம்? – இருக்கலாம் என்றால்?” உனக்கு என்ன தெரியும்”?
அவன் என் வீட்டில் இருக்கிறான். என் பெற்றோர் அதை கண்டெடுத்து வளர்ப்பு நாயாக வீட்டில் வைத்திருந்தனர். இப்பொழுது நிச்சயமில்லை- அங்கு இருக்கிறதோ, அல்லது தப்பி விட்டதோ.” ஒரே மூச்சில் ஒப்பிப்பது போல் சொல்லி முடித்தாள்.
நம்ப முடியாமல், வாயை பிளந்தபடி மலைத்து நின்ற, மிகைலா ஒரு வார்த்தை சொன்னாள். நீ போகலாம்.
“நல்ல காலம் என்று எண்ணியபடி நீலா வேகமாக வெளியேற கிளம்பினாள். போகும் பொழுது மிகலாவின்
மேசையில் இருந்த ஓரு நிகழ்ச்சி நிரல் அல்லது ஒரு முக்கியமான கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் வரிசைப் படுத்தியது போல ஒரு டாகுமெண்ட் கண்ணில் பட்டது.
Organize a meeting for community spirit…Fiona coming from a rich and pampered life in Earth…thinks she wants to go back…Buy the black glassesin Gayle’s Glasses –
துண்டு துண்டாக தலையங்கங்கள் – நம் குழுவின் அவசரக் கூட்டம் – ஃபியோன ஃப்லெமிங்கோ செல்வாக்காக வாழ்ந்தவளாம்- திரும்பி போகத் தான் விரும்பினாளாம்- மிதியை படிக்க இந்த கண்ணாடி வாங்கிக் கொள்ளுங்கள்
நீலா அதை படித்ததும் நின்றாள். சில நாட்களுக்கு முன் Patriot Tribune- என்ற பத்திகையில் படித்த ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது. மிகப் பெரிய, அரிதான ஒரு ஃப்லெமிங்கொ என்ற தலைப்பில் அதன் படம் வெளியாகியிருந்தது. மிகவும் கொண்டாடி வளர்க்கப் பட்ட ஒரு பறவை, அதே தான் – அவள் காட்டில் பார்த்த பறைவையின் படம். அது திரும்பி வர விரும்புகிறதா? ஏன்? அந்த படத்திலும் பள பளக்கும் ஒரு நீல மணி – ஏதோ சம்பந்தம் – என்னவாக இருக்கும்?
பகுதி -9
ஜோயி விருப்பமின்றி நடை பழகச் சென்றது. இது வரை தான் கொண்டு வந்த இருந்த திசில் துண்டு பசியை அடக்க போதுமானதாக இருந்தது. அதே அலுப்பைத் தரும் தினசரி. நாயைக் கட்டிப் போட்டு, பின் நடக்க வைப்பது என்று தானும் கூடவே வந்து நடக்க வைக்கிறார்களாம். அது வீட்டு நாய்களுக்கு சரி. நான் யார் தெரியாதா? இது அவமானம். அதில் ஒரு நன்மை. ஒரு பூணையின் பரிச்சயம் கிடைத்தது. பொல்லாத பூணை – இங்கேயே பிறந்து வளர்ந்தது. தனக்கு லாபம் இல்லாத வரை ஒருவருக்கும் ஒரு உதவியும் செய்யாது. ஜோயி நாய் உணவை அதற்கு கொடுத்தது. ஷ் .. என்ன வாழ்க்கை.. போர்… போர்…அதற்கு சம்மதமில்லாவிட்டாலும் வீட்டினர் அதை தங்கள் வளர்ப்பு நாயாகத் தான் எண்ணியிருக்கின்றனர். ஜோயி பொழுது போகாமல் புத்த அலமாரியின் பின்னால் ஒளிந்து கொண்டு அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டது.
தன்னை குட்டி நாய் என்பதை கூட பொறுத்துக் கொண்டது. இன்னொரு செல்ல வார்த்தை புரியவில்லை. திட்டுவது போல இருந்தது. ‘pip-squeak’ புரியாதவரை நல்லது. மெக்சிகன் நாய் கண்கள் துறுத்திக் கொண்டிருக்கும், அதன் பெயரான சிகுவா அது கேள்விப் பட்டவரை கிண்டல். மட்டம் தட்ட பயன் படுத்துவர். தான் சிறிய உருவம் உடைய ஓநாயாக இருப்பதை கேலி செய்கிறார்கள். வேறு என்ன? ஜோயி எம்பி நின்றால் கூட பத்து வயது பையனின் முழங்கால் வரை தான் வரும். அந்த அறையில் அடுக்கி வைத்திருந்த பெரிய உலக வரலாறு புத்தகங்களின் பின்னால் வசதியாக கண்கள் மட்டும் தெரியும்படி நின்று கொள்ளலாம்.
பேச்சுக் குரல்… “எங்குமே இல்லை.- காஸர் வுட் – அங்கும் இல்லை- “நன்றாக தேடினீர்களா?
நிச்சயமா? மூலை முடுக்குகள்…”?
அட டா – அந்த பெண் நீலாவைத் தேடுகிறார்கள். ஜோயிக்கு சந்தேகமேயில்லை. 99.999% நிச்சயம். நீலா விலங்குலகில் தான் இருக்கிறாள். அந்த குறிச்சொல், ப்ரொஃபஸி – அதன் பொருள் இப்பொழுது தெளிவாக ஆகி விட்டது. அதன் படி தானும் ஏதாவது செய்ய வேண்டுமே- இங்கே மாட்டிக் கொண்டு நான் என்ன மாற்றத்தைக் கொண்டு வர முடியும்- இந்த மனிதர்கள் ஏற்கனவே வசதியாக வாழ்கிறார்கள். நான் புதிதாக என்ன செய்யப் போகிறேன். அந்த தடிமனான புத்தகத்தை விட்டு சற்று விலகியதும் ஏதோ நழுவியது போல – அட ஒரு பழைய செய்தி தாள் –
அழகிய ஃபியோனொ ஃப்லெமிங்கொ திரும்பி வந்து விட்டது. அதோ இருக்கிறாளே.. சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்கிறாள்.—அது என்ன? பழைய நகைகள். மஞ்சள் மணியை மறைக்க முயன்று கொண்டிருக்கிறாள்.மறைக்கவா, ஏன்? கைகளால் சுவற்றில் பிறாண்டும் சத்தம். எட்டிப் பார்த்து. சுவற்றின் மறுபக்கம் – அட நீயா, குட்டிப் பெண்ணே,
மேலும் தொடரவிடாமல் வீட்டுப் பெண்மணி, அவனை தூக்கிக் கொண்டு போய் அந்த பழைய க்ளோசெட்-ல் விட்டாள். அதை விட மோசம் உணவு என்று ஒரு பெரிய பொருளை கொண்டு வைத்தாள். மனம் முழுவதும் அந்த போட்டோவிலேயே இருந்தது.
அதில் இருந்த ஒரு பொருள், விலங்கு உலகில் யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. கனவில் கூட காண முடியாதது. காமிராவில் அதை எப்படி பிடிக்க முடிந்தது ? ஜோயி மேலும் யோசிக்கலாயிற்று. எப்படி?ஏதோ ஒன்று பொருந்தாமல் – சாதாரணமாக அது யார் கண்ணுக்கும் அகப்படாது. ஏதாவது விசேஷ மாக நடக்கும் பொழுது தான் அதன் இருப்பே தெரிய வரும். இந்த படத்தில் அது மிக நல்ல நிலைமையில் உள்ளது. தன் கையில் இருந்த கனமான ரொட்டி போன்ற ஒன்றை முகர்ந்து பார்த்தது. யாருமறியாமல் அதை குப்பை தொட்டியில் போட போனது. அந்த காரிய வாதியான பூணை ஒளிந்து இருந்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்தது. ஜோயி பூணைகளை அறிந்தவரை அதன் கண்களில் காரியமாகத் தான் வந்திருப்பது புரிந்தது.
“ஓநாயே, இங்கே அருகே வா.. “
ஜோயி உடனே அடிபணிந்து ஜன்னல் அருகில் சென்று எட்டிப் பார்த்தது. வேலியருகில் நின்று இளித்த பூணை, . “நான் நீ தெரிந்து கொள்ள தவிக்கிறாயே அந்த ஃப்லெமிங்கொ பற்றிய செய்திகள் வந்த சமீபத்திய செய்தி தாள்களை கவனமாக சேர்த்து கொண்டு வைத்திருக்கிறேன். எங்க வச்சேன் – அது தான் மறந்து விட்து. நீ உன் உணவை கொடுத்தால் ஒரு வேளை அது என் நினைவைத் தூண்டி விடலாம். “
ஜோயி முறுவல் பூத்தது. இந்த பூணை பல கேள்விகளுக்கு பதிலாக இருக்க கூடும். தனக்கோ அந்த டாக்ஃபுட் – பிடிக்கவில்லை. இதற்கு பிடிக்கிறது. இதற்கு பதிலாக எனக்கு தேவையான விஷயங்கள் கிடைக்குமானால், எவ்வளவு நல்லது.
ஜோயி பேரம் பேசியது. நீ தினமும் இது போல செய்தி தாள்களை கொண்டுவந்து கொடு- நான் என் உணவை உனக்குத் தருகிறேன்.
“எழுதி தருவாயா?”
ஜோயி துண்டு பெப்பரில் எழுதி நீட்டியதும் அந்த பொல்லாத பூணை தன் மடியிலிருந்து கட்டு செய்தி தாள்களை எடுத்து கொடுத்தது.
அதோடு, என் பெயர் Matt – என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டது.
ஜோயி நிதானமாக செய்தி தாள்களைப் பிரித்து புரட்டிப் பார்த்தது.
எதிர்பார்த்த படி அதில் தான் தேடிய மஞ்சள் மணியை பற்றிய விவரங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. உண்மையில் இந்த மனிதர்கள் விசித்திரமானவர்கள். எதற்கும் உதவாத தன்மைகள். வேண்டாத செய்திகள்: ஃபியொன ஃப்லெமிங்கொ தன் தலையில் கட்ட ஒரு ஊதா நிற ரிப்பனை தேர்ந்தெடுத்தாள். அல்லது கதா நாயகிகள் அவளது உடல் நிறமான பிங்க் நிறத்தில் 50 ஆயிரம் டாலர்கள் கொடுத்தாவது தங்கள் உடைகளை, அதுவும் டவல்களை வாங்கத் தயாராக இருக்கிறார்கள், ஏன்தெரியுமா? அல்பங்கள். அதில் கோடிக் கணக்கான
சமீபத்திய முக்கிய செய்திகள் இருந்தாலும் ஜோயியின் கவனம் அவைகளில் செல்லவில்லை. ஒரே ஒரு செய்தி தான் வேண்டும். எப்படி ஃப்லெமிங்கொ திடுமென மறைந்தாள் என்பது தான்.
பகுதி-10
க்ளோசெட்டின் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு நிமிர்ந்தால் – கையில் ஒரு சிவப்பு பந்துடன் வீட்டுப் பெண்மணி நின்று கொண்டிருந்தார். தன்னை வெளியில் வரும்படி அழைக்கிறார் – இந்த பந்தைக் கண்டவுடன் ஓடி வந்து விடுவேன் என்ற அவரது கணிப்பை எண்ணி சிரித்துக் கொண்டது. ஆர்வமாக அந்த பந்தைக் கண்டு ஓடாவிட்டால், மறு நாள் தன்னை அந்த விலங்கு வைத்யரிடம் கூட்டிசென்று விடுவார்கள் என்ற பயம் காரணமாக அந்த விளையாட்டுக்கு உடன் பட்டது. அங்கு போனால் பணிவாக இருக்க கற்றுக் கொடுப்பார்கள். யாருக்கு வேண்டும் அந்த பாடங்கள். மகா கஷ்டம்.
எனவே, ஜோயி அந்த பந்து தான் உலகிலேயே அதற்கு பிடித்தமான பொருள் என்பது போல முகபாவத்துடன் அவளிடம் சென்றது. சிறிது நேரம் அந்த விளையாட்டு. பின் அந்த பெண்மணி கழுத்தை சுற்றி ஒரு தோல் வளையம் அத்துடன் இணைத்த நீண்ட கயிறு இவற்றுடன் , ஜோயிக்கு கொஞ்சம் கூட பிடிக்காத நடை பழக அழைத்துச் சென்றாள். தன் இனத்துக்கே அவமானம் என்று ஜோயி கருதியது அவளுக்கு எப்படித் தெரியும், அது போதென்று ஒரு குட்டி நாய் அடர்த்தியான ரோமத்துடன் -அதனாலேயே மிகவும் விரும்பப்பட்ட ஜாதி – பெயர் ஃபூஃபி யாம் – நீ யார், என்ன ஜாதி, கலப்பினமா? என்று கேட்டது. என்ன தைரியம். நல்லவேளையாக வீட்டுக்கார பெண்மணி காஸர் வுட் போகும் எண்ணத்தில் இருந்தாள். அந்த இடம் வந்ததும் ஜோயி அடையாளம் கண்டு கொண்டது. அதே இடத்தில் தான் நீலா காணாமல் போனாள். ஏனோ, அந்த பெண்மணி ஜோயியை ஓட விட்டாள். அவளை நன்றியுடன் பார்த்து விட்டு, ஜோயி தன்னை கொண்டுவது இந்த பூமியில் தள்ளியதும் அதே சக்திதான் என்பதால் ஏதாவது தடையம் கிடைக்குமா என்று பூமியை முகர்ந்தபடி சென்றது. வெகு தூரம் வந்து விட்டோமோ, கால்கள் தள்ளாடுகின்றன என்று நினைத்து ஒரு மண் மேடு மேல் அமரச் சென்றது. அதே நேரம் அங்கு ஒரு பரிச்சயமான முகம், குரல் கேட்டு திகைத்து நின்றது. ஜோயி, ஜோயி ஃபாக்ஸ் – ஜோயி ஓநாய் தானே – இந்த இடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நான் என்னுடைய ஓட்டுக்குள் கிடந்து திண்டாடுகிறேன், நீ என் மேலேயே வந்து உட்காருகிறாய் – என் மாணவன் தான் – எனக்கு பிடித்த மானவன் கூட – ஆனால், அதற்காக நீ என்னை ஒரு நாற்காலியாக நினைத்து ஏறி உட்காரச் சொல்வேனா?
ப்ரொஃபஸர் திமோதி – எப்பொழுதும் எரிச்சல் தெரிய பேசுவதில் வல்லவர்.
ஜோயியின் பழைய ஆசிரியர் அந்த திமோதி ஆமை. அவர் தான் Alchemy and Stone 101 சொல்லிக் கொடுத்தார். அவருக்கு அந்த துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய ஆசை. அதனாலேயே விவரமாக சொல்லி கொடுத்தார். பாதி வகுப்பிலேயே ஏதாவது புது ஐடியா வந்தால் உடனே வகுப்பை மறந்து தன் ஆராய்ச்சி சாலைக்குச் சென்று விடுவார். நான் உங்களுக்கு சொல்லித் தருவதெல்லாம் இலக்கை அடைய ஒரு பாதை மட்டுமே- இப்படி இருக்கலாம் என்ற ஒரு அனுமானம். அதில் நீங்களே அலைந்து திரிந்து கண்டு பிடியுங்கள்.
ஏனென்றால் எதுவும் நிச்சயமாகத் தெரியாமல் கண்டபடி நினைத்து குழம்பும் இளவட்டங்கள் – அவர்கள் மூளைக்கு ஒரு பிடிமானம் ஒரு இலக்கு வேண்டும் – அப்படி ஒரு இலக்கு இல்லாவிட்டால், வெட்டியாக சுற்றவும், மற்றவர்களை சீண்டுவதுமாக பொழுதை கழிக்கும்.
ம்ம்ம்…ப்ரொஃபஸர் டிம், நீங்கள் எப்படி இந்த பூமிக்கு வந்தீர்கள்? நீங்கள் இங்கு சொல்வதை நான் எப்படி புரிந்து கொள்வேன். இங்கு நான் பூணைகளின் மொழியை மட்டும் தான் புரிந்து கொள்கிறேன்.
திமோதி யோசித்தார்.
“ நீ இன்னும் நிறைய மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும், மகனே. நீ இதுவரை நான் சொன்னதை புரிந்து கொண்டது எப்படி தெரியுமா? என்னிடம் ஒரு மாற்றுக் கல் உள்ளது. அதற்குள், அது என்ன என்று கேட்காதே. மறந்திருக்க மாட்டாய். நீ எப்படி வந்தாய்? அதே போலத் தான் நானும் வந்தேன். நான் ஒரு மாற்று மந்திர ஸ்படிகம் கண்டு பிடிக்க ஆய்வுகள் செய்து வந்தது தான் உனக்குத் தெரியுமே. எதிர் பாராத விதமாக அது சிவப்பாக ஓளி விட்டது. அதிலிருந்து அருவி போல ப்ராஃபஸி கொட்டியது. எல்லா விவரங்களும், ஃபியோனா வெளியே என்ன செய்தது, எல்லாமே அந்த அறிவிப்பு மழையில் வந்து விழுந்தன. இதோ நான் இங்கு நிற்கிறேன்.
ஜோயி பிரமித்தது. இப்படி விலங்குலகிலிருந்து விலங்குகள் பூமிக்கு வருவதும், அதன் குறிச்சொல், இனி வருவதைச் சொல்வது- இவை தவறாது நடக்கும் என்ற நம்பிக்கை பொய்த்தால், ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அந்த மந்திர ஸ்படிகம் தன் சிறப்புத் தன்மையை இழந்து விட்டது அதில் விரிசல் கண்டிருக்கலாம். அதன் பலனாக மன நிலை சீராக இல்லாமல் தடுமாறியிருக்கலாம். இந்த மன நிளையில் அந்த மந்திர ஸ்படிகம் செயல் பட்டால், எல்ல விலங்குகளூம், மனிதர்களும் இட மாற்றம் செய்யப் படலாம். இது ஒரு பெரும் பிரச்னை.
பகுதி -11
BLAARGH – (one has absorbed or is emitting a quantum of unhappiness.) இது தற்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப் படும் சொல் – மிக அதிகமாக மன வருத்தம் அல்லது பசி போன்ற உடல் உபாதைகள்)
இந்த வார்த்தையே போதும் – நீலாவின் தற்போதைய நிலையை வர்ணிக்க. யப் – அவளுக்கு பசித்தது – செய்வதற்கு எதுவுமில்லாமல் போரடித்தது – எங்கு இருக்கிறோம் என்ன செய்யப் போகிறோம் என்று எதுவும் தெரியாமல் கலக்கமாக இருந்தது. எல்லாம் சேர்ந்து யாரிடம் என்று இல்லாமல் கோபம் வந்தது. ஒரு பாறையை காலால் எத்தி தள்ளினாள். திரும்பவும் அதே போல எத்தினாள். காலை வருடிக் கொடுத்தாள். அந்த பாறை காலை பதம் பார்த்து விட்டது. ஒரு இரவு, ஒரு பகல், எதுவுமே சாப்பிடாமல் – நொறுக்குத் தீனி பொட்டலம் தவிர- அருகில் பறந்து சென்ற வண்டை பார்த்து கத்தினாள்.
ஏய், வண்டே, அறிவில்லையா, உனக்கு! யார் நீ, யாராக இருந்தாலும் நீ செய்வது சரியில்லை. வண்டுக்கு என்ன தெரியும் , மனித சிறுமியிடம் எப்படி நடந்து கொள்வது என்று. “ நான் இந்த விலங்குலகில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். பசிக்கிறது – எதை சாப்பிடுவது, மரப்பட்டையா? விலங்குகள் எல்லாமே முரடுகள். எனக்கு பசிக்கிறது. உன்னால் என்ன செய்ய முடியும். நீ எப்படி சமாளிக்கிறாய் இந்த முரட்டு ஜீவன்கள் இடையில்? இங்கேயே இருந்து உனக்கு என்று ஒரு வழி, பசித்தால் ஏதாவது சாப்பிட கற்றுக் கொண்டு விட்டாய் போலும்? உன் வாழ்க்கை -அதை நீயே அழகாக செய்து கொண்டு விட்டாய். என்னைப் போலவா- இந்த அமானுஷ்ய உலகில் எப்படியோ வந்து மாட்டிக் கொண்டிருக்கிறேன். நீ அதிர்ஷ்டசாலி, சிறு பூச்சியே. நானும் உன்னைப் போலவே கவலையின்றி சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருந்தேன். ஆனால், ஓ .. ஒரு அசட்டு மாயக்கல், என்ன நினைத்தோ என்னை இங்கே கொண்டு வந்து போட்டது. நான் கேட்டேனா? இல்லவே இல்லை. இப்ப பார் ஏதோ ப்ரொஃபஸியாம் – என்னை சுற்றி வளைத்து இங்கே தள்ளியிருக்கிறது. ஐ டோண்ட் கேர் — நீ போய் வா, உன் தேவைக்கு கிடைப்பதை பொறுக்கு – சந்தோஷமாக இரு, ஹை !
அந்த வண்டு ( அதன் பெயர் Bonnie என்பதாம்) இந்த மனித பெண்ணை லட்சியம் செய்யவில்லை. ஏன் இவ்வளவு உரத்த குரலில் பேசுகிறாள் என்று எண்ணியவாறு விரைந்தது. அதன் கவலை அதற்கு. இலைகள் விற்கும் இடம் போனால் அதன் சினேகிதி Gabby Gnat இருப்பாள். பேசலாம். திடுமென திசில் பாக்கெட்டுகள் சிறியதாகி விட்டன. அது பற்றி கேட்கலாம். நீலாவை தன் நேரத்தை வீணாக்கியதாக சிடு சிடுப்புடன் பார்த்து விட்டு வேகமாக பறந்தது. அந்த கடை வாசலில் கூட்டம் வேறு சேர்ந்திருக்கும். லைன் பெரிதாக இருக்கும். பல விஷயங்கள் அவள் கவனிக்க வேண்டியதாக இருக்க இந்த அசட்டு மனித பெண் ஏன் இங்கு வந்து கூக்குரலிடுகிறாள் என்பது பற்றி நினைக்கவே நேரமில்லை. இந்த விலங்குகள் உணவு இந்த அளவு குறைந்ததேயில்லை. தட்டுப்பாடு வந்ததே கிராண்ட் எல்டெர்ஸ் – மூத்த பெரியவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டு வந்த பின் தான். அதுவரை அந்த Bindarian Thistle in Esme’s Leaves & Thistle! Meh கடைகளில் நிச்சயம் ஸ்டாக் இருக்கும். தட்டுபாடு என்பதே இல்லை. உடனடி கவலையெல்லாம் அந்த கடையில் தான் போய் சேருமுன் திசில் தீர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதே.. கூட்டமாக வேறு இருக்கும் – நீளமான வரிசையில் காத்து நிற்க வேண்டியிருக்கும்.
அந்த வண்டை உற்றுப் பார்த்த நீலாவுக்கு தான் பசியுடன் இருப்பது நினைவுக்கு வந்தது. இவைகள் புகழ்ந்து சொல்லும் திசில் பிடிக்கவும் இல்லை. இதுவரை சாப்பிட்டு பழகிய தன் தாவர உணவுக்கு ஈடாகாது. அவளால் மாமிசத்தை ஏற்கவே முடியாது. எதைத் தின்பது? பசி பசி பசி பசி – இதை தவிர வேறு எதுவுமே அவளுக்குத் தோன்றவில்லை. திரும்பத் திரும்ப மனம் வேறு எதிலும் லயிக்காமல் சண்டி பண்ணியது. சட்டென்று நீலா யோசித்தாள். நேரம்? மலை போல குவித்து வைத்துக் கொண்டு சாப்பிட தயாராக இருந்தவள், சிந்தனை மாறியது. ஃப்லெமிங்கொ பற்றி செய்தியை படித்தது ஒரு ஆண்டு முன்பு. இங்கு இவர்கள் ஏதோ சில மாதங்களுக்கு முன் நடந்ததாகச் சொல்கிறார்கள். விசித்திரமான விலங்குகள். ஒரு ஓடை தென்பட்டது. அதன் கரையில் அமர்ந்து சாக்லெட் ஐஸ்க்ரீம் பற்றி நினைத்துக் கொண்டாள். மனதிற்குள் கற்பனை வளர்ந்தது. ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தாள். வனில்லா ஐஸ்க்ரீம், சின்னமான் (இலவங்க பட்டை) குக்கீ, – அவளுக்கு பிடித்தமான எல்லாமே வரிசையாக – நினைத்துப் பார்த்தே ரசித்தாள். – ஓ எவ்வளவு சந்தோஷமான நாட்கள். கனவை கலைத்தது அங்கு வந்த தலைமை பெருச்சாளி – மனதுக்குள் திட்டினாள். சனி…
அதே எரிச்சல் நிறைந்த பார்வை. “வா, வா உன்னை தலைமை அலுவலகத்தில் கூப்பிடுகிறார்கள். இத பார் – எதுவானாலும் மறைக்காதே.”
“ஓ…கே ?”
அந்த சமயத்தில் அந்த பெருச்சாளி வாயை அடக்கி சமாதானமாக போவது தான் மேல் – அதன் தோரணையும் வரட்டு அதிகாரமும் –
நீலா எழுந்தாள். மெதுவாக அந்த விசித்திரமான காட்டு விலங்கை பின் தொடர்ந்து தலைமை அலுவலகம் சென்றாள். அந்த பொல்லாத சிறு விலங்கு ஒவ்வொரு தப்படிக்கும் நின்று திரும்பி பார்த்தது – வருகிறாளா என்று உறுதி செய்து கொள்ள – இந்த பெருச்சாளிகளுக்கு இப்படி கூட சக்தி உண்டா என்ன என்று வியந்தபடி அதை கவனித்து பார்த்தாள். அல்பத்துக்கு பவிஷு வந்தால் என்ற பழமொழி தமிழில் சொல்வதானால்.
அந்த பெருச்சாளி அணிந்திருந்த அளவுக்கு மீறிய பெரிய பூணைக்கண் கண்ணாடி- அதன் ஓரங்களில் அலங்காரமாக போலி வைர மணிகள் பதிக்கப் பட்டு இருப்பதும் அதனுடைய இயல்பான கொடூர பார்வைக்கு சற்றும் பொருந்தவில்லை என்று நினைத்தாள். சில அடிகள் நடப்பதும், திரும்பி ஏதோ திட்டுவதுமாக அது முன் வழி காட்டிச் சென்றது. அவர்கள் ஒரு மிகப் பெரிய , ப்ரும்மாண்டமான மரத்தடியை அடைந்தனர். அதன் அருகில் ஒரு குளம், சுற்றிலும் புல்தரை. சிறு சிறு வட்டங்களாக நீர் தேங்கியிருக்க, அதில் டூனா ஜாதி போன்ற சிறிய மீன்கள் துள்ளின. நீலா திகைத்தாள். இவ்வளவு அழகான ஒரு இடத்தை தான் பார்த்ததேயில்லை – நம்பவே முடியாத மாயா ஜாலமாக இருந்தது அந்த இடம். சித்திரங்களில் கற்பனையாக வரையலாம். அந்த மரமே மிகவும் உயரமாக வானளாவி நின்றது. அந்த உயரமே மதிப்புக்குரியது என்ற தோற்றம் அளித்தது. உள் பக்கம் திரைச் சீலைகள் வெல்வெட்டால் ஆனது. உள்ளே நுழைய நுழைய அவள் ஆர்வம் அதிகரித்தது. ஒரே மரத்தில் இவ்வளவு வகை பூக்கள், பழங்கள், இவை உண்மையானது தானா என்ற ஐயம் எழுந்தது. மாயமா, மந்திரமா, செப்பிடு வித்தையா (மாஜிக்) – இலவங்கபட்டை (cinnamon), வாசனையா, பெர்ரி பழ வாசனையா மற்றொரு வாசனை பெயர் தெரியவில்லை எல்லாம் சேர்ந்து ஆஹா – என்று சொல்ல வைத்தது – சுகமான ஒரு அனுபவம். இது போல அனுபவம் குளிர் நாளில் மத்யான மிதமான வெய்யிலில் அமர்ந்து நல்ல புத்தகத்தை படிக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும். கிளைகள் எல்லாம் மாடிப் படிகள். ரோஜா செடியின் கிளைகள் அந்த படிகளின் ஊடாகச் சென்றன. வெளிச்சம் வர விளக்குகளும், ஜன்னல்களும் இனிய ஓசை எழுப்பும் பல வண்ணங்களிலான முத்தோ, பாறைகல்லோ போன்ற மணிகள் கோர்த்து செய்து தொங்க விட்ட wind chimes- காற்றில் ஆடும் மணி – அபூர்வமான பள பளக்கும் பாறை தகடுகள் கொண்டு பால்கனிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மிக மெல்லிய சரங்களாக சொக்கத் தங்கம் மரத்தின் அடி பாகத்திலும் கிளைகளிலும் கண்ணைப் பறித்தன. அந்த குளத்தின் நடுவில் ஒரு தடுப்பு – பாறை ஒன்று குளத்தை இரு பகுதிகளாக பிரித்தது. அபலோன் ஷெல் – என்ற கடல் வாழ் ஜீவன்களின் கூடு – பல வண்ணங்களிலும் இருக்கும் – அவைகள் அந்த பாறையில் விரவிக் கிடந்தன. வெளிச்சத்தில் அவை பளீரென்ற ஓளிச் சிதறலை வெளியிட்டன. அவைகள் இயல்பாக அமையாமல் செயற்கையாக ஒட்டப்பட்டிருந்தால் மெச்சத்தகுந்த ஒழுங்கில் கட்டமைக்கப் பாட்டிருந்தன என்பதில் ஐயமில்லை- நீலா வியந்தபடியே பார்த்திருந்தாள். எதற்கு என்பது இன்னமும் புரியவில்லை. பின் கவனித்துப் பார்த்து ஒரு பக்கம் உப்புத் தண்ணீர். மறு பக்கம் சுத்தமான தண்ணீர். மீன்கள் துள்ளி துள்ளி சுழன்று செல்லும் சமயம் கோலம் போட்டது போல நீரில் அலைகள் வட்டமடித்தன. இடைவிடாது சிறு நீர் வீழ்ச்சிகள் தண்ணீர் அளவை குறையாமல் கட்டுப்படுத்தின ஆங்காங்கு ஃபௌன்டன் கள் திடீர் தீடீரென்று வெடித்தது போல – நடந்தபடியே நீலா புல்வெளியை அடைந்தாள். இது மற்றொரு மாய உலகம். எல்லா விதமான காட்டு மலர்கள் பூத்திருக்க, பெர்ரி செடிகள் அடர்ந்து கிடந்தன. சிறு விலங்குகள் அதனிடையில் ஓடி விளையாடின. பூக்களை மட்டுமே நாள் பூரா பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த பகுதியே பூக்களின், சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா என்று எண்ணற்ற வண்ணங்களில் ஜொலித்தது. அதைச் சுற்றிலும் வேலி போட்டது போல உயரமான என்றும் பசுமையான மரங்கள். மெல்லிய பூக்களுடன் கொடிகள் அதைச் சுற்றி படர்ந்து மேலேறிக் கொண்டிருந்தன. ஒரு ஓக் மரத்தை சுற்றிலும், அருகே கிடந்த மணல் மேடு எதையும் விடவில்லை அந்த காட்டுக் கொடிகள். என்ன வாசனை- அந்த புல் வெளியே மணத்தது, தேவதாருவா, தாழம்பூவா, லாவெண்டெர் – மருகு , போன்ற அவளுக்குத் தெரிந்த எல்லா பூக்கள் வாசனையும் கலந்து வந்தது. எலுமிச்சையின் புளிப்பு கலந்த வாசனையையும் கண்டு கொண்டாள். எப்படி அனைத்தும் சேர்ந்து மூக்கை துளைக்கின்றன, நீலாவுக்கு அதிசயமாக இருந்தது, சுவர்கம் என்பது இது தானோ..
Abalone shells are flat shells that have few whorls. (A whorl is one complete turn of the tube of the gastropod shell around its imaginary axis). The Abalone is a gastropod. (A gastropod is a mollusk with head-bearing tentacles and eyes, a foot, and a one-piece shell(sometimes no shell).
மிகைலா பெருச்சாளியை தொடர நீலாவுக்கு பிடிக்கவேயில்லை. வேறு வழியில்லாமல் இங்கு வந்து மாட்டிக்கொண்டோமே என்ற வருத்தத்துடனே நடந்தாள். அந்த தன் ஆஃபீஸ் அறைக்கு அழைத்துசென்றது. நல்ல செர்ரி வுட் டெஸ்க் – அதற்கு ஒரு நாற்காலி , பின்னால் குஷன் வைத்து தைக்கப் பட்டு – பல்லைக் கடித்தாள் நீலா, இவள் பெருமையை, பதவியை காட்டத் தான் கூட்டி வந்தாளா? மிகைலா பெரிய லெதர் சுழல் நாற்காலியில் அமர்ந்தாள். ஒரு சாதாரண மர நாற்காலியைக் காட்டி அதில் உட்கார் என்று கை காட்டினாள்.
முதலில், buddy, உனக்குத் தெரியுமா? இந்த Bindarian Thistle ( ஒரு தாவரம்- அதுவே உணவாகும்) திடுமென குறைந்து விட்டது என்பது?
பிண்டரைன் திசில் – அந்த விசித்திரமான ஊதா நிற பட்டர் கப் – போன்றது- உங்களுக்கு மாமிச உணவை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அதை எடுத்துக் கொள்வீர்கள் …
யா, யா – அதே தான். ஊதா நிறம்- நீ என்ன சொன்னாய்? பட்டர் கப் என்றா?
அதே தான். நான் சொன்னேன். நீங்கள் எல்லோரும் அதை பட்டர் கப் என்று தானே குறிப்பிடுகிறீர்கள்.
மிகல்ய பாதியில் நிறுத்தினாள். அவள் கண்கள் டின்னர் ப்ளேட் அளவுக்கு விரிந்தது. அவள் திறந்த வாய் ,மூடாமல் என்ன யோசிக்கிறாள் என்பது நீலாவுக்கு புரியவில்லை. ஏதோ டினௌசர் எதிரில் வந்து எதையோ உமிழ்ந்து விட்டது போல …
எவ்வளவு நேரம் ? அலுப்பாக இருந்தது. வெளியில் பார்த்தாள். ஜன்னல் வழியாக ஒரு நடன நிகழ்ச்சி, அதில் ஒரு டினௌஸர்- அதுவும் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. நீலா மனதுக்குள், “ஓ, என் உவமையை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் – என்று சொல்லிக் கொண்டாள்.”
மிகைலா, என்ன இது? – இது என்ன பெரிய விஷயம் – நானும் பார்த்தேன் உங்கள் திசில் என்ற தாவரத்தை, அது என்ன தலை போகிற விஷயம்?
“நீலா “ – மிகைலா ஏதோ சூடான ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு விழுங்க முடியாமல் தவிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் அந்த விலங்கை எதுவும் செய்து விட வில்லையே, என்றாள்.
இல்லையே- ஏன் எதற்காக நான் உங்கள் இனத்தை துன்புறுத்தப் போகிறேன்- மிக அருகில் ஐந்து மீட்டர் தூரத்தில் இருந்தாலும் கூட எனக்கு என்ன வந்தது?
சட்டென்று நீலா கவனித்தாள் அவள் ஒரு மீட்டர் தூர இடைவெளியில் அந்த பெருச்சாளியுடன் இருக்கிறாள்.
அதே சமயம், எட்வர்ட் கழுகு அங்கு வந்து மூக்கை நீட்டியது. நீலாவை பார்த்ததும் கிறீச்சிட்டுக் கொண்டு தலையை இழுத்துக் கொண்டது.
“எட், பயப்படாதே, இந்த ஹுயூமன் விலங்குகளை துன்புறுத்துவது இல்லை “
எட் என்ற கழுகு, திரும்ப கூக்குரலிட திறந்த வாயை மூடிக் கொண்டு, மிகைலாவை பார்த்தது.
“இரு இரு, என்ன விஷயம்?”
எட்வர்ட் நீலாவை நம்பிக்கையில்லாமல் நோக்கியது. அவள் எதோ செவ்வாய் கிரகத்தை சேர்ந்தவள் போல
“ம்.. இவள் இறைச்சி சாப்பிடுபவள் இல்லையா? நான் சொன்னேனே – மனிதர்கள் அனேகமாக எல்லோருமே அனாவசியமாக விலங்குகளை வருத்துபவர்கள். தான். மீன், மற்ற மிருகங்களை சாப்பிடாமலே வெறுப்பார்கள்.இவர்களோடு பேசிப் பயனில்லை”
“எட், நீ சொன்னயே அனேகமாக என்று, அது சரி. விதி விலக்கும் உண்டு – இந்த சிறுமி அப்படி ஒரு விதி விலக்கு”.
“விதி விலக்கா? என் கால் நகம் (my foot- கழுகானதால் என் நகம்)
“எட்வர்ட் பார்தொலொம்யூ ஈகிள், – கழுகே, இவள் பார்த்த திசில் ஊதா நிறம்- இளம் பச்சை இல்லை.
ஓ, நான் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.
“ஹே, இவள் சொல்வதை நம்பியா?
ஆமாம், ஒரு மனித ப் பெண் சொன்னதை வைத்தா? “
“ஷ், அவள் தான் சொன்னாள். “
“நான் ஒன்றும் ஷ் க்கு அடங்க மாட்டேன்
எட், இவளை மட்டமாக நினைக்காதே. இவள் ஒன்றும் அறியாதவள் இல்லை. விலங்குகளிடம் இவளுக்கு விரோதமும் இல்லை. கொஞ்சம் யோசி. பிடிவாதமாக நீ சொன்னதையே சாதிக்காதே.
“மிகைலா பெருச்சாளியே, நீதான் சாதிக்கிறாய். மனிதர்கள் எல்லோருமே முட்டாள்கள் தான். “
இவர்கள் இருவரும் இவ்வாறு வாக்குவாதம் செய்தொண்டிருக்கையில் நீலா மிகைலாவின் டெஸ்கில் இருந்த ஒரு சிறு கிண்ணத்தில் இருந்த மிட்டாய் போல இருந்த ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கோண்டாள். எலுமிச்சை வாசனையுடன் அது நன்றாக இருந்தது. வாயில் அது கரைந்து அடங்கிய சமயம் இவர்கள் வாக்கு வாதமும் முடிந்து இருவரும் அமைதியானார்கள். .
“தன் பதவி தோரணையை காட்டும் விதமாக மிகைலா நீலாவை அதட்டும் குரலில் “நீ விலங்குகளை வதைக்க மாட்டாய் என்றவரை சரி. அதற்காக உன்னை அவ்வளவு சுலபமாக போக விட மாட்டோம். ரொம்பத்தான் தலை கனம் பிடித்து ஆடாதே. உட்கார்” என்றாள், ஏற்கனவே நீலா அந்த ஓட்டை நாற்காலியில் அமர்ந்து தான் இருந்தாள் என்பதை கவனிக்காமலே.
“ஸரி, இன்னொரு தடவை கேட்கிறேன். ஏன் இந்த தட்டுபாடு வந்தது, இது பற்றி உனக்கு என்ன தெரியும்? “
“ஓன்றும் தெரியாது”
மிகைலா தன் ஏமாற்றத்தை மறைக்க, பெரிதும் முயன்றாள். “ ஏன் என் இனிப்பு மிட்டாயை காலி பண்ணுகிறாய்” என்றாள்.
“நீலா பதில் சொல்லும் முன் ஐந்தாவது மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். “ஏன்னு கேட்டா, எனக்கு பசிக்கிறது”
“பசிக்கிறதா? இங்கு உணவுக்கு என்ன பஞ்சம். மார்க் மஞ்ச்சீஸ் என்று ஒரு கடை, நிறைய பச்சிலைகள் கொண்டு வந்து நிரப்பியிருக்கிறான். எரிக் கடையில் மரப் பட்டையிலிருந்து ஒரு ஸ்வீட் பண்ணியிருக்கிறான். அதை விட இந்த பினாகா ப்லாக் பேர்ட், பெர்ரி பழங்கள் வத்திருக்கிறான்- கொஞ்சம் விஷம் கலந்திருக்கும். எங்களுக்கு பிடிக்கும். இவ்வளவு இருக்க நீ ஏன் பட்டினியாக திண்டாடுகிறாய்?”
நீலா சற்று நேரம் மிகைலாவை கூர்ந்து பார்த்தாள். அவள் தான் யார் என்பதை, அவள் நினைவு படுத்திக் கொள்ள அவகாசம் கொடுப்பது போல. –
இதுவரை நீ சொன்னது எல்லாமே இந்த விலங்கு உலகத்தில் தான் உணவு என்று பெயர் பெறும் என்பதை.
ஓ, நீங்கள் எண்ணெயில் பொரித்த பண்டங்கள் தானே விரும்பி சாப்பிடுவீர்கள். ஆனால் சர்க்கரை சேர்த்த மரப் பட்டைகள் பிடிக்காது- அப்படித்தானே, பாவம், என்ன வாழ்க்கை” ஏளனம் தெரியும் குரலில் …தொடர்ந்திருப்பாள்.
நீலா அவளுக்கு சரியான பாடம் கற்பிக்கும் விதமாக சூடாக பதில் சொல்லியிருப்பாள், எட், கழுகு வந்து விட்டது. போனில் பேசிக் கொண்டிருந்தது. ஏதோ நல்ல செய்தியில்லை. பர பரப்பாக வந்து உளறி கொட்டியது.
“திமோதி டர்ட்டிளை – காணோம்” ஆமையார் டிமோதியைக் காணவில்லை
பகுதி- 12
இப்படித் தான் குப்பையாக வைத்திருப்பாயா ? வசிக்கும் இடம் சுத்தமாக, ஒழுங்காக இருக்க வேண்டாமா? இந்த செய்தித் தாள்கள் துண்டு துண்டாக எதற்கு? பையா, தானும் தன் இடமும் பெருமை தரும் படி இருக்க வேண்டும்..புரிகிறதா?
ஜோயி விழித்தது. இந்த ஆமையை உள்ளே விட்டது தவறோ? அந்த அலமாரி முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டதே. மேலும் காலையில் 5:00 க்கே தானும் எழுந்து ஜோயியையும் எழுப்பி, அந்த இடத்தை துடைக்க வைக்கும். துடைத்து துடைத்து பள பளவென்று ஆகும் வரை, பின் தலையில் ஒரு புத்தக சுமையோடு அந்த சிறிய இடத்தில் சுற்றி சுற்றி வர வேண்டும். ஜோயி தினசரி உடற் பயிற்சி செய்து பலசாலியாக ஆக வேண்டுமாம்.
“என்ன நடந்தது, ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீ அனைத்தையும் திட்ட வட்டமாக செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்”
நாக்கு நுனி வரை வந்து விட்ட ஒரு தகவலை, ஜோயி கஷ்டப்பட்டு அடக்கி கொண்டது. எப்பவோ ஒரு முறை கச முசாவென்ற சூழ்நிலை தான் மிகச் சிறந்த இடம் என்று தன் இருப்பிடம் குப்பை கூளமாக இருந்த பொழுது சொல்லி இருந்தது
“எஸ் ஸார், இதோ இந்த செய்தி தாள்களை தேதி வாராக அடுக்கியிருக்கிறேன், ஸார். “.
“அடுக்கி வைத்திருக்கிறாயா, அப்படித் தெரியவில்லையே”
ஜோயீ, அந்த பெண் மாலாவோ என்னவோ, அவளை பெற்றோர்கள் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். பாவம் “ என்று நினைத்து பரிதாபப் பட்ட து.
ஜோயி சற்று நிதானமாக யோசிக்க விரும்பியது. என்ன நடக்கிறது இந்த விலங்குலகில்? இந்த ஆசிரியர் ஆமை இங்கு வந்து விட்டது. அந்த பெண் அதற்கு பதில் காணாமல் போயிருக்கிறாள். அவள் அங்கு என்ன செய்கிறாளோ? இது இங்கே சுத்தம் செய்கிறதாம்.”
“மிஸ்டர் T, நான் பார்த்துக் கொள்கிறேன், அடுக்கி வைப்பதை..”
“ஓ, நீ செய்கிறாயா- நல்லது. இந்தா சாப்பிடு “என்று திசில் துண்டை நீட்டியது.
ஜோயி அரை மனதோடு அந்த திசில் துண்டை வாயில் போட்டுக் கொண்டது. சாதாரணமாக விரும்பி சாப்பிடும் பொருள். இன்று முதல் தடவையாக கடனே என்று விழுங்கியது. என்ன நடக்கும், நடக்கிறது. இந்த பெண் அங்கு இருக்கிறாள். எந்த நிமிஷமும் திரும்பி வரலாம். அவளும் வரத்தான் விரும்புவாள். அந்த கட்டுரை என்னவாகும்? மனித குலத்தின் அவசியம்? ஏன் அவர்கள் இருப்பதை அங்கீகரிக்க வேண்டும்? அவர்களுக்கு மூளை என்ற ஒன்று இருக்கிறதா?
ஆனால், இந்த மனித குலம் இல்லாவிட்டால், இந்த பூமியில்… “ஓ ஓநாய் நண்பனே! “
அந்த பூணை வந்திருக்கிறது. அதன் கையில் கட்டு செய்தி தாள்கள். “ சில புதிய தாள்கள், அதனால்,
“இதோ வருகிறேன், மேட்”
பூணை அருகில் வந்ததும் டாக் ஃபுட் – அதன் கையில் திணித்தான் –
ஜோயி, இந்த தாள்களில் ஏதோ ஒரு விஷயம் முக்கியமானதாக உள்ளது போலும். முழுவதும் படி. வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டு படி.
ஜோயி அந்த கட்டை அள்ளி எடுத்துக் கொண்டு தன் அலமாரிக்கு வந்து அமர்ந்து கொண்டு புரட்டி பார்த்தது. வசதியாக ஒரு இடத்தில் படிக்க அரம்பித்தது. முதல் கட்டுரை- ஏன் ஃப்லெமிங்கொ ரோஜா நிறத்தில் இருக்கிறாள்? ஃபியோனோ ஃப்லெமிங்கொ வின் சிறந்த நகைகள். அவளுடைய கூண்டிற்கு வரும்படி ஒரு அழைப்பிதழ். அங்கு வந்தால் ஃப்லெமிங்கோவின் உயர்தரமான உடல் அழகையும், அவள் நடப்பதையும் பார்த்து மகிழலாம். அந்த இடத்தின் வரை படம். அட இது விலங்குலகின் வரை படம். அதன் பின்னால் ஒரு குறிப்பு தனியாக – ஜோயி ஆச்சர்யத்தை அடக்க மாட்டாமல் படிக்க ஆரம்பித்த து.
“ ஜோயி, நீ இதை படிக்க நேரிட்டால், நானும் மிகைலாவும் சேர்ந்து இதை அனுப்பியுள்ளோம். நீ இருக்க் கூடும் என்று தோன்றிய இடங்களில் இதை உன் கண்ணில் படும் படி கொண்டு சேர்த்துள்ளோம். மந்திர ஸ்படிகம் உதவியால் என்று சொல்லத் தேவையில்லை. நீ இதை கையில் வைத்துக் கொண்டிருக்கிறாய் என்றால், மற்ற செய்தி தாள்கள் இதற்குள் அழிந்திருக்கும். அது கிடக்கட்டும். அந்த மனித பெண் இங்கிருக்கிறாள். ப்ரொஃபெசொர் டீ யை காணவில்லை. அங்கு நீ பார்த்தாயா? உனக்கு சிறு பை நிறைய திசில் உணவை அனுப்பியிருக்கிறோம். சில முக்கியமான செய்திகள்: அந்த மந்திர ஸ்படிகம் நம்பகமாக இல்லை. திசில் கொஞ்சம் குறைந்து விட் ட தால் தட்டுபாடு ஏற்பட்டது வாஸ்தவம். சில மாதங்கள் தான் தாக்குப் பிடிக்க முடியும். பின்னால் வரை படம் அனுப்பி இருக்கிறோம். தற்போதைய திசில் கையிருப்பை அது சொல்லும். அங்கு நீ நலமா? மனிதர்களால் உனக்கு சிரமம் எதுவுமில்லை என்று நம்புகிறோம். இங்குள்ள நிலவரம் பற்றி தொடர்ந்து செய்திகள் அனுப்புகிறோம்.
எட்
ஜோயி அதை கடைசி முறையாக பலமாக படித்தது. அதன் பக்கங்களை புரட்டிப் பார்க்க பிண்டரியன் திசில் வைக்கப் பட்டிருந்ததை கண்டு யோசித்த து. திசில் தட்டுப்பாடு மாமிச உணவை நம்பியிருக்கும் விலங்குகளுக்கு ஆபத்து. வேறு வழியில்லாமல் அவை பழைய முறையில் உணவைத் தேடும். பழைய முறை என்பது ..வேட்டையாடுதல். உயிர் பிழைத்திருக்க உணவு வேண்டும் . அதன் பொருட்டு வேட்டையாடுதல் ஜோயிக்கும் சம்மதமே. ஆனால் வெறும் விளையாட்டுக்காக, அல்லது தன் பலத்தை க் காட்டுவதற்காக வேட்டையாடுதல் தான் அதற்கு சம்மதமில்லை. அதை நிர்ணயிப்பதும் நடைமுறைப் படுத்தலும் மிகவும் சிரமம். அதை விட விலங்குலகில் வேட்டையாடுவது இல்லை என்ற இந்த தற்போதைய சட்ட திட்டங்களே தான் தொடரவேண்டும். மிகைலா இந்த பிரச்னை பற்றி ஒரு சொற்பொழிவு செய்தாள். ஜோயி அதை நினைவு படுத்திக் கொண்டது.
மிகைலா ஒரு சிறிய மேடையில் நின்றபடி மைக்கை அட்ஜஸ்ட் செய்து கொண்டாள்.
“ நாம் எதற்காக இங்கு கூடியிருக்கிறோம்? நான் ஏதோ உபதேசங்கள் செய்யப் போவதில்லை. ஆன்மீக சொற்பொழிவும் இல்லை. நாம் ஏன் இந்த விலங்குலகில் வாழ்கிறோம்? ஏனெனில் மனிதர்கள் நம்மை தரக் குறைவாக நடத்தினார்கள். மனித உலகில் மறைந்து விட்டது, அதாவது அந்த இனமே இல்லை என்று சொல்லப்படும் விலங்குகள் இங்கு வந்தன. அவை ஏன் வந்தன தெரியுமா? மனிதர்கள் அவைகளை துன்புறுத்தினர், மட்டமாக நினைத்து ஏவல் செய்தனர், அதனால் பாதுகாப்பு கருதி இங்கு வந்தன. தற்சமயம், வேட்டையாடுதல் என்பது பெரிய பிரச்னை இல்லை. ஒரு சிங்கம் வேட்டையாடும். ஒரு பூமா வேட்டையாடும் (பூமா- புள்ளியுள்ள தோலுடன், பூணை இனத்தைச் சேர்ந்த பெரிய உருவமுடைய காட்டுப் பூணை அல்லது புலி.) மனிதர்கள் ஏன் வேட்டையடக் கூடாது. மனிதர்கள் பல வகையினர். உணவிற்காக இறைச்சி தான் என்று இருப்பவர்கள் வேட்டையாடட்டும். ஆனால் நம் விலங்குகளைப் பிடித்துக் கொண்டு போய் செல்லப் பிராணிகள், வளர்ப்பு மிருகங்கள் என்ற பெயரில் கட்டிப் போட்டு துன்புறுத்துகிறார்கள். அதன் உடலில் பஞ்சு அடைத்து மிருக காட்சி சாலை என்று வைப்பது, தோலை தங்களுக்கு உடையாக செய்து கொள்வது – இவை வெறுக்கத் தக்கவை. மீன் பிடித்தல் ஒரு போட்டிக்காக. அது தவிர, வேட்டையாடுதலை ஒரு விளையாட்டாக சொல்வது அதை விட மோசம். அந்த விளையாட்டுக்கு அவர்கள் பயன்படுத்துவதும் குதிரைகள், மற்றும் சில விலங்குகளே. இது என்ன நியாயம்? விலங்குகளை வளர்ப்பது, அவை நன்கு கொழுத்த பின் வெட்டி உண்பதற்காக, என்பதை நாங்கள் கண்டிக்கிறோம். மிகவும் கொடூரமானது. அருவருப்பானது. இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் நமக்கு நேரம் இல்லை. உணவிற்காக வேட்டையாடுவது சரி. ஆனால், விலங்குகளை தரக் குறைவாக நடத்துவது, வெறும் பொழுது போக்குக்காக அவைகளை கொல்வது, அதை விட மோசமானது, இவர்களின் மீன் பிடிக்கும் வலைகளில் தப்பித் தவறி மாட்டிக் கொண்டு விட்ட sharks போன்றவைகளை அங்கேயே வெட்டிப் போடுவது போன்ற செயல்களை கண்டிக்கிறோம். அப்படியானால், இந்த விலங்குலகில் நாம் ஏன் வேட்டையாடுவதை அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? மனிதனைத் தவிர மிருகங்கள், தங்கள் உணவுக்காக மட்டுமே வேட்டையாடுகின்றன. அது தவிர நாம் சில பழைய வழக்கங்களையும் விட்டு விட்டோம். யாரது? ஏர்கோ வா, என்ன கேட்டாய்? ஒகே – நம் உணவிற்காக வேறு வழி கிடைத்தால் நாம் நம் இனத்து மிருகங்களையே கொல்வது என்ற கொடூரமான செயலை விட்டு விடுவோம். வேறு மாற்று என்ன சொல்வாயா? மில்லி, இந்த கேள்வி கேட்டதற்கு நன்றி, “
பலமான கைதட்டல்கள். சில நிமிஷங்கள் தொடர்ந்தன.
பகுதி- 13
மிகைலா பெருச்சாளிக்கு நீலாவிடம் கேட்க நிறைய விஷயம் இருந்தது. நேர்காணல் என்ற பெயரில் அழைத்த வண்ணம் இருந்தாள். நீலா அதை நேர்காணல் என்பதில்லை – அவளைப் பொறுத்தவரை அது ஒரு படுத்தல்.
“நாம் ஜோயிக்கும், திமோதிக்கும் ஒரு செய்தி அனுப்பினோம்”
“செய்தி அனுப்ப முடிந்ததா? எப்படி? செய்தி அனுப்ப முடிந்தால் நீங்களே போயிருக்கலாமே. தவிர, யார் அந்த திமோதி ?
மிகைலா விழிகளை சுழட்டினாள்.
“இரண்டாவது கேள்விக்கு பதில் முதலில். திமோதி என்பவர் ஒரு டர்டில் – ஆமை. மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருபவர். கொஞ்சம் அலட்டல். நாங்கள் செய்தி அனுப்பியது ஒரு தேடி கண்டு பிடிக்கும் கருவி மூலமாக. (tracking device.) ஜோயியோ, திமோதியோ கையில் எடுத்தவுடன், மற்ற இடங்களில் அது இயங்காது. மந்திர ஸ்படிகம் மூலமாகத் தான் அனுப்பினோம். அந்த வகையில் மந்திர ஸ்படிகம் உதவி செய்தது.
“ஓ – கூல்”
“இல்லை. கூல் இல்லை. அதன் மூலம் ஒரு ப்ராப்ளம் வந்து விட்டது. இந்த பிண்டைரன் திசில் காலியாகிக் கொண்டிருக்கிறது. அதனால் பாதிக்கப் படுபவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் தான். நீ சும்மா சுத்தி சரித்திர ஏடுகளை புரட்டிப் பார்க்கிறேன் என்று நேரத்தை வீணாக்காமல், இருந்தால், நான் சொல்கிறேன், என்ன நடக்கும் என்று. உணவு இல்லையெனில் அவை என்ன செய்யும். வேட்டையாடும். இந்த Bindarian Thistle க்கு மாற்றும் இல்லை. மற்றொரு மந்திர ஸ்படிகம் இந்த விலங்குலகில் தற்சமயம் இல்லை. நீ அந்த நாலாவது மணல் மேட்டில் ஏறினாய். அதன் பொருள் நீ நிலத்தை சேர்ந்தவள். நிலம், கடல்,காற்று…நீ பூமியில் இருக்க வேண்டியவள் தான். ஆனால் இப்பொழுது நீ கலப்படமாகி விட்டாய். இருக்கட்டும், இப்பொழுதுள்ள பிரச்னைக்கு தீர்வு என்ன என்று பார்ப்போம். இருப்பு குறையாமல் இருக்க வேண்டும். தேவை அதிகமாகி, இருப்பு குறைந்தால் வேட்டை தான் வழி. நம்மை நாமே அடித்துக் grand elders பிடி கொடுக்காமல், நீலா விழித்தாள். சுற்றி வளைத்து ஒரு பதிலைச் சொன்னாள்.
“ஓஹோ,ஓஹோ”
“நீ ஒன்றும் மர மண்டை இல்லை, நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் போக – உன்னால் முடியும், ஏதாவது செய், அல்லது கிளம்பி போ”
“நான் ஏன் உதவி செய்ய வேண்டும் எனக்கு என்ன செய்தீர்கள்? அந்த மந்திர ஸ்படிகம் மூலம் நான் தப்பித்து போக முடியும். நீங்கள் என்னிடம் இவ்வளவு பாரபக்ஷமாக நடந்து கொள்வதற்கும், அதட்டுவதற்கும் நான் பதிலுக்கு உதவி செய்ய வேண்டுமா” ?.
மிகைலா நீலாவை கூர்ந்து பார்த்தாள். – ஒரே வார்த்தை “One word. Payment”
Payment -? யார், யாருக்கு? என்ன பொருள்?
நீலா கேள் – நாங்கள் ஏன் இங்கு வந்தோம் என்று யோசித்திருக்கிறாயா? இங்குள்ள ஒவ்வொரு விலங்கும் ஏதோ வகையில் அடிமை படுத்தப் பட்டு, தவறாக நடத்தப் பட்டவர்களே. அவர்களை துன்புறுத்தி வருந்தச் செய்திருக்கிறார்கள். வாழ்க்கைத் தரம் அங்குள்ளதை விட இங்கு நலமாக உள்ளது. நீ நினைப்பது புரிகிறது. ஃபியோனா – அது ஒரு விதி விலக்கு. அவளை நன்றாகத் தான் கவனித்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.அவளுக்கு அது போதவில்லை. பேராசை. அதுவல்ல நாம் இப்பொழுது பேசப் போவது.. நான் சொல்ல வந்தது மனிதர்கள் இந்த விலங்குகளிடம் மிகக் கொடூரமாக நடந்து கொண்டனர் என்பதே. தூசி தும்பு போல் அலட்சியமாக நினைத்தனர். உங்கள் ஊரில் கற்காலம் என்றும் அக்காலத்தில் நாகரீகம் வளராத அந்த காலத்தில் மனிதர்கள் விலங்குகளை அடித்துக் கொன்று சாப்பிட்டார்கள் என்றும் சொல்வீர்கள். அந்த காலத்துக்கு அது சரி. அவர்கள் உணவு இரண்டும் கலந்தது. பயிர் பச்சைகளைக் கண்டு பிடிக்கும் வரை எதுவானாலும் பசி அடங்கினால் சரி என்ற கொள்கை. அதை குற்றம் சொல்லவில்லை. காரணமில்லாமல் விலங்குகளைக் கொல்வது என்ன நியாயம்? வீட்டில் வளர்ப்பது ஒரு நாள் அதைக் கொன்று சாப்பிட என்பது சரியல்ல. வேட்டையாடி மிருகங்களைக் கொல்வது அதன் தோல் மட்டுமாக உள்ளே எதையோ வைத்து அடைத்து, இது தான் அந்த மிருகம் என்று சொல்வது உங்களுக்கு அலங்காரம்.- எங்களுக்கு அவமானம். அதை விட மோசம் வேட்டையை ஒரு விளையாட்டாக, போட்டியாக செய்வது. இதைத் தடுப்பது அவ்வளவு சுலபமல்ல. உன்னால் முடிந்தால் அந்த அநியாயத்தை தட்டிக் கேள். இது உனக்கு ஒரு சவால். உனக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தர்பம். இந்த விலங்குலகில் ஒரு மனித வாடையும் வர விட மாட்டோம். ஏதாவது மிகப் பெரிய காரண காரியத்திற்காக அன்றி… உனக்கு கிடைத்துள்ள இந்த நல்ல …
அவளை இடை மறித்து தடுத்து, நீலா பேசினாள். “ஓகே, ஓகே,! கொள்கையளவில் நான் இதற்கு சம்மதிப்பதாக வைத்துக் கொள்வோம். உலகில் – இரண்டு உலகங்களில் நான் என்ன செய்ய வேண்டும், கொள்கையளவில்?
மிகைலா மெல்ல புன்னகைக்க முயன்றாள். சற்றே நட்புடன் மென்மையாக பேசினாள்.
“குழந்தாய், இப்பொழுது தெளிவாக புரிந்ததா ? அந்த ப்ரஃபஸியை அதிகம் நம்பவில்லை. ஆனால் மாயக்கல்லை அப்படி விட முடியாது. எங்கள் லைப்ரரிகளைப் பார்த்தாய் அல்லவா? எங்களுடைய சரித்திர புகழ் வாய்ந்த அலுவலகங்கள். அந்த கட்டிடங்களில் உள்ள அனைத்தும் இந்த மந்திர ஸ்படிகம் பற்றி பேசுகின்றன. ஏன் அந்தக் கல் இப்படி தவறாக நடந்து கொள்கிறது, எப்படி என்பதை கண்டுபிடிக்க அதன் சரித்திரம் உனக்குத் தெரிய வேண்டும். “
ஆமாம். அது உதவக் கூடும். நான் அருமணிகளைப் பற்றி அறிந்தவள் இல்லை. சில அடிப்படை தத்துவங்களை மட்டும் அறிவேன்.
உண்மையில் இந்த செய்தி ஆர்வமூட்டுகிறது. “நான் முயற்ச்சிக்கிறேன். நீங்களும் சில விஷயங்களை விளக்கிச் சொல்ல வேண்டும். நாலாவது மணல் குன்று என்பது பற்றி குறிப்பிட்டீர்களே- அது என்ன?
மிகைலா மெல்ல நகைத்தாள். ( நகைத்தாளா, அல்லது அரை மனதுடன் புன்னகைத்தாளா? ) பாதி கூட இல்லை கால் பங்கு ? அதுவும் இல்லை ஓரளவு புன்னகைக்க முயன்றது தானா)
“அதுவா, பெரிய கதை. இந்த விலங்குலகம் –”
“விலங்குலகமா? நிஜமாகத் தானா? என்ன ஒரு நூறு ஆண்டுகள் ஆகியிருக்குமா , உங்களுடைய இந்த உலகம், இதன் நடை முறைகள்.. விலங்குலகம் என்று சொல்வது சற்று அதிகம் ..” நீலா இடை மறித்தாள். பல வருஷங்களாக நீங்கள் இங்கு முயன்று சிருஷ்டி செய்தீர்கள் என்பது நம்ப முடியவில்லை. நாங்கள் மனிதர்களும் சில சமயம் அவ்வளவு நாகரீகம் இல்லாத மக்களிடமிருந்து விலகி வந்திருக்கிறோம். அதை அவர்களின் அதிகார வரம்பு என்போம். அதாவது ஒரு குறிப்பிட எல்லை வரை அவர்கள் ஆட்சி செல்லும். நீங்கள் அதை உலகம் என்று சொல்கிறீர்கள். வார்த்தை தான் – என்றாலும் நீங்களும் விலங்குகளின் இருப்பிடம், அதிகாரத்தின் எல்லை எனலாம். – அல்லது உங்கள் மொழியில் வேறு ஏதாவது..”
“மகளே, நீட்டி முழக்கி விலங்குகளில் உலகம் என்று சொல்வது அதிகமாகத் தான் தெரிகிறது. ஆனால் நான் இங்கே சொல்ல விரும்புவது ஒரு கதை. ஷ்.. குறுக்கிடாமல் கேள். இந்த விலங்குலகத்திற்கு நான்கு எல்லைகள். ஒவ்வொன்றும் ஒரு விதமான விலங்கு வகைக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. நிலம், நீர் அல்லது காற்று அல்லது வானம். ஒரு குளம் இரண்டாக பிரிந்து , ஒரு பக்கம் உப்புத் தண்ணீர், ஒரு பக்கம் சுத்தமான தண்ணீர் என்று – அதனை நடுவில் பிரிக்கும் மணல் குன்று அது தான் நீர் பௌல்டர் – Water boulder – நீ அந்த பெரிய மரத்திற்கு வந்த சமயம் பார்த்தாயே- சில மீன்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் உப்புத் தண்ணீரிலும், சில சுத்தமான நீரிலும் வாழும். அதனால் தான் அந்த இடையில் உள்ள நீர் மணல் குன்று இருபக்கமும் நீர் வாழ் உயிரினங்கள், வசதியாக தங்கள் இயல்புக்கு ஏற்ற பகுதியில் நிம்மதியாக வாழ வகை செய்து தருகிறது.
அடுத்து காற்று..
“போனை எடுத்துக் கொள். இந்த மணல் குன்று சிறப்புத் தன்மை கொண்டதா இல்லையா என்பதை சோதித்து பார். “நீலா, உங்களுக்கு முகத்தின் இரு புறமும் வசதியாக இரு உறுப்புகள் உள்ளனவே, காதுகள் என்று, அது மிக விசேஷமான உறுப்பு. அதை வைத்து என்ன செய்கிறீர்கள். நீங்கள் கேட்கிறீர்கள். அதன் எல்லை மிக விரிவானது. ஒரு சிறு கொசுவின் ரீங்காரம் கூட கேட்கும் அளவு அதிசயமான ஒரு ஏற்பாடு. ஆயினும் நீ கேட்டது நல்ல கேள்வி. இந்த சிறப்புத் தன்மையுடைய குன்றுகளில் ஒரு சின்னம்- அதன் தற்போதைய தலைவருடைய உருவில் இருக்கும் – மூவரில் ஒருவர். (grand elders) இந்த காற்று அல்லது வானம் என்பதன் மணல் குன்று, பறவைகளுக்கானது. மூன்றாவது நிலம்- இதற்கான மணல் குன்று அந்த புல்வெளியில் உள்ளது. நான்காவது அந்த கோடியில் உள்ளது. அது விலங்குகளுக்கானது. அது சாதாரணமானது. பெரிய ஸ்லாப் – தரை போன்ற பாறைத் துண்டு. ஆனால் ஃப்லெமிங்கோ நிகழ்ச்சிக்குப் பிறகு அதன் வீர்யம் குறைந்து விட்டது. ஏன் என்பது புரியவில்லை. ஒவ்வாமை – அதில் தான் நீ மாட்டிக் கொண்டாய், சரியா?”
“யா “
“ம்ம் ,, இது தான் நாலாவது மணற் குன்றின் கதை. உனக்காகவே அது தோன்றியதோ எனும் படி இருக்கிறது, எனக்கும் தெரியவில்லை. மிகைலா மேலும் சொன்னாள். “நல்லவேளையாக உனக்கு பொழுது போக ஒரு லைப்ரரி உள்ளது. வா, நானும் வருகிறேன்”
அந்த சிறிய உருவம் உடைய பெருச்சாளி, நாற்காலியிலிருந்து இறங்கி வாசற்கதவை நோக்கி நடந்தது.
“ஏன் அங்கேயே நிற்கிறாய், வா”
“நீலா ஏதோ யோசிப்பவள் போல், சற்று கோபம் முகத்தில் தெரிய அவள் அருகில் வந்தாள்” இன்னும் சில கேள்விகள்”
“யா யா – என்ன கேள்வியானாலும் விடை உனக்கு அந்த லைப்ரரியில் கிடைக்கும். நானென்ன செய்தி அறிவிப்பாளரா”
மிகைலா நீலாவை அழைத்துக் கொண்டு அந்த பெரிய மரத்திலிருந்து வெளியே சென்றாள்.
நீலா திரும்பி அந்த பெரிய மரத்தைப் பார்த்தாள். ஏனோ, இப்பொழுது அது பிரமிப்பாக இல்லை.
பகுதி-14
ஜோயி தன் கையிலிருந்த வரை படத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டது. ரொம்ப மோசம். திரும்ப வரை படத்தைப் பர்த்து, மோசம், மோசம் என்றது. திரும்பத் திரும்ப இது நல்லதல்ல, என்று சொல்லியபடி அந்த வரை படத்தை பார்ப்பதும், இப்படியாயிற்றே என்று வருந்துவதுமாக இருந்த து. அப்படி என்ன நடந்து விட்டது. Bindarian Thistle செடிகள் வாடி விட்டன. சேமிப்பு கிடங்குகளில் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. போதாத குறைக்கு இந்த மனிதர்கள், வீடுகளில் வளர்ப்பு மிருகங்களுக்காக zoos என்ற இடங்களுக்கு படையெடுக்கிறார்களாம். இதற்காக தனியாக zoos – அக்கிரமம். ஏதோ கைவினைப் பொருட்களைப் போல விலங்குகளை விற்பார்களோ . இதற்கு ஏன் நம்மவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.
பேச்சுக் குரல் கேட்டது. வீட்டில் எல்லோருமாக ஃப்லெமிங்கோ வை பார்த்து விட்டு வந்திருக்கிறார்கள். ஆ, இது இன்னும் அக்கிரமம். அக்கிரமம் என்ற வார்த்தையை விட அதிக அளவில் அக்கிரமம்.
“மிஸ்டர் டிம், எழுந்திருங்கள். ஸார்”
“திமோதி ஒரு கண்ணை மட்டும் டிறந்து பார்த்தார். என்ன விஷயம், மகனே”
“ஸார், அவர்கள் நம்மையும் ஃபியோனோ ஃப்லெமிங்கொ வை பார்க்க அழைத்துப் போகப் போகிறார்களாம்”
“திமோதியின் தூக்க கலக்கம் போய் விட, இரு கண்களையும் அகல விரித்து, “என்ன” என்றது.
இந்த காலத்து இளைஞர்கள் பேசுவதே இப்படித்தான். ஓ, ஆமாம், அதற்கென்ன? மெதுவாக ஜோயி சொன்னது புத்தியில் உறைத்தது. பையா, நீ போய் பார்த்து விட்டு வா. என்ன நடக்கிறது என்ற விஷயம் தெரிந்து கொள். இந்த மனிதர்கள் என்னை கூட்டிச் செல்ல மாட்டார்கள். போய் விட்டு வா. நான் சொல்லிக் கொடுத்த திறமைகளை உபயோகித்து, புது செய்திகளை கிரஹித்துக் கொண்டு வா, புரிகிறதா?
“ஓரு வேளை,ஸார், நான் சொல்ல வந்தது, ஸார், ஆனால்…”
“ஆனால் எல்லாம் வேண்டாம். இந்த ஃப்லெமிங்கொ விடம் நிறைய செய்திகள் கிடைக்கும். அவளே செய்திகளின் ஊற்றுக் கண். பார்த்து போ, பையா, போய் வா”
ஜோயிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. இங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்வார் என்று நினைத்திருக்க, தான் போய் ஃபியோனாவைப் பார்த்து செய்தி சேகரிக்க வேண்டுமாம். அவளுக்கு என்னவோ தெரியுமாம் அந்த மந்திர ஸ்படிகம் பற்றி, ஜோயிக்கு அலுப்பாக இருந்தது. நேரம் இருந்திருந்தால், சற்று சிந்தித்து, விவரங்கள் சேகரித்துக் கொண்டு, தனக்குள் ஆராய்ந்து ஒரு ஏற்பாடு செய்து கொண்டு, செயலில் இறங்கியிருப்பான். துரதிருஷ்ட வசமாக அந்த உயரமான வீட்டுக்கார அம்மாள், சிவப்பு பந்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள். ஜோயி தானாக ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்துடனும், மேல் பார்வைக்கு சொன்னதை எல்லாம் கேட்கும் அசட்டுத் தனத்துடனும், அவர்களுடன் செல்ல காரில் அமர்ந்தான். மனதுள் திமோதியிடம் எரிச்சல் எரிச்சலாக வந்தது . திமோதி நிச்சயமாக ஒரு வழி கண்டு பிடித்திருக்க வேண்டும் ஃபியோனாவை தவிர்க்க – அவருக்கு ஒரு வேளை தான் என்ன செய்யவேண்டும், செய்கிறோம் என்று ஒரு திட்டம் இருக்கலாம்
தவிர, ஜோயி க்கும் அந்த ப்ரொஃபஸி படி ஒரு ரோல் இருந்தது அதை ஒருவேளை மாற்றியமைக்க எண்ணியிருக்கலாம்
என்னவாக இருக்கும், ஒரு விதமான தடயமும் இல்லை. அப்படியும் அவரால் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியாது. அந்த ஹ்யூமன் விலங்குலகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாளோ, அவள் அந்த இடத்தை பாதுகாக்க ஏதாவது செய்தாளா?
அந்த ப்ரொஃபஸி யில் அப்படித்தானே இருந்தது. தான் தனியாக எதுவும் செய்ய முடியாது என்று.
ப்ரொஃபஸர் ஸார் எப்படியும் உதவி செய்வார் என்று நம்பலாம் என்றது
விலங்குலகில் இந்த பெண் போய் என்ன சாதிக்கப் போகிறாள்? அந்த மந்திர ஸ்படிகம் நீங்கலாக, அந்த இடம் தன் இயல்பில் ஒழுங்காகத் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த ஹ்யூமன் தப்பித்திருக்கலாம். அது அவ்வளவு சுலபமல்ல. அவ்வாறு நடக்கவில்லையெனில், ஒன்று அது படு முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது அங்கு போன பின் விலங்குகளைக் கண்டு பச்சாதாபப்பட்டிருக்கும். அதுவும் அவ்வளவு எளிதல்ல. இந்த ஹ்யூமனைத் தவிர யோசிக்க நினைத்தாலும் மனம் அங்கேயே சென்று நின்றது. கார் நின்றது.
என்ன மனிதர்களோ, போட்டோ, போட்டோ – எடுத்து தள்ளினர். ஒரு முறை எடுத்த போட்டோவையே திரும்பவும் எடுத்தனர். வேறு ஒரு விதமாக. ஜோயி நினைத்தது உண்மையில் இது வேஸ்ட்- நேரமும் விரயம்.. ஜோயி வந்த காரியத்தை நினைத்து பார்த்தது, தன் போக்கில் விட்டிருந்தால் ஃபியோனவையாவது பார்த்து பேசியிருக்கலாம். அப்பாடா – அந்த சமயம் பார்த்து ஒரு வண்டி, நிறைய தின்பண்டங்களோடு வந்து நின்றது. வகை வகையாக எண்ணெயில் பொரித்த பொருட்கள். ஜோயி காதுகளில் அவர்கள் ஹாட் டாக் வாங்கலாம் என்று தீர்மானித்தது விழுந்தது தான் தாமதம் மெதுவாக நகர்ந்து நகர்ந்து ஒரு தடுப்பின் பின்னால் மறைந்து கொண்டது. யாரோ சொல்வது காதில் விழுந்தது. ஒரு கனமான குரல், “போட்டோக்கள் எல்லாம் கிஃப்ட் கடையில் கிடைக்கும்” ஆ ஒரு ஃப்லெமிங்கொ ஜோயியை கூர்ந்து பார்த்தபடி, முகத்தில் அலுப்பு தெரிய, அமர்ந்திருந்த து. இது, இது தான் ஃபியோனா ஃப்லெமிங்கோ . அடையாளம் தெரிந்தாலும்.
பகுதி – 15
ஜோயி விலங்குகளின் வரையறைக்குள் இருந்த பொழுது, அதனுடன் பேசியதே இல்லை.
“ஊம்,,, நான் இந்த போட்டோவுக்காக வரவில்லை. நான் வந்து… எதற்கு என்றால்…
“ஏன் போட்டோவுக்காக வரவில்லையா ? அதிசயமாக இருக்கே… ஆட்டோக்ராஃப் வேணுமா?”
“அதுவும் வேண்டாம். நான் வந்து…”
“ஆட்டோக்ராஃப் ம் வேண்டாமா? பின் எதுக்காக என் நேரத்தை வீணடிக்கிறாய்? ஜோயி சொல்ல நினைத்தது “ மன்னிக்கவும். நான் சொல்ல வந்த து, ஏதோ நான் உங்கள் நேரத்தை வீணடிக்கிறேன் என்று கேட்டதற்கு பதில் சொல்லத் தான் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் விட்டால் தானே. ஓ, செய்தி சுருக்கம். அன்பான பறவையே, இந்த உலகம் உங்களைச் சுற்றி மட்டுமே இல்லை” என்று. சொன்னதோ, “நான் மன்னிப்பு கேட்கிறேன். சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன், நீங்கள் பதில் சொல்வீர்களா?”
ஃபியோனா இதை எதிர் பார்க்கவில்லை. புருவங்களை உயர்த்தி” நான் எதற்காக உனக்கு பதில் சொல்ல வேண்டும்”
“உங்கள் பதில் விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். விலங்குலகம் காப்பாற்றப் படும்”
“நான் கேட்டது, இதில் எனக்கு என்ன லாபம்?
ஜோயி இந்த பறவையைப் பற்றி கேட்ட பொழுது, ரொம்ப ரூட் rude, தன் காரியமே குறி, – அதை அப்படியே நம்பவில்லை. மிகைப் படுத்துகிறார்கள் என்று தான் நினைத்திருந்தது. இப்பொழுது – நம்பியது – “இல்லை, குறைவாகவே சொல்லியிருக்கிறார்கள். அதைவிட பன்மடங்கு அதிகம். “
தன் குரலில் எதுவும் வெளிப் படாமல், கவனமாக பேசியது. “ஓ கமான், விலங்குலகுக்கு உதவி செய்வதில் உனக்கு என்ன தயக்கம்?”
ஃபியோனா சில நிமிடங்கள் ஜோயியை கூர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் நிறைந்திருந்த போர்-அலுப்பு உணர்வு-மெள்ள மெள்ள மறைந்தது – கண நேரத்தில் அதன் இட த்தை சீற்றம் ஆக்ரமித்தது.
“உனக்கு தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா? கேள். ஏன் நான் உதவி செய்ய தயாராக இல்லை என்று. அங்கு இருந்த பொழுது நான் அறியாதவளாக, மன வளர்ச்சி குன்றியவளாக இருந்தேன். பித்து என்பர். ஆ ஆனால், அது கூட சரியான வார்த்தை அல்ல. எல்லா உணர்ச்சிகளும் கலந்த கலவையாக…எதற்காகவோ யாரோ தூண்டியது போல கோபம், யாரிடமோ வெறுப்பு, அல்லது வெறும் அலுப்பு – தன் மீதே, தன் செயலற்ற, செய்ய இயலாத தன்மை, எல்லாம் சேர்ந்து விலங்குலகமே ஒரு பயங்கரமான பொறியாகத் தெரிந்தது. எதையும் சுதந்திரமாக செய்ய விடாத ஒரு தளை. அங்குள்ள அனைவருமே தானியங்கி ரோபோக்கள். உண்மையில், ஒவ்வொரு மிருகமும் அந்த உலகில் தன் பங்குக்கு ஒரு வேலையை செய்கிறது. முதல் பார்வையில் அது பாராட்டத் தக்கதாக தோன்றலாம். ஆனால், இந்த இடம் அவர்கள் தங்கள் பிறவி இயல்பை தொலைத்து விட்டவர்களாக, தங்கள் தனித் தன்மையை இழந்தவர்களாகவே எனக்குத் தெரிந்தார்கள். சிருஷ்டியின் அடிப்படி சட்டங்கள், நியமங்கள், முற்றாக விடப் பட்டுள்ளன. ஒரு சிங்கமும் மானும் கால நிலை பற்றி விவாதிக்கலாம். அந்த மான் தான் உண்ணப் படுவோமோ என்ற பயம் இன்றி சிங்கத்தோடு பழகலாம். தோட்டிகள் – இயற்கையின் scavengers- என்று சொல்லப் படும் கழுகுகள், தற்போது புகழ் பெற்ற Bindarian Thistle நல்லது தான். ஆனால் நமது கழுகு நண்பன், வின்னீ, அவளுக்கு பிடிக்காத, விசித்திரமான மாஜிக், மாய உணவை உண்ண கட்டாயப் படுத்தப் படுகிறாள். பிற விலங்குகளை கொன்று தின்னும் சிங்கம் போன்றவை அதுவே அவர்களுக்கு பிடித்த, ஒத்துக் கொள்ளும் உணவு என்று இருக்கையில், தங்களுக்கு முற்றிலும் திருப்தியளிக்காத உணவை அந்த காட்டில் சாப்பிட வேண்டுமா? அந்த அடர்ந்த காடு மற்ற இடங்களை விட பல மடங்கு மேல். இந்த பூமியில் உள்ளதை விட விலங்குகள் சந்தோஷமாக இருந்தன. பூமியில் வாழும் மிருகங்கள் படும் அவஸ்தையைப் பார்க்க பல மடங்கு மேல். தற்சமயம், விலங்குலகில் ஒரு அங்குல அளவு மனிதர்களின் குணாதிசயங்களை கொண்டு வந்து விட்டார்கள். அவர்களைப் பற்றி நான் பல துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். மேலும் துருவித் துருவி விலங்குகள் தோன்றிய வரலாறும் படித்தேன். அபத்தம். மொத்தமும் அபத்த களஞ்சியம். Shrimp ஒரு வகை மீன். நான் இதை சாப்பிடுகிறேன். ஒரு ஆடு புல்லை எந்த உணர்வோடு சாப்பிடுகிறதோ, அதே உணர்வு தான் எனக்கும் இந்த வகை மீன் களைப் பார்க்கும் பொழுதும் சாப்பிடும் பொழுதும் வருகிறது. அங்கு இருக்கும். Lionel, – நமது நண்பன் தெரியுமில்லையா? அது ஒரு மானை பார்க்கும் பொழுது ஒரு மனிதன் தன் உணவை எப்படி அணுகுவானோ அதே முறையில் தான் அணுகுகிறது. அதற்கும் மான் ஒரு தட்டு நிறைய மாவுப் பண்டமே. அதுவே, savannah நதிக் கரையில் இருக்க நேரிட்ட சிங்கமும் இந்த காட்டையே கனவு காணும். நான் அந்த zoo வில் – மிருக காட்சி சாலையில் இருந்தேனே. அது எனக்கு பழகிய இயற்கையான இடம் அல்ல. நான் எப்படி உணர்ந்தேன் தெரியுமா “அடைக்கப் பட்டது போல” அது தவிர மற்றொன்று எனக்கு சற்றும் பிடிக்கவில்லை. என்ன தெரியுமா? என்னை பார்க்க வந்த மனிதர்கள். என் அபிமான ரசிகர்கள். போட்டோ, போட்டோ வாக எடுத்து தள்ளினர். முதலில் அந்த கவனமும் பாராட்டும் பிடித்திருந்தன என்பதில் சந்தேகமில்லை. எனினும் அது நம் வீடு அல்லவே. நம் இடமா? அந்த சமயம் தான் மந்திர ஸ்படிகம் வந்தது. நான் எண்ணியது என்னவென்றால், விலங்குகள் உலகம் நிச்சயம் இதை காட்டிலும் மேலாக இருக்கும் என்று. என்ன ஏமாற்றம்… சொல்லி ,முடியாத துக்கம். அந்த மந்திர ஸ்படிகம் மறு முறையும் என்னிடம் வந்தது. திரும்ப இந்த பூமிக்கு கொண்டு வந்து விட்டது. வெறும் இயந்திரத் தன்மையான வாழ்க்கை. ஒவ்வொன்றும் கீ கொடுக்கப் பட்ட பொம்மையே. யாருமே தங்கள் பிறவிக் குணங்களை, செயல்களை நினைவில் கொள்ளவேயில்லை. உணவுக்காக வேட்டையாடுவது இல்லையெனில் வேறு என்ன வேலை? நான் என்ன நினைக்கிறேன் என்றால், அந்த தலைமை பெருச்சாளி, மைகாவா, மாயாவா, ..ஓ மிகைலா, அவள் தான் தலைமை வகித்தாள். நல்ல குணமுடையவள் தான். ஆனால் அவள் கொள்கை, எதையுமே அதிகமாக ஆசைப் படக் கூடாது. அவளுக்கு நான் எங்கோ தடுக்கப் பட்டு, செயல் திறமையை இழந்து விட்டேன் என்று தீர்மானமாக எண்ணம். அதனால் நான் என்னைத் தவிர மற்றவைகளை பொருட்படுத்துவது இல்லை என்று நம்பினாள். அது ஓரளவு சரி எனலாம். ஏனெனில் நான் எதுவானாலும் அதனால் எனக்கு ஏற்படும் பலா பலன் களைத் தான் முதலில் கவனிப்பேன். யோசித்து பார், தன் சொந்த இடத்தை விட்டு வெகு தூரம் வந்து ஒரு zoo வில் அடைக்கப் பட்டு, உன் சுதந்திரம் அடியோடு மறுக்கப் பட்டு, இறக்கைகளை துண்டித்தாற் போல, வாழ நேர்ந்தால், இது போன்ற தன், தான், தனக்கு லாபம் என்ற வகையில் தான் எண்ணங்கள் போகும். அது இயற்கை. ஆனால் அதை விட அதிகமாக நான் வெறுத்தது, விலங்குலகம் அடிப்படை படைப்பின் சட்ட திட்டங்களை மதிக்காமல், தான் தோன்றித் தனமாக புதிய சட்ட திட்டங்களை திணிக்கும் வகையில் உயிரற்றதாக உள்ளது என்பேன். அதன் எதிரொலி தான் நான் அங்கு சந்தோஷமாக இல்லை. வசதியாக இருக்க எண்ணி வந்த இடம் அதன் மென்மையை இழந்த , அடர்ந்த வனத்தின் ரசிக்கத் தகுந்த ஓரளவு கொடூரமும் கலந்த தன்மையை கரைந்து நீர்க்க செய்து விட்டதாக உணர்ந்தேன். பிறவியிலேயே சிடு சிடுப்பான ஃப்லெமிங்கோ நான். எனக்கு போதும் என்ற திருப்தியே இருந்ததில்லை. அதுவும் போதாமல், அந்த மிகைலா பெரிய லெக்சர் அடித்தாள். உணவுக்காக மட்டும் பிராணிகளைக் கொல்வது ஓகே. ஆனால், விளையாட்டு என்று துன்புறுத்துவது கொடுமையாம். அது அந்த மனிதர்களுக்குத் தான் சொல்கிறாள். அது நம்மையும் ஏன் பாதிக்க வேண்டும்? நமக்கு எதற்கு அந்த உப்பு சப்பில்லாத திசில் உணவு. அது ஒரு அவசர தேவைக்காக மனிதர்கள் தயாரித்து பெட்டிகளில் அடைக்கும் உணவு. நமக்கு ஒவ்வாத மனிதர்களின் நடவடிக்கைகளை நாம் ஏன் காப்பி அடிக்க வேண்டும்? இப்பொழுது சொல், என் கேள்வி, அவ்வளவு பொருத்தமானது, நான் எதற்கு உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்?
பகுதி-16
அந்த புத்தகச் சாலை நிரம்பி வழிந்தது. வித விதமான் ஃபைல்கள், ஏதேதோ கை வினைப் பொருட்கள், பெரிய பெரிய அலமாரிகள், அது நிரம்ப புத்தகங்கள். அனால் எதிலுமே சரியான, தேவையானவர்களுக்கு திருப்தி தரும் வகையில் எதுவுமே இல்லை. மிகைலா கேட்டது அந்த ப்ரொஃபஸி பற்றிய நம்பகமான செய்தி. அவள் ஆணையிட்டிருந்தாள். தயாராக எடுத்து வைக்கச் சொல்லி. அங்குள்ளோர் அதைச் செய்யவில்லை என்பதை கண்டித்தாள்.
நீலாவிடம் “இங்கு கிடைக்கவிட்டால், பெரிய புத்தகச் சாலை ஒன்று இருக்கிறது. அங்கும் பார். முக்கியமாக அந்த Bindarian Thistle ஏன் குறைகிறது, எப்படி ஈடு செய்வது, அந்த ப்ரோஃபஸிக்கும் அதற்கும் என்ன தொடர்பு – இவைகளைத் தெரிந்து கொள். எதுவும் உடைந்து விடாமல் கவனமாக இரு”
ஒரு quail (கௌதாரி போன்ற பறவை) மற்றும் ஒரு badger (வளையில் வாழும் ஒரு விலங்கு) அவள் அருகில் வந்து அமர்ந்தன. தமக்குள் பேசுவது போல இந்த திசில் உணவைப் ப்ற்றி விவாதித்துக் கொண்டன. சற்று நேரம் சுற்றி வளைத்து, வெதர் – கால நிலை, எதனால் பற்றாக் குறை ஏற்படுகிறது, இதில் அந்த ஃபியோனா ஃப்லெமிங்கோ வுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்குமா? நீலாவின் கவனம் அவர்கள் பேச்சில் சென்றது. இரண்டும் துன்புறுத்தும் வகை அல்ல என்பதை நிச்சயித்துக் கொண்டு, அவைகளிடம் பேச முற்பட்டாள். ஆனால் அவை பயந்து அலறி பறந்தும், மற்றொன்று ஓடியும் மறைந்து விட்டன. ஒரு விஷயம் தெளிவாகியது. காடு முழுவதும் இந்த பயம் பரவியிருக்கிறது. சுலபமாக கிடைத்து வந்த உணவு தீர்ந்து விடுமோ. கௌதாரியின் பெயர் Quentin) and the badger (named Blake) என்னைக் கண்டு ஏன் பயப்படுகின்றன. அவளை எதிர் கொண்ட காட்டு வாசிகளான விலங்குகள் எல்லாமே ஓடி ஒளிந்து கொண்டன என்பது மனதில் உரைக்க என்ன செய்வது என்று வருந்தினாள். அந்த லைப்ரரியில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை. அவளுக்கு வேண்டிய செய்தி நாலாவது மணற்குன்று, மற்றும் அந்த ப்ரொஃபஸி பற்றி- ஓரிடத்தில் மந்திர ஸ்படிகம் சொல்வது எல்லாம் உண்மையும் அல்ல, பொய்யுமல்ல. சில சமயம் பலிக்கும். அந்த அலமாரியில் மேலும் தேட ஆரம்பித்தாள்.
மிகைலா , பயமும் பதற்றமுமாக ஓடி வந்து கொண்டிருந்தாள்.
“ஹயூமன், நமது Bindarian Thistle தீர்ந்து விட்டது. குரலை தழைத்துக் கொண்டு ரகசியம் சொல்வது போல
முழுவதும் என்றாள். துளிக் கூட இல்லை. ஓரிரு துண்டுகள் தான் பாக்கி. எட் ஒவ்வொரு கோடௌனிலும் பார்த்து விட்டு வந்து சொல்கிறது. இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த மந்திர ஸ்படிகம் அது ஏற்கனவே பித்தாகி, நம்பத் தகாதபடி நடந்து கொண்டு விட்டது. உனக்கு ஏதாவது புரிகிறதா? உன்னால் கணிக்க முடிகிறதா? “
“ம்… இல்லையே” என்றாள், என்ன சொல்வது என்று தெரியாமல் குழப்பத்துடன்
“அப்படியா, நல்லது. எல்லாம் நன்மைக்கே, “ என்று மிகைலா மிகையாக வருவித்துக் கொண்ட உரத்தக் குரலில் “நீ என்ன நினைக்கிறாய்” என்றாள்.
“ஹியா, மிகைலா” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினாள். ஒரு காட்டு விலங்கு எலி ஜாதிக்கு பெரிது, முயல் போலவும் இல்லை, முகம் முழுவதும் சிரிப்பாக, தலையில் ஒரு வளையம், இடை மறித்த து. “ஸோ, எனக்கு ஒரே பயமாகி..யூ நோ, இந்த திசில் தாவரம் யூ நோ, குறைந்து போச்சாம் யூ நோ, நான் போய் ஜென் கிட்ட கேட்டேன், தெரியாதுன்னுட்டா… அதனால ‘கே’ கிட்ட போய் விசாரிச்சா, அதுவும் தெரியாதுன்னா, கடைசில ‘மியா’ வை, இன்னும் சில பெயர்களைச் சொல்லி அவர்களிடமும் கேட்டேனா, அப்ப தான் ஆமாம், திசில் முன் போல நிறைய இல்லை ன்னு சொன்னா” மூச்சிரக்க அந்த மந்திர ஸ்படிகம் ஏதோ விஷமம்- இல்ல இல்ல அந்த் ஃப்லெமிங்கொ தான் ஏதோ குளறுபடி பண்ணிட்டா போல .. சரின்னு கடைக்கே போனேன். அங்க எதுவுமே இல்லை.. காலி. அதான் ஓடி வந்தேன், மிகைலா உங்கிட்ட ஏதாவது பாக்கி இருக்கா, சேர்த்து வச்சிருக்கியா, கூல், இல்லன்னா என்னாகும், எனக்குத் தெரியல்ல “
அந்த எளிய பிராணிக்கு என்ன சொல்லி புரிய வைப்பது , மிகைலா சற்று யோசித்தாள்.
ஃபெலிஸ்!
இப்ப என் பெயர் லீஸி Pronounced LEE-SEE!” Felice/Lecie said, enunciating the ‘E’ sounds rather loudly. “But it’s spelled L-E-C-I-E!”
“சரி லீ ஈஈஈஸி!”
“ம்ம்- ஹூம்”
ஆது கிடக்கட்டும், லீஸி, Bindarian Thistle, என்ன சொல்ல, முழுவதுமாக தீர்ந்துவிட்டது. மிச்சமே இல்லை.
“ஓ ஓ – அப்படியானால், ..நான் என்ன சாப்பிடுவேன்,, புல்லையா? ஓ இது ரொம்பவுமே மோசம்.. இரு மிகைலா! எங்களுக்கு செடி, கொடிகளைச் சாப்பிட்டு பழக்கமும் இல்லை. மிகைலா, நான் வேட்டையாடனுமா? வேட்டை என்றால், என் BFF (என்னுடைய இணை பிரியா தோழி) மில்லி, மில்லி அதான் அந்த எலி, அவள் தான் முன்னால் எனக்கு இரையாக இருந்தாள். ஓ, கஷ்டம், கஷ்டம், அவளையா அடித்து தின்பேன்? இது கொஞ்சம் கூட சரியில்ல – அப்ப -..”
இத பாரு ஃபெலீஸ், இல்ல லீஸீ.- ஸாரி. இந்த நிலைமை மோசம் தான், ஆனால் இந்த நீலா உதவுவாள்.
திடுக்கிட்டாள் நீலா, அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், தன் பெயர் மிகைலா வாயில் வந்ததும் உஷாரானாள். என்ன இது, என்ன சொல்ற, நான் இவர்கள் அனைவரையும் இந்த பிரச்னையிலிருந்து காப்பாற்றப் போகிறேனா?
கண்களால் ஜாடை காட்டினாள், மிகைலா- “நாங்கள் எல்லோரும் கூடி பேசினோம்” குரலைத் தழைத்து ரகசியமாக மேலும் சொன்னாள். நீயும் அந்த ப்ரொஃபஸி- குறிச்சொல்லில் ஒரு பங்கு வருகிறாய். சற்று பொறு. நான் உதவி செய்கிறேன்”
ஃபெலீஸ், இல்லை லீஸீ, அமைதி அமைதி. பயப்படாதே. மிகைலா நேருக்கு நேர் அந்த சிறிய பிராணியைப் பார்த்து, “நான் அறிவேன். நாம் தற்சமயம் மிக கடினமான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு விட்டோம். பயப்படாதே, சீக்கிரமே ஒரு வழி கண்டு பிடிப்போம். ஏம்மா, அழற, அழாதே, இவ்வளவு நாள் என்ன சொல்வீர்கள்,, Chillax – நீங்களே உண்டாக்கிய வார்த்தை. உற்சாகமாக இரு என்பது தானே அதன் பொருள். அப்படியே இருங்கள். நோ.நோ. நோ. அழாதே. நான் அனேகமாக சரியாகிவிடும் என்று சொன்னேனா, கண்டிப்பாக சரியாகி விடும் என்று சொல்கிறேன். இதோ , இந்த ஹ்யூமன் நம்ம கிட்ட வந்திருக்காளே, அதுவே நல்லதுக்குத் தான். அழாதே, கொஞ்சம் பொறுமையாக இரு, சொல்வதைக் கேள், இந்த தட்டுப் பாடு இப்படியே இருக்காது, சீக்கிரமே நமது பண்டசாலைகள் நிரம்பி வழியப் போகின்றன பார். ..
நீலா அதிசயத்துடன் மிகைலாவைப் பார்த்தாள். இந்த தலைமை பொறுப்புக்கு ஏற்றவள் தான், ஏதோ குட்டி என்று விடாமல் தொடர்ந்து சமாதானம் செய்கிறாளே.. பாவம் கண்களை மூடிக் கொண்டு ஏதோ சொல்கிறாளே “ஏன் எனக்கு இந்த சோதனை”
வா, வா, பசிக்கிறதா? இங்க தேங்காய் பால் இருக்குமே, எடுத்து தருகிறேன் வா, என்று ferret என்ற அந்த காட்டு விலங்கை அழைத்துச் சென்றாள்.
திரும்பி, நீலாவைப் பார்த்து, “இன்று இரவுக்குள் ஒரு வழி கண்டு பிடிக்கப் பார்”
நீலா யோசித்தாள். மணி மாலை 4:00 ஆகியிருக்கிறது. இரண்டு மணி நேரத்திற்குள் என்ன செய்வேன், யோசித்தபடியே நடந்தாள்.
பகுதி-17
ஓ, ஓ, இது என்ன? இந்த விலங்குலகமும் மனிதர்கள் வாழும் பூமி போலவே நடந்து கொள்கின்றதே, ஜோயி மனதினுள் யோசித்த து. Bindarian Thistle காட்டு மிருகங்களின் உண்ணும் உணவை மாற்றியமைத்து விட்டதா? திடுமென அது விலங்குலகிற்கு இல்லையென்றானதும் அவைகள் திகைத்து விட்டன போலும். திசில் நல்லது தான். என்ன நடக்கிறது? ஜோயி மேற்கொண்டு என்னவாகும் ?…யோசனையில் ஆழ்ந்தது.
மனிதர்களாக மாற முடியாது, மாற்றவும் முடியாது. இப்பொழுது ஒரு மானிடம் போய் -, அதன் நண்பனாகி விட்ட சிங்கம், இரண்டும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இதோ பார், இந்த சிங்கம் இனி உன் நலன் விரும்பும் நண்பனல்ல- இயற்கையின் நியதி படி நீ அவனுக்கு உணவு ஆவாய் என்றால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்? கொடூரம் என்று நாம் நினைத்த சில நியதிகள் வேண்டாம் என்று வரையறுத்து வன விலங்குகள் இனி வேட்டையாடுவதை தவிர்க்க வேண்டும் என்றோம். ஆனால் மனிதன் போல் வேடமிடலாம், முழுவதுமாக மாற முடியுமா? . அது நல்லதல்ல .. நடைமுறைக்கு ஏற்றதல்ல. அச்சுறுத்தும் உண்மை – என்ன செய்யலாம் – ஏதாவது ஒரு வழி பிறக்கும்.. மனிதனைப் போல சாகாஹாரி- பயிர் பச்சைகளை ஆகாரமாக ஏற்றுக் கொண்டவர்- ஆகவும் வேண்டாம்- இயற்கை வழி என்று வேட்டையாடவும் வேண்டாம். அதிக துன்பமோ, விரயமோ இன்றி இந்த இக்கட்டிலிருந்து மீள வேண்டும். திசில் உணவு மாமிசத்திற்கு மாற்றாக இருந்தது. வாஸ்தவம். எப்படி அதை வளர்ப்பது, பாது காப்பது என்பதை நாம் கற்றுக் கொள்ளவேயில்லை. அதை விலங்குகளே தயாரிக்கும் பக்ஷத்தில் எப்படி இருக்குமோ, முற்றிலும் வேறாக கூட இருக்கலாம். அந்த பெரிய விலங்குகள் கூட இந்த விலங்கு சாம்ராஜ்யத்தில் நுழையும் முன் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டன. ஒன்றோடொன்று சண்டையிடுவதில்ல, வெற்றி பெற்றவர், தோற்றதன் குட்டிகளை கொல்வது என்ற வழக்கம் அடியோடு கைவிடப் பட்டது. தற்சமயம் இந்த விலங்குகள் சாம்ராஜ்யம் நிறைய நன்மைகளை செய்துள்ளது. அதில் ஒன்று தான் ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழும் வயது வரம்பு முப்பது ஆண்டுகள் கூட்டப் பட்டது. தானாக இந்த விலங்குகள் இப்படி சிந்திக்கவோ, செயல் படுத்தவோ முடிந்திருக்காது. ஃபியோனா சொன்னாளே, அந்த ப்ரோஃபஸி சொன்னதோ, மந்திர ஸ்படிகத்தின் குறிச் சொல்லோ எதை குறிக்கிறது என்று அவளுக்குத் தெரியுமாம். அவளுக்குத் தெரியும் என்று ஜோயியும் நம்பினான். அவள் உதவலாம். ஆனால் மறுத்துவிட்டாள். இந்த விலங்குலகமும் வர மாட்டாளாம். எல்லாமே வெறுத்துப் போய், மந்திர ஸ்படிகமும் வேண்டாம், உங்கள் சங்காத்தமும் வேண்டாம் என்பது போல பேசினாள். ஒருவேளை,
ஜோயி அந்த சந்திப்பையும் தாங்கள் இருவர் பேசிக் கொண்டதையும் மனதில் அசை போட்டது.
“ஹலோ, டூட், Dude, நீ நான் சொன்னதையெல்லாம் நினைத்துப் பார், ஷ் … இப்பொழுது நீ எனது நேரத்தை வீணாக்கியதற்கு மன்னிப்பு கேட்கப் போகிறாய். நானும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன். நீ போகலாம், நானும் கிளம்புகிறேன்.” கெட் ஔட் .
“நீ கொஞ்சம் விவரமாக சொல்கிறாயா, அந்த ப்ரோஃபஸி உண்மையில் என்ன தான் சொல்லியது. நீ எப்படி வெளியே வந்தாய்?- ஜோயி
“அட டா, இப்பதானே அவ்வளவு பெரிய லெக்சர் கொடுத்தேன்,. நான் ஏன் ஒரு உதவியும் செய்ய மாட்டேன் என்பதையும் சொன்னேனே”
“அதை சொல்வதால் உனக்கு ஒரு கெடுதலும் வராது, பின் ஏன்?” ஜோயி தயக்கத்துடன் கேட்டது.
ஃபியோனா முகத்தில் களைப்பு தெரிந்தது. “ஏன் இன்னும் இங்கு நிற்கிறாய். நான் தான் சொன்னேனே. எனக்கு எரிச்சலூட்டுகிறாய். பொறு… அந்த ஆமை, அதன் பெயர் என்ன? திமோதி, அது தானே உன்னை இங்கு அனுப்பியது? கேட்டுக் கொண்டு வரச் சொல்லியது? தானும் எப்படியோ இங்கு கிளம்பி வந்து விட்டதே. கொஞ்சம் அலட்டல் பேர்வழி..இருந்தாலும் நல்லது செய்யும் குணம். “
“ஆங்.. ஆமாம்… எப்படித் தெரிந்து கொண்டாய் ?”
“எனக்கு என் வழிகள்… திரும்பச் சொல்கிறேன், உன்னுடனோ, உன் கூட்டத்தோடோ எனக்கு எந்த தொடர்பும் வேண்டாம். புரிகிறதா? அவுட்.. “
ஜோயி வெளி நடக்கவில்லை. “புரிகிறது. அதை எனக்கு சொல்வதால் உனக்கு ஒரு குறைவும் வராது. பாதிக்கப் பட மாட்டாய் எனும் பொழுது சொன்னால் என்ன ? நான் சொல்ல வந்தது, அதை மட்டும் சொல்லிவிட்டு நீ உன் வழியில் போ, நான் குறுக்கிட மாட்டேன், மற்றவர்கள் குறுக்கிடவும் விட மாட்டேன், நிச்சயம்?”
“கடவுளே, யாராவது கெட் அவுட் என்று சொன்னால், அதன் பொருள், சம்பந்தப் பட்டவன் வெளியே போக வேண்டும். “ ஃபியோனா தொடர்ந்தாள்… சும்மா நாடகமாடாதே. ஏதோ நான் உன்னை விரட்டுவதாக காட்டிக் கொள்ள, வேண்டாத விருந்தாளியாக கருதுவதாக, வேஷம் போடுகிறாய். உண்மையில் வேண்டாத விருந்தாளி தான், அது அல்ல இங்கு விஷயம், ..அவுட்” கத்தினாள்.
சரிதான். இந்த சம்பாஷணையால் எந்த லாபமும் இல்லை. அவள் மட்டும் அந்த புதிரைப் பற்றி தான் தெரிந்து கொண்டதைச் சொல்லியிருந்தால், எவ்வளவோ நன்மைகள் – விலங்குகள் சாம்ராஜ்யம் பிழைக்கும். அந்த வீட்டுக்கார பெண்மணி வந்து கொண்டிருக்கிறாள், நல்லது.
இனி அந்த புதிரை விடுவிக்க எந்த வழியும் இல்லை. இன்னும் ஒரு படி மேல். அந்த பெண்மணி ஜோயியின் கழுத்தில் பட்டையை கட்டி விட்டாள். இது அதற்கும் மேல். பார்த்துக் கொண்டிருந்த ஃபியோனா கண்கள் குளமாயின. “ஜோயி காதில் விழும்படி பலமாக கத்திச் சொன்னாள். “நான் சொன்ன வார்த்தைகளை யோசித்துப் பார். உனக்கே புரியும். என் பிரச்னை என்ன என்று. , ம் என்ன தெரியுமா? இன்று என் மனம் இலகுவாகி விட்டது போல உணருகிறேன். மனத்தின் பாரத்தை இறக்கி வைத்து விட்டது போல். அந்த வரிகளை நினைவு படுத்திக் கொள். “.Verses and illustrations combined shall give you what you came to find.There! If you still don’t know.. what it means, then too bad.” –
“கவிதைகளையும், படங்களையும் இணைத்துப் பார். உனக்கே புரியும். அப்படியும் புரிந்து கொள்ள வில்லையா, சட், உன் விதி.”
நடந்ததை தன் மனத் திரையில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஜோயி சட்டென்று பொறி தட்டினாற் போல் எதையோ உணர்ந்தது. எங்கு இந்த வரிகளைப் படித்தோம். ? ஃபெலிங்கோ இந்த வரிகளில் என்ன சொல்ல விரும்பியது? இது தான் புதிருக்கு விடையா? அந்த வரிகளுக்கு என்ன பொருள்? ஓ மை குட்னெஸ்.”
பகுதி-18
நீலா அனேகமாக எல்லா புத்தகங்களையும் படித்து விட்டாள். மந்திர ஸ்படிகம் பற்றி மிகைலா சொன்னது போல விவரங்கள் சேகரிக்க வந்தவள், அதே வேலையாக இருந்தாள். ஏதாவது முன்னேற்றம்? ஊஹூம் .. அப்படித் தான் அது சுவாரஸ்யமாக இருந்ததா? அதுவும் இல்லை. அவள் உண்மையில் விரும்பியா செய்கிறாள்? அது.. போரடிக்கிறது ..அதை விட அதிகம் … அந்த சிறு விலங்குகள் அவளைக் கண்ட போதெல்லாம் அலறுவது … ஏனோ அசட்டு பயம்..அவைகளைப் பார்க்கும் பொழுது நீலாவுக்கு ஒரு உணர்வு- ஏதோ தான் வேண்டாத இடத்தில் தவறுதலாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்பது போல – அந்த சிறு பிராணிகள் மேல் பச்சாதாபம் தான்…அவைகளிடம் ஒரு வித ஒட்டுதலும் வந்து விட்டது.. படித்துக் கொண்டே இருந்தாள். எங்கு என்ன இருக்கிறது என்பது தெரியாமலே, எல்லாவற்றையும் புரட்டி பார்த்துக் கொண்டு…
“அப்பாடி, ஒருவழியாக அந்த ஃபெலிஸ்- ஐ சமாதானப் படுத்தி விட்டேன்” என்று சொல்லிக் கொண்டே மிகைலா வந்தாள். என்ன படிக்கிறாய் என்று அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எட்டிப் பார்த்தாள். இரண்டு மணி நேரம் தான் அவகாசம் நமக்கு. அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். நீ ஏதாவது கண்டு கொண்டாயா – ஏதாவது உபயோகமா”
“ஊம்…நான் என்ன கண்டு கொண்டேனா..எனக்கே இன்னும் பிடிபடவில்லை. இதற்கு ஏதோ பொருள் உள்ளது போல தெரிகிறது. ம்ம் அவள் பெயர் லீஸி ன்னு சொல்லல்ல?
“ஆமாம், இந்த பெயர் தான் நினைத்தவுடன் வாயில் வருகிறது. அது கிடக்கட்டும்.. நீ என்ன சொன்னாய்?”
இது தான்” என்று ஒரு பழுப்பு நிற காகிதத்தை கொடுத்தாள். அதில் ஒரு மந்திர ஸ்படிகத்தின் படம். ஏதோ ஒரு மொழியின் எழுத்துரு – அதில் பொதுவாக அந்த கல்லும், அதைவிட தெளிவில்லாத விவரமும், நீலா ஊகித்தாள் அந்த திசில் பற்றியது என்று….. நீலா மிக சாதாரண விவரம் என்று கடந்து போயிருப்பாள், அதன் தலைப்பு அவளை கவனிக்க வைத்தது. அதில் கொட்டை எழுத்துக்களில், ஒரு தலைப்பு. “மந்திர ஸ்படிகத்தின் ரகசியங்கள்” நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் கல்லின் ரகசியம் என்று தலைப்பு. ஒரு புதிர் வேறு. அது தான் என்னை யோசிக்கச் செய்கிறது என்று சொல்லியபடி அந்த பழுப்பு காகிதத்தை மிகைலாவிடம் தந்தாள்.
மிகைலாவின் கண்கள் விரிந்தன. திறந்த வாய் மூடவில்லை. சில நிமிஷங்கள் ஆயின அவள் தன்னை சமாளித்துக் கொள்ள…
“ஓ, goodness. Goodness, goodness, gracious. ஆஹா, அருமை, அருமை. என்னருமைப் பெண்ணே, எப்படி நன்றி சொல்வேன், இது தான், இதே தான். இதை அழித்து விட்டார்களோ என்று பயந்தேன். நல்லது, நல்லது. மிக்க நன்றி. நீலா , இது ஏதோ புதிர் அல்ல, வருவதை சொல்லும் குறிச் சொல்லும் அல்ல. இது தான் அந்த மந்திர ஸ்படிகம் பற்றிய விவரம் சொல்லும். யா யா, அட சட், அனாவசியமாக அந்த பெண் லீ ஸீ யுடன் செலவழித்தேன். ஃபியோனா ஃப்லெமிங்கோ விபத்துக்குப் பிறகு யாருமே இதை பொருட்படுத்தவில்லை. ஆனால் உண்மையிலேயே மிகவும் அருமையான சுவாரஸ்யமான தகவல். தவிர, இந்த புதிரை விடுவிக்க முடியுமானால், அது நமக்கு வழி காட்டும். .நீ உன் வீடு செல்வாய். பிண்டரைன் திசில் எங்களுக்கு கிடைக்கும். ஜோயி, டிம் இருவரும் திரும்பி வருவார்கள்.
மிகைலாவின் பதற்றம் மிக்க சொற்கள் கேட்கவே ஆனந்தமாக இருந்தன.
“இதற்கு முன் யாராவது இந்த புதிரை விடுவித்து இருக்கிறார்களா?”
மிகைலாவின் மகிழ்ச்சி நிறைந்த முக பாவம் சட்டென்று மாறியது, ஒரு வேதனையா, கோபமா என்று சொல்ல முடியாதபடி ஒரு உணர்ச்சி பரவியது.
“ஆமாம், ஃபியோனா”
“நீலா ஆச்சர்யத்துடன் “ என்ன? ” என்றாள். எதற்கு அவள் இந்த புதிரை அவிழ்க்கவும் விடையை அறிந்து கொண்டும் அவளுக்கு என்ன லாபம்?
ஃபியோனா இந்த புதிருக்கு விடை அறிவாளா? எப்படி? “இந்த புதிர் விலங்குலகம் ஏற்படும் முன்பே இருந்ததா? அல்லது சமீபத்தில் தான் வெளிப் பட்டதா, அதாவது ஃபியோனா வெளியேறும் முன். யார் எழுதினார்கள்? அந்த கல்லா” நீ ஏன் இப்படி யாரைத் திட்டுகிறாய்?
மிகைலா சொன்னாள். யாருக்கும் கேட்காத குரலில் திட்டுவது போல நீலா உணர்ந்தாள். “வேணும் எனக்கு. என்னை விட சிறியவர்களிடம் பதில் சொல்ல வேண்டி வருகிறது. அவர்கள் ஆர்வம் அவர்களுக்கு, ….”
“நீலா, இதை எழுதியது யார் என்பது தெரியாது. எப்பொழுது எழுதப் பட்டது என்பதும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. இந்த சமயம் இந்த புதிரின் பொருள் மட்டும் தான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது தெரிந்தால், நாம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்”
“ஃபியோனா எதற்கு இதன் பொருளை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், “?
மிகைலாவின் முக பாவம் மாறியது. யாரையோ நையப் புடைக்க வேண்டும் என்ற வெறி – என்று நீலா நினைத்தாள்.
“ஆது ஒன்றும் அவ்வளவு முக்கியமான செய்தி அல்ல”- மிகைலா
“முக்கியமான செய்தி தான். சொல்லு”- நீலா
மிகைலா சமாளித்துக் கொண்டு விட்டாள் என்பது முகத்தின் ப்ரகாசத்தில் தெரிந்தது.
“ஃபைன், ஸோ, ஃபியோனா திரும்பி பூமிக்கு போக வேண்டும் என்றாள், சில்லறை காரணங்களுக்காக..”
“என்ன காரணம்?”
“இடை மறிக்காதே. என்னவோ காரணம். ஆனாலும் திரும்பிப் போனாள். எப்படி இருந்தாலும் அவள் ஏதோ மந்திரம் சொல்லி அந்த கல் அவளை திரும்பி போக செய்திருக்காது. அதன் ரகசியம் தெரிந்ததால், அவள் அந்த கல்லை தனக்கு அனுகூலமாக செய்ய வைத்திருக்கிறாள். அவள் கைக்கு எப்படி கல்லின் ரகசியம் கிடைத்தது என்பது நமக்கும் புரியாத புதிராகத் தான் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு மிரட்டியோ, என்ன செய்தோ, மந்திர ஸ்படிகம் அவளை திருப்பி அனுப்ப செய்து விட்டாள். அவ்வளவு தான். சரி, இனி நம் வேலையைப் பார்க்கலாம்.”
“யா, யா “
நீலா வெகு நேரம் அந்த பழுப்பு நிற காகிதத்தை ஆராய்ந்து பார்த்தாள். கண்கள் அருகில் வைத்து படிக்க முயன்றாள். கையெழுத்து போலவும் சில இடங்களில், அதற்கான ப்ரத்யேக பேனாவால் எழுதப் பட்டிருந்தது. அந்த பத்திரத்தின் சில வரிகள் மேல் சுருள் சுருளாக வளையங்கள்..எதற்கு? அதைத் தவிரவும் இன்னொரு அடையாளம் போல சிறு நூலிழைகள் கோத்து ஏதோ நெய்யப் பட்டிருந்தது. துணி போல ஒன்று ஒவ்வொரு கையெழுத்தையும் சுற்றி, பாதுகாப்புக்காகவோ? பிண்டரைன் திசில் படமும் காணப்பட்டது. சற்றே வித்தியாசமாக. நூலிழைகளால், அந்த எழுத்துக்கள் எம்ப்ராய்டெரி (வண்ண நூல் வேலை) போல திரும்பவும் கைகளால் வேயப் பட்டிருந்தது. நீலா அந்த சுருள் எழுத்துக்களை புரிந்து கொள்ள முயன்றாள். பக்கங்களை புரட்டினாள். அடுத்த பக்கத்திலும் அதே சுருள் எழுத்துக்கள். கண்களை அந்த எழுத்துருவுக்கு பழக்கிக் கொண்டபின் அவளால் படிக்க முடிந்தது. “கவிதைகளையும் படங்களையும் இணைத்து பார். உனக்கு வேண்டியதை அறிவாய்” தற்சமயம், அவள் கண்களை யாராவது பார்த்திருந்தால் டின்னர் ப்ளேட்டுக்கள் என்று நினைத்திருப்பர்.
“மிகைலா! வா, வா, இங்க பார்” இது …”
மிகைலா அதை வாங்கி பார்த்தாள். அவள் கண்களும் நீலாவின் கண்களுக்கு இணையாக விரிந்தன.
நீலா, இந்த வரைபடத்தை நான் அறிவேன். ஓ மை குட்னெஸ்”
“ஸமுத்திரத்தின் அலைகள் போன்ற ஒன்று”
“ஆமாம். இது போல இன்னொரு பழைய பத்திரம் உண்டு. அதை நான் பார்த்திருக்கிறேன். இரு நான் போய் தேடிக் கண்டு பிடிக்கிறேன்.” மிகைலா அந்த பத்திரத்தை நீலாவின் கையில் திணித்து விட்டு நூலகத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்றாள்.
நீலா மேலும் அந்த பத்திரத்தைப் படிக்க முயன்று ஓரளவு புரிந்து கொண்டாள். நான்கு மணி நேர போராட்டத்திற்கு பலன் கிடைத்தது. கடைசி பத்து நிமிஷங்களில் அதிக அளவில் புரிந்து கொண்டாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். தன் கடிகாரத்தையும் பார்த்து ஆஸ்வாசம் அடைந்தாள். இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் இருட்டவில்லை. அந்த விலங்குலகில் இரவு என்பது எப்பொழுது இரவு சஞ்சாரம் செய்யும் ஜீவன் கள் வெளி வருகின்றனவோ, அதுவே கணக்கு. அவை வெளியே வந்தவுடன் பசி, உணவு பிண்டரைன் திசில் தானே- அதைக் கேட்கும். அது இல்லையெனில் என்ன செய்யும்.? திரும்ப தன் கையிலிருந்த பத்திரத்தை பார்த்தாள். கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும். மிகைலா வேறு இங்கும் அங்குமாக ஓடிக் கோண்டிருக்கிறாள். கை நிறைய காகிதங்களுடன்.
“பார், இந்த பத்திரங்களைப் பார். வட்ட மேசையில் வைத்து அலசி பொறுக்கிக் கொண்டு வந்தேன். இவைகளிலும் அதே போல கையெழுத்து, நூலிழைகளால் ஆன கடல் ஓவியம். படிக்க நேரமில்லை. எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். நீயும் பார்” என்றாள் மிகைலா முச்சிரைக்க.
அந்த பெருச்சாளி கொண்டு வந்த பத்திரங்களை பரத்தி வைத்துக் கொண்டு இருவருமாக ஆராய்ந்தனர். அதில் சற்று புதிதாக தோன்றிய ஒன்றை நீலா கையிலெடுத்தாள். சமீபத்தில் எழுதியதாக இருக்கலாம் என்று ஊகித்தாள். மந்திர ஸ்படிக ரகசியம் என்பதை விட அதிக முக்கியமான ப்ரொஃபஸி பற்றியது. இது அந்த கல் சொல்லியது. அதன் மூலையில் நடப்பு ஆண்டின் தேதி இருந்தது. மற்றதில் தேதி பல ஆண்டுகளுக்கு முன்னால் என்பது தெரிந்த து. மற்றொன்று சென்ற வருஷ தேதி குறிப்பிட்டு… அத்துடன் இருந்த விளக்க உரை மூன்று ஆண்டுகளுக்கு முன்றைய தேதியிட்டு இருந்தது.
“Heavens to Betsy- என்றாள் மிகைலா ( இது ஒரு அமெரிக்கன் சொல்தொடர். ஆச்சர்யம், திடுக்கிடல் இரண்டையும் குறிப்பது)
இதெல்லாமும் குறிச் சொற்களே, ப்ரொஃபஸி களே. நாங்கள் அவை உபயோகமற்றவை என்று நினைத்தோம். அதனால் பொருட்படுத்தவே இல்லை.
“கொஞ்சம் பொறு. எனக்கு சில சந்தேகங்கள்”
“ஓகே, சொல்லு, உடனே, “ என்றாள் மிகைலா.
நீலா அந்த வித்தியாசத்தை கண்டு கொண்டாள். ஒரு வாரம் முன்பு என்றால், அவள் அப்படி உடனே சம்மதித்து இருக்கவும் மாட்டாள், கண்களை சுழட்டி தோரணையாக, வேண்டா வெறுப்பாக சொல்லு என்பதற்கான மட்டமான ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருப்பாள். இப்பொழுது சந்தோஷம் .. பதட்டம், …”
இந்த ப்ரோஃபஸிகளை யார் எப்படி ப்ரதிகள் எடுத்திருப்பார்கள்? தானாக வந்திருக்க முடியாது.
“நீலா, உன் குலப் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. எதற்காக மனிதர்கள் தனது பெயருடன் குலப் பெயரைச் சேர்த்துச் சொல்கிறார்கள் என்பதும் எனக்கு புரியாத விஷயம். அது என் அறிவுக்கு எட்டாதது என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். விஷயத்துக்கு வருகிறேன். இந்த விலங்குலகம் என்பதே ஒரு கற்பனை வாதம். மாயம் அல்லது மந்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம். எல்லாமே அந்த மந்திர ஸ்படிகத்தின் வேலை. அதன் பலத்தில் தான் இந்த விலங்குலகம் இயங்குகிறது. நீ என்ன நினைக்கிறாய்? எப்படி இந்த ப்ரோஃபஸிகள் ப்ரதிகள் வந்திருக்கும்?
“மந்திர ஸ்படிகத்தாலா?”
“யப். ஆமாம், அது தான் செய்கிறது. யாருக்கும் எப்படி என்று தெரியாது. ஆனால் அது தான் உண்மை. வேறு சந்தேகங்கள்? கேள்விகள்?”
“ யா. நீ சொன்ன “Heavens to Betsy – ஒரு பழமையான சொல் தொடரா?
“நானே பழமை தான்” மிகைலா ஒரு கிண்டலான குரலில் சொன்னாள்.
நீலா அங்கு கிடந்த ஒரு நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தாள். பத்திரங்களை ஆராயத் தொடங்கினாள். வரிசைப் படுத்தி எடுத்துக் கொண்டு சமீபத்தில் என்று, தொடங்கி, தொடர்ந்து அதன் கால வரிசையாக வைத்துக் கொண்டு பழையவை, சமீபத்தியவை என்று பிரித்து வைத்துக் கொண்டாள். இப்பொழுது அவைகளை ஒப்பிட்டு பார்ப்பது எளிதாயிற்று. எல்லாமே ஒரே விஷயம், ஒரே எழுத்துரு, ஒரே வடிவம். நேரம் ஓடிக் கோண்டிருக்கிறது என்று உள் மனம் எச்சரித்தது. மிகைலாவின் உதவி இல்லாமல் அதை பொருள் கொள்வதும் தன்னால் முடியாது என்பதும் உணர்ந்தாள். கண்டிப்பாக, உடனடியாக ஏதாவது செய்து தான் ஆக வேண்டும்… என்ன செய்வது?
பகுதி -19
ஜோயி நிலை கொள்ளாமல் அந்த சிறிய அறைக்குள் சுற்றிச் சுற்றி நடந்தது. பிண்டரைன் திசில் இருப்பு பற்றிய வரை படத்தை பார்த்ததிலிருந்து இதே எண்ணம் தான். இனி அது உதவாது. மொத்தமே ஐந்து அல்லது ஆறு துண்டங்கள் தான் மீதி. விலங்குலகில் இரவு நேரம் என்பதை கணக்கிட்டுக் கொண்டது. அந்த மனித பெண் ஏதாவது கண்டு பிடித்தோ, தானாகவோ, எதுவும் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கு ஒரே களேபரமாகி விடும். நெருக்கடியான நேரம். அந்த ப்ரொஃபஸி சொன்னபடி, அந்த ஹ்யூமனுக்கு ஒரு பாகம் இந்த ஆட்டத்தில் இருக்கிறது. அதே நேரம் என்னுடைய பங்கையும் நான் சீக்கிரமே செய்தாக வேண்டும். என்னையும் ஏதோ மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொல்லியது. அது என்ன என்று கூட தெரியாமல் நான் தவிக்கிறேன். துளிக் கூட அது பற்றி ஐடியாவே இல்லை. இந்த திமோதி ஆமையார், காது செவிடாகும் படி குறட்டை விட்டுக் கொண்டு தூங்குகிறது. அதற்கு சுகமாக வசதியாக ஒரு ஸ்வெட்டர் வேறு கிடைத்து விட்டது. அதன் உதவி தேவை. ஃப்லெமிங்கோ ஆரவாரமாக கூச்சலிட்டுக் கொண்டு சொன்ன வார்த்தைகள் இந்த ப்ரொஃபெஸர் பதம் பிரித்து பொருள் சொல்வார். அவரால் தான் முடியும். உண்மையில், ஒரு சாதாரண ஓநாய், தன் சிறு மூளையை கசக்கி பிழிந்தாலூம் இது போன்ற புதிர்களுக்கும், வினோதமான வார்த்தைகளுக்கும் அர்த்தம் கண்டு கொள்ள முடியுமா, அதையும் அந்த ஃப்லெமிங்கோ, நேரடியாகச் சொல்லாமல் ரகசியமாக இடைச் செருகல்கள் போல சொன்னாளே. இவளும் அந்த மந்திர ஸ்படிக கல்லும் ஒன்று. நேரடிப் பேச்சே கிடையாது. எதையெடுத்தாலும் ஒரு புதிர் போல சொல்லி நீயே அந்த புதிரை விடுவித்துக் கொள் என்று. ஓ, அது என்னவோ மனித மயமாக்குகிறது என்று சொல்லிற்றே.. அறிவில்லாத செயல் என்று எண்ணியது என்பது வரை புரிந்தது, எதைச் சொன்னாள் என்பதும் புரியவில்லை. அது அல்ல தற்சமயம் அவசரமாக செய்ய வேண்டியது. ஜோயிக்கு வேறு பிரச்னைகள் தலைக்கு மேல் இருந்தன. நினைக்க நினைக்க ஃபியோனா தவறாக சொல்கிறாள் என்ற முடிவுக்கு வந்தது. அவள் நம்பட்டும், பிண்டரைன் திசில், மந்திர ஸ்படிகம் எல்லாமே வெறும் செப்படி வித்தை, கண் மூடித் தனமன நம்பிக்கை தவிர வேறொன்றுமில்லை என்கிறாள் போலும். அவைகள் இயற்கையின் அழகை, விலங்குகளின் தன்னிறைவை, அவற்றின் இயல்பை இழக்கச் செய்து விட்டது என்பது போல ஏதோ சொன்னாள். ஹ ஹ
சிந்தனை நடையின் வேகத்தை குறைத்தது, சற்று நின்ற பின் ஜோயி தன் இடமும் வலமுமாக நடப்பதைத் தொடர்ந்தது. ஓகே, நான் ஒரு மாற்றத்தை கொண்டு வருவேனா? எந்த விதமான மாற்றம்? எப்படி இந்த ப்ரொஃபெஸர் டிம் எனக்கு உதவி செய்யக் கூடும். அட நன்றாக இருக்கிறதே. ஹ ஹ, திரும்பவும் அந்த ப்ரோஃபஸியை படித்து பார்க்க வேண்டும். என்ன மாற்றம், யாரை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ள. யப், அந்த ப்ரொஃபஸிதான் அடிப்படை அனைத்துக்கும். ஃபியோனா தெரிந்து கோண்டாள். அவள் நேரடியாகச் சொல்லாமல் அதை ரகசியமாக அசந்தர்பமாக வந்த வார்த்தை போல என்னிடம் சொல்லியிருக்கிறாள். அந்த வரி… என்னவாக இருக்கும் அதன் பொருள்? கவிதைகளும், வரை படங்களும் சேர்ந்து. ஹ ஹ ..திரும்பச் சொல் … அட டா, இந்த ப்ரொஃபஸியை இன்னும் நெருக்கமாக வைத்துக் கொண்டு பார்த்தால் நான் புரிந்து கொண்டிருப்பேனோ. அல்லது யாராவது ஒரு எக்ஸ்பெர்ட் – இந்த விஷயத்தில் தேர்ந்த அறிவாளி. பழைய பத்திரங்களை படித்து புரிந்து கோள்ளக் கூடியவர், க்ரிஸ்டல் கற்களை ஆராய்ந்து பலன் சொல்பவர், படிகங்கள், ஏட்டுச் சுருள்கள் இவைகளை உள்ளங்கை நெல்லிக் கனி போல உடனுக்குடனே கண்டு சொல்பவர். வாழ் நாளையே இந்த ஆராய்ச்சியில் செலவிட்டவர். மிஸ்டர் டிம், ஜோயி தன்னையறியாமல் தூங்கும் ஆமையாரை, ப்ரொஃபஸரை காலால் இடறியது. மிஸ்டர் டிம், நீங்கள் எப்பொழுதாவது பத்திரங்கள், அதில் சில புதிர்கள் என்று படித்திருக்கிறீர்களா? ஜோயி ஆவலுடன் கேட்டது, தூக்க கலக்கம் இன்னும் விலகாமலே ஆமையார் ஜோயியை வினோதமாக பார்த்தார். “பொறு…திரும்பச் சொல். எனக்கு தெளிவாக கேட்கவில்லை”
ஜோயி விவரமாக ஆரம்பித்தது. ஸார், வந்து என்ன விஷயம் என்றால், நான் அதனுடன் பேசி விட்டு கிளம்பும் முன் ஃப்லெமிங்கோ ஏதோ சத்தமாக சொன்னாள். ஏதோ விடை போலத் தான் இருந்த து. விடை தானோ, புதிரோ. ஸார், உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்”
“பையா, நீ யாரிடமாவது தெரியுமா என்று கேட்கும் முன், உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேள். அவர்களுக்கு என்ன தெரியும் என்பது, நினைவில் இருப்பதைத் தானே கேட்கிறாய்?”
“ஓ, மன்னிக்கவும், ஸார். நான் குறிப்பிட்டது அந்த ப்ரோஃபஸி யை. ஃபியோனா கூக்குரலிட்டபடி சொன்னது, சில கவிதைகளும் வரை படங்களூம் சேர்ந்து.. இன்னும் ஏதோ”
“சொல்கிறேன். எனக்குத் தெரியும். அது தான் அந்த மந்திர ஸ்படிகத்தின் ரகசியம். அதற்கு என்ன?”
“மந்திர ஸ்படிகத்தின் ரகசியம்… ஸார், என்ன சொல்கிறீர்கள், அது என்ன செய்யும் ? எப்படி செய்யும்? என்ன செய்யும்? அது ஒரு புதிர் போல இருக்குமா? அந்த புதிருக்கு விடை என்ன? நீங்கள் என்ன அது என்பதை கணித்துவிட்டீர்களா? எப்பொழுது..?
“பையா, பதறாதே. இப்பொழுது கேள். கவனமாக கேள். அந்த கல்லின் ரகசியம் என்பது ஒரு பத்திரம். நெடுங்காலத்துகு முன் இந்த விலங்குலகம் ஆரம்பமான சமயம் – நான் சில ஆண்டுகளுக்கு முன் தெரிந்து கொண்டேன். மூளையை போட்டு குழப்பிக் கோண்டேன். அதன் பொருள் புரியவே இல்லை. நிறைய பேர் அது ஏதோ தூசு படிந்த ஏட்டுச் சுருள் என்று நினைத்து விட்டனர். ஆனால் அது மிக அரிதானது, முக்கியமானது. அதனுடைய குறியீடுகளை கண்டு கொண்டேன். சுருள் வளையம் வளையமான எழுத்துரு முன் பக்கமும் பின் பக்கமும் என்ன என்பதை நான் இன்னமும் கண்டு கொள்ளவில்லை. ஏன் நிறுத்தினேன் எங்கிறாயா, தவறு தான். ஆனால், பையா, அந்த ஏட்டுச் சுருளும், அதன் உள்ளடக்கமுமே நம்மை காப்பற்றக் கூடும் .. இப்போதுள்ள நிலையில் அது தான் தேவை. சில ஆண்டுகள் முயற்சி செய்த பின் அதை புரிந்துள்ள நான் முயற்சிக்கவில்லை. எந்த பிடிமானமும் இல்லாமல் எப்படி முடியும்? அதனால் நான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலானேன். அந்த கல்லின் ரகசியம் என்பதை என்னால் பதம் பிரித்து அறிய முடிய வில்லை , ஆனால். ஓரளவு புதிரை விடுவித்தேன். அதுவும் மற்ற ப்ரோஃபஸிகளுடன் இணைந்து தான் பொருள் படும் என்பதை — அதன் பின் தான் ப்ரோஃபஸிகள் வந்தன. அனைத்து ப்ரோஃபஸிகளும் சொல்வது என்ன என்பது, ஒரு முறை கல்லின் ரகசியம் என்ற பத்திரத்தின் எழுத்துக்களை பதம் பிரித்து புரிந்து கொண்டால் மிக எளிதாகும். அதாவது நாம் உடனடியாக செய்வது, அதை பதம் பிரிந்து பொருள் கொள்வது தான்.”
ஜோயி திடுக்கிட்டது. மலை போல கண் முன் எழுந்து நின்றன பொறுப்புகள், வேலைகள். முதல் வேலை டிம் ப்ரொஃபஸருடன் சேர்ந்து அந்த புதிரை விடுவிக்க வேண்டும். இல்லையெனில் KABOOM – டமாலென்று வெடி வெடித்தது போல் அனைத்தும் தவிடு பொடியாகும். பூம் பூம் –
“ஸார், மற்ற ப்ரோஃபஸிகளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”
“அந்த விஷயம் தான் எனக்கும் நெரடுகிறது. பையா, நீ பார்த்திருப்பாயே, நான் பலவிதமான காகிதங்கள், பத்திரங்களை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டே இருந்தேனே, அது தான். படித்தேன், திரும்பவும் படித்தேன், மற்றொருமுறை படித்தேன், திரும்பவும் படித்தேன், எதுவுமே எனக்கு தெளிவாகவில்லை. இது தான் என்று அறுதியிட்டுச் சொல்ல எனக்கு சரியான விடை கிடைக்கவில்லை.
“உங்களுக்கு அந்த புதிர் நினைவிருக்கிறதா, மிஸ்டர் டிம்?”
“ம் , இதோ சொல்கிறேன். இது போலத் தான்…
ஒரு சுதந்திரமாக பறக்கும் பறவை தான் விரும்பியபடி எங்கும் பறக்கும்,
ஒரு மிருக காட்சி சாலையில் அடைத்து வைத்து கட்டாயப் படுத்த முடியாது
அப்படி ஒரு நாள் வந்தால், அது நிலைக்காது.
சிலருக்கு வீடு, பலருக்கு அப்படியில்லை
அந்த சமயம் என்ன சொல்கிறது என்பது புரியவில்லை. இப்பொழுது தெளிவாக புரிகிறது. ஆமாம். ஏன் புரியவில்லை?”
“இது ஒரு வருவதைச் சொல்லும் குறிச் சொல் தானா, அல்லது எச்சரிக்கையா? அந்த கடைசி வரி, சிலருக்கு வீடு, பலருக்கு அப்படி இல்லை என்பது என்ன ? ஏதோ பொதுவாக சொன்னது போலத் தானே உள்ளது.
“பையா, அது தான் வேடிக்கை. நான் இங்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பு கண்டு பிடித்தேன். அந்த பகுதி வெளிப் பட்டது. அப்பொழுதான் எழுதி சேர்த்தது போல இருந்தது. ஏன், யாரால், எதற்கு என்று ஒன்றும் புரியவில்லை. யாருக்கோ எச்சரிக்கை என்பது போல், யாரை எச்சரிக்க, அதுவும் நிச்சயமில்லை. ஆனால், இது எச்சரிக்கை தான்.
பகுதி – 19
நீலா ஆரம்பத்தில் நினைத்தது போல அந்த புதிருக்கு விடை காண்பது சுலபமாக இல்லை. அந்த கல் சுலபமாக புரியும்படி எழுதக் கூடாதா? உஃப் , தான் ஏதோ புரியாத புதிரைச் சொல்கிறோம் என்று நாடகமாடுகிறது. தனக்கு ஒரு முக்யத்வம் கிடைக்க. இது நடக்குமா” ஒரு கல், என்னதான் மந்திர ஸ்படிகம் தான் ஆனாலும், குழப்பங்கள் நிரம்பிய வகையில், ஒரு காகிதத்தில், – அதுவும் புரியாத சிணுங்கல்களாக ?அரையும் குறையுமாக, அமா, அது தான் செய்ததா? இல்லை. அது தன் போக்கில் ஏதோ எழுதிவிட்டது- ஒரு நாள், துரதிர்ஷ்ட வசமாக ஒரு மனிதப் பெண் வந்து குழம்பட்டும் என்று- அலுக்கும் வரை முயற்சி செய்யட்டும், போரடித்து திண்டாடட்டும் என்று.. ஏற்கனவே இந்த இடத்தை விட்டு எப்படா கிளம்புவோம் என்று இருந்த அந்த பெண்ணின் மன நிலை இன்னும் ஒன்றரை பங்கு அதிகமாகி தவிக்கட்டும் என்று… சட்… இப்படி ஒரு இடத்துக்கு போனோம், இந்த அனுபவங்கள் எல்லாம் நடக்கவேயில்லை என்பது போல மறந்து விட நினைத்தாள் அல்லவா? .. கணித கணிப்புகள் உதவவில்லை. ஆனால் மாஜிக் என்று சொன்னபின் அது எந்த வரையறைக்கும் உட்படாது என்பது தானே பொருள். ஏதோ ஒரு மாஜிக் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வைக்கிறதாம், அதை நான் வைத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கவாம் .. சட் பத்து நிமிஷங்கள் இப்படி சென்றது. நீலா கண்டு கொண்டதெல்லாம் புதிர்கள், ப்ரோஃபஸிகள். வருமுன் சொல்லும் குறிச் சொற்கள் எல்லாமே வெறும் வீண் வார்த்தை ஜாலங்களே. சுவாரஸ்யமற்றவை, புரிந்து கொள்வதும் கடினம். யார் இதைக் கண்டு பிடித்தார்கள், வேடிக்கை வினோதம் என்று கொண்டாடினார்கள். ஒ.. தன் கையில் இருந்த தூசு படிந்த கோப்பை -ஃபைல்- வைத்து விட்டு நிமிர்ந்தாள். மிகைலா தான் சொன்னாள். இது சுவாரஸ்யமாக இருக்கும் என்று. மிகைலா ஒரு வினோதமான பிறவி. எப்படித் தான் எல்லா ஃபைல்களையும் தேடி கண்டு பிடித்து ப்ரோஃபஸிகள், புதிர்கள் என்று படித்து படித்து கொண்டு வந்து கொடுத்தாள். என்னவோ அவள் வாழ்க்கையே இவைகளை தான் சார்ந்திருக்கிறது என்பது போல. இருக்கலாம். திரும்பவும் அந்த ஏட்டு சுருளை கையில் எடுத்தாள். வேண்டா வெறுப்பாக புரட்டினாள்.
“மிகைலா, நாம் செய்வது சரிதானா? ஏதோ தவறு. எந்த பிரச்னையைத் தீர்க்க நினைக்கிறோம். அந்த பிண்டரைன் திசில் விஷயம் தானே. அதனால், நாம் நமது கவனத்தை அந்த மாயக்கல் பற்றிய விஷயம், ரகசியம் என்று சொன்னதை தீவிரமாக ஆராய்ந்தால் ஒருவேளை பலன் இருக்கலாம். அந்த கல் தானே திசில் என்ற உணவை உண்டாக்கியது. ஸோ, நாம் கவனமாக அந்த கல் எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது, யாரிடம் இருக்கிறது என்ற வழியில் யோசிப்போம், என்ன? நான் சொல்வது சரி தானே? “
“ஸரி தான். அதுவும் ஒரு நல்ல வழி தான். ஆனால், நமக்கு முதலில் தெரிய வேண்டியது இந்த ப்ரோஃபஸி என்ன சொல்கிறது என்பதை தான். நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். இது சாதாரணமானது அல்ல. ப்ரோஃபஸி தானா ? அதை விட அதிகமாக புதிராக எனக்குப் படுகிறது. நான் நினைப்பது..”
“எல்லா ப்ரோஃபஸிகளுமே புதிராகத் தானே இருக்கின்றன”
“அதுவல்ல நான் சொன்னது. விஷயம் இதில் தான் – இது எதையுமே முன்கூட்டி சொல்வதாகத் தெரியவில்லை. பொது கருத்தை கவிதையாக சொல்லியதோ, கவனித்து கேள்.
“ஒரு சுதந்திரமான பறவை தன் விருப்பம் போல எங்கு வேண்டுமானலும் பறக்கும். அதை ஒரு காட்சி சாலையில் வைத்து பறக்கச் சொல்லி கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் ஒரு நாள் வரும். அந்த நாளை திரும்ப காண முடியாது. அந்த நாள் வந்து விட்டது. ‘ இதை ஒரு ப்ரோஃபஸி என்று சொல்லலாம். எதையோ முன் கூட்டி சொல்கிறது.”
சின்ன பெண்ணே, கேள். அந்த கல்லின் ரகசியத்தில் என்ன சொல்லிற்று, if. – அதாவது ஒருவேளை …அதற்கே தெரியாது இந்த செயல் நிச்சயமாக நடக்குமா நடக்காதா, தெரியாது நடக்கலாம், நடக்காமலும் போகலாம். “
“ஓ அது சரி – ஆனால் அது என்ன ?”
“உண்மையாகவே நிச்சயமாக தெரியவில்லை. மிகைலா சொன்னாள். “ அது சூரிய ஓளியையோ, வானவில்லையோ சொல்லவில்லை என்பது வரை புரிகிறது. “
“ நம்மை எச்சரிப்பதாக இருந்தால் ? அந்த ப்ரோஃபஸி , இல்லை புதிர், எச்சரிப்பது போலவும் தெரிகிறது. நான்கு வரிகளே இருப்பது போல வெளிப் பார்வைக்கு இருந்தாலும், இதன் உள்ளடக்கம் ஆழமானது. அச்சம் தரும் விளைவுகளாக இருக்கலாம் என்றும் படுகிறது. “
“அப்படியா?” மிகைலா கேட்டாள். எதைப் பற்றி?”
“ நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் அந்த பறவை என்பது ஒரு உருவகமாக – எதையோ குறிப்பிடுவது போல – நடக்கும் ஒரு நிகழ்ச்சியையோ, நடந்ததோ, சந்தோஷமாக இருப்பதாக இல்லை. நீ சொல்வது சரியே”
திரும்பவும் நீலா அந்த பத்திரத்தைப் பார்த்தாள். ஒரு நிமிஷம். ஒரு எண்ணம் அவள் மனதில் தோன்றியது. திரும்பவும் பத்திரத்தை படித்தாள். அந்த எண்ணம் வளர் பிறை, தேய்பிறை போல தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது. ஒரு உருவமில்லாத ஒரு குமிழ், தானே உருவம் கொள்ள முயலுவது போல, மேலும் ஏதோ ஒன்று, அந்த எண்ணத்திலிருந்து மற்றொன்று கிளம்பி வேறு ஒன்றை ஒளியூட்டியது. அந்த புதிய எண்ணம் மற்றொன்றுக்கு உயிர் கொடுத்தது. பிறகு..வெறும் எண்ணமாக இருந்தது, ஒரு கருத்தாக உருப் பெற்றது. அந்த தெளிவில்லாத உருவம் மேலும் மேலும் வளர்ந்து ஒரு வடிவம் கொண்டது. அந்த கருத்து கூர் கொண்டது. மேலும் தெளிவு, மேலும் தெளிவு..இன்னமும் கூர்மையாக, ஒளியுடையதாக, ஆழ்ந்த பொருளுடையதாக, .. நீலா அதை வெளிப் படுத்தினாள். ஒருவருடைய மனதில் பிறந்த கருத்து மற்றொருவரின் மனதில் பதியச் செய்து அவரும் உணர்ந்தால் தானே அது பொது கருத்தாக வளர முடியும்.
“மிகைலா, எனக்கு ஒரு வினோதமான எண்ணம். இப்படி இருந்தால், அந்த கல் தான் அந்த பறவை என்று வைத்துக் கொண்டால், அது ஒரு தீர்வைத் தரும். இல்லையா? எல்லாமே அந்த புதிரை தொடருகின்றன. அந்த மந்திர ஸ்படிகம் தான் ஒருவித சுதந்திரமான பறவை. . அது விலங்குகளின் போக்குவரத்துகளை பொறுப்பேற்று நடத்துகிறது. உங்கள் உணவான பிண்டரைன் திசிலை வளர்க்கிறது. திடுமென ஒரு தடங்கல், வேண்டாத ஒன்று நடைபெறுகிறது. பல மாறுதல்கள் தொடருகின்றன. அதிலிருந்து என்னுடைய எண்ணத்தின் இரண்டாம் பாகம் எழுந்தது. ஒருவேளை நாம் ஃபியோனா செய்ததை திரும்பவும் ஆராயவேண்டும். அவள் ஏதோ செய்து அந்த மந்திர ஸ்படிக கல்லை தடுமாற செய்திருக்கிறாள். இதுவரை ஃபியோனா வின் செயல் நமது கவனத்துக்கு வரவில்லை. அதில் சிறப்பாக நாம் எதையும் காணவில்லை. அவள் வந்ததும், மறைந்ததும், அது பற்றி மேலும் தேடுவோம். ஒரு வேளை, ஒரு வேளை தான், நமக்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்கலாம். என்ன நினைக்கிறாய்”
மிகைலாவின் முகம் உணர்ச்சிகளின் குவியலாக இருந்தது. வெறுப்பா, எரிச்சலா, கோபமா எல்லம் கலந்ததா? இந்த மனிதர்களும் இவர்களது எண்ணப் போக்கும், அபத்தமான கருத்துகளும், தலையை ஆட்டியபடி வெளியேறினாள். நூலகத்தை விட்டே வேகமாக சென்றாள். எதுவானாலும் பதில் கூட சொல்லாமல்..நீலாவுக்கு என்னவோ போலிருந்தது. பரவாயில்லை, இப்படி நடந்து கொள்வது மிகைலாவுக்கு புதிதல்ல. ஒரு நிமிஷம் வெகு நேரம் போல கடந்தது. மிகைலா திரும்பி வந்தாள். அவளது சுபாவமான எரிச்சலுடன் கூடிய முக பாவம். கையில் ஒரு பெரிய ஃபைல் – அதன் மேலட்டையில் கொட்டை எழுத்தில் அழுத்தமாக சிவப்பு மார்க்கரால் ஃபியோனா என்று எழுதியிருந்தது.
“இந்தா, என்றபடி மிகைலா அந்த கனமான ஃபைலை மேசை மேல் தொப்பென்று போட்டாள். உனக்கு வேண்டிய ஃபியோனா கதை பூரா இதில் இருக்கிறது. ஒரு பகுதி அவள் மறைந்த பிறகு எழுதப் பட்து போல இருக்கும்.
நீலா ஃபைலை திறந்தாள். பல பக்கங்கள் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. வேகமாக ஓட்டிக் கொண்டு போனாள். பிறகு ஃபியோனா மறைந்தது பற்றிய விவரங்கள், பலருடைய கருத்துக்கள், அதன் பின், சமீபத்தில் சேர்த்தாக அவளுக்குத் தோன்றிய ஒரு பேப்பரை கையில் எடுத்தாள். பழகிய கையெழுத்து- யாரோ மந்திர ஸ்படிகத்தின் ரகசியம் என்பதை நகல் எடுத்திருக்கிறார்கள். சில இடங்களை வட்டமிட்டோ, வர்ணமடித்தோ பார்த்தவுடன் கவனத்தை கவரும்படி – அருகிலேயே படித்தவரின் குறிப்புகள். நீலா பக்கத்தை புரட்டினாள். அதே கட்டுரையில் பிண்டரைன் திசில் பெரிய அளவில் வரையப் பட்டிருந்தது. அத்துடன் அதை படித்தவர், தனக்கு ஏற்பட்ட சில கேள்விகளை எழுதி வைத்திருந்தார். முக்கியமாக அந்த புதிரின் விடைக்கும் பிண்டரைன் திசில் தாவரத்துக்கும் உள்ள உடன்பாடுகள், எப்படி ஒன்றையொன்று ஆதரிக்கின்றன என்பது பற்றிய விளக்கம். அடுத்த பக்கத்திலும் அப்படியே. அடுத்த முன்றாவது பக்கத்தின் முடிவில் திரும்பி “என் வீட்டிற்கு திரும்பி போகிறேன்” என்ற வாசகம் காணப் பட்டது. மேலும் சில விவரங்கள்- எப்படி விலங்குலகும் மனிதர்களின் பூ லோகம் போலவே மாறி வருகிறது, அது தொடர்ந்தால் விலங்குலகம் அழியும் என்பதாக ஒரு வாக்கியம். இது என்ன புதுமையான எண்ணம்- முரட்டுத் தனமான சிந்தனை. அதை விட அதிக வித்தியாசமான, எதிர் பாராத ஒரு தலைப்பில் ‘Home to some But nor for all’ என்ற வாசகம் – நீலா இந்த வாசகத்தை நினைவு கூர்ந்தாள். அத்துடன் அந்த கையெழுத்தையும் தான் ஏற்கனவே பார்த்திருப்பதாகவும் அறிந்தாள். எங்கே, எங்கே ….ஓ கோஷ்..முன் படித்த ‘மந்திர ஸ்படிகத்தின் ரகசியம்’ என்ற பத்திரத்தின் கையெழுத்தும் இதே தான் .. இரண்டும் ஒருவருடைய கையெழுத்தே…
“மிகைலா, இதைப் பார், இரண்டும் ஒரே கையெழுத்து தான். ஃபியோனா தான் இந்த குறிப்பை எழுதியிருக்கிறாள்., நான் என்ன நினைக்கிறேன்…
மிகைலா அதை வாங்கி படித்தாள். பிரமிப்பும், இன்னும் சில உணர்ச்சிகளும் அவள் முகத்தில் நடனமாடின. முக்கியமாக ஆச்சர்யம். “இது ஃபியோனாவின் கையெழுத்து தான். எதற்காக இப்படி புதிர் போட்டு எழுதவேண்டும். “ மிகைலா பலமாகவே யோசித்தாள். “என்ன நினைத்து..நாம் பார்க்க வேண்டும் என்று எண்ணியா? என்ன பொருள் இதற்கு? சிலருக்கு வீடு, பலருக்கு இல்லை – என்ன புதிர் இது. அந்த மந்திர ஸ்படிகமா? நா ..இல்லை இல்லை அதில் அர்த்தமே இல்லை. வீடு என்று எதைச் சொல்கிறாள்?
“ஓரு தடையமும் இல்லை. நான் நினைப்பதை வெளிப்படையாகவே சொல்கிறேன். இன்னமும் குழந்தைத் தனமான ஐடியாவாகவே எனக்குத் தோன்றுகிறது. அவள் சொல்லும் வீடு இந்த விலங்குலகம் தானா” அப்படி இருந்தால்.. இருக்காது. இங்குள்ள அனைவருக்குமான வீடு. – இந்த இடம் அவளுக்கு வீடு இல்லையாமா, போகட்டும் இது உங்கள் அனைவருக்குமான வீடு. “மிகைலா களைத்து ஓய்ந்தாள்.
பகுதி-20
ஓகே. இது ஒரு எச்சரிக்கையாகத் தான் வந்திருக்கிறது. ஆஹா, அருமை. இந்த எச்சரிக்கை எதற்காக, எதை குறித்து? நிச்சயமாக நன்மையை குறிப்பதல்ல. அதனால், ஜோயி நினைத்தது. இதை பொருட்படுத்த வேண்டாம். முன் அறிவிப்பாக அமைதியும், செல்வ செழிப்பும், உலகம் நலமாக இருக்கும் என்பது போன்ற ஊகங்களை வெளியில் சொன்னால் போதும். இது ஒரு புதிர், இதுவரை யாரும் விடை காணாத, காண முடியாத ஒரு புதிர், இது ஏதேதோ சொல்வதை நம்ப வேண்டுமா? பொறுமை இருப்பவர்கள் கண்டு சொல்லட்டும். இன்னமும் புலனாகாத கேள்வி மனதை குடைந்தது. யார் அந்த பறவை? முதலில் ஜோயி எண்ணியது, இது ஒரு உருவகம் அல்லது உவமை. விலங்குலகை பறவையாக உருவகப் படுத்துவது. விலங்குலகை ஒரு பறவையாக வைத்து.. என்பதாகதான் புரிந்து கொண்டது. ஒருவேளை வெறும் கவிதை சாதுர்யமாக இருக்கலாம். எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒரு வேளை ஏற்கனவே நடந்ததை கவிதையாக எழுதியிருக்கலாம். நடந்ததா ? அதுவும் நினைக்கவே பயங்கரமாக – என்ன நடந்தது? ஃபியோனா அவ்வளவு நீண்ட உரையில் என்னதான் சொன்னாள். அவளுக்கு விலங்குலகம் பிடிக்கவில்லை என்பது ஒரு விஷயம். அப்படியிருக்க ஏன் திரும்பி போக விரும்புகிறாள். ? சில விலங்குகள் அந்த இடத்தை விரும்புகின்றன, தனக்கு இல்லை என்றாள். ஃபியோனா இன்னும் ஒன்று சொன்னாள். அவள் தாய் வீடு போக வேண்டும் என்றாள். ஜோயியை பொறுத்தவரை விலங்குலகம் வசிக்கத் தகுந்த இடமே. பிண்டரைன் திசில் நல்லதொரு மாற்று உணவு. மாமிச உணவை தவிர்க்கலாம். தானே மாமிச பக்ஷிணி என்று இருந்தாலும் மற்ற சாகபக்ஷிணிகளான எல்லோரிடமும் நட்பாகத் தானே இருந்திருக்கிறேன். நல்ல இடம். மாஜிக், மாயம் ஒரு புறம். அடர்ந்த காட்டு விலங்குகளின் கொடூரம் ஒரு புறம், ரசிக்கும் படியான கலவையாக ..அது ஏன் ஃபியோனாவுக்கு பிடிக்கவில்லை. அடர்ந்த வனம், வன விலங்குகள், அணுக முடியாத அதன் கொடூரமாகவே இருக்க வேண்டும் என்கிறாளா? திரும்ப அவள் பேச்சை அசை போட…அவள் சொல்ல வந்த முக்கியமான விஷயம் அவளுக்கு அந்த விலங்குலகம் பிடிக்கவில்லை, அது அவள் இடம் அல்ல- மற்ற விலங்குகள் பிடித்தால் இருந்து விட்டு போகட்டும் அவள் தன் வீட்டிற்கு செல்வாள். அவள் வீடு? எது? தன் கையிலிருந்த பேப்பரை பார்த்து, Home to some But not for All. என்று திருப்பி திருப்பி சொல்லி பார்த்துகொண்டது.
….
கேள்வியே புரியாத பொழுது, அதன் விடையை எப்படி கண்டு கொள்வது, சிரமமான வேலை – பலவிதங்களில் அந்த விடை கிடைக்கலாம். எதையோ தீவிரமாக தேடி கண்டுபிடிக்க , மனம் முழுதும் அதே எண்ணமாக இருக்க, எதிர் பாராத விதமாக ஒரு தீர்வு வரலாம். அல்லது மற்ற எதையோ அலசி ஆராயும் பொழுது, புதிதாக ஒரு பிரச்னைக்கு தீர்வு முளைத்து எழலாம். ரொம்ப கஷ்டமான கேள்வி இது, ஒருவராலும் கண்டு பிடிக்கவே முடியாது என்று அடித்து சொல்லி, அந்த கேள்விக்கு பதில் தேடுவதே போர், வீண் வேலை என்று முயற்சியையே கை விடலாம். மற்றொரு சமயம் சுலபம் என்று நினைத்து செயலில் இறங்கி, அனாவசியமாக குழம்பி, வெகு நேரம் மன்றாடிய பிறகு கண் முன்னே இருந்திருக்கிறது இதன் தீர்வு, தெரியவில்லையே என்றும் நடக்கலாம். அப்படி ஒன்று நிகழ்ந்து விட்டால், மற்ற மலை போல தொன்றிய அத்தனையும் பொல பொலவென்று தானாக விழுந்து அதனதன் இடத்தில் இருப்பது புலனாகலாம். அது தான் ஜோயியுக்கு நிகழ்ந்தது.
அது தான் அந்த காகிதத்தில் இருந்தது. சிலருக்கு வீடு, எல்லோருக்கும் அல்ல. அந்த விலங்குலகம் சிலருக்கு வீடு போன்று மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் அவ்வாறு மகிழ்ச்சியாக இல்லை. பொறு, ஒரு நொடி, அவளுக்கு அது.வீடு இல்லையாமா? விலங்குலகம் அங்குள்ளோர் அனைவருக்கும் தன் சொந்த வீடு போல பாதுகாப்பானது. அப்படித்தான் இதுவரை அவன் நினைத்திருந்தான்- அப்படி இல்லையா, எல்லோரும் அங்கு மகிழ்ச்சியாக இல்லையா? சில விலங்குகளுக்கு அதன் மாஜிக் மாயம், என்பதும், வனப்பகுதியின் தனித் தன்மையும் நம்ப முடியாதபடி இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்களை அதை விரும்பி ஏற்று கொள்ள வைத்துள்ளது என்பது உண்மை. அப்படி விரும்பாத சிலரும் அங்கு இருந்திருக்கலாம் என்று எண்ணவேயில்லை. ஃபியோனா அதைத் தான் சொன்னாளோ, நினைக்க நினைக்க ஏதோ புரிவது போல இருந்தது. பொறு, ஃபியோனா விலங்குலகம் தனக்கு சொந்த வீடு போல இல்லை என்றால், மற்றும் சிலரும் அதே போல நினைக்கிறார்களா, அதுவா அவள் சொன்னதன் பொருள். ஃபியோனா திரும்ப பூமிக்கு சொல்லாமல் போன பின், என்ன நடந்தது.? மிகைலா, எட்வர்ட், டீனா மூவரும் சேர்ந்து ஒரு கணக்கெடுத்தனர். இதே கேள்வி தான் அங்கு வசிப்பவர்களிடம் கேட்கப் பட்டது. விலங்குலகம் உங்களுக்கு வசதியாக உள்ளதா? பிடித்ததா? 95% – பிடித்தது, வசதியாக இருக்கிறோம் என்றன. ஓ அந்த 5% அவர்கள் என்ன சொன்னார்கள்? அந்த பறவை என்ற சொல் ஒரு மறை பொருள் கொண்டது. அது ஒரு உருவகமே. கவிதைகளில் பயன்படுத்தப்படும் ஒரு அலங்கார வார்த்தை. என்ன சொல்ல வந்தது அந்த ப்ரொஃபஸி? ஏதேதோ சொற்கள், எனக்கு சரியானபடி புரியவில்லை தான். சுதந்திரம், அதை பிடித்து வைக்க முடியாது, இதெல்லாம் எதை அல்லது யாரை குறிக்கின்றன. இதுவரை விலங்குலகமே பறவையாக குறிப்பிடப் பட்டது என்று தான் நினைத்தது சரியல்ல என்று முதன் முறையாக ஜோயி ஒத்துக் கொண்டது. மாயக்கல்லின் குறிச் சொல்லில், வீடு, அதுவும் சொந்த வீடு என்று எதுவும் சொன்னதாக தெரியவில்லை. யாரோ விலங்குலகை ஒரு மிருக காட்சி சாலை போல அடக்கி வைத்திருப்பார்களா? அப்படியானால் யாரது? ஏன்? ஒரே ஒரு விஷயம் இங்குள்ளோர் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள கட்டாயப் படுத்தப் பட்டார்கள் என்றால் அது அந்த மந்திர ஸ்படிகம் மட்டுமே.
அந்த கல், மந்திர ஸ்படிகம். அது தான் அந்த புதிரின் பேசு பொருள். ஃபியோனா அந்த கல்லை நிர்பந்தப் படுத்தி தான் வெளியேற உதவ வைத்திருக்கிறாள். அதற்கு அவள் என்ன செய்திருப்பாள். அந்த கல்லின் உதவி இன்றி வெளியுலகம் செல்ல முடியாது என்று விலங்குலகம் நம்ப வைக்கப் பட்டிருக்கிறது என்று தானே ஆகிறது. அதில் ஒரு இடை வெளி, ஒரு விதி விலக்கு உள்ளதா? என்ன செய்து அவள் வெளியேயிருப்பாள். ஆகா, நான் நினைப்பது மட்டும் சரியானால்…
பகுதி-21
‘மானிடர்கள் போல மாற்றுவது’ இதற்கு என்ன பொருள் ?
மிகைலா, நீலா கையிலிருந்த காகிதத்தை வாங்கி பார்த்தாள். அவள் முகமும் நீலா போலவே குழம்பிய உணர்ச்சியையே காட்டியது. ஃபியோனா. ஏதோ காரணத்திற்காக எழுதியிருக்கிறாள் ‘HUMANIZATION… GLAD I’M LEAVING.BINDARIAN THISTLE, MY WING… IT’S HORRIBLE, THAT’S WHAT IT IS… THE WILD’S BEING STRIPPED AWAY.’. என்ன சொல்ல வருகிறாள்.. விலங்குலகம்…தன் தனித் தன்மையை இழந்து விட்டது, மனிதர்களைப் போல ஆகி விட்டது என்கிறாள். அது அவள் கணிப்பு . இருக்கட்டும் அடுத்தது, சந்தோஷமாக வெளியேறினாள். பிண்டரைன் திசில் – அவளை என்ன செய்தது. அதை ஏன் குறை கூறுகிறாள். வனாந்திரம் – இந்த அடர்ந்த காடு -இதற்கு என்ன குறையாம்? என்ன ஆயிற்று?
“யா..நீலா அந்த நூலகத்தை சுற்றி நிமிந்து பார்த்தாள். இந்த இடம் எப்படி மனிதர்கள் போல ஆக்கப் பட்டது என்கிறாள். எதை வைத்து? யாரும் எதையும் மாற்றவில்லை. மனிதர்கள் போல …என்ன பொருள் இந்த வார்த்தைக்கு? நோப்”
“நான் என்ன நினைக்கிறேன் என்றால், இந்த நூலகம் வைத்து பராமரிக்கிறோமே, அதைச் சொல்கிறாள் போலும். அவள் மாஜிக் ஒரு புறம், வானாந்தரத்தின் கொடூரம் ஒருபுறம் இரண்டையும் இணைத்து வைத்திருப்பது மனிதர்கள் செயல் போல உள்ளதாக நினைக்கிறாளா? பார்க்கப் போனால், ..மிகைலா ஃபியோனாவின் குறிப்பை மேலும் புரட்டினாள். அவள் தேடிய குறிப்பு கிடைத்து விட்டது. அதை படித்தாள்.” உண்மையில் இந்த பிண்டரைன் திசில் என்பது மனிதர்களின் பக்குவப் படுத்தப் பட்ட இறைச்சியே. PROCESSED MEAT – “ மிகைலா அதை ஏற்கவில்லை. அது ஒன்றும் பக்குவப் படுத்தப் பட்டதல்ல. அவள் எதிர்ப்பது வனாந்தரத்தின் ஏக போகமான கொடூர இயல்பும், மந்திர ஸ்படிகத்தின் மாஜிக்கும் இருவேறு துருவங்கள். அதை இணைத்து விட்டோம் என்று நாம் நினைக்கிறோம், அவளுக்கு அது சம்மதமில்லை போலும். அவள் வரையிலான தனிப்பட்ட கருத்து. ஏதோ காரணமும் இருக்கலாம்.
“ஸோ, என்ன சொல்கிறாய், வனாந்திரம் அதன் பழைமையான கொடூரங்களுடனேயே இருக்க வேண்டுமா? விலங்குலகம் என்று வேண்டாமா?”
“யா- விலங்குலகம் இன்னமும் வனாந்திரத்தின் ஒரு பகுதி தான். நாம் சில வழக்கங்களை மாற்றி இருக்கிறோம். சில செயல் மரபுகளை விட்டு விட்டோம். சில பொருட்கள் தேவையில்லை என்று நிறுத்தி விட்டோம். இது ஒரு சுகமான இருப்பிடமாக விலங்குகள் கருத வேண்டும் என்று நினைத்து இந்த மாறுதல்களைச் செய்தோம். ஆனால், ஃபியோனா விரும்பியது அசல் வனாந்திரம் அதனுடைய இயல்பான கொடூரங்களுடன். அங்கு இந்த மந்திர ஸ்படிகம் இருக்காது. பூமி…”
“ஓரு வார்த்தைக்கு இப்படி சொல்வோம், ஃபியோனா மட்டுமல்ல – இன்னும் சிலர் விலங்குலகை உண்மையாகவே விரும்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். இருக்க கூடும் என்று தோன்றவில்லை. ஒரு வேளை, எனக்கு தீர்மானமாக தெரியவில்லை, இருந்தாலும் ஃபியோனா மட்டும் தான் விலங்குலகை விரும்பவில்லை, என்பது சந்தேகமாக இருக்கிறது. மேலும் சிலர் இருக்ககூடும் அவள் அளவுக்கு வெறுப்பு இல்லையெனிலும், மிக உயர்வாக நினைக்காமல் இருக்கலாம். அதனால் நான் குற்றம் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் பார்த்தவரை இது மிக அமைதியான இடம். “
மிகைலா ஏதோ கண்டிக்கும் குரலில் சொல்ல நினைத்தாள் போலும், பாதியில் நிறுத்தி, யோசனையில் ஆழ்ந்தாள். புதியதொரு செய்தியை நினைவு கூர்ந்தவள் போல …
“ஐந்து சதவிகிதம்! 95% , அன்பான பெண்ணே, நீ சொல்வது சரியே. முழுமையான ஐந்து சதவிகிதம்! அது ஏதோ கோளாறு என்று அதிகமாக மதிப்பு கொடுக்கவில்லை. ஆ, என்ன மெத்தனம், அதை பற்றி சிந்திக்காமல் விட்டது. … என் அருமை பெண்ணே
நீலா மிகைலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். திடுமென அவளுக்கு இரண்டாவது தலை முளைத்து, அது ஷேக்ஸ்பியரின் மூளையைக் கொண்டிருக்குமோ… அதில் க்ரேக்க மொழியின் தனித்வமான சொற்கள் முளைத்திருக்குமோ…
“எது 5% எது 95% – ?”
“இந்த ஃப்லெமிங்கோ நிகழ்ச்சிக்கு, அதாவது அவள் வெளியேறிய பிறகு, the grand elders பெரியவர்கள், நான் உட்பட ஒரு கணக்கெடுத்தோம், விலங்குலகில் யார் யார் ஆதரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள. 95% திருப்தியாக இருப்பதாக சொன்னார்கள். அத்துடன் விட்டு விட்டோம். மீதி ஐந்து சதவிகிதம் ஆதரிக்கவில்லை என்பதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
“யா, வினோதமான பிரச்னை. இந்த இடம் அருமையாக இருக்கிறது. நீங்கள் பிண்டரைன் திசில் என்பதை கண்டு கொண்டீர்கள். நட்புடன் விலங்குகள் வளைய வருகின்றன. எல்லாமே பாராட்டுக்குரியனவே. “
“ஆம். இப்பொழுது புரிகிறது, அந்த ஐந்து சதவிகிதத்தினருக்கு திசில் உணவு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் வனாந்தரத்தின் இயல்பான வேட்டை முதலான கடும் செயல்களை விரும்பலாம். ஓ, என்ன ஒரு பொறுப்பின்மை. உடனடியாக செய்யவேண்டியதைச் செய்து விட்டு அந்த விஷயத்தை கவனிக்கிறேன்.”
“ நீலா அது சரி என்பது போல தலையசைத்தாள். திரும்பவும் அதே ஃபியோனா குறிப்பை ஆராய்வோம் என்று கிளம்பியபின் அவள் சிந்தனை வயப்பட்டாள். வேறு ஏதொ நினைவு, அவள் புருவத்தை நெரிப்பதிலும், உதட்டை கடிப்பதிலும் தெரிந்தது.”
“நமக்கு இருப்பது அரை மணி நேரத்திற்கும் குறைவாகவே. அதற்குள் பிண்டரைன் திசில் இங்குள்ளோருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். எப்படி? மிகவும் சங்கடமான நிலைமை. இதை எப்படி சரி செய்யப் போகிறோம். எவ்வளவு கடினமான செயலானாலும் நாம் செய்யத் தயார். ஆனால் அந்த மந்திர ஸ்படிகம் திசில் உணவை தயாரிக்கச் செய்வது நமது சக்திக்கு அப்பாற்பட்டது. மாயக்கல்லை நிர்பந்திக்க முடியுமா?”
“மிகைலா திகைத்தாள். கவலை, செய்வதறியாத குழப்பம் அவள் முகத்தில் படர்ந்தது. கையிலிருந்த குறிப்புகள் அடங்கிய கோப்பை ஒரு முறை பார்த்தாள். பின் நிமிர்ந்து “நீ.., நீ சொல்வது சரி. எனக்கும் அது பற்றி அறிவு இல்லை. திசில் உணவு தாவரத்தை திரும்ப வளரச் செய்வது எப்படி? ஆனால் இதுவரை நாம் பல விஷயங்களை தெளிவாக புரிந்து கொண்டுள்ளோம். “
“ஏதுவுமே புலானகவில்லை. பிண்டரைன் திசில் தாவரம் திரும்ப வளர்த்து விட்டோம் என்றாலும் அது மட்டுமே, நாம் எதிர்பாராத வித்தியாசமான தற்போதைய நிலைமைகளை சரியாக்கி விடுமா ?”
மேலும் ஏதோ சொல்ல நினைத்தவள் நிறுத்திக் கொண்டாள். “மாயக்கல்லின் ரகசியம்” என்பதை தெரிந்து கொண்டு விட்டோம் அல்லவா?
“முழுவதுமாக இல்லை. அப்படி அதை தெரிந்து கொண்டும் ஒன்றும் பயனில்லை. இதுவரை”
“ஓ, வா, வா முழுவதுமாக சொல்லு.. தப்பையே கண்டு சொல்லும் ஒரு பாத்திரம், பிரசித்தமான நாவலில் வருமே, அது போல பேசாதே. Debbie Downer தானே அது?
“ நான் Practical Penny.” அந்த Debbie Downer போல குறையே சொல்பவள் அல்ல.
“What’s a Practical Penny?” மிகைலா கேட்டாள்.
“தெரியாது. நீ சொன்ன Debbie Downer என்பது என்ன?
“உனக்குத் தெரியும் .. அளக்காத”
“அப்போ உனக்கும் தெரியும் நான் சொன்னதும்.
இருவரும் சிரித்து விட்டனர். சூழ் நிலையின் இறுக்கம் குறைந்தது போல
“ஓகே, Practical Penny.” நாம் என்ன செய்ய வேண்டும்?
“ம்… ம்… ம் ..அந்த புதிர் முழுவதையுமே திரும்ப பார்த்து விடை காண முடியுமானால்…”
மிகைலா சற்று யோசித்தாள். “இந்த ஐடியாவும் ஒகே – பலன் தரலாம்”
“ஆமாம். இது தான் நாம் செய்ய வேண்டியது”
மிகைலா அந்த புதிரை தான் சற்று நேரம் பார்த்து ஏதொ மனதில் தோன்றியதை வெளியே கேட்காமல் முனு முனுப்பாக சொன்னாள். அதை இன்னமும் தன் குழப்பம் தீராமலே, நீலாவின் கையில் கொடுத்தாள். அவளும் அதை பார்த்து மிகைலாவைப் போலவே குழம்பினாள். தலையை அசைத்து அதை வாங்கி படித்தவள், எதுவும் பேசாமல் திருப்பிக் கொடுத்தாள். இருவரும் மாறி மாறி படிப்பதும், திரும்ப படிப்பதும், குழப்பம் தெளிவு பெறாமலே, நேரம் சென்றது. கடைசி வரிகளில் தான் ஏதோ இருக்கிறது.
“பார்க்கலாம். இதற்கும் ஃப்லெமிங்கோ வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? “
“என்ன சொல்கிறாய். இந்த பத்திரங்கள், புதிர்கள் மிக பழையவை. ஃப்லெமிங்கொ சம்பவம் சமீபத்தில் நடந்தது. இது ஏதோ ஜோதிடம் போல வரப் போவதை முன் கூட்டியே சொல்லும் செய்தி என்று வைத்துக் கொண்டால் சரி எனலாம். அப்படி எதுவும் இல்லை. அதனால் இது ஃப்லெமிங்கொ பற்றி சொல்லவில்லை.
“நானும் அப்படித்தான் ஊகித்தேன். ஆனால், இது ஒரு எச்சரிக்கை என்று எப்படி சொல்கிறாய்? பொதுவாக ஒரு எச்சரிக்கையாக, இது போல ஒரு சிறு பான்மை விலங்குகள் நினைக்க கூடும் இது போல வெளியேறுதல்கள் சாத்தியமாகும் என்று இருக்கலாம்.
“ம்..சரி, நாம் இன்னும் சற்று பின்னோக்கி செல்வோம். முதலில் எண்ணியபடியே பறவை தான் இந்த புதிரின் ஐடியா என்றே வைத்துக் கொள்வோம். அதை புதுப்பிக்க முடியாது. ஃபியோனா நிர்பந்தப் படுத்தி அந்த கல்லை தன் இஷ்டப் படி செய்ய வைத்திருக்கிறாள். அதனால் தான் மாயக்கல்லை புதுப்பிக்க முடியாது . இந்த கொள்கை சரி வருமா? “
“எனக்கும் அது சரி என்று தோன்றுகிறது. ஆனால் ஃபியோனா என்ன செய்து அந்தக் கல்லை சம்மதிக்க வைத்தாள்? இது மிகவும் முக்கியமான செய்தி. பலமுறை முயன்றும் முடியாமல் போக, அவள் மந்திர ஸ்படிகத்துக்கு தெரியாமல் கடந்து போயிருப்பாள் என்றால், “
“இந்த செய்தியில் என்ன இருக்கிறது? எப்படி நமக்கு பயன் படும்?
“அது தெரிந்தால், நாமும் உன்னை உன் வீட்டில் கொண்டு சேர்க்கலாம். “ மிகைலா தொடர்ந்தாள். அப்படியில்லையெனின் அந்த மந்திர ஸ்படிகம் ஏன் பதறியடித்துக் கொண்டு இப்படி தட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது.
“இருக்கலாம். அதே கல் என்னை என் வீட்டில் கொண்டு விட ஓத்துழைக்குமா? இந்த சமயம் அதில் ஈடுபட வேண்டுமா? பின்னால் பார்த்துக் கொள்வோமா?
“ நிச்சயமாக இது ஒரு நல்ல பேரமாக இருக்கும்”
“ஒக்கே.. “
திரும்பவும் அந்த புதிருக்கே வந்தார்கள். திரும்பவும் முதலில் இருந்து படித்துப் பார்த்தார்கள். நீலாவும், மிகைலா கையிலிருந்த பத்திரத்தை பார்த்தாள்.
“நாம் அவர்களுக்கு ஒரு சந்தர்பம் தருவோம். கல்லின் மூலமாக –“
“என்ன”?
“கோபமடைந்த மிகைலா , அப்படியா செய்தி, இதோ வருகிறேன் என்பது போல நாக்கை சுழற்றினாள். இதை பார், சிலருக்கு வீடு, பலருக்கு இல்லை—இதை பரீக்ஷை செய்து பார்க்க வேண்டும். இந்த ‘பலர்” யார் யார் என்று தெரிந்து கொள்ள
என்ன நடக்கப் போகிறது என்பது நீலாவுக்கு புரிந்தது. அவர்களுக்கும் ஒரு சந்தர்பம் கொடுக்க வேண்டும்.
பகுதி-22
பையா, எழுந்திரு. வா,வா எழுந்திரு ! ஐந்து நிமிஷமாக எழுப்பிக் கொண்டிருக்கிறேன். முழுசா ஐந்து நிமிஷங்கள். என்னப்பா நீ, எழுந்திருப்பா… இப்போ எழுந்திருக்கப் போகிறாயா இல்லையா? கண்களை திறப்பதே கஷ்டமாக இருக்கிறதா? பையா, நேரம் வீணாகிறது, எழுந்திருப்பா.. வா, வா, எழுந்திரு!.
ஜோயி அதை பொருட்படுத்தாமல் தூங்கவே விரும்பியது. அந்த குரல் மேலும் மேலும் காதில் ஒலித்த போதிலும், காதருகே வந்து சப்தமிட்ட போதிலும், அந்த குரலை கேட்கவே இல்லை என்று புறக்கணிக்கவே முயன்றது. எழுந்து என்ன செய்வது. திரும்ப அதே பிண்டரைன் திசில் பிரச்னை மனதை குடையும். அடித்து நொறுக்கப் பட்ட நிலையில் தான் இருப்பதாக ஒரு எண்ணம்.. தான் இந்த பூமியில் கட்டுண்டு எதையும் செய்ய முடியாமல் கிடப்பதாக… அந்த கல் தன் கையில் மட்டையை வைத்துக் கொண்டு நிற்பது போலவும், எதையுமே நடந்ததை எண்ணிப் பார்த்து முடிவெடுக்க முடியாத தன் நிலைமை.. அந்த ஃப்லெமிங்கொ கடைசி நிமிஷத்தில் கத்தி என்னவோ சொன்னாளே அந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள், என்னை என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தாள், ..எழுந்திருப்பது என்பது திரும்பவும் அலைக்கழிக்கும் எண்ணங்களோடு அந்த பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். தூங்குவது போல கிடப்பது எவ்வளவு சுகம்? இப்படியே கிடப்போம் ….எழுந்திருக்க எண்ணினாலும் உடல் இடம் கொடுக்கவில்லை. என்னதான் முயன்றாலும் தன்னால் வளர்ப்பு நாயாக போட்டிகளில் கலந்து கொண்டு வேடிக்கை காட்ட முடியாது என்பது போல.. தானே தன் உவமையை நினைத்து சிரித்துக் கொண்டு எழுந்தது. செய்யாமல் விட்டால் மட்டும் என்ன புதிதாக நடந்து விடப் போகிறது என்று தனக்குத் தானே உபதேசமும் செய்து கொண்டு எழுந்து எதிரே மிஸ்டர் டிம் தன்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை கண்டது. அப்பாடி எழுந்தாயா, என்று மகிழ்ச்சியுடன் மிஸ்டர் டிம் கேள்விக் கணைகளைத் தொடுத்தது.
“பையா, ஃப்லெமிங்கொ உன்னிடம் சொன்னதை அப்படியே சொல்லு”
“சரி, சொல்கிறேன். முதலில் ஃப்லெமிங்கொ என்னிடம் மிக ஆத்திரத்துடன் கடுமையாக பேசினாள். நான் பொறுமையாக ஏன் உதவ மாட்டாய், என்று கேட்டதும் நீண்ட சொற்பொழிவு போல எதேதோ சொன்னாள். விலங்குலகம் மனிதர்கள் போல ஆகி விட்டது. அவளுக்கு அந்த பழைய வனாந்திரமும் கட்டுப் பாடில்லாத சுதந்திர வாழ்வும் தான் பிடித்திருக்கிறது. தற்சமயம் விலங்குலகில் அந்த சுதந்திரமும், உண்மையான வன வாழ்வும் இல்லை. மேலும் சொன்னாள்: அந்த விலங்குலகம் அவள் தாய் வீடு அல்ல. அது ஏதோ செயற்கையாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. பிண்டரைன் திசில் இயல்பான உணவாக இல்லை. அது மனிதர்கள் செய்யும் ப்ராஸஸ்ட் – பக்குவப்படுத்தப் பட்ட இறைச்சியே என்றாள். மேலும் நான் எதோ வினவ, அவள் ஏற்கனவே அனைத்தையும் சொல்லி விட்டேனே என்றாள். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவளுக்கு விலங்குலகம் வசதியாக இல்லை, தன் வீட்டில் இருப்பது போல சுதந்திரமாக இல்லை. மற்றவர்கள் வேண்டுமானால் அப்படி நினைக்கலாம் என்றாள். உங்களுக்குத் தெரியுமே ‘that home for some but not for all business. Oh, then she said that verses and illustrations combined shall give you what you came to find’ – இந்த வாசகத்தையே திருப்பி சொன்னாள். ஒன்றும் புதிதாக சொன்னது போல இல்லை. உண்மையில், நான் சொல்ல என்ன இருக்கிறது, அந்த மாயக்கல்லின் ரகசியம் புதிர் தான் மறுபடியும், அதில் பெரிதாக நமக்கு எதுவும் இல்லை, அப்படித்தானே?
ஆமாம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நாம் இன்னும் அதைப் பற்றி முழுவதும் விசாரிக்கவில்லை. அவள் பேசியதை அப்படியே சொல்லு- சரி, சரி, விலங்குலகம் சிலருக்கு வீடு மாதிரி உள்ளது, எல்லோருக்கும் இல்லை – இது தானே ஃப்லெமிங்கொ சொல்ல நினைத்தது.
ஜோயி தான் கண்டுபிடித்த சில விஷயங்களை இன்னும் மிஸ்டர் டிம் உடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தது.
“யா- அது தான் ஃப்லெமிங்கொ சொன்னது. அவளே தான் அந்த மந்திர ஸ்படிக கல்லின் ரகசியம்- என்ற பத்திரத்தில் எழுதியிருக்கிறாள். ஒருவேளை அது தான் மிக முக்கியமான விஷயம் என்று அவள் கருதுகிறாள் போலும். உங்களுக்குத் தெரியுமா, அதை எப்படி சரி செய்வது என்பது? ஸார், எனக்கு துளிக் கூட ஐடியாவே இல்லை- சிலருக்கு வீடு, எல்லோருக்கும் இல்லை என்பதை எந்த ஆதாரத்தில் சொல்கிறாள். என்ன என்று கண்டு பிடிப்பது சுலபம். அதை சரி செய்வது எப்படி என்று செயலில் இறங்குவது மிக கடினம். உங்களுக்கு ஏதாவது ஐடியா உள்ளதா, ஸார்.”
திமோதி யோசனையில் ஆழ்ந்தது. இல்லை என்று தான் சொல்லப் போகிறார் என்று ஜோயி தீர்மானித்த நிமிஷம், அவர் முகம் பிரகாசமாக நிமிர்ந்து அமர்ந்தார்.
“வெல்,பையா. முழுவதுமாக தீர்க்க என்னிடம் ஐடியா இல்லை. மந்திர ஸ்படிகம் பகுதியை நான் தீர்க்க முடியும். அது ஒரு பெரும் பகுதி இந்த பிரச்னையை தீர்க்கும். எங்கேயோ இடிக்கிறது, இருந்தாலும், பையா, நான் சொல்வதை குறித்துக் கொள். நிச்சயமாக சொல்லவில்லை. என் அனுமானம் இது. பிராணிகளை விலங்குலகுக்கு கொண்டு செல்வதும் வெளியேற்றுவதும் அந்த கல்லின் செயல். இப்பொழுதுள்ள சில விலங்குகள் அங்கு இருக்க பிரியப் படவில்லை. அதற்கு மந்திர ஸ்படிக கல்லின் உதவியை நாடியிருக்கலாம்.”
திரும்ப படுத்து தூங்கலாமா என்று ஜோயி படுத்து மேல் முகட்டை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு எண்ணம் உருவாயிற்று. சட்டென்று எழுந்து உட்கார்ந்தது. திரும்ப கடைசி வரியை படித்து யோசித்த பின், ஏதோ புரிந்த மாதிரி இருக்க, திமோதி ஸாரிடம், எல்லா பிராணிகளும் விலங்கு சாம்ராஜ்யம் என்ற அமைப்பைத் தானே விரும்பவில்லை. அவர்கள் அந்த இயற்கை வனப் பகுதியைச் சொல்லவில்லையே …
அந்த கல் சிலரை அங்கிருந்து வெளியே செல்லவும், வேறு சிலரை உள்ளே அழைத்து வரவும் உதவி செய்கிறது என்று டிம் ஸார் சொன்னாரே. அந்த கல் ஏதோ விஷமம் செய்கிறது, சந்தேகமேயில்லை. அதைத் தான் ஆராய வேண்டும். அதன் அதிகாரம் என்ன? எதற்காக செய்கிறது. இப்படி ஒரு புதிர் போடுவானேன். ஒன்று – அந்த மாயக்கல் நிரந்தரமல்ல – அதை மாற்றலாம். புதுப்பிக்கலாம். நடுவில் புகுந்து விலங்கு சாம்ராஜ்யத்தில் குழப்பம் விளைவிக்கிறது. சிலர் துணையோடு.
“ஸார், சாய்ஸ், சந்தர்பம், நமக்கு, இங்குள்ள விலங்குகள், மற்ற பிராணிகளுக்கு”
திமோதி ஜோயியை நிமிர்ந்து பார்த்து, எதோ புது விஷயம் அதற்கு தோன்றியிருக்கிறது என்பதை அறிந்து கொண்டார். ஆவலுடன் அதையே பார்த்தார்.
“ எனக்குத் தெரியும் நீ கண்டு பிடிப்பாய் என்று, பையா, சொல்”
ஜோயி எதேச்சையாக கையிலிருந்த திசில் தாவர வளர்ச்சியைக் குறிக்கும் வரை படத்தை பார்க்க, முன்னை விட அதிகமாக சந்தோஷத்துடன் குதித்த து. காரணம் திசில் தாவரம் பிழைத்து விட்டது.
பகுதி-23
நிச்சயம் ! மற்ற விலங்குகளும் கேட்கப்பட வேண்டும். … குட்னெஸ் … அதுதான் சரியான முறை. நீலா ஏன் இதுவரை மற்றவர்கள் இது பற்றி நினைக்கவில்லை என்று ஆச்சர்யப்பட்டாள். இன்னும் எப்படி தொடருவது என்பது தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அதை அந்த சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
‘நீ சொல்வது சரி. அதுதான் அந்த மந்திர ஸ்படிகம் புதிர் சொல்ல நினத்ததோ என்னவோ, இது அற்புதமான எண்ணம். எப்படி செய்யப் போகிறோம். “
“எதை என்ன செய்யப் போகிறோம்”
“அந்த கல் மூலம் மற்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க செய்வது”
“இது ஒரு அற்புதமான ஐடியா. அந்த கல்லை நமக்கு சாதகமாக செய்யச் சொல்ல வேண்டும், அது தான் எப்படி?
மிகைலா என்ன நினைத்தாள் என்பதை அவள் முகக் குறிப்பிலிருந்து கண்டு கொள்ள முடியவில்லை.
“எனக்கு இன்னமும் முழு நம்பிக்கை வரவில்லை”
எங்கிருந்தோ ஃபெலிஸ் – இல்லை லீஸி வந்தது. வாய் முழுக்க பல்லாக இளித்துக் கொண்டு. உலகமே அவளுக்கு துச்சம் என்பது போல.
“ஹியா மிகைலா! என்ன செய்கிறாய் ? கையில் இருந்த திசில் துண்டை கடித்தபடி …
“ஓ ஃபெலிஸ், இல்லை இல்லை லீஸீ, எது உனக்கு பிடிக்கிறதோ அது,, போதுமா… எங்கிருந்து இந்த பிண்டரைன் திசில் கிடைத்தது ? ஸ்டாக் இருக்காமா?
“ஊ, இது எல்லா இடத்திலும் தடையில்லாமல் கிடைக்கிறது. எனக்கு டிஃப் கடையில் கிடைத்தது, டிஃப்ஃபனி டர்டில்- அவள் கையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நான் வந்து, வந்து எனக்கும் என்று கேட்டவுடன் இந்தா என்று நிறையவே தந்தாள். கேட்டேன், எங்கே கிடைக்கிறது? அவ சொல்றா, வீட்டில், நீ என்ன தூங்கிக் கொண்டிருந்தாயா? நான் சொன்னேன், தூங்கவே இல்ல… இத திசில் கிடைக்கல்ல – அதனால – நான் முடிக்கவேயில்லை அவ இந்தா ன்னு நிறைய குடுத்தா…
“என்ன நடந்திருக்கும் என்று கணிக்க வழக்கமான ஐந்து செகண்ட் கூட எடுத்துக் கொள்லவில்லை மிகைலா. ஃபெலிஸ் அல்லது லீஸி, முடிக்கும் முன் அவள் கண்கள் விரிந்தன.
“என்ன சொன்ன?” எல்லா இடத்திலும் இருக்கா? எப்படி வந்தது எல்லா இடத்துக்கும்?
எனக்கு தெரியாது, தோளை குலுக்கி கொண்டு மேலும் எதுவும் கேட்குமுன் ஓடி விட்டது.
“மிகிலா.. எங்கிருந்து வந்திருக்கும், எப்படி அவளுக்கு… திசில் கிடைத்திருக்கும்…? என்ன?”
மிகைலாவும் அதே போல் தான் திகைத்தாள். நீலாவை விட இன்னும் அதிகமாக…
எனக்கும் திகைப்பாகத்தான் ..எப்படி வந்திருக்க முடியும்? திடுமென வளர என்ன காரணம்?
“நீலா ஜன்னல் வழியாகப் பார்த்தாள். எங்கும் பிண்டரைன் திசில் கொடிகள் வளர்ந்து கொண்டிருந்தன. சர்வ சாதாரணமாக…. எதுவுமே நடக்கவில்லை போல, இத்தனை கவலைகளும், இருப்பு இல்லை காலி என்று திகைத்ததும் ஒன்றும் உண்மையில் நடக்கவில்லை என்பது போல… நன்றி நன்றி… மிக்க நன்றி, கடவுளே கடவுளே…”
“ஊகிக்க முடிகிறதா? மிகைலா கேட்டாள்.
நீலா தலயசைத்தாள். திகைப்பு, அதே சமயம் சந்தோஷம் … தீராத குழப்பம்… “
“ஓகே, அந்த கல் எதோ செய்திருக்கும் என்று நினைக்கிறாயா”
“இருக்கலாம், இரு யோசிக்கிறேன்.. அதுவரை நம்பகமாக இருந்த மந்திர ஸ்படிகம் ஃ பியோனா சம்பவத்திற்கு பிறகு தாறு மாறாக நடந்து கொள்கிறது. சரிதானே? “
“ ஏன்? இப்பொழுது மட்டும் எதிர்பாராத விதமாக நடந்து கொள்ள என்ன வந்தது? நான் கம்ப்ளெயிண்ட் -குற்றமாகச் சொல்லவில்லை. திடுமென நடப்பதால் சந்தேகமாக கேட்கிறேன்.”
“ யா..ம்ம்..அந்த மந்திர ஸ்படிகம் ஒருவேளை உணர்வுடன் , அதாவது, உணர்வூட்டப்பட்டதாக ஆகியிருந்தால்… அசத்தலான எண்ணம் தான் .. ஆனால் அப்படி இருந்தால், ஏதோ காரணத்தால். செயலிழந்து கிடந்தது இப்பொழுது செயல் படுகிறது என்று வைத்துக் கொண்டால்?…
“ஸோ, ஃபியோனா திரும்ப பூமிக்கு போனதால் அது செயலிழந்து விட்டதா? “
“யா… “ நீலா சொல்லிவிட்டு, மிகைலாவுக்கு சைகை காட்டினாள், மேலே சொல்லு”
“ஆனால், அந்த கல்லின் பார்வையில் இதைப் பார்ப்போம்…”
“அந்த கல் என்ன யோசிக்கும் என்றா”
“யா.. ஆமாம் அந்த அந்த கல்லின் கோணத்திலிருந்து, அதன் சிந்தனை எப்படி போகும் ? ஒருவேளை.. அதுவே முழம்பி போயிருக்கலாம், அல்லது வேறு ஏதோ..?”
“ஏதோ ஒன்று.. ஓகே, அது குழம்பி போய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால் அது விரிசல் கண்டிருக்குமா?”
“ஓருவேளை, இருக்கலாம்… அந்த விரிசலுக்கும் தற்போதைய நடத்தைக்கும் சம்பந்தம் இருக்கிறதா, பார்ப்போம்”
“ஓரு நிலையின்றி , நம்ப முடியாதபடி திடுமென அதன் செயல் இருக்க காரணம், அதுவே குழப்பத்தில் இருக்கலாம், என்ன செய்வது என்பது தெரியாமல் இருக்கலாம்”
“செய்வதறியாது திகைத்திருக்கலாம் – நீ சொல்வது சரியே… அது உணர்வுடையது என்றால், தற்சமயம் குழப்பத்தில் இருப்பதும் நியாயமே.. தன்னை மீறி ஏதோ நடக்கிறது என்பதால் அந்த குழப்பம். ஃபியோனா பூமிக்கு திரும்பியதில் அதற்கு சம்மதம் இல்லாமல் இருந்திருக்கலாம்..நான் சொல்ல வந்ததது, உங்களுக்கு பூமியை ஒரு சுற்றுலாவாகக் கூட போக பிரியமில்லையே. “
“அதே தான். இப்படி இருந்தால், அந்த சம்பவம் எப்படி நடந்தது தன் அனுமதி இன்றி என்று துப்பறிய முயன்றிருக்கலாம் – என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாததால் தான் இந்த தடுமாற்றம்…”
“ மேலும், இப்பொழுது பழையபடி ஆகியிருக்கும் என்றால்…”
“ ம் ம் ..எப்படி, எதுவும் தெளிவாக தெரியவில்லையே..”
“ம் ம் ..நாம் இருவரும் இதுவரை சற்று வினோதமாக கூட, இப்படி இருக்கலாம் என்று அலசிப் பார்த்தோம். இது எப்படி இருக்கிறது..நான் சொல்கிறேன்…அந்த மந்திர ஸ்படிகம் உணர்வுடன் செயல்படும், மாஜிக் – செப்படு வித்தையோ, மாயமோ இல்லை என்றால், நிச்சயமாக நடப்புகளை வைத்து எங்கே பிழை என்று தெரிந்து கொண்டிருக்கும். விடை கிடைத்திருக்கலாம். கவனி, நாம் மற்ற விலங்குகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று தீர்மானம் செய்யவும், பிண்டரைன் திசில் வளருவதும் வெறும் தற்செயலாக இருக்க முடியாது. …”
“யா..நீ சொல்வது, நாம் அதற்கு ஒரு பதிலை தந்து விட்டோம்..”
“அப்படித் தான் ஊகிக்கிறேன்”
“ஸோ, நாமறியாமலே, அந்த கல்லுக்கு ஒரு வழி, அது தேடிக் கொண்டிருந்த பிரச்னைக்கு விடை காட்டி விட்டோம். அதனால் தடை நீங்கி பிண்டரைன் திசில் வளரத் தொடங்கி விட்டது. மேலாக பார்க்க பழைய படி நிலைமை சீராகி விட்டது”
“யெப்.. சரியாக புரிந்து கொண்டாய்”
சில நிமிஷங்கள் மௌனமாக சிந்தனையில் கரைந்தன. ஒரு வௌவால், பறந்து வந்தது. ஒரு தடிமனான புஸ்தகம் The History of the Discovery of the History of Fossilology byIsaac Newt .. அதை எடுத்துக் கொண்டு பறந்து விட்டது. ஹிஸ்டரி- சரித்திரம் அதுவும் பழைய ஐஸக் நூடன் எழுதியது- பாசிகள் இயல்பு பற்றி- வினோதம்… வெளியே எட்டி பார்த்து மிகைலா சிரித்தாள். சில நிமிஷங்கள் சென்றன. ஒரு ஆந்தை வந்தது. புத்தகங்களின் அடுக்கை துருவி துருவிப் பார்த்தது. தலையசைத்து சட், இங்க எனக்கு வேண்டியது இல்லை – என்ன நூலகம்- சற்றே கோபத்துடன் , அங்கு எதுவுமே அதன் தேவைக்கு இருக்காது என்பது போலவும், தன் கற்று அறியும் தேவைக்கும், பாடத் திட்டத்துக்கும் இந்த நூலகம் உபயோகமேயில்லை என்பது போல ஒரு பாவனையுடன் வெளியே சென்றது. நீலாவுக்கு தோன்றியது, தானும் மிகைலாவும் இதுவரை நம்ப முடியாத விசித்திரமான கோணங்களில் கூட ஆராய்ந்தது நன்றே – நடக்க கூடியவையே ..உண்மையில் அந்த கல் இயங்க ஆரம்பித்து விட்டது. ஏனெனில் பிரச்னைக்குத் தீர்வு அந்த விலங்குலக பிராணிகளுக்கு அவர்களே ஏற்றுக் கொள்ளும்படி ஒரு வாய்ப்பு கொடுப்பதே என்பதை புரிந்து கொண்டு விட்டது. கூல்
அது சரி, நான் எப்படி திரும்பி போவது? ஒரு வழியும் புலப்பட வில்லை. அந்த ஓநாயும், ஆமையும் அங்கே இருக்கின்றன.. மற்றபடி இந்த இடம் எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கிறது Superb என்று -அவள் களைப்புடன் போதும் என்று நினைத்த சமயம் ஏதோ பறப்பது போல இருக்க, கூர்ந்து பார்த்தாள். அந்த நீல நிற கல் யாரும் எதிர்பாராத சமயம் விடுவிடுவென்று உள்ளே நுழைந்து, தன்னுடைய புகழ் பெற்ற ஆகாய வண்ண பிரகாசமாக தென்பட்டது. அவளுடைய களைப்பு பறந்தது. உடல் அயர்ச்சி மறைந்தது. மன உளைச்சல் ஓய்வு எடுத்துக் கொண்து போல விலகியது. அலுப்பும் சலிப்பும் சுற்றுலா கிளம்ப, புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது. மிகுந்த கவனத்துடன் பார்த்தாள். அதே தான்… யோசிக்கிறதா? அதன் பின் இதை விட அதிசயமான ஒன்று நடந்த து. அந்த நீல மணி தன் தோளை குலுக்கியபடி ஏதோ சொல்வது போல இருந்தது.
அசரீரியாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ‘மே, நீ உன் இடத்துக்கு, பூமிக்கு போகிறாயா? – திடுக்கிட்டு இது என்ன அதிசயம் என்றபடி நீலா நிமிர்ந்தாள்… எதிரே மிகைலா கண் திறந்தாள்.
“நீ திரும்பி பூமிக்கே போகிறாயா? மிகைலா கேட்டாள். நீலா அந்த மந்திர ஸ்படிகத்தை அதிசயத்துடன் பார்த்தபடி இருந்த சமயம் –
“ஆமாம்- அந்த பொருள் மனது வைத்தால்”
தன்னை மந்திர ஸ்படிகம் என்று சொல்லாமல் அந்த பொருள் என்று சொன்னது பிடிக்கவில்லயோ என்பது போல வண்ணங்கள் ஒவ்வொன்றாக சற்றே தங்கள் மறுப்பை காட்டுவது போலவும், அலையடித்தது ஓய்வது போலவும் மறைய, மந்திரக ஸ்படிகம் மெள்ள மெள்ள தன் இயல்பான அமைதி நிலைக்கு திரும்பியது.
“மிகைலா குதூகலத்துடன் ஆஹா,லவ்லி என்றாள். நீ அனைத்தும் சேர்ந்த கலவையானவள். சிலசமயம் ஆத்திரமாக, என்னை ஆத்திரமூட்டுவதாக, இது என்ன இடைஞ்சல் என்று கூட நினைக்கும் படி இருந்தாலும் நீ மிகவும் அழகான. இனிமையான பெண். மனித பெண்ணாக இருந்தும் கூட ..”, .
ம்ம் ..தாங்க்ஸ்… நீயும் தான் மிகவும் அமைதியான பெருச்சாளி….நான் பேசியதே முதன் முதல் உன்னுடன் தான் – ஏனெனில் நீதான் முதல் பெருச்சாளி நான் பேசி பழகியதும். ஆனால் எனக்கும் அதே போல இனிய சினேகிதி..
மிகைலா, மிகையான அடக்கத்துடன் அந்த புகழுரையை ஏற்றுக் கொள்வது போல பாவனை செய்தாள். நீலாவுக்கு வேடிக்கையாக இருந்தது, இளித்துக் கொண்டே இருக்கும், திடுமென தோரணையாகவும் பேசும், இதற்கு எப்படி முடிகிறது என்று அதிசயித்தாள். அந்த இடமோ ஆந்தைகள் வந்து போகும் இடம். ஆடம்பரமாக வளைய வந்து, புத்தகங்களைத் தேடுவது போலவும், அந்த நூலக எழுத்தர், பயனில்லை என்று அறிந்தும் தன்னாலான உதவியை செய்வது ஒன்றுமேயில்லை என்பது போல அவரை அலட்சியமாக பார்க்கும் காட்சியும் கொண்ட நூலகம்.
ஸோ, யெஸ் – இப்படி ஒரு காட்சி நடக்கலாமானால், இதுவும் சாத்தியமே.. மந்திர ஸ்படிகம் பொறுமையின்றி காட்சியளிப்பதாகத் தோன்ற அதில் கவனத்தைத் திருப்பினாள். அந்த விநாடியே பூமிக்கு அனுப்ப தயாராக இருப்பதாகப் பட்டது. பின் தன் முடிவை மாற்றிக் கொண்டது போல – எதையோ நினைத்து யோசிப்பது போல, நமக்கென்ன என்று கை கழுவியது போல அவள் உணர்ந்தாள்.
“மிகைலா”
“யா”
“நமக்கு இன்னும் சில புதிர்கள் விடுவிக்க வேண்டியிருக்கிறதே, நான் இப்பொழுது திரும்பி போகவில்லை, “
“ஹ்யூமன், கோ ஹோம் – மனித பெண்ணே, திரும்பிச் செல். நான் பார்த்துக் கொள்கிறேன். மற்றவை அந்த அளவு கடினமும் அல்ல. எனக்கு ஒழிந்த பொழுது பார்த்துக் கொள்கிறேன். கவலைப் படாதே. அனைத்தும் சீராகிக் கொண்டு வருகிறது. பழைய படி இந்த இடமும் மாறிக் கொண்டு வருகிறது. அது ஏதோ, வருங்கால அறிவிப்பு போல- அதைப் பற்றி கவலை வேண்டாம். முழுவதுமாக மறந்து விட்டு சந்தோஷமாக போய் வா..நாங்கள் நலமாக இருக்கிறோம், சரியா?
இப்படிச் சொன்னாலும் மிகைலாவின் கவனம் அந்த மந்திர ஸ்படிகத்திலேயே இருந்தது. ஒரு அவநம்பிக்கை , தான் சொல்வது சரியா என்பது போல. அந்த மந்திர ஸ்படிகம் தலையசைத்ததோ… அதைச் சுற்றியிருந்த ஒளி குறைந்து கொண்டே வந்து அணைந்தது. “ இதை பார், அந்த கல்லும் ஒத்துக் கொண்டு விட்டது”
நீலா தலையசைத்தாள். திரும்ப அந்த மந்திர ஸ்படிகத்தைப் பார்த்தாள். பழையபடியே, வண்ணக் கலவைகள் அணிவகுத்து முன் செல்ல, தன் இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தது. கண்களை கூசச்செய்யும் ஓளி, வண்ணங்கள், சுழன்று செல்லும் வேகம், இவைகளால் நீலாவின் பார்வை சற்று தடை பட்டது. அனேகமாக மிகைலாவின் இரட்டை வேடம் காட்டும் முக பாவத்தை தவற விட்டாள். ஒரே நபர் எப்படி இரு வேறு குணங்களை பிரதிபலிக்க முடியும் என்பது நீலாவுக்கு புதிராகத்தான் இருந்தது, ஆனால், ஒரு ஆந்தை அட்டகாசமாக நூலகம் வருவதும், புத்தகங்களைத் தேடி தேடி அலைவதும் கடைசியில் அந்த எழுத்தர் பணிவாக அது தேடிய புத்தகத்தை தேடிக் கொடுத்து உதவியதும் அல்லாமல், நூலக குறிப்பில் பதிவு செய்வதும், அந்த ஆந்தை மெத்தனமாக கையில் Peas a chance என்ற புத்தகத்துடன் நூலகத்தை விட்டு சந்தோஷமாக வெளியேறுவதையும் பார்த்த பின், இந்த இடத்தில் எது தான் நடக்காது- அடி மட்ட குணங்களான பணிவும், குழைவும், உயர் அதிகாரிக்கான மிடுக்கும், நமட்டுச் சிரிப்பும் ஒரு சேர ஒரே நபரிடம், இங்கு மிகைலா- காண்பதும் சாத்தியமே என்ற முடிவுக்கு வந்தாள்.
பகுதி-24
“ஸார், இதை பாருங்கள், திசில் திரும்ப வந்து விட்டது”
“ஏன்? …ஏன் – ஆமாம் வந்து விட்டது”
“ஆனால், எப்படி?”
“என் ஊகம், அந்த மந்திரக் கல் உன் பதிலுக்கு காத்திருந்தது போலும். “ மெல்லிய புன்னகையுடன் மேலும் “பையா, உன்னைவிட பல வருஷங்கள் முன்னால் பிறந்து இந்த உலகில் வாழ்ந்தவன். எனக்குத் தெரியாதா, எப்படி எது வேலை செய்யும் என்பது, நம்பு என்னை”
அதன் பின் அந்த மந்திர ஸ்படிகம் எதிரில் தோன்றியது.
அதைப் பார்த்து ஜோயி நடந்து கொண்டதும், மிஸ்டர் டிம் நடந்து கொண்டதும் இரு துருவங்கள் – மிஸ்டர் டிம், பழைய சினேகிதனைக் கண்டது போல சந்தோஷமாக சிரித்தார், ஜோயி பிளந்த வாயை மூடாமல் , டின்னர் ப்லேட் அளவு விரிந்த கண்களுடன், அடிக்கடி தன்னையே கிள்ளிக் கோண்டு நிஜம் தானா , கனவா என்று அலை பாயும் மனதோடு நின்றிருந்தான்.
“எப்படி இருக்கிறாய், நண்பனே, என்றார் டிம்.” ஜோயியின் ஆச்சர்யத்திற்கு எல்லை இல்லை. கண்கள் மேலும் விரிய இடம் இல்லை, திறந்த வாய் முடவில்லை. தான் மட்டும் தான் இந்த சந்திப்பை எதிர் பார்க்காமல் இருந்தது என்பது ஜோயிக்கு புரிந்தது. மந்திர ஸ்படிகம் தலையசைத்து திமோதிக்கு நலமே என்று பதில் சொல்லியது. அதன் பின் நடந்தது தான் எதிர் பாராத ஆச்சர்யம். மந்திர ஸ்படிகத்தின் மேல் சூழ்ந்திருந்த வண்ணங்களின் ஓளி வட்டம், கண் சிமிட்டுவது போல, குறைந்தும் கூடியும் , தங்கள் வண்ணங்களை மாற்றிக் கொண்டும், ஓரிரு நிமிஷங்களுக்குப் பின் நிலைத்து ஒளி ஊடுருவவும் முடியாத இயல்பை அடைந்த து. அதன் பின் டிம் அந்த மந்திர ஸ்படிகத்துடன் பேசினார். ஜோயி, எத்தனையோ அதிசயங்கள் நம்ப முடியாத நிகழ்ச்சிகள் பார்த்து விட்டோம், இது எல்லாவற்றையும் தூக்கி அடிக்கிறது. என்று எண்ணியது. “ உண்மையா, நிஜமா/ இரண்டுமே அதிசயம் தான்- சரியான வார்த்தை வேறு உண்டா என்னா?
உங்களுக்கு இதன் பொருள் புரியவில்லை என்றால் யாராவது நம்புவார்களா? ஓ கமான், அப்படி பார்க்காதே, நீ நீ தான் சந்தேகமேயில்லை. இந்த புதிரை விடுவிக்க உன்னால் கண்டிப்பாக முடியும். அந்த திட்டமே இரிடியம் அல்லது ஓஸ்மியம் போன்று கடினமான இராசயண பொருட்களுக்கு சமானமானது. ஓ நீ தான் என்னிடம் கேட்கவில்லையே, பரவாயில்லை இது சுதந்திரமான உலகம், நீ இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கிறாயா, இது புது உலகம் சுதந்திரமான உலகம்..
ஜோயி அசந்து போய் செய்வதறியாது நின்றது.
“ஸார், நீங்கள் அந்த மந்திர ஸ்படிகத்துடன் பேசுவீர்களா?” முடியுமா”
“இப்போ, பையா கமான், பேசுவது என்பது ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் பழைய கால முறை. நானும் பேசுவேன்.. அனால் இந்த buddy கூட பேசும் பொழுது இருவரும் செய்தி பரிமாறிக் கொள்வது மனதாலேயே.
அதற்காக மனதை படிப்பது என்பதல்ல, நினைவிருக்கட்டும், இது ஒரு முறை, கேட்பதில் நேரம் செலவாகாது. முதலில் தொடர்பு கொள்ள நேரம், பின் அதை கேட்பவர் மனதில் உள் வாங்கி பதில் சொல்ல வேண்டும் – இது தற்சமயம் கடினமான அனாவசியமாக கருதப் படுகிறது. வாயால் மற்றவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டு விட்டேன். மனதில் தான் உரையாடுகிறேன். நான் எண்ணுவதை அவர் தன் மனதாலேயே அறிந்து கொள்வார்.
ஆமாம், ஜோயி நினைத்த து சரிதான். இது இன்னும் சிக்கலான பது விஷயம்.
“ஆனால், எப்படி நீங்கள் இந்த முறையை அறிவீர்கள், எங்கு கற்றீர்கள்? எப்பொழுது? யாரிடம்?
“எல்லாம் பின்னால் சொல்கிறேன் – நாம் முதலில் வீடு போய் சேருவோம், பையா.,வா”
“ நம்ம வீட்டுக்கு போவோமா? இந்த மந்திர ஸ்படிகம் வேறு எங்காவது கொண்டு சேர்த்தால், யூனிகார்ன் போன்றவை இருக்கும் இடத்திற்கு… “நாம் ஏதாவது விளையாட்டை பார்த்துக் கொண்டிருக்கும் போது நம்மையறியாமலே வேறு இடத்திற்கு கொண்டு போய் விட்டால்?”
மிஸ்டர் டிம் ஜோயியை கூர்ந்து பார்த்தார்.
“ஜோயி அந்த பார்வையை தாங்க மாட்டாமல், “நீங்கள் சொன்னால் சரி, ஸார். அப்படி எதுவும் நடக்காது“
“பையா, நீ சொல்வது சரி அப்படி எதுவும் நடக்காது, இப்பொழுது, வா, கமான், ஒரு முறை விஸிட் செய்ய பூமி நல்ல இடம் தான். ஆனால் நான் அதற்கு ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் குடுக்க மாட்டேன். “
“மிஸ்டர் டிம், மந்திர ஸ்படிகத்தை சற்று தள்ளியது. இரண்டு விதமான காட்சி படங்கள் தெரிந்தன, ஒன்று உலர்ந்த மணல் பிரதேசம், ஆங்காங்கு சில களைச் செடிகள், மற்றொன்று விலங்குலகம். “
“ பரவாயில்லையே, நண்பனே, பரவாயில்லை. இப்படித்தான் நீ வேலை செய்கிறாயா? நல்ல கற்பனை.” ம்ம்
மந்திர ஸ்படிகத்தின் ஒளி நிழலாடியது. அது தன் கையை விலங்குலகம் என்னும் இடத்தில் வைத்து அழுத்தியது. ஜோயி தயக்கத்துடன் அந்த காட்சி படத்தை எட்டி பார்த்த து. திரும்பவும் இரண்டு உலகங்கள். ஒன்று விலங்குலகம், அதனுடைய வனாந்திரம், மரங்கள் பசுமையாக, தன் பாதத்தை விலங்குலகம் எனும் இடத்தில் வைத்து அழுத்தியது. உள்ளே நுழையும் பொழுது, நீலா, வந்து விட்டாயா என்ற குரல் உரத்துக் கேட்டது.
ஜோயியின் முறுவல் முகம் முழுதும் நிறைந்த து. புல் தரை, ஓ தான் தன் வீடு வந்து விட்டோம்.
….
மாலை நேரம். ஃபியோனா அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து மீண்டாள். ஒரே போர் என்று உணர்ந்தாள். சரி இருக்கட்டும் என்று தன் வழக்கமான தினசரியைத் தொடர்ந்தாள். எழுந்து சிறிது நடந்தாள். ஏதோ உணவு கொண்டு வந்ததை சாப்பிடுவதாக பாவனை செய்தாள். திரும்ப நடந்தாள். சுற்றிலும் வேடிக்கை பார்க்க வந்திருந்த மக்களிடம் கையசைத்தாள். சற்று புன்னகை, கையசைத்தல், ஒரு ladybug கூடவே வந்து பேச்சு கொடுத்தது. இப்பொழுது ladybug மொழி நன்றாக புரிகிறது. அந்த நாள் ஓடி விட்ட து, ஸோ, ஒரு நாள் பொழுது முடிந்தது. தூக்கம் கலைந்தது. லூனா என்ற ladybug வந்து அரட்டை அடித்தது. அது நகர்ந்ததும், ஏதோ புதிதாக நடந்தது. இனி கிடையவே கிடையாது, நமது வாழ்வில் என்று நினைத்து மறக்க முயன்ற விஷயம்… அவள் தினசரியை மாற்றி அமைக்கும் விதமாக அந்த மந்திர ஸ்படிகம் அவள் முன் தோன்றியது. அதிலும் சற்று புதுமையாக ஒரு குறிப்பு அதன் மேல் இருந்தது. அந்த வழ வழப்பான க்ரீம் கலர் பேப்பரில் .அழகான ஆனால் அவசரத்தில் எழுதியது போன்ற கையெழுத்தில், யாரோ, எழுதியிருக்கிறார்கள்:
A long-overdue debt finally paid. Hang in there. –Joey –
ஃபியோனாவின் கண்கள் பனித்தன. அவள் திறந்த வாய் மூட மறந்தது. தன் கால் நகத்தை அந்த கல்லின் மேல் வைத்தாள். உடனே அவள் விலங்குலகத்துக்கு போய் சேரவில்லை. அதற்கு பதில் தெளிவாக இரண்டு படங்கள், ஸ்படிகம் போல தெளிந்த நீரில் இரண்டு காட்சி படங்கள். ஒன்று அவள் இருந்த விலங்குலகில் இருந்த குளம், மற்றொன்று … அவள் குழந்தையாக இருந்த பொழுது விளையாடிய இடம், அவளை திருடிச் சென்றனர்… அந்த இடத்தை தினமும் கனவில் காண்கிறாள்… எப்பொழுதாவது சில பத்திரிகைகளில் அந்த படம் வருவதுண்டு, அதை மார்போடணைத்து மகிழ்ந்திருக்கிறாள்… அது தான் அவள் வீடு. அவளுடைய இயல்பான இருப்பிடம். ஆனால், எப்படி, சட்டென்று நினைவு வந்தவளாக அந்த காட்சிப் படம் தனக்கு இரண்டு வாய்ப்புகளைத் தருகிறது, அவளே தீர்மானித்துக் கொள்ளலாம் – ஓ அந்த மந்திர ஸ்படிகம் இப்பொழுது தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டு விட்டதோ, விலங்குகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் ஒரு வாய்ப்பை தருகிறது. ஒரு வாய்ப்பு, விலங்குலகம் அல்லது தனது இயல்பான இருப்பிடம்… அவள் அந்த கல்லின் ரகசியம் பத்திரத்தில் எழுதிய குறிப்பு பலன் தந்துள்ளது… இரண்டு காட்சி படங்களும் பொறுமையிழந்து ஆடின, ஃபியோனா தன்னை தன் நினைவுகளிலிருந்து விடுவித்துக் கொண்டாள். திருப்தியான புன்னகையுடன், தன் இறக்கையால் தன் தாய் வீடான படத்தில் தொட்டாள். அவளுக்கு பழக்கமான வண்ணங்கள் ஓளி வட்டம் சுழலுவதும், தான் எதிலோ மூழ்குவது போன்ற உணர்வும், திடுமென ப்ரகாசமான வெளிச்சம் நிறைந்த அவளுடைய இடத்துக்கு, இதுவரை தன் வீடு என்று அறிந்து மனதிலேயே வாழ்ந்த இடம் ..
…..
| To | Srinivasan Krishnan@gmail.com |
| Cc | Rekha krishnan@gmail.com |
| Bcc | ramankrishnan@gmail.com |
| Subject | Amruta’s book |