செல்வ மதம்
நாளை செய்ய நினைத்தால் இன்றே செய், இன்று செய்ய நினைத்தால் இப்பொழுதே செய்- கபீர் தாசுடைய பிரசித்தமான உப தேசம், எந்த செயலானாலும் இழுந்தடிக்காதே- நளைக்கு செய்யலாம் என்று நினைத்ததை இன்றே செய் , இன்று செய்வதானால், இப்பொழுதே செய் என்பது அவருடைய உபதேசம்.
அறம் செய விரும்பு – ஆத்திச் ஸூடி பாடல்கள்,
வேதகிரி தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்துக்கு அடையாளம் வைத்து விட்டு எட்டிப் பார்த்தார். யாரது?
என்ன ஸார், எல்லாம் பழசா இருக்கு என்றான். அவர் சிரித்தார், நானே பழசு தானே என்றார்.
புதுசு வேணும் சார். இந்த காலத்துக்கு தகுந்த மாறுதல் வேணும் என்றான்.
… பதிப்பகம் – இது தானே
ஆமாம் – நீங்கள்? நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன், உங்கள் பத்திரிகையில் அதை வெளியிடனும்.
அப்படியா. கொடுத்து விட்டு போங்கள். ஐந்து பேர் பார்த்து ஓகே சொல்லனும். இரண்டு நாள் கொடுங்கள். .எங்களுக்கு வாசகர்கள் அதிகம் இல்லை. வேறு இடம் பார்க்கலாமே. பார்த்தேன், யாருமே ஏத்துக்கல்ல.நான் இதற்கு சன்மானம் கூட கேக்கல்ல,. நானே தருகிறேன், என்ன செலவாறதோ, அதை.
அவன் விடாப் பிடியாக, கபீர் பாடல் எழுதியிருந்த பலகை அருகில் சென்று நின்றான். இது எதுக்கு? மத்தவங்களுக்கு உபதேசம் மட்டும் தானா? இந்த வாரப் பத்திரிகையில் வரணும்.
பெரியவர் சிரித்தார், அப்படிக்கு என்ன? பார்க்கிறேன். இன்றைய வேலை நேரம் முடிந்து விட்டது. நாளைக் காலையில் வந்து பாருங்கள். இந்த வாரமே வரணுமா? எப்படி இந்த பத்திரிகை பற்றித் தெரிந்தது.
அவன் சொன்னான்: எனக்கு பிடித்த ஒரு பெண். மகா ராங்கிக் காரி, அவள் கையில் இந்த இதழ் இருக்கும். என்ன தான் படிப்பாள். அவள் என் கவிதையை படிக்கனும், வேற வழியில்ல- நேர பேசவே முடியல்ல -என்னை பொருட்டா கூட மதிக்கறதில்ல.
அப்படியா? அவன் நகர்ந்த பின் அந்த கட்டு காகிதத்தை எடுத்து திறந்தார். கவிதை ன்னு சொன்னானே. அபத்தம். அவரால் ஒரு பக்கம் கூட படிக்க முடியவில்லை. கன்னா பின்னா ன்னு சொல்வாளே, இது தான் போலும். தப்பு தப்பா – அது தவிர எல்லோரையும் மட்டம் தட்டியும், தனக்குத் தான் தெரியும் என்பது போலவும் – பேசாமல் அதைக் குப்பைக் கூடைக்குள் போட்டார். ஐந்து பேர் மாலையிட்ட போட்டோக்களில் இருந்து அது தான் சரி என்றனர் போலும்
மறு நாள், பத்து மணிக்கு கதவைத் திறக்கும் பொழுதே சத்தம் கேட்டுத் திரும்பினார். அவன் தான் பெரிய காரில் வந்திருக்கிறான். இந்த வார இதழில் வந்து விடும் தானே. அவள் கையில் நான் பார்த்தாகனும் இந்த வெள்ளிக் கிழமையே. குப்பென்ற மதுவின் நெடி. இந்த நேத்திலேயேவா ..
உள்ளே நுழையாமலே, இன்னமும் முடிவு எடுக்கல்லையே. தெரிவிக்கிறோம். அவன் விடாமல் அவரைத் தள்ளிக் கொண்டு நுழைந்தான். அடடா, இந்த குப்பை கூடையை நேத்தே வெளியில் போட மறந்துட்டேனே. அவன் தானாக நாற்காலியை இழுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். ஏதோ, தானே பேசிக் கொண்டான், கேட்க முடியாத வசவுகள், மட்டமான சொற்களும் அபிநயமும். என்ன நினைக்கிறான். ஏன் சார்? இவ்வளவு வெளிப்படையா மனசை திறந்து எழுதியிருக்கேனே – உங்கள் கிருஷ்ணன் மட்டும் தான் பல பேரோடு இருக்கனுமா? எங்களைப் போல ரசிகர்கள் இருந்தா தப்பா?
தப்பில்ல. நீங்களும் பல பேரோடு இருக்கலாம். அவரைப் போலவே காளியன் மேல் நடனமாடலாம். மலையை தூக்கி பிடிச்சு ஏழு நாள் என்ன எழுபது நாள் இருக்கலாம். யுத்த பூமில நின்னு அடி படலாம். அவ்வளவு ஏன்? ஸ்ரீ ருத்ரன் போல பாற்கடல் விஷத்தையே குடிக்கலாம்.
கிண்டலா என்றவன். முகம் சிவந்தது. எது நடக்க கூடாது என்று பயந்தாரோ, அதுவே நடந்து விட்டது. அவன் குப்பைக் கூடையை பார்த்து விட்டான். பாய்ந்து எடுத்துக் கொண்டவன் சரமாரியாக திட்டினான். என்னய்யா – வாய் கூசாமல் ஏதேதோ திட்டினான். பதிப்பகமாம், நாளைக் காலை வரை இருக்க விடுகிறேனா பார், யூ யூ என்றவன் ஆள் காட்டி விரலால் பயமுறுத்திக் கொண்டே வெளியேறினான்.
அவன் போனபின், தன் படிப்பைத் தொடர்ந்தார்.
நாரதர் சொன்னார்’ விஷயங்களை அனுபவிக்கும் மனிதர்களின் புத்தியை மழுங்கச் செய்வது நல்ல குடி பிறப்போ, கல்வியோ அல்ல. அளவுக்கு மீறிய தனமே அதிகமாக புத்தியை கெடுத்து, நியதியை மீறி, தவறான செயல்களைச் செய்ய வழி வகுக்கிறது. ரஜோ குணமான காம க்ரோதாதிகளை விட செல்வத்தால் வரும் மதம் கெடுதலை விளவிக்கிறது. எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமோ, அவைகளை செல்வம் கொண்டு சேர்க்கிறது. மது பானம், கெட்ட சகவாசம், ஸூதாட்டம், விதிகளை மீறல் இவைகளுக்கு தயாராக்குகிறது. , அதனால் தான் தயை யின்றி பசுக்களை கொல்கிறார்கள். இவர்கள் தங்கள் உடல் முதுமை அடையாது, மரணம் சம்பவிக்காது என்று நம்புகிறார்கள். யாராலும் அழிக்க முடியாது என்ற கர்வம் தலைக்கேறுகிறது. தேவ, அன்ன தாத்தா என்று பணியாளர்களும் வறியவர்களும் அழைப்பதை உண்மையாக நம்புகிறார்கள். யார் அன்ன தாதா, எவராயினும் ஒரு நாள், மண்ணில் புதைந்தோ, நெருப்பில் எரிந்தோ அழியும் உடலைத் தான் கொண்டுள்ளனர். மனிதன் தன் தாய், தந்தை என்றோ, ஒருவன் பலசாலி என்றோ, யாகம் செய்தவரோ, மதிப்புக்குரிய இந்த உயிர்களுக்கும் சாதாரண பிராணிகள் நாய் போன்றவைகளுக்கும் அந்திம காலம் ஒன்றே
அறிவில்லாதவன் செல்வ மதத்தால், ஏழைகளை மட்டமாக நினைக்கிறான். தன்னளவு செல்வம் இல்லாதவன் தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறான். அவனுக்கு முள் குத்தினாலோ, அடி பட்டாலோ, அவனுக்கு வலிக்குமே என்று எண்ணுவதில்லை. தரித்ரனுக்கு தான் என்ற கர்வம் கொள்ள வழியில்லை. ஒரு விதத்தில் இது அவர்களுக்கு தவம் செய்து கிடைக்கும் சமபுத்தியை கொடுத்து விடுகிறது. நித்யம் ஒரு வேளை உணவே கிடைப்பது சிரமமாக இருக்கும் பொழுது மற்ற இந்திரியங்கள் துள்ளுவதில்லை. அதனால் ஜீவ ஹிம்சை செய்வது என்பதும் பெருமளவில் குறைகிறது. சாதுக்கள் மனம் இவர்களை மட்டமாகவோ, தாழ்வாகவோ நினைப்பதில்லை. தனம் உள்ள காரணத்தால் மரக் கட்டை போல பிறர் துன்பம் அறியாமல் அசத்தாக இருப்பவர்கள் இந்த குபேரனின் புத்திரர்கள். இவர்களின் கர்வத்தை அடக்குகிறேன்.
வாருணி மதுவை குடித்து, மதாந்தமாக அதுவே வாழ்க்கை என்று இருப்பவர்களைத் திருத்த வேண்டும். லோக பாலனின் புத்திரர்கள், இப்படி மதம் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்தால், அவர்கள் தண்டனை பெற்றால் தான் சமுகத்தில் மற்றவர்களுக்கும் கடமையுணர்ச்சி வரும். அதனால் இவர்களை மரமாக தாவரமாக இருக்கச் செய்கிறேன். நினைவு இருக்கும். என் அருளால் உள்ளுணர்வு இருக்கும். வாசுதேவனின் சாந்நித்யம்- அருகாமையில் இருந்து சாப விமோசனம் பெற்று பழையபடி சுவர்கம் அடையட்டும். அதற்குள் திருந்தி பகவானிடம் பக்தியும் வந்து விடும்.