விளையாட்டு
வாஹ்ய வாஹக ன்னு விளையாட்டு, தெரியுமா? அந்த பையன்கள் விழித்தனர். என்னன்னே புரியல்ல, என்ன பாஷை , லத்தீன் கிரீக் மாதிரி. விக்கெட் கீப்பர் என்ன பாஷை, யெல்லோ கார்டு என்ன பாஷை, பெனால்டி கார்னர் என்ன பாஷை, இதையெல்லாம் தெரிஞ்சுக்கலையா, அதைப் போல இதையும் தெரிஞ்சுக்கோங்கோ. நம்ம நாட்டு பாஷைதான் வாஹ்ய ன்னா- தூக்கப் படுவது, வாஹக: தூக்குபவன். . நீங்கல்லாம் ஓடி பிடிச்சு விளையாடறச்ச, ஓடி ஒத்தனைத் தொட்டா அவன் அவுட் என்று சொல்லுவேள். அதையே கொஞ்சம் கூட்டி தோத்தவன் ஜயிச்சவனை தன் முதுகில் தூக்கனும் ஒரு கண்டிஷன் சேத்துண்டா இந்த விளையாட்டு. இது பாகவதத்துல வரது. இரண்டு இரண்டு பேரா ஓடனும். அப்படி ஓடி ஜயிச்சவனை மத்தவன் தூக்கிண்டு போகனும்.
எவ்வளவு தூரம்?
முதலில் மூணு காலடி, அடுத்து ஐந்து, ஏழு ன்னு ஆகும். முதல்ல இரண்டு இரண்டு பேரா சேந்துண்டு ஓடணும். அந்த இருவரில் யார் அதிக தூரம் போறாளோ, அவன் ஜயித்தவன் ஆவான். மற்றவன், பின் தங்கியவன். இவன் மத்தவனை தூக்கிண்டு மூணு அடி நடந்து அவனை விட்டுட்டு, அவுட் ஆவான். இப்ப அந்த வரிசையில், முதலில் ஜயிச்சவா மட்டும் தான் இருப்பா. அவா திரும்பவும் இரண்டு இரண்டு பேரா கூட்டு சேரணும். அடுத்த கோடு ஐந்து காலடியில் இருக்கும். இதே போல தோத்தவன் ஜயித்தவனை அடுத்த கோட்டில் விட்டு விட்டு அவுட் ஆவனா, கடைசியில் இரண்டு பேர் தான் மிஞ்சும். ஏழு, ஒம்பது,பதினொன்று வரை போகலாம். அதன் பின் ஜயித்தவன் ஜயித்து விட்டான், தோற்றவன்
ரன்னர் அப் – அதே தான்.
இந்த விளையாட்டை விளையாடும் பொழுது பலராமன் லேட்டா வந்தான். கடைசி ரவுண்டு போயிண்டு இருந்தது. அப்ப தோத்தவன் ரொம்ப பலசாலி. தூக்கிண்டு ஓடியே போயிட்டான். ரொம்ப நாழி காத்திண்டு இருந்தா. மத்த பசங்க எல்லாம் கவலைப் பட்டா- பாத்தா, பலராமனைத் தூக்கினவன் தூக்க மாட்டாம பொத்துண்னு விழுந்துட்டான். அந்த ஊர்க் காரா எல்லாம் ஓடி வந்தா. அப்பாடி இவன் ஒழிஞ்சான். எங்க ஊர்ல ஒரு பழமும் எங்களுக்கு கிடைக்காம தானே எடுத்துப்பான். விரட்டுவான். இதோ இந்த பழம் ரொம்ப நன்னா இருக்கும். நீங்களும் சாப்பிட்டு பாருங்கோன்னு குழந்தைகளுக்கு கொடுத்தா.
அவர் எங்கள் பள்ளியின் விளையாட்டு டீச்சர். சில சமயம் இப்படி ஏதாவது சொல்வார். அவர் டில்லியில் இருந்த பொழுது பிட்டு ன்னு ஒரு விளையாட்டு, அப்பல்லாம் கார் அதிகம் கிடையாது. வீட்டுக்கு முன்னால் பெரிய புல்வெளி. எல்லா குழந்தைகளும் தட்டையாக உள்ள கற்களை பொறுக்கி ஒன்னு மேல ஒன்னா வச்சு அடுக்குவார்கள். இரண்டு கட்சிகள். ஒரு பந்து. இந்த கல் அடுக்கின் மேல் பந்தை வீசி விழச் செய்து விட்டு அவன் ஓடுவான். அடுத்த கட்சி பையன்கள் அதை மறுபடி அடுக்கி வைக்கனும். அதனால் அந்த பந்தை எடுத்து முடிந்த மட்டும் தள்ளி வீசுவான். கிடைத்த அவகாசத்தில் இந்த கல் அடுக்கு பழைபடி கட்டி விடுவார்கள். கட்டி முடித்த பின் பந்து அடுத்த கட்சிக்கு வரும். இதை தள்ளி நின்று தான் பார்த்திருக்காராம். ஆனால் எல்லோரும் ஓடுவதும், பந்து கையில் கிடைத்தவன் கல் குவியலை எவ்வளவு வேகமாக அடிக்க முடியுமோ அடித்து நிறைய கற்கள் விழுந்தால், அவர்களுக்கு அவகாசம் நிறைய கிடைக்கும். நேரம் போவதே தெரியாது. குறுக்கும் நெடுக்குமாக ஓடி வியர்த்து வடிய விளையாடிக் கொண்டிருப்பார்களாம். அதன் பின் கார் வந்தது. வீட்டு வாசலில் நிறுத்தியிருக்கும், பந்து வீசி தவறுதலாக அதன் மேல் பட்டால் கண்ணாடி உடையும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளையாட்டு மறைந்தது.
இப்பல்லாம் ஓடி பிடிச்சு விளையாடறதே இல்ல, – ஒரு பையன் வருத்தத்துடன் சொன்னான்.
வீட்டு வாசல்லயே கார், ஸ்கூட்டர் எல்லாம் நிறுத்தி வச்சுடறா. பழைய வீடுகளில். புதுசா கட்டற இடங்களில் இப்பல்லாம் கார் நிறுத்த இடமும் வச்சு கட்டறா. ஆனாலும் பசங்க பழையபடி விளையாடறதில்ல. எல்லார் கையிலும் bat,ball அல்லது முறையா விளையாடற foot ball மாதிரி ஒரு கூட்டம், அவாளுக்குள்ளேயே விளையாடிப்பா. ஒரு பையன் இடை மறித்தான்-அதுவும் இல்லாட்டா கையில் போனை வச்சுண்டு எங்கேயோ, எந்த ஊரிலோ நடக்கிற போட்டி விளையாட்டைப் பார்த்துண்டு இருப்பா.
அப்படித்தான் அமெரிக்கா புட் பால் ன்னு ஒரு விளையாட்டு. முதல் தடவை நான் அமெரிக்கா போன போது ஏன் புட் பால்னு பெயர் -கால் பந்து விளையாட்டு- பந்தை கையிலேயே வைச்சுண்டு ஓடறான்- ஒத்தனை ஒத்தன் தள்றது தான் தெரியறது, என்ன விளையாட்டு? என் பையன் அதுவா, அந்த பந்து ஒரு அடி நீளம் இருக்கு – அதனால் foot -ஒரு அடி நீளம் உள்ள பந்து ன்னான். நானும் நம்பினேன். அதனால் என்ன, விளையாட்டை பாக்க பிடிச்சுது. என்ன கூட்டம், என்ன கூட்டம், ஒவ்வொருவரும் தானே விளையாடுவது போல அதே கவனமா இருப்பதும், நாங்கள் டீவீ தானே பாக்கறோம், அங்க இருப்பவர்கள், குளிரோ, மழையோ கூட லட்சியம் பண்ணாம இருந்து பார்க்கனும்னா எவ்வளவு உயர்வு. ஆயிரம் தலை ஒரே சமயத்தில பார்க்கிறது விசேஷம்னு சொல்லுவா.
என்னன்னு தெரியாம – யாரோ ஒரு பையன் ஓடறவனை – ஓடு ஓடு ன்னு கத்தினேன். என் பையன் வந்து அம்மா, அவன் எதிர் அணி விளையாட்டுக்காரன், நாங்கள் எங்க ஊர் அணி ஜயிக்கணும்னு பாத்துண்டு இருக்கோம் – அதன் பின் விவரமா சொன்னான். எங்களுக்கு யார் ஜயிக்கிறா, தோற்கிறா எனும் கவலை இல்லையே. ஜயிச்சவன் சிரிப்பான், தோத்தவன் முகத்திலேயே தெரியும் – அதனால் என்ன – உலகத்தையே, , வாழ்வையே தள்ளி நின்னு பாருன்னு தானே நம்ம சாஸ்திரங்கள் சொல்றது. சுகமோ துக்கமோ நம்மை பாதிக்காது. பார்த்த வரை அனுபவித்த ஆனந்தம் நிஜம் அதன் பாதிப்பான சுகம் துக்கம் நமக்கு இல்லை.