Rajatharangini-5
ராஜ தரங்கினி -5
ராஜ தரங்கினி -5
கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறார். இதில் என்ன அழகு என்று உன் சடைகளில் நாகங்களை வைத்திருக்கிறாய்? அவைகளோ கண்களால் கேட்பவை. உன் கண்டத்தில் எதைக் கண்டு அவை மகிழ்கின்றன? குயிலின் குரலைக் கேட்பது போல கண் மலர இருக்கின்றன. நாகங்களுக்கு இரட்டை நாக்கு என்பர். எங்கள் பிரார்த்தனையை அது இரண்டு விதமாக புரிந்து கொள்ளுமா? பகவான் தங்களும் தேவியும் இணைந்து இருக்கையில் என் வேண்டு கோளுக்கு செவி சாய்த்து சொல்லும் சொல்லே எங்களை காக்கட்டும்.
அவந்தி வர்மா சாம்ராஜ்யத்தை அடைந்தான். முதல் காரியமாக ராஜ்யத்தில் இடையூறு செய்தவைகளைக் களைந்தான். உடன் இருப்பவர்களிலும் தேவையானவர்களைத் தவிர மற்றவர்களை விலக்கி விட்டான். இரு அமாத்யர்கள் போதும். அவர்கள் பரஸ்பரம் கலந்து பேசி, அடுத்த நிலை அலுவலர்களையும், பணியாளர்களையும் நியமித்துக் கொள்ளட்டும். அரச ஆணைகளை மதிக்கும் பொறுப்புடைய பிரஜைகளாக இருக்கட்டும். செய் நன்றி மறவாத பொறுமையும், நிதானமாக யோசித்தும் செயல்படும், தேசப்ப்ற்று உள்ளவர்களாக, தன் உணர்ச்சிகளை வெளீக் காட்டாது மென் முறுவலோடு எதிர்ப்பவர்களையும் கடந்து செல்பவர்களாக, மந்திரிகள் அமைவது மிக கஷ்டம். இவர்கள் நிலைத்து நிற்கக் கூடியவர்கள். அரசனின் நல்வினைப் பயனே இது போன்ற மந்திரி அமைவார்.
அவர்ந்தி வர்மா விவேகியாக இருந்தான், ராஜ்யம் கைக்கு வந்த தும் அதன் நிதி நிலையை கவனித்தான். இயல்பாக நல்ல நினைவு சக்தியும், புத்தியும், நேர்மையான எண்ணமும் இருந்ததால் தானே சிந்தித்து ஒரு திட்டமிட்டுக் கொண்டான்.
ராஜ்யலக்ஷ்மி புஜ பலம் உடையவர்களிடம் பிரியமாக இருப்பவள். யானை மேல் பவனி வருபவள். யானையின் மேல் பவனி செல்வ செழிப்பைக் குறிக்கும். அரசு கட்டிலில் அமருபவர்களை சில நாட்கள் கவனமாக ஆராய்வாள் போலும். நற்குணமோ, அரசாளும் திறமையோ இல்லாதவனிடம் பதவி வந்து சேர்ந்தால் கூட, இந்த ஆய்வில் தேறாதவர்கள் நீடிப்பது இல்லை. பொதுவாக எடுத்த எடுப்பில் அவள் அவர்களை பாதிப்பதும் இல்லை. ஆரம்பத்தில் அனுகூலமாக இருந்து விட்டு பின்னால் வறுத்தெடுப்பது சில அல்ப ஜீவன்களாக இருக்கலாம். தேவி ராஜ்ய லக்ஷ்மியை அப்படி நினைக்க வேண்டாம். பாற்கடலில் அவளுடன் பிறந்த அப்சரஸ்கள், சபல சித்தம் உடையவர்கள். அதே பாற்கடலில் வந்தவள் தான், பூ தேவியாக ஒரே அரசனுடன் இருப்பது அவள் எப்படி அறிவாள். எவரிடமும் அதிக பற்றுதல் வைத்து அவர்கள் காலம் முடிந்தவுடன் உடன் செல்வதில்லை. அரசர்கள் வீணாக பொற் கலயங்கள், உயர்ந்த மதிப்பு மிகுந்த நவமணிகள் இவைகளில் ஆசை வைத்து தங்கள் நிலவறையில் சேர்த்து வைக்கிறார்கள். பரலோகம் செல்லும் பொழுது அவர்களுடன் பந்துக்களோ இந்த செல்வமோ செல்வதில்லை. அடுத்த அரசன் அதே பொற் கலயங்களில் உண்ணும் பொழுது, இது எனக்கு முந்திய அரசன் உண்ட கலயம் என்றா நினைப்பான். அதே அரியணை, அதே அரண்மனை பரிவாரங்கள் அவன் அதற்காக வெட்கமோ தயக்கமோ கொள்வதில்லை. ஆங்காங்கு முந்தைய அரசன் பெயர் பொறித்த தூண்களோ, மண்டபங்களோ இருந்தாலும் அவை ஏதோ மைல் கல் போல தான் நினைவில் நிற்கும். கணக்கில்லாத ஹாரங்கள், ஆபரணங்கள் அனைத்தும் வீணே. இவ்வாறு பலவாறு எண்ணி தன் வரையில் பொன்னோ, மணியோ பயன்படுத்துவதை நிறுத்தினான். அரண்மனையில் இருந்தவற்றையும் தானமாக கொடுத்து விட்டான். நன்று செய்தாய், அவந்தி வர்மா என்ற அறிவுடைய அவைப் பெரியவர்களின் ஆசிகளை மனமுவந்து தலை வணங்கி ஏற்றுக் கொண்டான். தேவை என்று வந்தவர்களுக்கு கொடுக்க மட்டுமே நிதியை கைவசம் வைத்துக் கொண்டான். சாமர சத்ரங்களே அரச அடையாளம். இந்த அரியணை என் முன்னோர்களின் வழியில் என் உரிமையாக வந்தது அதை நிர்வகிப்பது என் கடமை என்றான்.
நாட்டில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தான். எந்த வேற்று நாட்டு அரசனும் படையெடுத்து வந்தால் முறியடிக்க மட்டுமே அவை பயன்படும். ஊருக்குள்ளும் அமைதியை நிலை நாட்ட காவல் வீரர்கள் பலர் நியமுஇக்கப் பட்டனர். . பந்துக்களான அரச குலத்தினர்களுக்கு தனக்கு வேண்டியதை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை பிரித்து கொடுத்து விட்டான்.
தந்தையின் மற்றொரு மனைவி மூலம் பிறந்தவன் ஸூர வர்மன். அவன் புத்திசாலியாக இருந்தான். அவனுக்கு யுவராஜ பதவியைக் கொடுத்தான். காதூய, ஹஸ்தி கர்ண என்ற இடங்களை அவனுக்கு அளித்தான். அந்த இடத்தில் ஸூரவர்ம ஸ்வாமி, கோகுலம் என்ற வழிபாட்டுஸ்தலங்களை அவன் ஏற்படுத்திக் கொண்டான். பஞ்சாக்ஷரி – நம:ஸிவாய என்ற மந்திரம். அதை குரு உபதேசமாக பெற்றவன். அதனால் பக்தனாகவும், நேர்மையானவனாகவும், செயல் நேர்த்தியும் உடையவனாக இருந்தான். சிறந்த முறையில் பாடசாலையை கட்டுவித்தான். பல மாணாக்கர்கள் படிக்க வழி செய்தான்.
மற்றொரு சகோதரன், சமரா என்பவன், அவனும் ஆட்சியில் சில பொறுப்புகளை ஏற்றான். சமரஸ்வாமின் என்ற பெயரில் பகவான் கேசவனின் நான்கு விதமான உருவங்களை பிரதிஷ்டை செய்தான். ஸுரவர்மனின் உடன் பிறந்த இருவர், தீரன் என்றும் விண்ணப்ப என்றும் பெயர் உடையவர்கள், இவர்களும் தங்கள் பெயரில் வழி பாட்டு ஸ்தலங்களை நிறுவினர். இவ்விருவரும் நிதி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டனர். அதிக நேரம் பரம சிவன் கோவில்களிலும், ஆன்மீக விஷயங்களிலும் பங்கு எடுத்துக் கொண்டனர்.
ஸூரவர்மனின் மெய்க் காப்பாளன் மஹோதயா என்பவன், இந்த பதவிக்கு வரும் முன்பே, மக்களிடையே செல்வாக்கு உடையவனாக இருந்தவன். மஹோதய ஸ்வாமின் என்ற பெயரில் கோவில் கட்டி கும்பாபிஷேகமும் செய்வித்தான். ராமஜா என்பவன் ஆசிரியர் மற்றும் அரச புரோஹிதர். இலக்கண சாஸ்திரத்தில் புலமை பெற்றவர். அந்த சிவன் கோவிலில் இருந்து கொண்டு மூல நூலான பாணினியின் இலக்கண நூலுக்கு பத உரை எழுதினார். முக்ய மந்திரியாக இருந்த ஸ்ரீ ப்ரபாகர வர்மன் என்பவர், மகா விஷ்ணு கோவிலை நிர்மாணித்து, ப்ரதான மூர்த்தியை ப்ரபாகர ஸ்வாமின் என்று பெயரிட்டார். அந்த கோவிலுக்கு கிளிகள் வருவது பிரசித்தமாக ஆயிற்று. அப்படி வந்தவைகளில் ஒன்று முத்துக்களை கொண்டு வந்து கொடுத்ததாம். சுக- கிளி, சுகாவளீ – கிளிகளின் வரிசை -என்றே அந்த இடம் பெயர் பெற்றது. கல்வி மந்திரியாக ஸூரன் இருந்தான். பலவிதமான கலைகளையும் கல்வி கூடங்களையும் அமைத்து, அறிஞர்களான வித்வான்களுக்கு நல்ல சன்மானம் கொடுத்து, அந்த தேசத்தை கற்றோர் நிறைந்ததாகச் செய்தான். அரச சபையில் அறிஞர்களே இருந்தனர். மற்ற பிரதேசங்களில் இருந்தும் பல்லக்குகளில் கற்றவரும், கலைஞர்களும் அந்தந்த பிரதேசத்து கலைகளையும், காவியங்களையும் இந்த சபையில் வெளியிடுவதை தங்கள் படைப்பின் அங்கீகாரமாக நினைத்தனராம். அதற்கு தகுந்த மரியாதையும், சன்மானங்களும் பெற்று அரச சபையை அலங்கரித்தனர்.
ஆனந்த வர்மன் என்ற கவி முக்தாகணம் என்ற பட்டத்தையும், சிவஸ்வாமி என்ற பட்டத்தை ரத்னாகரன் என்ற கவியும் பெற்றனர். நடுவில் கற்றோரை ஆதரிப்பது என்ற முறைமைகளை மறந்திருந்த அரசகுலம் ஸுரன் என்ற மந்திரியின் தலைமையில் அவந்தி வர்மன் சபையில் புத்துயிர் பெற்றன. இதை அறிவிப்பது போல தினமும் ஸுரனின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர், வந்தி எனும் அரசவை பாடகராகவும் இருந்தவர். அவர் தினமும் பாடுவார்:-
‘இது ஒரு நல்ல வாய்ப்பு. கவிகளும், இலக்கியவாதிகளும் கேளுங்கள். உங்களை மதிக்கவும், உங்கள் சாதனைகளை பாராட்டவும் எங்கள் அரசன் முனைந்துள்ளான். இதை பயன் படுத்திக் கொள்ளுங்கள். மறக்கப் பட்ட உங்கள் திறமைகளை, புலமைகளை இந்த சபையில் வெளியிட்டு புகழ் பெறுவீர்கள். மனிதர்கள் விபத்துகளில் இருந்து தப்பி வந்து பல காலம் வாழ்வது போல மறக்கப் பட்ட உங்கள் படைப்புக்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கச் செய்ய இது தான் வழி. ‘
சுரேஸ்வரி க்ஷேத்ரம் (Dal lake -அதன் கிழக்கு பகுதியில் உள்ள மலை இன்றளவும் தேவி பார்வதியின் இருப்பிடம் என்று வணங்கப்படுகிறது.) என்ற இடத்தில் பலருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தான். உமையொரு பாகனாக சிவ பெருமானை பிரதிஷ்டை செய்து அந்த ஆலயத்துக்கு நிரந்தர வருமானத்துக்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்தான். சிவபெருமான் சிவா என்ற பார்வதியுடன் இருப்பதால், விசாலமான பிராகாரங்களும், நந்தவனங்களுமாக உயர் தரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான். அங்கு வரும் தபஸ்விகள் தங்க மடங்கள், உணவு சாலைகள், என்பவைகள் ஸூரமடம் என்ற பெயரில் அமைத்தனர். அறிவு கூர்மை உடைய ஸூரவர்மன், ஸுரபுரம் என்ற நகரத்தை நிர்மாணம் செய்து, கிரமவர்த்த பிரதேசம் என்பதில் டமரு ढ्क्का – என்ற தாள வாத்யம் பிரதானமாக விளங்கும்படி செய்தான். சுரேஸ்வர ஆலயத்தின் முன் பிராகாரத்தில், பூதேஸ்வரன் என்ற சிவ பெருமானை ஸ்தாபித்தான்.
(இந்த இடத்தில் 1912 ல் அகழ்வாராய்ச்சி செய்யப் பட்டதாக வரலாறு. அவந்தி புரம் ஸ்ரீ நகருக்கு 18 மைல் தூரத்தில் இருந்த இடம். அவந்தீஸ்வரா என்ற சிவன் கோவிலும், அதற்கு அரை மைல் தூரத்தில் அவந்தி ஸ்வாமின் என்ற அழகிய அலங்காரங்களுடன் விஷ்ணு ஆலயமும் சிறப்பாக பாதுகாக்கப் பட்டு இருந்ததாக தெரிகிறது. இரண்டுமே சிகந்தரின் படையெடுப்பில் நாசமாக்கப் பட்டன )
ஸூர வர்மனின் மனைவி காவ்ய தேவி நற்குலத்தில் பிறந்தவள். அவளும் கல்வியறிவு உடையவள். அவளிடம் பிறந்த மகன் ரத்ன வர்தனன் தந்தைக்கு பெருமை சேர்க்கும் மகன் என்று புகழ் பெற்றான். சுரேஸ்வரீ என்ற அந்த நகரில் காவ்யதேவீஸ்வரா என்ற பெயரில் சதாசிவ ஆலயம் எழுந்தது.
அவந்தி வர்மன் தந்தை வழியில் மாற்றுத் தாயிடம் பிறந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு மிக்க பதவிகளையும் அளித்து அவர்களை சுதந்திரமாக செயல் படவும் அனுமதித்த பெருந்தன்மையை நாட்டு மக்கள் போற்றினர். பொறாமை இல்லாதவன், ஸூரனுடைய மகனுக்கும் அரகுமாரன் என்ற பதவியை கொடுத்துள்ளான். தர்ம சாஸ்திரங்களை அனுசரித்து நடக்கிறான், அதனால் தெய்வமே அனுப்பியது போல சிறந்த மந்திரிகள் வாய்த்துள்ளனர். சிறு வயது முதலே வைஷ்ணவமும் சைவமும் அறிந்தவனாக, விஸ்வத்தின் -உலகின் சாரமாக இந்த பூமியை ஆக்கி விட்டான். இங்கு பிறந்தாலும், மடிந்தாலும் முக்தி உறுதி என்ற அளவு புண்ணிய பூமி இது. அரசன் ஆட்சியில் இந்த அவந்தி புரம் எண்ணற்ற போகங்கள் நிறைந்த தாகவும் ஆகி விட்டது.
ஆட்சிக்கு வந்தவுடன் அவந்தி ஸ்வாமின் என்ற விஷ்ணு ஆலயத்தையும், சாம்ராஜ்யம் என்று விஸ்தரித்தவுடன் அவந்தீஸ்வரம் என்ற ஆலயத்தையும் கட்டுவித்தான். திரிபுரேஸ்வர, பூதேச, விஜயேச என்ற சன்னிதிகளும், அவைகளில் அபிஷேகம் என்ற வழிபாட்டு முறையையும் வெள்ளியால் ஆன தண்ணீர் குடம் (சிவாலயங்களில் லிங்கத்துக்கு மேல் சதா அபிஷேகம் நடைபெற ஒரு கலசம் தொங்க விடப் பட்டிருக்கும். இடை விடாமல் நீர் பொழியும்படி சிறு துவாரத்துடன் அமைக்கப் பட்டிருக்கும்.( स्नान द्रोणि – என்பர்) ஸூர வர்மனும் தானும் சிவ பக்தனே ஆனதால், இந்த ஏற்பாடுகளில் மனமுவந்து ஈடு பட்டான். அவந்தி வர்மனின் பிரியமான திட்டம், அந்த பணியே முதன்மை செயல், அதுவே எல்லாம் என்று முனைந்து ஏற்பாடுகளை கவனித்தான். தர்மமா, பிராணனா, மகனா எதுவுமே அதற்கு பின் தான். 47
அவந்தி வர்மன் ஒரு நாள் அவந்தீஸ்வர் கோவிலில் பூதேச சன்னத்திக்கு சென்றான். பெருமானுக்கு படைத்த பழங்கள் வழக்கம் போல இல்லாமல் காட்டு பழம் உத்பலம் என்ற நாவல் பழம் பூஜைக்கான பொருட்களுடன் காணப்பட்டது. பொதுவாக நாவல் பழங்கள் வினாயக பூஜையைத் தவிர மற்ற இடங்களில் பயன் படுத்துவது இல்லை. அரசன் விசாரிக்கவும் அந்த பூசாரிகள், மண்டியிட்டு அமர்ந்து தலை வணங்கி தங்கள் கஷ்டத்தை சொன்னார்கள். ஒரு தானவன், டாமரன் என்ற பெயராம் லஹரா என்ற ஊரைச் சேர்ந்தவன். அவன் கபடமாக ஸூரனுடைய சேவகனாக வந்து நுழைந்து விட்டான். . அவன் பலசாலி. கிராமத்தை ஸூறையாடி விட்டான். இந்த பழம் ஒன்று தான் எங்கள் கைக்கு கிடைத்தது. என்றனர். இதைக் கேட்டு பெரிய ஸூலத்தால் தாக்கப் பட்டவன் போல அரசன் துடித்தான். பூசாரிகளின் சொல்லை கேட்டும் எந்த எதிர்வினையும் செய்யாமல் பாதி பூஜையில் கிளம்பி விட்டான்.
வழக்கமாக செய்யும் வழிபாடுகளைச் செய்யாமல் கிளம்பி விட்டான் என்பதே ஸுரனுக்கு திகைப்பை அளித்தது. காரணம் தெரிந்தவுடன், தானே பூதேசனின் கையில் இருந்த மாத்ரு சக்ரம் – தேவியின் ஆயுதம்- எடுத்துக் கொண்டு பைரவர் சன்னிதிக்கு சென்றான். ஊர் மக்களை கூட்டம் போட வேண்டாம் என்று அனுப்பி விட்டான். அவனுடன் வந்த சில வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களை தானவனை கொண்டு வர பணித்தான். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திக்குக்கு அனுப்பினான்.
தானவன் பூமி அதிர நடந்து வந்து பூதேசனின் எதிரில் நின்றான். உள்ளே நுழைந்ததுமே, ஸூரன் ஆணையின் படி பூதேசனுக்கு காணிக்கையாக அளிப்பது போல கண்ட துண்டமாக வெட்டி விட்டனர். அந்த தலை அசப்பில் ஸூரனுடைய மகன் போலவே இருக்கவும், அனைவரும் திகைத்தனர். அருகில் இருந்த குளத்தில் ரத்தம் பெருக இருந்த உடலை முக்கி எடுத்து, அரசன் அவந்தி வர்மாவிடம் சொல்லச் சொன்னான். மந்திரியை ஏமாற்ற அவனாக செய்துகொண்டதோ, இயல்பாகவோ, அவன் முகம் மந்திரியின் முகமாக இருக்கவே மற்ற சேனைத் தலைவர்களும் மற்றவர்களும் அவனை தடுக்காமல் இருந்திருக்கின்றனர். அரசனும் இந்த காரணத்தால் தான் தன் மன சங்கடத்தை வெளிக்காட்டாமல், எதுவும் மறுமொழி சொல்லாமல் வெளியேறி இருக்கிறான்.
தானவனின் வதம் ஸூரனே முன்னின்று செய்த பின், அரசனிடம் தானே போய் தெரிவித்தான். அரசன் ஸுரனை நலம் விசாரித்தான். நலமாகவே இருக்கிறேன் என்று பதிலுரைத்த ஸூரனை அனைத்து ஆறுதல் சொல்லி விட்டு, முடிக்காமல் விட்ட தன் வழிபாட்டை முடித்தான். 61
இவ்வாறு சிறிய விஷயங்களில் கூட தன் கட்டுப்பாட்டை இழக்காமல் திடமாக இருந்தான். சொல்லாமலே அல்லது வேண்டாமலே எது தேவை என்பதையறிந்து அந்தந்த பிரஜைகளுக்கு தானே செய்து விடுவான். ஒன்றோடொன்று விரோதிகளான குணங்கள், அரசனைப் போலவே அவன் மந்திரிகளிடமும், அனாவசியமான கோபமோ. கள்ளத்தனமோ, ஒருவருக்கொருவர் விரோதமோ கேட்டதும் இல்லை, கண்டதும் இல்லை, என்று மக்களிடம் நம்பிக்கை வந்தது. முன்பு மேக வாஹனன் இருந்தது போலவே அவந்தி வர்மனின் சாம்ராஜ்யமும் விரிவடைந்து விட்டது. பத்து ஆண்டுகள் பிராணி வதமே இல்லாமல் சென்றது. மீன்கள் கூட குளிர் காலத்தில் கரையில் ஒதுங்கி சற்று நேரம் வெய்யிலின் சுகத்தை அனுபவிக்குமாம்.
அவந்தி வர்மன் அரசாண்ட காலத்தில் பட்ட,Batta, ஸ்ரீ கல்லட Srikallata – போன்ற சிறந்த கவிகள் மற்றும் சித்தர்கள் பூமியில் தோன்றினார்கள். கல்ஹணர் சொல்கிறார், இந்த அரசனின் சரித்திரம் ஒன்றை விட ஒன்று சிறப்பானது. அதில் இந்த சந்தர்பத்துக்கு ஏற்ற ஒரு ஒரு விவரம் இங்கு வர்ணிக்கிறேன்.
மஹாபத்ம என்ற குளத்தின் நீர், சில சமயம் பெருகி வெள்ளமாக பாய்ந்து இந்த பிரதேசத்தை மூழ்கடிக்கும். தடுப்பனைகள் இருந்த போதிலும் இந்த பகுதியில் விளைச்சல் குறைவாகவே இருந்தது. லலிதாதித்ய மகாராஜா காலத்தில் மிகவும் சிரமப்பட்டு தடுப்புகள் கட்டியும், நதி நீரை திசை மாற்றியும் செய்ய ஏற்பாடுகள் ஓரளவு பலனளித்தன. விளைச்சல் சற்று உயர்ந்தது. அதன் பின் ஜயாபீடன் காலத்திற்கு பிறகு வந்த அரசர்கள் அதிக பலமோ, முன் யோசனையோ இல்லாமல் கவனக் குறைவால் அதை செப்பனிடாமல் விட்டதால், பூமி பழையபடி எதிர்பாராத வெள்ளங்களால் பாதிக்கப் படலாயிற்று. நூற்று ஐம்பது டினார்கள், dhinnar அந்த கால நாணயம் – மூட்டை அரிசி என்று விற்க காரணமே தேசத்தில் தானிய விளைச்சல் குறைந்தது தான்.. இந்த பற்றாக்குறையை தீர்க்க என்ன செய்யலாம் ?
அந்த சமயம் அவந்தி வர்மனின் தூய்மையான பிரார்தனைக்கு இரங்கியோ சுய்யா என்ற பிரசித்தி பெற்ற விவசாய விக்ஞானி காஸ்மீர தேசத்தில் பிறந்தார். உயிரினங்களின் உணவுக்கு அதிபதியான தேவனே அவதரித்து விட்டான் என்றனர். யார், எங்கிருந்து வந்தார் என்பது தெரியாததால், அமானுஷ்யமான சக்தி பெற்றவர், மனித பிறவி அல்ல என்ற பொதுவான கருத்து அது. ஒரு சமயம் வீதி பெருக்கும் ஒரு தொழிலாளியான பூயா என்ற ஒரு மாது , புது மண் பாண்டம் தரையில் கிடப்பதைக் கண்டாள். மூடியை திறந்தவள் அதனுள் ஒரு சிசு, கமல பத்ரம் போன்ற கண்களுடன், கை கட்டை விரலை வாயில் வைத்து சுவைத்தபடி இருப்பதைக் கண்டாள். 75, 173/398 எந்த தாயாரோ, பிறந்த குழந்தையை தியாகம் செய்து விட்டு போய் இருக்கிறாள். இந்த அழகான குழந்தையை எப்படி துறக்க மனம் வந்தது? மந்த பாக்யா – அனுபவிக்க கொடுத்து வைக்கதவள்.
அவள் ஏழ்மையோ, மற்றவர்களின் எதிர்ப்பையோ பொருட்படுத்தாமல் அந்த சிசுவை வளர்த்தாள். சுய்யா என்ற பெயரிட்டு, தன் தொழிலையும் செய்து கொண்டு அந்த சிசுவை கல்வி கற்கவும் ஏற்பாடு செய்தாள். சிறுவனாக இருந்த பொழுதே சுய்யா, புத்திமானாக இருந்து. கல்வியை ஈடுபாட்டுடன் கற்று வளர்ந்தான். அந்த குடும்பத்தில் முன் பிறந்தவர்களுக்கும் தான் கற்றதை சொல்லிக் கொடுத்தான். தானாக விரதங்கள், நீராடுதல், போன்ற நியமங்களைச் செய்தான். அந்த குழந்தைகள் அவை பற்றி கேட்டதே இல்லை. அறிவு பிரகாசம் அறிவாளிகளையும் அவன் பால் இழுத்தது. அதனால் அவனைச் சுற்றி சில பெரியவர்கள், சிறியவர்கள் அறிஞர்கள் சதா ஸூழ்ந்து இருந்து பல விஷயங்களைப் பேசுவர். ஒரு சமயம் அவர்கள் பேச்சில் இந்த வெள்ள பாதிப்பும். அதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்ற விவாதமும் நடந்தது. சிறுவன் சுய்யா சொன்னான்: என்னிடம் உபாயம் இருக்கிறது. ஆனல் பொருள் வேண்டுமே. நிதி உதவி கிடைத்தால் நான் இதை சரி செய்வேன் என்றான். உடனே அவர்கள் நம்பவில்லை. உன்மத்தன் போல பேசுகிறான் என்றனர். ஆனால் உளவாளிகள் மூலம் இந்த செய்தி அரசன் அவந்தி வர்மன் காதுகளை எட்டியது. அரசன் ஆச்சர்யப் பட்டான். அந்த சிறுவனை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். வந்தவனிடம் நீ எதை வைத்து சொன்னாய்? இந்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? என்று வினவினான். என் மனதில் ஒரு உபாயம் இருக்கிறது. அதை செயல் வடிவம் ஆக்கவும் யோசித்து ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். பொருள் உதவி இல்லாமல் என்ன செய்வேன்? அரசனைத் தவிர மற்றவர்கள் நம்பாமல் சிரித்தார்கள். உன்மத்தன் போலும் என்றனர்.
அவந்தி வர்மா சிறுவனிடம் “ என் சொந்த பணத்தை தருகிறேன். உன் திட்டம் என்ன ? எப்படிச் சொல்கிறாய்? யாரிடம் கற்றாய்? அவன் பதில் சொல்லும் வரை காத்திருக்கவில்லை. பானைகளில் டினார என்ற நாணயங்களை நிரப்பிக் கொடுக்கவும் அவனும் உடனே மதவ ராஜ்யம் நோக்கி படகில் புறப்பட்டான். நந்தக என்ற ஒரு கிராமம் வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது. அந்த பானைகளில் ஒன்றை அந்த நீரில் போட்டு விட்டு திரும்பி வந்தான். சபையினர் ‘நாங்கள் நினைத்தது சரியாகி விட்டது. சரியான உன்மத்தன் இவன்’ என்றனர். ஆனால் அரசன் அவன் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறான் என்பதிலேயே கவனமாக இருந்தான். சுய்யா அடுத்து கிரமராஜ்யத்தில் யக்ஷடரா என்ற பிரதேசத்தில் கை நிறைய டினார்களைக் கொண்டு சென்று நீரில் வீசினான்.
இரண்டு பாறைகள் விதஸ்தாவின் வழியை அடைத்துக் கொண்டிருந்தன. பஞ்சத்தில் உணவின்றி வாடிய கிராமத்து ஜனங்கள், நாணயங்களைத் தேடிக் கொண்டே வந்தனர். பாறைகளுக்கடியிலும் தேட முயன்றவர்கள் அனைவரும் சேர்ந்து பாறைகளை புரட்டிப் போட்டனர். விதஸ்தாவின் நீர் தங்கு தடையின்றி அதன் வழியில் பிரவகித்துச் சென்றது. மூன்று நாட்கள் நீர் வடியும் வரை காத்திருந்து பின், வீடு கட்டும் கொத்தனார்கள் உதவியுடன். விதஸ்தா வின் ஒரு இடத்தை குறிப்பிட்டு அதன் மேல் வடிகால்களுடன் ஒரு அணை கட்டச் செய்தான். கல்லால் ஆன அந்த தடுப்பணையால் நீலா நதியின் கிளை நதிகள் அனைத்தும் நீர் வடிந்து உலர்ந்தன. நீலா நதியின் போக்கையும் அடி மட்டத்தையும் அதன் அடியில் இறங்கிச் சென்று சோதித்த பின், ஒரு வாரம் பொறுத்து, இருபக்கமும் கற்களால் விதஸ்தாவின் இரு கரைகளிலும் திடமான கரை கட்டச் செய்தான். அதனால் பாறைகள் உருண்டு நீரில் விழாமல் தடுக்கப் பட்டது. அதன் பின் தானே அணையின் வடிகால்களை திறந்தான்.
வெகு காலமாக சமுத்திரத்தை அடைய துடித்துக் கொண்டிருந்தவள் போல, நீலா நதி பெரும் ஆரவாரத்துடன் தன் வழி சென்றது. 93
நீர் வற்றியதால் மீன்களும் கடல் வாழ் ஜீவன்களும் இரவில் வானத்தில் தெரியும் தாரகைகள் போல மணலில் கிடந்தனவாம். மேகங்கள் இல்லாத வானம் போல என்று வர்ணிக்கிறார். நிதானமாக ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்து எங்கெல்லாம் உடைப்பு ஏற்பட்டதோ, வெள்ளம் பெருகியதோ, அந்த இடங்களில் செயற்கையாக ஓடைகள், கால்வாய்கள் ஏற்படுத்தினான். மூல நதியின் இருபக்கமும் இந்த கால்வாய்கள், பெண் கரு நாகம் படுத்து கிடப்பது போலவும் அதன் உடலில் பல இடங்களில் படம் இருந்தது போலவும் தோற்றம் அளித்தது. .
திரிகாமி – மூன்று கிளையாகச் செல்லும்- சிந்து நதி இடது பாகத்திலும் வலது பாகம் விதஸ்தா இரண்டுமாக ஓரிடத்தில் சேரும் இடம் வைன்யஸ்வாமின். இன்றளவும் ஸ்ரீ நகரத்தில் சேருவதும் கல்பங்கள் தாண்டியும் நிலைத்து இருக்கின்றன. பரிகாசபுர, பல फ्लपुर புர நகரங்களில் கரைகளில் ஒரு பக்கம் விஷ்ணுஸ்வாமி என்றும் வைன்யஸ்வாமி என்றும் , இரண்டும் கூடும் சங்கம ஸ்தானத்தில், சுந்தரீ பவனம் என்ற இடத்தை அடையும் இடத்தில் ஹ்ருஷீகேச யோகசாயி – யோக நித்ரையில் இருக்கும் பள்ளி கொண்ட பகவான் ஹ்ருஷீகேசன் – என்றும் அமைந்துள்ளன. கரையில் பழைய மரங்களில் சுய்யா வுக்கு உதவிய வேடுவர்கள் தங்கள் படகுகளை கட்டிய அடையாளம் தெரிகிறது. (கல்ஹணர் காலம் பதினொன்றாம் நூற்றாண்டின் மத்தியில். அவந்தி வர்மன் காலம் ஒன்பதாவது நூற்றாண்டு)
சுய்யா பல இடங்களில் நீர் வீழ்ச்சிகள், அருவிகளாக நதி நீர் வெளியேற வழி செய்தான். முதலில் சொன்ன பெண் நாகத்துக்கு பல நாக்குகள் நீண்டு விட்டது போல தோற்றம் அளித்ததாம். ஏழு யோஜனை தூரம் விதஸ்தாவின் இரு கரைகளிலும் கல்லால் ஆன கரைகளை கட்டுவித்த பின் மஹாபத்மா ஏரியிலிருந்து வெள்ளமாக வந்த அபாயம் அறவே நின்றது. நீருக்கு போக்கு காட்டி அதற்கான வெளியேறும் வழிகளை புனரமைத்து கொடுத்து விட்டபின் விதஸ்தா நிம்மதியாக தன் போக்கில் வேகமாக கோதண்டத்தில் – வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல சீராக பாயலானாள்.
(நிஷாதர்கள் என்ற வேடுவர்கள் தற்கால காஸ்மீரத்தில் ஹன்சி என்றும் மன்சி என்று அழைக்கப்படுகின்றனர். அலாஹாபாத் வாடகை படகு ஓட்டுபவர்கள் தங்கள் குலத்தினர்களின் குழுவை நிஷாத சங்கம் என அழைக்கின்றனர். சங்கம் என்ற சொல் புத்தர் காலத்திலேயே இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது – ஆங்கில உரையாசிரியர்) 104 233/398
வராக அவதாரத்தில் பகவான் பிரளய ஜலத்திலிருந்து பூமியை தூக்கி நிறுத்தியது போலவே, பல விதமான கிராமங்களை அதன் கரையில் அவந்தி வர்மன் கட்டுவித்தான். நாட்டு மக்கள் பெருமளவு அங்கு குடியேறி கல கல வென்று என்று பேசியபடி உத்ஸாகமாக நடமாடும் இடங்களாக அவை ஆயின. தினசரி வாழ்க்கைக்கு தேவையான கடை வீதிகள், நீர் வசதிகள் நிறைந்த இடங்கள். நீர் தேக்கி வைக்கும் தொட்டிகள் வட்ட வடிவமாக அமைந்ததால், அவைகளை குண்டலீ என்ற அழைத்தனர். அன்னம் குறைவின்றி கிடைக்க வழி செய்தான். அதிலும் பல வகைகள். நிறைவு என்பது ஒவ்வொரு விஷயத்திலும் இருக்க மக்களே சர்வான்ன ஸம்ருத்தான் – அனைத்து உணவு வகைகளும் நிறைவாக உள்ளன என்று சொல்வர்.
நீர் குறைந்த நாட்களில், பழைய உத்யான வனங்கள் . இருந்த இடம், இது யானைகளை கட்டி வைத்த இடம் என்று உல்லாச பயணிகளுக்கு பல ஆண்டுகள் வரை காணக் கிடைத்தன. டினார்கள் நிறைந்த பானைகளை நந்தக எனும் இடத்தில் பெருகிக் கொண்டிருந்த வெள்ள நீரில் சுய்யா போட்டது, நீர் வடிந்தவுடன் மற்றொரு இடத்தில் கிடைத்து விட்டன. கிராமங்களை, தானிய வயல்கள் இருந்த இடங்கள் இவைகளை சோதித்து, விவசாயிகள் மழை நீரை மட்டுமே நம்பி பயிர் செய்வதை தவிர்க்க, தேவையான இடங்களில் நதி நீரை மடை திருப்பி விளை நிலங்களுக்கு பாயும் படி செய்தனர்.
விவசாய விக்ஞானிகள் இருந்தனர். அறுவடை முடிந்த பின் மண்ணை பரிசோதிக்கவும், எந்த வித நிலத்தில் எதை பயிரிடுவது போன்ற விவரங்களையும் அவர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். நீர் அளவு, பாசன வசதிகள் அந்த பயிருக்கு தேவையான அளவு கிடைக்கச் செய்ய வாய்க்கால்கள், அமைத்தனர். நீண்ட காலம் இவை பயன் பாட்டில் இருக்கும் படி திடமாக இருந்தன. பல கிளை நதிகள், ஓடைகள் என்றும் அவைகளில் பெருகி ஓடும் நீர் வயல்களுக்கு பாயும்படியும் பல திசைகளிலும் ஏற்படுத்தினர். அதன் பலனாக பசுமை நிறைந்த செழிப்பான வளர்த்தியுடன் பாத்திகள் நிறைந்து காணப்பட்டன. ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்., நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர் கோன் உயர்வான் ‘ ஔவையார்.
கஸ்யபர் அருளியது, சங்கர்ஷணன்- பலராமன் செய்தது இவைகளை விட அதிகமாக இந்த சுய்யா விவசாய வளர்ச்சிக்கு செய்து விட்டான். அதுவும் தானே திட்டமிட்டு, உடன் இருந்து மற்றவர்களையும் செய்வித்து நிரந்தரமான தீர்வாக செய்து விட்டான் என்று அனைவரும் போற்றினர்.
பூமியை பிரளய ஜலத்தில் இருந்து தூக்கி நிறுத்தியது, அறிஞர்களான மக்களுக்கு அவைகளை கொடுத்த செயல், கற்களைக் கொண்டு சேது கட்டியது, யமுனையில் காளியனை அடக்கியது என்ற நற்செயல்கள் செய்ய பகவான் மகா விஷ்ணு பல பிறவிகள் எடுத்து செய்தார். எங்கள் சுய்யா இந்த நான்கு செயல்களையும் ஒரே பிறவியில் செய்து விட்டான் என்றனர்.
ஆயுர்வேத அளவுகளின் படி 196,608 கிலோ ஒரு காரி खारि – இது ஒரு மூட்டை தானியம். இது இருனூறு டினார்கள் என்பதாக காஸ்மீர தேசத்தில் பல காலமாக இருந்த விலை. தற்சமயம் அவந்தி வர்மன் காலத்தில் முப்பத்தாறு டினார்களுக்கு கிடைக்கலாயிற்று. மஹா பத்ம நீர் சீரமைக்கப் பட்ட பின், அந்த இடமே சுவர்கம் போல ஆயிற்றாம். விதஸ்தாவின் கரையில் தன் பெயரில் ஒரு பெரிய பட்டினத்தைக் கட்டினான் அந்த இடத்தில் மீன் முதலிய நீர் வாழ் உயிரினங்களையும் பிடிப்பதோ, பறவைகளைக் கொல்வதோ உலகம் உள்ளவரை கூடாது என்று சட்டம் இயற்றினான். சுய்யாவின் பெயரில் குண்டலா என்று அழைக்கப்பட்ட நீர் தொட்டிகளை அந்தணர்களுக்கு அளித்தான். தான் நிர்மாணித்த ஒரு பாலத்துக்கு சுய்யாவின் பெயரை வைத்து கௌரவித்தான்.
வெள்ளம் வராமல் தடுக்க வழிகள் செய்த பின் சம நிலத்தில் ஜயஸ்தலா போன்ற பல கிராமங்கள் வந்தன. ஆயிரக் கணக்கான கிராமங்கள் அவந்தி வர்மன் மற்றும் அடுத்து வந்த அரசர்கள் கட்டினர். இது போன்ற பொதுவான தர்மங்களை நிலை நாட்டியவனாக. அவந்தி தேவன் முதல் மனுவின் மகன் மாந்தாதா (முதல் அரசன்) என்பவன் போலவே பூமியை பாலித்தான் என்று கொண்டாடினர்.
தான் தன் முடிவை நெருங்கி விட்டோம் என்று உள்ளுணர்வால் அறிந்தவன், உண்மையான வைஷ்ணவன் ஆக பகவத் கீதையை பாராயணம் செய்தும், தியாங்கள் செய்தும் நல்ல கதியை அடைந்தான். 59ம் ஆண்டு, ஆஷாட மாதம், மூன்றாவது சுக்ல பக்ஷம், பூலோக இந்திரனாக மதிக்கப் பட்டு வாழ்ந்தவன் வாழ் நாளும் முடிந்தது.
உட்பலனுடைய பல சந்ததியினர் பட்த்துக்கு வர ஆசைப்பட்டனர். செல்வ செழிப்பிலேயே வளர்ந்தவர்கள். ரத்னவர்தனா என்ற முதன் மந்திரி அவர்களுக்குள் சங்கரவர்மன் என்ற அவந்தி வர்மனின் மகனை தேர்ந்தெடுத்தான். விண்ணப்பன் என்ற ஆலோசகரும் வெறும் போட்டிக்காக ஸூரவர்மனின் மகன் சுகவர்மன் என்பவனை யுவ ராஜாவாக ஆக்கினான். அதனால் அரசனுக்கும் யுவராஜாவுக்கும் இடையில் எப்பொழுதும் போட்டி. அரசாட்சி ஊஞ்சல் ஆடுவது போல ஆயிற்றாம். சிவசக்தி போன்ற சில தைரியசாலிகள் தங்கள் பங்கு வீரத்தை காட்டத் துணிந்தனர். அந்த நாட்களில் சேனைத் தலைவர்கள் போன்ற பதவிகளில் இருந்தவர்களுக்கு அரச விஸ்வாசம் அதிகமாக இருந்தது. அரசன் போனாலும் அரசு நீடிக்க வேண்டும் என்பது தான் அவர்கள் கொள்கை. சில்லறை லாபங்களுக்காக தங்கள் கடமையில் இருந்து தவற மாட்டார்கள். அதனால் ஆசை காட்டி தன் பக்கம் இழுக்க அரசு போட்டியில் இருந்த இருவராலும் முடியவில்லை. மிகுந்த பிரயாசையுடன் சங்கர வர்மன், யுவராஜாவின் அனாவசிய தலையீடுகளை தவிர்த்து தானே திடமாக ஆட்சியை பரிபாலிக்கத் துவங்கினான்.
சமரவர்மா என்ற சேனாபதியின் உதவியுடன் அடிக்கடி போர் செய்து, ஆட்சியை விஸ்தரித்தும், தன் புகழையும் நிலை நாட்டிக் கொண்டான். 236, 178/398
பங்காளிகளை தன் வசப் படுத்திக் கொண்டு ஆட்சியைப் பெற்ற அந்த அரசன் சங்கர வர்மா மிக பெரிய திக்விஜயம் செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அதற்குள், தேசத்தில் ஜனத் தொகையும் குறைந்து விட்டது, செல்வ செழிப்பும் முன் போல இல்லை. அதனால் அவன் கிளம்பும் சமயம் உடன் வந்த படை வீரர்களின் எண்ணிக்கை ஒன்பது லக்ஷமாக இருந்தது. ராஜ்யத்துக்குளேயே அவன் செல்வாக்கு குறைந்து விட்டிருந்தது. அப்படி இருக்க வெளி தேசங்களுக்கு சென்று அரச மகுடங்களை வெல்ல நினத்ததே அறிவின்மை தான். 138 178/398
இருந்தும் தார்வாபிசார என்ற நாட்டின் அரசன் பயந்து மலை காடுகளில் ஒளிந்து கொண்டு விட்டான். அட்டகாசமாக போர் வாத்யங்கள் மட்டுமே பலமாக ஒலிக்க அவர்கள் படை முன்னேறியது. குர்ஜரா என்ற இடத்தை நோக்கி அந்த படை நகர்ந்தது. த்ரிகர்தா என்ற ராஜ்யத்தில் ப்ருதிவீ சந்திரன் என்ற அரசன் எதனாலோ தோல்வி நிச்சயம் என்று நினைத்தவன் தன் மகன் புவனசந்திரன் என்பவனை சமாதானம் செய்ய அனுப்பினான். பெரும் படை என்பதே அவனை போரை தவிர்க்கச் செய்ய போதுமாக இருந்தது. அவனால் ஆனது கண் காணாமல் மறைவதே. சங்கரவர்மன் அந்த மகனை தான் வெற்றி பெற்றதன் அடையாளமாக உடன் அழைத்துச் சென்றான்.
குர்ஜரர்கள் தேசம் சென்றடைந்தனர். த்ரிகர்த அரசன் ஓடியதை அறிந்த குர்ஜர அரசனும் தானாகவே சரணடைந்தான். டக்கா என்ற தேசத்தை பரிசாக அளித்து விட்டு விலகினான். பேராபத்து, உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் சுண்டு விரலை இழந்து தப்பியவன் என்ன நினைப்பான். அது போல என்று வர்ணிக்கிறார்.
அந்த சமயம் ஆர்யாவர்த்தம் – ஹிமாலயத்துக்கும் விந்த்ய மலைக்கும் இடைப்பட்ட பிரதேசம் -ஒரு முனையில் Darads மறுமுனையில் Turka என்ற அன்னிய நாட்டு படையெடுப்பாளர்கள், இரண்டு சேனைத் தலைவர்களுக்கிடையில் ஒரு புறம் சிங்கம், மறு முனையில் கரடி என்று சொல்வது போல மாட்டிக் கொண்டு பரிதவித்தது. .உதபாண்ட புரம் என்ற இடத்தில், இந்திரன் தங்கள் சிறகுகளை வெட்டியவுடன் பயந்து சமுத்திரத்தில் அடைக்கலம் புகுந்த மலைகள் போல (மலைகள் இறக்கைகளுடன் இருந்தனவாம். அதனால் பறந்து கண்ட இடத்தில் இறங்கி நாசம் செய்த மலைகளின் இறக்கைகளை இந்திரன் வ்ஜ்ராயுதத்தால் வெட்டி விட்டான். அவை கடலில் தஞ்சம் அடைந்ததாக புராணம்) அந்த இடம் சென்று பல சிற்றரசர்கள் பயமின்றி வாழ்ந்தனர். ஸூரியோதயம் ஆனவுடன் இரவில் வானத்தில் பிரகாசித்த தாரகைகள் மறைவது போல, அது வரை பெயரும் புகழும் பெற்ற அரசர்களே தங்கள் செல்வாக்கை இழந்தவர்கள் போல ஆனார்கள். ஆலக்கானா -Alakhana அலகானா என்ற இடத்தில் இருந்த லல்லியாசாஹி தனக்கு எதிர் நின்று போர் புரிவதை தவிர்த்த காரணத்தலேயே அந்த ராஜ்யத்தை தன் வசம் ஆக்கிக் கொண்டான் சங்கரவர்மன்.
(ஹுன என்ற வெளி தேச படையெடுப்பு பற்றியும் ராஜபுதம் – ராஜஸ்தானம்- என்ற இந்தியாவின் வட மேற்கு பிரதேசத்தை ஆக்ரமித்து இருந்தனர். ஆபூ மலைக்கு ஐம்பது மைல் தூரத்தில் இவர்கள் குர்ஜரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பில்மால், ஸ்ரீமால் என்ற இடங்களில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். நாளடைவில் குர்ஜரப்ரதிஹாரா – குர்ஜர படைத்தலைவர்கள்- கன்னோஜ் – என்ற புகழ் வாய்த்த ராஜ்யத்தை கைப்பற்றி பலமான சக்ரவர்த்திகளாக அறிவித்துக் கொண்டனர். வட இந்தியாவில் அவர்கள் அதிக பலம் பெற்றவர்களாக எதிர்க்க முடியாதவர்களாக ஆனார்கள். –Early history of India-V.A.Smith )
அத்துடன் தன் திக்விஜயத்தை முடித்துக் கொண்டு காஸ்மீரம் திரும்பினான் சங்கர வர்மன். பஞ்ச சத்ரம் என்ற இடத்தில் தன் பெயரில் ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். ஸ்ரீஸ்வாமி என்பவருடைய மகள், பூரண நிலவு போல அழகான சுகந்தா என்ற பெண்ணை மணந்து கொண்டான். அவளுடன் தேவலோக ராஜா போல வாழ்ந்தான். சங்கர கௌரீசம் என்ற பெயரில் கோவிலைக் கட்டினான்.
வாக்தேவி – கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு சிறப்பாக ஆலயம் கட்டினான். நாயக என்ற நான்கு வேதங்களையும் கற்ற பண்டிதர் ஒருவர் இந்த இரண்டு ஆலயங்களுக்கும் பொறுப்பாக நியமிக்கப் பட்டார். மற்றவர்கள் படைத்த காவியங்களால் கவியானவர்கள் உண்டு. பிறர் செல்வத்தால் தான் தலைவனாக அரசனாக ஆனவர்களும் உண்டு. திறமை என்று சொல்லும்படியாக எதுவுமே இல்லாமலே வெற்றி வாகை ஸூடி வந்த சங்கரவர்மாவை இப்படி வர்ணிக்கிறார். ,
பரிகாச புரத்தில் நுழைந்தவன், அல்பம் போல கண்ணில் பட்ட விலை உயர்ந்த பொருட்களை அள்ளிக் கொண்டு சென்றான். வளமாக ஆக்கப் பட்ட பிரதேசம். அங்கு நூல் வியாபாரிகள், துணி நெய்தல், பசுக்களின் சந்தை, அதன் வியாபாரம், கொடுக்கல் வாங்கல், என்று என்னென்ன தொழில்கள் மக்களின் வாழ்வாதாரமாக முந்தைய அரசன் ஏற்பத்தி இருந்தானோ, அதன் பலனை வினாடி நேரத்தில் கவர்ந்து சென்றான்.
அவனை அரசனாக தேர்ந்தெடுத்த மந்திரி ரத்னவர்மா ஸ்ரீ ரத்னவர்தனேசன் என்ற பெயரில் சதா சிவன் கோவிலை நிறுவி, நிரந்த வர்மானமும், வழி பாடுகளும் நடக்க ஏற்பாடுகள் செய்து வைத்தான்.
விந்தையான மனிதர்கள். ஆரம்பத்தில் பெயரும் புகழும், பதவியும் வேண்டி நற்காரியங்களை செய்தவர்களே பின்னால் யானை குளித்து விட்டு வந்து தானே மண்ணை அள்ளி தலையில் போட்டுக் கொள்வது போல சில பொருந்தாத விஷயங்களை செய்கிறார்கள். இந்த அரசனும் விதி விலக்கல்ல. அதீதமான போகங்கள், சிற்றின்பங்கள் என்று நேரத்தை செலவழித்தான். விளைவு அரண்மனை பொக்கிஷம் குறைந்தது. பற்றாக் குறையை ஈடு செய்ய அரச செல்வத்தை கொள்ளையடித்தான். கோவில்களின் சொத்தை ஸூறையாடினான். தன்னை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சிலரை அடியாட்களாக நியமித்துக் கொண்டான். அட்டபடிபாகம், க்ருஹக்ரித்ய (( கஞ்சாதிபன்- பொக்கிஷ அதிகாரி, க்ருஹ க்ருத்யா- வரி விதிப்பவன், வசூலிப்பவன் ) என்ற துறைகள் புதிதாக ஏற்படுத்தினான். இவைகள் மூலம் ஊருக்குள், வீடுகளில், கிராமங்களில் என்று இதன் அதிகாரிகள் கெடுபிடி செய்து நிதியை வசூலித்தனர். கோவில்களில் தினசரி உபயோகத்துக்கான தூப தீபங்களுகளுக்கு எண்ணெய், மற்றும் எந்த பொருட்கள் விலை போகுமோ அவைகளை கோவில் கணக்கில் எழுதி எடுத்துச் சென்று வெளியில் விற்றனர்.
சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் உள்ளே வந்து பார்த்துக் கொண்டு எது எதைத் திருடலாம் என்பதே குறியாக கவனித்துக் கொண்டு செல்வர். பின்னால் திருட்டுப் போகும் அல்லது அவர்களே ஏதோ காரணம் சொல்லி பலவந்தமாக எடுத்துச் செல்வர். இது போல அறுபத்து நாலு தேவ க்ருஹங்கள்- ஆலயங்கள், தெரிந்து, மேலும் எத்தனையோ, கோவில் சொத்து அவர்கள் கைக்குச் சென்றது. முன்னோர்கள் கோவிலுக்கு என்று எழுதி வைத்த விளை நிலங்கள், கிராமங்கள் இவைகளின் நிர்வாகமும், சீரமைப்பும், விளையும் பொருட்களுக்கும் தானே பொறுப்பு என்று அறிவித்தான். ( இது மத்திய கால வரலாறுகளில், மேற்கத்திய நாடுகளிலும் இருந்த தீய பழக்கமே. தேவ க்ருஹம் என்ற மரியாதை மறைய, அதன் செல்வத்தை சுரண்டலும், அதன் அசையா சொத்துக்களை தனதாக ஆக்கிக் கொள்வதும் மேலைய நாட்டு வரலாறுகளிலும் காணலாம் என்று அறிகிறோம். ஆதாரம் ரஞ்சித் சீதாராம பண்டிட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு )
பலவிதமான ஏமாற்று வேலைகள். தராசின் கற்களை எடையை குறைத்தோ, அதிகமாகவோ ஆக்கி நுகர்பவர்களிடம் பொய்யாக பரிமாற்றம் செய்வது. எடையைக் குறைத்து தன் அதிகாரிகளுக்கு அளவுக்கு அதிகமாக grant – உதவித் தொகை தருவது, அவர்கள் பராமரிப்பு வேலைகளைச் செய்ய என்ற போர்வையில். கம்பள ஆடைகளுக்கு ஆடம்பரமாக பொருளுதவி செய்தல். கிராமங்களுக்கு சுற்றுலா செல்லும் சமயம் இவன் பொருட்களை ஊதியமின்றி தூக்கிச் செல்ல வராதவர்களுக்கு அந்த பொருளின் எடையளவு வரி விதித்தல், அந்த பகுதியில் அதன் விலை என்னவோ அதை ஒரு ஆண்டு தர வேண்டும் என்ற தண்டனை விதித்தான். இப்படி ஒவ்வொரு கிராமத்தையும் ஏழ்மையின் பிடியில் தள்ளினான். பதின் மூன்று விதமான தரித்திரங்கள் கிராமங்களை அழித்தன என்று சொல்கிறார்.
க்ருஹ க்ருத்ய என்ற துறையில் இப்படி கிராம அதிகாரிகளையும் மக்களையும் வருத்தி எடுத்து அந்த நிதியை நிரப்பினான். ஐந்து கீழ் நிலை அதிகாரிகள், ஒரு மேலாளர் என்று ஏற்பாடு. லாவடன் Lavata என்பவன் மேலாளராக ஆனான். மூடன், இந்த தொழிலே அவனுக்கு நரகத்தை அளிக்கும் என்று தெரிந்தும் ஏற்றுக் கொண்டது பின்னால் வந்த அரசர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. அந்த மண்டலத்திலிருந்து கற்றவர்களூம், கலைஞர்களும், திறமையான கை வேலை மற்றும் சிறு தொழில்கள் செய்வோரும் அரச உதவி இல்லாததால், தேசத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். இப்படி, குணம் நிறைந்த பெரியவர்களும், வெளியேறியதோடு அரசனின் பிரதாபம்- நற்பெயரும் அழிந்தது. அப்படி இருக்க சென்று கொண்டே இருக்கும் இயல்புடையளான செல்வம் ஏன் தங்கும்? அரசும் கணக்கர்களும், குலமிலிகளுமாக நிறைந்து பூதேவி கண் முன் அழிவைக் கண்டாள். தன் பிரஜைகளை வாட்டி எடுத்து அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த சமயம். அவன் மகன் கோபாலவர்மா தந்தையிடம் சொன்னான்’ . தந்தையே! நமது முன்னோர்கள் இதை பதுகாப்பாக- அடைக்கல பொருளாக உங்களிடம் ஒப்படைத்தார்கள். சத்ய சந்தர்களாக இருந்தவர்களின் உழைப்பின் பலன். உங்களை வேண்டிக் கொள்கிறேன். ( Ganjaadhipan கஞ்சாதிபன்- பொக்கிஷ அதிகாரி, க்ருஹ க்ருத்யா- வரி விதிப்பவன், வசூலிப்பவன் ) என்ற இந்த அதிகாரிகள் நாட்டு மக்களின் உயிர் மட்டுமே மீதமாக, அவன் உடமைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கிறார்கள். இதனால் உங்களுக்கும் எந்த நன்மையும் இல்லை. உங்கள் பெயரையே மறக்கச் செய்து விட்டார்கள். இப்படி பிரஜைகளை வருத்திய அரசனுக்கு பரலோகம் எப்படி வாய்க்கும். உங்களுடைய இந்த நடவடிக்கையால் கண் எதிரே துக்கமும், அழிவுமே எனும் பொழுது கண்ணுக்குத் தெரியாத பரலோகம் உங்களுக்கு நன்மையா செய்யும். ஒரு பக்கம் ஏழ்மையும், பட்டினியால் வருத்தமும், வியாதியும் என்று பெரும்பாலோரை இருக்கச் செய்து உங்கள் அதிகாரிகள் அனைத்தையும் தாங்கள் அனுபவிக்கிறார்கள். பேராசை கொண்ட அரசனை எந்த நாளிலும் மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை. அகாலத்தில் பூத்த பூ வாடி விழுவது போல விழுவர். 188 242/398
தந்தையே! நீங்கள் அறியாததா? மென்மையாக பொறுப்பாக பேசி, தேவையானவர்களுக்கு வேண்டியதை கொடுத்தும், என்றும் நினைவில் இருக்கச் சொல்லும் சொல்லே அரச சபையில் மதிப்பைக் கொடுக்கும். லோபம் – தன்னுடையது என்று தானே அனுபவிப்பது -என்ற குணம் அனைத்தையும் அழிக்கும். கொடுக்கும் எண்ணமே வர விடாமல் தடுக்கும். ஆற்றல், வருமானம், உடல் நலம், இவையனைத்தும் பனிக் காலத்து மேகம் போல பயனின்றி போகும். இன்று உள்ள மதிப்பும், மரியாதையும் விலகி, என்றோ ஒரு அரசன் இன்ன பெயரில் இருந்தான் என்ற அளவே வருங்காலத்தில் நினைவில் கொள்ளப் படுவான். லோபம் தேவைக்கு கூட செலவழிக்க விடாது.
பங்காளிகள் துணிச்சல் பெறுவார்கள். பணியாளர்கள் அது வரை பெற்ற நன்மைகளை மறந்தவர்களாக அலட்சியம் செய்வர். யாருமே பிரியமாக பேசவோ, நடந்து கொள்ளவோ பயப்படுவர். சேமித்து வைத்த செல்வம் – அரசனுக்கு அதுவே, எதிரியாகும். சேமித்து வைத்திருக்கிறான் என்பதை அறிந்த வெளி ஆட்கள், அந்த செல்வத்தை அபகரிக்கவே திட்டம் தீட்டுவார்கள். கொல்லவும் தயங்க மாட்டார்கள். இந்த லோபம் என்ற குணம் எந்த விதத்திலும், எவருக்கும் உதவாது.
வரி வசூலிக்கும் சமயம் உங்கள் பெயரை பயன்படுத்திக் கொள்ளும் இந்த அதிகாரிகள், அளவு கடந்த வரி வசூலிப்பதால் மக்கள் துன்புறுகிறார்கள் என்பதை உங்களிடம் மறைக்கிறார்கள். இதை உடனே நிறுத்துங்கள்.
தன் மகனே ஆசிரியன் போல விவரமாக சொல்லியதைக் கேட்ட அரசன் சங்கர வர்மா ஸ்தம்பித்தான். வியப்பால் விரிந்த உதடுகளை துடைத்துக் கோண்டு மெள்ள பேசினான். ‘மகனே! நன்று சொன்னாய். நானும் உன் வயதில் இப்படித்தான் இருந்தேன். மனதில் ஈரமும், துடிப்பும், பிரஜைகளிடம் அன்பும், சாதிக்கும் வேகமும் உள்ளவனாக – என் தந்தை கோடையில் அதிக தாபம். பனிக்காலத்தில் ஒற்றை ஆடையும், காலில் கானணியும் அணியாமல் நடக்கச் செய்வார். அது ஒரு பயிற்சி. காடுகளில் வேட்டையாடும் சாக்கில் முள் நிறைந்த காடுகளில் அலைந்திருக்கிறேன். உடல் தகித்தாலும், வியர்வையில் நனைந்தாலும், சண்டி செய்யும் குதிரைகளை சமாதானப் படுத்தி நடத்திக் கொண்டு நான் பரிதவிப்பதை என் உடன் வந்தவர்கள் என் தந்தையிடம் சொன்னார்கள். அவர் என்ன சொன்னார் தெரியுமா?
அவர்களிடம் என்ன சொன்னார் தெரியுமா? ‘சாமான்யனாக இருந்து நான் ராஜ பதவியை அடைந்தவன். ஒவ்வொரு நிலையிலும் சேவகர்கள் படும் பாட்டை நான் அறிவேன். தானே அனுபவித்தால் தான் உடல் வலி என்றால் என்ன என்று தெரியும். பிறவியிலேயே ராஜ பதவியை அடைபவர்கள் இதை எப்படி அறிவார்கள். இதுவும் ஒரு பாடம். ‘ என்றார்.
அதனால் உன்னை திருத்திக் கொள்ள உதவும் என்பதால் இந்த உபாயம் செய்தேன். அது போலத் தான் பிரஜைகளும். நானும் கர்ப வாசம்- தாயின் கருவில் இருந்தேன் என்று எந்த மனிதனாவது நினைப்பானா? . திடுமென எனக்கு அந்த நாட்கள் நினைவு வந்தது. எனக்கு ஒரு வரம் கொடு, அரச பதவியை அடைந்த பின் ஒரு போதும் பிரஜைகள் வருந்தும்படி செய்யாதே’ என்றார்.
ஆனால் அரச குமாரன் முகம் சிவந்தது. அரசனின் மெய்க் காப்பாளர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டதாக நினைத்தான். ராஜ குலத்தில் பிறந்தது என் தவறா? பலவிதமான உணர்வுகள் அவனை அலைக் கழித்தன. தானே தன்னை புடம் போடுவது போல சோதித்துக் கொண்டான். இது வரை நாட்டு மக்களுக்காக என்ன செய்திருக்கிறேன். நினைவறிந்த நாளில் இருந்து அரச குமாரனாக வாழ்ந்து வந்திருக்கிறேன். அவன் முகம் வெட்கத்தால் தாழ்ந்தது. அறிஞர்கள், கவிகள் எப்படி வாழ்கிறார்கள்? Bhallata – பல்லாடா என்ற கவி அந்த நாளில் இருந்தவர். அவர் எப்படி வாழ்கிறார் என்று கூட நான் தெரிந்து கொள்ள முற்படவில்லை. அதே போல சிறந்த கவிகள். பாரிகோ, லவடன் என்பவர்கள். அவர்களுக்கு அரசு என்ன ஊதியமா கொடுத்தது? அவர்களுக்கு இரண்டாயிரம் டினார்கள் கொடுத்ததை பெரிதாக நினைத்தேனே. என் பிறவி ஒரு மது வியாபரியின் மகள் மூலம் என்பதை மறந்தேன். அதனால் அவர்களைப் போல பொருள் பொதிந்த சொல் எனக்கு வரவில்லை. என் பேச்சும் அது போல பெருந்தன்மையாக அமையவில்லை போலும்.
மந்திரி சுகராஜர் எப்படி இருந்தார் ? தியானத்தில் அமர்ந்து இருந்தவரை நினைத்தான். முக்கின் நுனியில் கண் பார்வை இருக்க, மூச்சை அடக்கி சாதனைகள் செய்வார். அது தான் அறிவுள்ளவர்களின் வழி. அவரை இந்த அரசனின் வினயமில்லாத ஆட்கள் வேஷதாரி, நடிக்கிறார் என்று அவதூறாக பேசினர்.
குற்றமற்ற தார்வாபிசாரன் என்ற அரசனை சந்தேகித்தனர். ஏதோ மறை முகமாக ஸூழ்ச்சி செய்கிறான் என்று சொல்லி கொன்றனர். அவன் உடன் இருந்தவர்களையும், பல்லக்கில் சென்று கொண்டிருக்கும் சமயம் இரவோடு இரவாக அழித்தனர்.
பிரஜைகளின் சாபம் தவறான வழியில் கர்வத்துடன் செல்லும் அரசனை கண்டிப்பாக பாதிக்கும். அவன் வம்சமே அழிந்தது. மகன் கள் (முன்னூற்று இருபது) அனைவரும் அழிந்தனர். ராஜ்யஸ்ரீ அவனை விட்டகன்றாள். அவன் முடிவும் தனியனாக, மனைவி மக்கள் யாரும் இன்றி முடிந்தது. தன் பிரஜைகளை சரியாக பரிபாலிக்காமல் விட்டால் காரணமின்றியே க்ஷண நேரத்தில் அந்த அரசு விழும். இது உண்மையே. யோசியுங்கள். இத்தகைய கொடூரமான செயல்களால் அவன் பெயரும் தன் பெயரில் பட்டனம் என்று ஆங்காங்கு கட்டிய நகரங்களும் மறைந்தன.. சங்கர வர்மனுக்கு நேர்ந்த து போல எந்த அரசனுக்கும் நேர்ந்ததில்லை என்பர்.
சுகராஜனுக்கு தன் சகோதரியிடம் பிறந்த மகன், அவனை எல்லை ராஜ்ய பொறுப்பில் அமர்த்தியிருந்தான். வீரானகா என்ற இடத்தில் தவறுதலாக அவன் வதைக்கப்பட்டான். யாரால், என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அந்த கோபத்தில் வீரானகா தேசத்தையே தரை மட்டமாக்கினான். அதை முடித்துக் கொண்டு வட தேசம் சென்றான். சிந்து நதியின் தீரத்தில் இருந்த தேசங்களின் சிற்றரசர்கள் இதைக் கேள்விப் பட்டு அவன் வந்த பொழுது எதிர்த்து நிற்கவே பயந்தவர்களாக கப்பம் கட்டி அடி பணிந்தனர். வெற்றி கொண்டதாக பெருமையுடன் திரும்பி வௌம் வழியில், Urasa- என்ற இடத்தில் அவனது படை வீரர்களுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே தகராறு எழுந்தது. அதை விசாரித்துக் கொண்டிருந்தவன் கழுத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு அம்பு தைத்தது. மலை மேலிருந்து அங்கு பதவியில் இருந்த ஸ்தாபகா- பாதுகாப்பு அதிகாரி யின் அம்பு அது. உடனே தன் சேனைத் தலைவனிடம் அனைவரையும் நலமாக தங்கள் ஊரில் கோண்டு சேர்க்கச் சொல்லி விட்டு தான் பல்லக்கில் கிளம்பினான். கண் பார்வை மங்கிய நிலையில் உடன் வந்திருந்த ஸுகந்தியை குரலால் அடையாளம் கண்டு கொண்டவனாக கோபால வர்மனை காப்பாற்று. அரசனாக்கு. அவனுக்கு நண்பர்களும் இல்லை. சுகராஜன் முதலானோர் அம்பை விடுவிக்க முயன்றது பலனளிக்கவில்லை. அதே காரணமாக 77 வது ஆண்டு பால்குண- பங்குனி மாதம், க்ருஷ்ண பட்சத்து சப்தமி அன்று உயிர் துறந்தான். 902 A.C
சுகராஜன் தலைமையில் அரசன் உயிர் பிரிந்ததைச் சொல்லாமல் வழியில் பலத்த பாதுகாப்புடன் சென்றனர். ஆங்காங்கு உபசரிக்க வந்த ஊர் தலைவர்கள் வணங்கிய பொழுது, பதில் வணக்கம் செய்வது போல கயிறுகளால் கட்டிய யந்திரம் மூலம் தலை அசைத்தும், கை தூக்கி ஆசி அளிப்பது போலவும் செய்து சமாளித்தனர். ஆறு நாட்கள் பிரயாணம் செய்து தங்கள் நாட்டின் எல்லையை அடைந்தவுடன் அந்திம கிரியைகளைச் செய்தனர். சுரேந்திரவதி என்ற ஒரு ராணி, இன்னும் சிலர் அரசனுடன் வந்தவர்களான ஜயசிம்ஹா என்ற மெய்க் காப்பாளன், சேவகர்கள் என்று மொத்தம் ஆறு நபர்களுக்கும் அதே போல அந்திம சடங்குகளைச் செய்தனர். பணியாளர்களீல் இருவர் லாடா வஜ்ரசாரா என்பவனும் .அரசன் அடி பட்ட இடத்தில் இருந்தவர்களும் காயம் அடைந்து இருந்தனர். வழி நடையில் அவர்களும் உயிரை விட்டனர். எனவே அவர்களுக்கும் நல்கதியடைய அந்திம சடங்குகளைச் செய்தனர்.
அதன் பின் கோபால வர்மா பதவி ஏற்றான். தாயார் சுகந்தாவின் பராமரிப்பில் நற்குணங்களுடன் வளர்ந்தவன், துடிப்பன இளஞன், நல்லாட்சியை அளித்தான். அவன் அரண்மனையில் நல்ல சகவாசம் அமையவில்லை. இருந்தாலும் சுயமாகவே சிந்தித்து தன் வரை ஒழுக்கமாகவே வளர்ந்து விட்டான்.
சங்கர வர்மாவின் தாயார், உறவு முறையில் இவனுடைய பாட்டி, இள வயதினள். அவள் மந்திரியான ப்ரபாகரனை விரும்பினாள். அவள் தலையீட்டால் ப்ரபாகரன் நல்ல பதவிகளை அடைந்தான். செல்வாக்கோடு அரண்மனையில் வளைய வந்தான். அவளுடன் இருந்த தொடர்பை பயன்படுத்திக் கொண்டு பொக்கிஷ அதிகாரியாக ஆனவன் பொக்கிஷத்திலிருந்து வேண்டிய மட்டும் அபகரித்துக் கொண்டான். அதைக் கொண்டு தனக்கு உதபாண்ட புரம் என்ற இடத்தை ஆக்ரமித்து தன் வசப் படுத்திக் கொண்டான். ஸாஹீ என்ற அரச குடும்பம் அதை தன் அதிகாரத்தால் லால்லியா Lalliya – மகன் டோமாரன் என்பனுக்கு, அவன் பெயரை காமலுகா என மாற்றி அரசு பதவியில் அமர்த்தி விட்டான்.
அதன் பின் ஸ்ரீ நகரம் வந்தான். தன் உடல் வலிமையில் கர்வம் கொண்டவனாக, தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணத்துடன் ஊருக்குள் அதிகாரம் செலுத்தியபடி சுற்றினான். அரண்மனையில் நுழையக் கூட அனுமதி இல்லாது இருந்த தாழ்ந்த மக்கள், குணமோ, ஒழுக்கமோ இல்லாதவர்கள் தயக்கமின்றி உள்ளே வந்தனர். இதற்குள் சற்று வயதும், அறிவும் முதிர்ந்த வாலிபனான கோபாலவர்மனுக்கு காண பொறுக்கவில்லை. அவனிடம் வந்து சாஹியுடன் செய்த போரில் பொக்கிஷம் தீர்ந்து விட்டது என்று வந்து சொன்ன பிரபாகரனை, கணக்கு வழக்குகளை காட்டச் சொன்னான். இதை எதிர் பார்க்காத பிரபாகரன் தன்னை காத்துக் கொள்ள ராம தேவா என்ற மந்திர வாதியை விட்டு கோபால வர்மாவை தீயில் விழச் செய்து தீர்த்து கட்டி விட்டான். இந்த சூழ்ச்சி வெளீயானதும் ராம தேவன் தண்டிக்கப் பட்டான். அதே போல தான் வைத்த தீக்கு இரையானான்.
மிகுந்த நம்பிக்கையுடன் நல்லாட்சி அளிக்க வந்த கோபால வர்மன் இரண்டு ஆண்டுகளே நீடித்தான். சம்கடா என்ற அவன் இளையவன் பட்டத்துக்கு வந்தான். அவனையும் பத்தே நாட்களில் ஒழித்து விட்டனர். இந்த நிலையில் சுகந்தா என்ற பட்டத்து ராணி தானே அரசு பொறுப்பை ஏற்றாள்.
கோபால புரா என்ற நகரத்தை, கோபால பல்கலைக் கழகம், கோபல கேசவ என்ற இடம், தவிர தன் பெயரில் ஒரு ஊர் – அங்கு தன் இயல்பான மதம், அதன் தர்மத்தை பரவச் செய்ய பல செயல்களைச் செய்தாள். கோபால வர்மாவின் ராணி, நந்தா என்ற பிரசித்தமான ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவள். அதனால் நந்தா என்ற பெயரில் பாடசாலைகளும், நந்த கேசவா என்ற கோவிலையும் ஏற்படுத்தினாள். 245
கோபால வர்மனின் மற்றொரு மனைவி ஜயலக்ஷ்மி என்பவள், கருவுற்ரிருந்தாள். அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தையை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அதுவும் குறைப் பிரசவமாகவும், மிகவும் வருந்தினர். தாந்த்ரீகர்கள் – தந்திர வித்தைகளை அறிந்தவர்கள். (பெரும்பாலும் தவறான செயல்களையே செய்பவராக இருந்தனர்) எனவே சுகந்தா அடுட்த இரண்டு ஆண்டுகளும் பொறுப்பை ஏற்று ராணியாக இருந்தாள். ஒரு சமயம் மந்திரிகள், ஆலோசகர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு வரும் காலத்தச் சொல்லும் தாந்த்ரீகனையே விசாரித்தனர். அதன் படி அவந்தி வர்மாவின் வம்சத்தில் பெண் வயிற்று மகன், அவன் மகன் என்ற வரிசையில் ஸூர வர்மன் என்பவனை கண்டு கொண்டார்கள். Gaggaa – கக்கா தங்கள் குடும்பத்து சுக வர்மனின் பெண் வழி வந்தவன் என்பதால் அவள் மகன் நிர்ஜித வர்மா என்ற பெயருடையவன் தகுதியானவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். குடும்பத்தினன் என்பதால் அரசையிடம் பரிவோடு இருப்பான் என்று நம்பினர்.. தாந்த்ரீகர்கள் அவன் பிறந்த வேளையை வைத்து அவனுடைய மகன் பார்த்தா என்பவன் அதிக பொருத்தமானவன் எங்கூறினர். அதனால் பத்து வயதே ஆன அவள் மகன் பார்த்தா அரசனானான்.
பொக்கிஷ அதிகாரியின் நண்பர்கள் கூட்டாக சேர்ந்த்து சுகந்தாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் து தான் பிரயச்சித்தம் ஆகும் என்று சொல்லி அரண்மனைவியை விட்டு வெளியேற்றினர். கண்ணீர் பெருகி வழிய அவள் வெளியேறிய சமயம், அவளிடம் நன்மைகள் பெற்றவர்களே, எதிரிகள் பக்கம் இருப்பதை அறிந்து வருந்தினாள். சில நாட்களில் அவளுடைய மெய்க் காப்பாளர்கள் ஏகாங்கி என்ற அரண்மனை சேவகர்கள் தலையிட்டு அவளை திரும்ப அழைத்து வந்தனர். ஹஸ்கபுரா என்ற இடத்தில் அவள் இருந்தாள். மெய்க் காப்பாளர்களிடம் தோற்று ஒளிந்து கொண்டிருந்த தாந்த்ரீகன் வெளி வந்து அவர்களை தோற்கடித்து சுகந்தாவை சிறை பிடித்தனர். நிஷ்பலக விஹாரா என்ற இடத்தில் சிறையில் இருந்தபடியே உயிர் நீத்தாள். 914 ஏஸி.
உடன் இருந்து கலஹம் செய்தவர்கள் கையில் இந்த பிரதேசம் வெகுவாக சிரமங்களை அனுபவித்து விட்டது. இந்த வம்சத்தினரின் ஏற்றமும் வீழ்ச்சியும் நம்பவே முடியாத திருப்பங்களோடு அமைந்து விட்டது. யாரை நோவது?
கலங்கிய குட்டையை குழப்புவது என்று ஒரு வசனம். கிடைத்ததை ஸூறையாடிக் கொண்டு சென்ற தீய சக்திகள், நிலையில்லாத அரசுகள் இவை அந்த நாட்டின் செல்வத்தையும், நிதி நிலைமையும் அடியோடு பாழாக்கிய பல துக்க கரமான சம்பவங்கள் நடந்தேறின.
பாலகன் என்பதால் அவன் தந்தை ‘the Lame’ – முடவன் என்று அழைக்கப்பட்ட பார்த்தவின் தந்தை முடிந்த வரை மற்ற மந்திரிகளுடன் சேர்ந்து கொண்டு மக்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டான். அதனால் அரசர்களீல் இருந்து, கிராமத் தலைவர்கள், அலுவலக பணியாளர்கள் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு பதவியில் உள்ளவனை நீக்குவதும், தனக்கு சாதகமானவனை பதவியில் அமர்த்துவதுமாக அரச நிர்வாகம் சீர் குலைந்தது. . கன்னோஜ் ராஜ்யம் வரை இந்த தாந்த்ரீகர்களின் கை ஓங்கி இருந்தது. அவர்களுக்கு ஹுண்டிகா தானம் – என்ற பெயரில் கையூட்டு கொடுப்பது கட்டாயமாகி விட்டது. 266 189/398
மேருவர்தனா என்ற பெயரில் ஒரு மந்திரி இருந்தார். , பழைய காஸ்மீர தலை நகரில் ஸ்ரீ மேருவர்தனஸ்வாமின் என்ற விஷ்ணு கோவிலைக் கட்டியிருந்தார். அவருடைய புதல்வர்கள் தாங்களே அரசராகும் கனவு கண்டு கொண்டிருந்தனர். அதன் பொருட்டு நிதி திரட்டும் வேலையில் இருந்தனர். நிதி அளிக்காத பிரஜைகளை பயமுறுத்தியும், வீடுகளை விட்டு விரட்டியும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி நிதியை சேர்த்தனர்.
சம்கரவர்தன என்ற மூத்த மகன், ரகசியமாக சுகந்தாதித்யா என்ற அரச குலத்தவனிடம் நட்பு கொண்டு அரண்மனைக்குள் நுழைய வசதி செய்து கொண்டான். அந்த சமயம், ஏற்கனவே இருந்த காயத்தில் உப்பை தடவியது போல (தாங்க முடியாத எரிச்சல் கொடுக்கும்) போல, இயற்கையின் சீற்றம், காலமில்லாத காலத்தில் வெள்ளம் வந்து பயிர்கள் நாசமாகவும் பொது மக்களிடம் பணப் புழக்கம் குறைந்தது. ஒரு பருவம்- கோடையில் விதைத்து இலையுதிர் காலத்தில் அறுவடைக்கு தயாரான தானியங்கள் முழுவதும் ஒட்டு மொத்தமாக அழிந்தால் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? காரி Khari – என்று அழைக்கப்படும் ஒரு கொள்ளலவு- 196.3 கிலோ மூட்டை ஆயிரம் டினார்களுக்கு விற்றது. ஏழை எளிய மக்கள் என்ன செய்வார்கள்/ 93ம் ஆண்டு இப்படி ஒரு பஞ்சம் வந்து கணக்கில்லாமல் மடிய, ஜனத்தொகை பெரிதும் குறைந்தது.
விதஸ்தா ஏரியைச் சுற்றி சடலங்கள், உள்ளும் வெளியும் அவையே நீரே தெரியாமல் உப்பி போன உடல்கள், பயங்கரமான உடலை உலுக்கும் காட்சிகள். . பூமி எங்கும் எலும்புகளே. எது யாருடையது என்பதே தெரியாமல் மயானமாக ஆயிற்று. அந்த காலத்திலும் பதுக்கி வைத்திருந்த அரிசியை விற்று தாந்த்ரீகன் செல்வந்தன் ஆனான். அரசன் அவனுக்குரிய கையூட்டைக் கொடுத்து அரசவையில் அங்கத்தினராக ஏற்றுக் கொண்டான்.
குளிரும் மழையும் வாட்ட, சுழன்று அடிக்கும் காற்றும் துரத்த நடுக் காட்டில் அனைவரும் தவிக்கும் பொழுது தான் மட்டும் வசதியாக வயல் வீடு அல்லது குடிசைக்குள் சுகமாக ஒருவன் இருப்பது போல முடவன் என்று பெயர் பெற்ற அரசகுமாரன் அரண்மனைக்குள் தன் வசதிகள் எதுவும் குறையாமல் வாழ்ந்து வந்தான். இவனை ராஜ ராக்ஷஸன் எங்கிறார் கவி.
நாட்டு மக்களின் நலனைக் காத்த துஞ்சினா, சந்திரபீடா என்ற முந்தைய அரசர்களின் வளர்ப்பின் வந்தவன், அவர்களுக்கும் இந்த கோரமான முடிவையே அளித்தான். மழை நீரில் வரும் நீர்க் கொப்புளங்கள் போல அரசர்கள் தோன்றி மறைந்தனர். பார்த்தா அரசனானல் தந்திரி வந்து மாற்ரி விடுவான். சுகந்தாதித்யா முடவனுக்கு சேவை செய்து அவன் மனைவிகளுக்குத் தேவைஉயானதை கொண்டு வந்து கொடுக்கும் பணியில் ஈடு படுத்தப் பட்டான். . அரண்மனைப் பெண்களின் தீராத வேட்கைகள், உடல் உறவு வரை அவனை பயன் படுத்திக் கொண்டனர். முடவனின் மனைவியே இளைஞனான சுகந்தாதித்யாவை விரும்பினாள். எதற்கும், நியாயமோ, தர்மமோ, ஒழுக்கமோ என்ற கட்டுப்பாடுகளே இன்றி மிருக வாழ்க்கையாகிப் போனது.
எதிர் பாராத திருப்பமாக தந்திரி பார்த்தாவை ஆதரித்து அவனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தான். சொல்ப காலம் அரசனாகும் வாய்ப்பு. அதன்பின் அந்த ஆண்டு முடிவிலேயே, சக்ரவர்மன் முடி ஸூட்டப் பட்டான். திரும்பி வர துடித்த பார்த்தா தன் மெய்க் காப்பாளர்களுடன் போராடி தோற்றான். அடுத்த பத்து ஆண்டுகள் இப்படி தந்திரியின் கையில் விளையாட்டு பொம்மைகளாக அரசர்களும் நாடும் இருந்தன. சக்ரவர்மன் இன்னமும் சிறுவனாக இருந்ததால் பெயருக்கு தந்தையின் பாதுகாப்பில் இருந்தான். தந்திரிக்கு வேறு உள் நோக்கம். பின்னால் பயன்படும் என்று பாம்பின் முட்டையை வளர்ப்பது போல என்று கவி வர்ணிக்கிறார். ஒரு பக்கம் தந்திரி, அரசகுடும்பத்தினரின் பேராசை ஒரு பக்கம், அதிக நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை, பார்த்தா தந்திரிக்கு ஏராளமான கையூட்டு கொடுத்து திரும்பவும் அரசனானான். பார்த்தாவின் மனைவி சாம்பவதி தந்திரியை அடக்கும் வேலையை ஏற்றாள். சம்பேஸ்வரா என்று சிவ பெருமானை வழி படுபவள் அவள். அதனால் தந்திரியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாள். அதுவும் சில காலமே.
ஆனால் அவனோ சக்ரவர்மனை அரசு கட்டிலில் அமர்த்தி விட்டான். அவனுக்கும் பல நிர்பந்தங்கள். கை நீட்டி வாங்கிய தனம், அந்த அலுவலக அதிகாரிகளின் கெடுபிடி. மேருவர்தனனின் பெண்களை வலுக் கட்டாயமாக அவனுக்கு மணம் செய்து கொடுத்தனர். இயல்பாக நல்ல குணம் உடையவனை தந்திரி விரும்பவும் இல்லை. கடைசியில் அறிவிலிகள் என்று தெரிந்தும் மேரு வர்மனின் புதல்வர்களுக்கு அரச பதவியை கட்டாயமாக கொடுக்க நேர்ந்தது.
சம்பு வர்தன என்ற மகன் தம்பன் – தற்குறி – என்று தெரிந்தும் க்ருஹ க்ருத்யா என்ற வரி வசூலிக்கும் நிர்வாக துறைக்கு தலைவனாகவும், சம்கரவர்தனுக்கு அக்ஷபடல – மூன்று துறைகளுக்கு தலைவனாகவும் நியமித்து அவனுக்கு பல முனைகளில் இருந்தும் கட்டுப்பாட்டை செய்து விட்டான். அடிக்க கை யில் வைத்திருந்த கம்பிலேயே சுற்றிக் கோண்டிருந்த பாம்பு போல என்று உவமானம். சமாளிக்க முடியாமல் அடுத்த ஆண்டில் தானே விலகி விட்டான்.
மடவராஜ்யம் என்ற பகுதியில் வசித்துக் கொண்டு, தந்திரிக்கு எதிராக ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தான். சங்கர வர்தனன் தன் பங்குக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவன் தந்திரியின் கை ஆள் சம்பு வர்தனனுடன் இணைந்தான். நீரில் இருக்கும் திமிங்கிலம் தன் குலத்தைச் சேர்ந்த மீன் முதலியவைகளை தின்று ஜீவிக்கும். ஸ்டார்க் எனப்படும் நாரை மௌனமாக இருந்து அந்த திமிங்கிலத்தையும் விழுங்கும். அதை காட்டில் இருந்து அம்பால் அடித்து வேடன் எடுத்துச் செல்வான். இது ஒரு சுழற்சி. வலியவன் மெலிந்தவனை அடிப்பது மனிதர்களுக்கும் உண்டு.
ராஜ்யத்தை இழந்த சக்ர வர்மன் ஒரு நிசியில் ஸ்ரீ டக்க என்ற இடத்தில் வசித்த ஒரு சமயம் டாமர தலைவனாக இருந்த சங்கிராமன் என்பவனின் வீட்டு வாசல் கதவை தட்டினான். அவனைக் கண்டதும் ஏதோ அரச குலத்தவன் என்பதை தோற்றத்தால் அறிந்து கொண்ட டாமர தலைவன் சங்கிராமன் வணங்கி வீட்டினுள்ளே அழைத்துச் சென்றான். ராஜ்யம் கை விட்டு போனதும் அதன் தொடர்பாக நடந்தவைகளையும் விவரமாக சொன்ன பின் தனக்கு உதவ முடியுமா என்று கேட்டான்.
சற்று யோசித்த பின் சங்கிராமன் பதில் சொன்னான். ‘ போர் என்று வந்தால் எதிர் அணியில் இருப்பவன் யாரானால் என்ன? தந்திரியோ, மந்திரியோ, ஆயுதம் எடுத்தவனுக்கு என்ன வித்தியாசம்? ஆனால் என்னிடம் அந்த அளவு சக்தி இல்லை. தவிர, நீயும் அரச குலத்தவன். என் தேவை முடிந்தவுடன் என்னை விலக்கவே முயலுவாய். அரசுஅதிகாரத்தை சுவைத்தவர்களின் குணமே அது தான். உதவி செய்தவனையே, தீர்த்து காட்டுவது சர்வ சாதாரணம். தான் ஏறி வந்த படிகளையே தள்ளி விடுவது போல. தன் முன்னேற்றத்துக்கு பயன் படுத்திக் கொண்ட பின் உதவி செய்தவன் இவனுடைய ரகசியங்களை அறிந்தவனாவான். அதுவே அவனுக்கு சந்தேகம். எந்த நிமிடமும் தன்னை வீழ்த்த அவனால் முடியும் என்பதே பயம். அறிவும் திறமையும் உள்ளவனை அருகில் வைத்துக் கொண்டால் பல நன்மைகள். இதை தன்னலமே குறியான அறிவிலிகள் உணருவதில்லை. செல்வாக்கோடு இருக்கும் பொழுது தன்னுடைய பலம் என்பது தன்னுடன் இருப்பவர்களின் உதவியால் என்பதை மறக்கும் அரசர்கள் எதிரிகள் வந்தால் மட்டுமே அவர்களை திரும்ப நினைப்பார்கள். அவர்கள் நினைத்தாலும், மந்திரிகள் காதில் வந்து ஓதுவார்கள். ‘கூர்மையான இரு முனை கத்தி போன்றவர்கள் அறிவும் திறமையும் உடையவர்கள், கவனமாக இரு. ‘ யானையில் காது அருகில் வந்து ரீங்காரமிடும் வண்டுகள் போல. நல்ல உபதேசங்களை பகலில் செவி மடுத்த அரசன் இரவில் மறந்து விடுவான். ஆனால் இந்த எண்ணம் விளைத்த சந்தேகம் நீங்காது. அருகில் இருப்பவன் அவன் கண்களுக்கு எதிரியாக தெரிவான். தள்ளி இருக்கும் உண்மையான எதிரியை தெரிந்து கொள்ள நேரமாகும். அரசு கட்டில் முள் நிறைந்த து என்பார்கள். பூனை போல உடலை சுருக்கிகொண்டு அமர்ந்தால் தான் முள் தைக்காமல் எழுந்திருக்க முடியும். அரசனும் தன் மனதில் இருப்பதை மற்றவர்கள் அறியாமல் வைத்துக் கொள்ள பழக வேண்டும். இனிப்பு ருசியைக் காட்டி அருகில் இருக்கும் எறும்பை பிடிக்கலாம். அதுவே தள்ளி இருக்கும் எதிரியை கண்காணீக்காமல் பிடிக்க முடியாது, அதற்கு நாரையைப் போல மௌனமாக இருக்க வேண்டும். 321 194/398
பதுங்கி தலி குனிந்து வரும் சிங்கல் தன் இரையை அடிக்காமல் விடாது. பாம்பு அணைப்பது போல உடலைச் சுற்றினாலும் அதன் பல்லின் விஷம் தாக்காமல் விடாது, வேதாளம் சிரித்துக் கொண்டே கெடுதலைச் செய்யும் அது போல அரசன் புகழ்வது போல பேசினாலும் அதன் பொருள் வேறாகும்.
அதனால் அரசனே! எங்களை இப்பொழுது போலவே என்றும் மதிப்பாயானால், நம்பகமாக நட்பாக நன்றி மறக்காமல் இருப்பாயானால், இதோ என் படைகள் தயார்.
இதைக் கேட்ட அரசன் வெட்கி தலை குனிந்தவனாக, ‘என் ஆத்மாவைப் போல உங்களை ரக்ஷிக்கிறேன் என்று உறுதி அளிக்கிறேன். எனக்கு அபயம் கொடுத்தவர்கள் நீங்கள். அதை என்றும் மறக்காமல் இருப்பேன். ’ என்றான்.
அதன் பின் இருவரும் ஆட்டின் ரத்தம் தோந்த தோல் மேல் நின்று தங்கள் வாட்களை உருவி வைத்துக் கொண்டு அதன் பேரில் சத்யம் செய்தனர். ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதாக – அரசனும் டாமர தலைவனும்.
மறு நாள் விடியலிலேயே பயங்கரமான டாமர சைன்யத்துடன் சக்ரவர்மா தன் யாத்திரையை துவங்கினான். ஸ்ரீ நகரை நோக்கி படை புறப்பட்டது. தந்திரியும், சங்கர வர்தனுடன் சித்திரை மாதம் வளர் பிறை அஷ்டமியன்று, தன் படையுடன் எதிர் கொண்டான்.
பத்மபுரத்துக்கு வெளியே பயங்கரமான யுத்தம். சக்ரவர்மன் தன் முழு ஆற்றலையும் கூட்டி இது வரை அடக்கி வைத்திருந்த கோபம் வெளிப்பட குதிரையின் மேல் இருந்தபடி முதல் அடியிலேயேயே சம்கரவர்தனனை வீழ்த்தினான். தங்கள் தலைவனே விழுந்தபின் போர் செய்ய உத்சாகம் இன்றி தந்திரியின் காலாட்படை நால் திசைகளிலும் ஓடி மறைந்தனர். திடுமென புயல் காற்றில் சிக்கிய படகு போல இருந்ததாம்.
விடாமல் துரத்தி அடித்த சக்ரவர்மன், தந்திரியால் தான் ஏமாற்றப் பட்ட மனத் தாங்கல் அனைத்தையும் குதிரையை மேல் வேகம் வேகமாகச் சென்று ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து தன் வாளால் தலையை சீவி தீர்த்துக் கொண்டான். சக்ரவர்மன் மிருகேந்திரனான சிங்கம் பிடரி யைச் சிலிர்ப்பது போல போர்க் களத்தில் அனைத்து இடங்களிலும் தென்பட்டவாக இருந்தானாம். தந்திரியின் ஐந்து ஆறு ஆயிரம் அனுதாபிகள் போர்க் களத்தில் வீழ்ந்த பின் வேறு என்ன வேண்டும்? ஆட்டு மந்த போல விழுந்த தந்திரியின் ஆட்கள், சக்ரவர்மன் என்ற கழுகின் நீண்ட இறக்கைகளின் நிழலில் தூங்கவது போல கிடந்தன. தந்திரிகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் இணைந்தே இருந்து முடிந்தது. அவர்களால் பாதிக்கப்படவர்கள் யாவரும் நிம்மதி அடைந்தனர்.
பரம்பரையாக வந்த அரச குலங்கள், பிரஜைகளே உயிராக இருந்த நல்ல அரசர்கள், யாரும் கெட்ட எண்ணத்தோடு நெருங்க முடியாத பெருந்தன்மையுடன் இருந்தவர்கள், அவர்களை அவமானபடுத்தி, உள்ளுக்குள்ளே ஊடுருவி கொட்டும் குளவி போல கொட்டி, அழித்து, இரவலர்களாக அலைய விட்ட பாவி அந்த தந்திரி தன் வாழ்வை அவர்களின் வீழ்ச்சியில் அமைத்துக் கொண்டவன். அவன் யாரோ, எந்த குடியில் எங்கு பிறந்தானோ, சூழ்ச்சியே ஆயுதமாக தலை நிமிர்ந்து திரிந்தான். சீறிப் பாய்ந்த நல்ல பாம்பு போல ஓங்கி அடித்த அடித்த அடியில் சுருண்டு வீழ்ந்தான். அவனால் பாதிக்கப் பட்டவர்களின் மனக் குமுறலே பெரும் தீயாக அவனை அழித்து விட்டது.
மறு நாள் வெற்றி வீரனாக, பேரி வாத்யங்கள் முழங்க, ஊர் மக்கள் வாழ்த்துக்களுடன் உடன் வர, ஜய கோஷங்களும், சோபா யாத்திரையாக சக்ரவர்மன் தன் ராஜ்யத்துக்குள் நுழைந்தான்.
தந்திரியின் போதனையால் முறையாக சென்று கொண்டிருந்த அரச குடும்பத்திரை அழிக்கவும், அரச சாஸனத்தையே சின்னா பின்னமாக்கிய பலர், சம்பு வர்தனனில் ஆரம்பித்து , ஒவ்வொருவராக தேடிக் கண்டு பிடித்து வதைக்கப் பட்டானர், அவர்களுக்கு உதவியவர்கள் தகுந்த தண்டனைகள் கொடுத்து சிறைப் படுத்த பட்டனர். தன் ராஜ்யத்தின் இனி இது போன்ற கயவர்கள் இருக்கவே கூடாது என்ற அறிவிப்புடன் தன் ஆற்றலால் அமைதியைக் கொண்டு வந்தான். இனி எந்த வித தொல்லையும் இன்றி முன் போல அரசாட்சி நடக்கும் என்று மக்களும் மகிழ்ந்தனர்.
ஆனால் அந்த தேசத்தின் மேல் விழுந்த சாபம் போலும், மிகுந்த எதிர் பார்ப்புகளுடன் ஆரம்பித்த சக்ரவர்மனின் ஆட்சியும் முன்னவர்களைப் போலவே வழி தடுமாறியது. விரைவிலேயே அவன் குணமும் மாறியது.
தன் முன்னோர்களைப் போலவே அரக்கன் போன்ற கொடூரனாகவும், கர்வம் மிகுந்தவனாகவும் ஆனான். தந்திரியினால் அமர்த்தப் பட்ட திறமையற்ற அரச ஊழியர்கள், அதிகாரிகளாலும் அவன் ஆட்சி, நன்மை பயப்பதாக இல்லை. டாமர தலைவனுக்கு கொடுத்த வாக்கையும் மீறினான். அரச போகத்தில் மதி இழந்தான். பாடுகிறவனாக வந்த ஒருவன் தன் உடன் வந்த பெண்களைக் கொண்டு அவனை மயக்கி அவர்களை மணந்து கொள்ளச் செய்தான். தந்திரியின் இடத்தை தான் எடுத்துக் கொண்டவன் போல அரச அதிகாரிகளாக தன் ஆட்களை நியமித்து பிரஜா பாலனம் என்பதை அறவே மறந்தவனாக, சக்ரவர்மணை அந்த:புரத்தில் சிறை வைத்தான். வரலாறு திரும்பியது. டாமர்கள் கூட்டமாக வந்து அரண்மனையில் குளியல் அறையிலேயே அவனைக் கண்ட துண்டமாக வெட்டினர். சக்ரவர்மனின் முதல் மனைவிகள் தங்கள் பங்கு கோபத்தை அவன் கால்களில் கல்லால் அடித்து தீர்த்துக் கொண்டனர். புதிதாக வந்த பெண்களையும் வதைத்து விட்டனர். துதி பாடகர்களின் பாட்டை கேட்டு தன்னை தெய்வமாக நினைத்துக் கொண்டவன் வெளி நாட்டிலிருந்து வந்த பாடகன் வசம் ஆனவனாக தன்னையே இழந்தான். (வீதியில் ஆடிப் பாடும் கூத்தாடிகள் போன்றவர்கள்.) வாயிகாப்பவன் முதல் மந்திரிகள் வரை அவர்கள் ஆதிக்கம் நிறைந்தது. ஆமை நுழைந்த வீடு போல அரசு விழுந்தது. ஸ்வபாக – நாய்களை தின்னும் – இது ஒரு வசைச் சொல். மிகவும் மட்டமான ஒழுக்கம் இல்லாத பெண்களும், மற்றவர்களுமாக அரசனை அடியோடு அழித்தனர். இந்த கொடியவனும் சக்ர மடம் என்ற பெயரில் பாசுபத ஆலயம் கட்டினான். கொடைகளை அந்தணர்களுக்குக் கொடுத்தான். வறுமையில் வாடிய அவர்களும் பெற்றுக் கொண்டனர். நன்றி மறந்த செயல் மன்னிக்க முடியாதது. அதனால் டாமரர்கள் அதே வஞ்சனையால் கொன்றனர். பனிக்கட்டியை பனிக்கட்டியால் தான் உடைக்க முடியும் என்று ஒரு நியாயம். வைரத்தை வெட்ட வைரம் தான் வேண்டும் என்பது போல.
பலவிதமான சூழ்ச்சிகள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், அழித்துக் கொண்டும் உத்பல குடும்பத்தினரின் ஆட்சி நீடிக்கவும் வரை நாட்டில் அமைதியும் இல்லை.
468
தெய்வ சங்கல்பமோ, விதியின் விளையாட்டோ தேசத்தின் நல்ல காலமோ ஒரு பெரும் மாற்றம் தானாக வந்து சேர்ந்தது. பிசகபுரம் पिशाचकपुर- என்ற கிராமத்தில், வீர தேவன் என்பவர் பஹு குடும்பி என்பர்- நிறைய குழந்தைகள் பெற்றவர் என்று பொருள். அவர் மகன் காமதேவன் என பெயரிட்டார். அவன் மேருவர்மனின் வீட்டில் கல்வி கற்பிக்கும் ஆசானாக சேர்ந்தான். மேருவர்மனின் ஆதரவால், சங்கர வர்மனின் ஆஸ்தான அதிகாரியாக பொக்கிஷத்தை பாதுகாக்கும் வேலையில் அமர்ந்தான். அவன் மகன் நாளடைவில் பிரபாகர தேவன் என்பவன் காலக் கிரமத்தில் அதே வேலையில் அமர்த்தப் பட்டான். அவன் மகன் அறிவு தாகம் உடையவனாக பால்குணகன் என்பவனும் மேலும் கல்வி கற்கவும், ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பியவனாக தனி வழி சென்று விட்டான். அவனுக்கு ரம்யமான கனவுகள் வந்தன. ஒரு சமயம் पीठ् देवि – பீட தேவி என்ற ரூபத்தில் தேவியின் தரிசனம் கிடைக்கப் பெற்றான். நாடு திரும்பும் வழியில் ஒரு கொலைகாரனின் மனைவி தன் ஆட்களை விட்டு அவனை பிடித்துச் சென்றாள். பலி கொடுக்க. அங்கு இருந்த அந்தணர்கள் முன் போய் நின்றவனைக் கண்ட அவர்கள் ஒருமித்த குரலில் இவன் தான் நாட்டை ஆளத் தகுந்த ஒரே நபர் என்றனர். அவன் பெயர் யசஸ்கரா என்பதை அங்குள்ளோர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உச்சரித்தனர். அந்த இடத்திலேயே அரசனாக அறிவித்து ராஜ்ய அபிஷேகம் என்பதையும் செய்து விட்டனர். பொறுமை, த்ருதி என்ற நேர்மை, தன் கொள்கையில் திடமான நம்பிக்கை, பெருந்தன்மை, தவிர நிறைந்த ஆற்றலுடையவன் என்ற குணங்களை இயல்பாக பெற்றவன். மேகங்கள் ஸூரிய தேவனை அபிஷேகம் செய்தது போல இருந்ததாம்.
மூங்கில் காட்டை தங்களுக்குள் சண்டையிட்டு கிளப்பிய அக்னியில் யாதவர்கள் அழிந்தனர். வேறூன்றி பலகாலமாக நின்ற மரம், பெரு மழையும் இடியும் தாக்கி அழிகிறது. அதே காற்று மற்றொரு மரத்தை தள்ளிச் சென்று நிலைத்து நிற்க வழி செய்கிறது. தெய்வம் நினைத்தால் ஏதோ ஒரு வழி தானே திறக்கிறது. பார்தா யாரோ ஒரு வேற்று மனிதன் சொல்லைக் கேட்டு தன் மகனையே விரட்டியதும், அதே மகன் தந்தையுடன் குடும்பத்தையே அழித்ததும், அடுத்தடுத்து வந்த பிரச்னைகள், அனைத்துமே ஏதோ ஒரு திட்டத்துடன் நடந்து முடிந்தது. இப்படி யசஸ்கரன், சாதாரண குடும்பத்தில் பிறந்தவன், கல்வியே கவனமாக வாழ்ந்தவன் ராஜ பதவியை அடையவே என்பது போல ராஜ குலம் சிதறியதும் அந்த தெய்வம் தான் தானே நினைத்து நடத்தியது போலும். சற்று முன் தன்னந்தனியாக நடந்து வந்தவன், கண் முன்னே உலக நாயகனாக பட்டம் சூட்டப்பட்ட அதிசயம் நம்பவும் முடியாமல் மக்கள் கூடவே நடந்தனர். பெண்களும் கண்கள் விரிய பார்த்து மகிழ்ந்தனர், அரண்மனை வந்து சேர்ந்த து அந்த ஊர்வலம். யசஸ்கர பூபதி வாழ்க என்ற கோஷத்துடன். ஸூரியனின் ஒளி போன்ற வெண்மையான கொற்றக் கொடி, வெள்ளி தட்டில் ஆரத்திகளுடன் வரவேற்ற ராஜ்யலக்ஷ்மி ராஜ தானியே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அரசனாக ஆனான்.
(இது வரை ஸ்ரீ காஸ்மீரம்தேசத்து மகா மந்திரியான சம்பக ப்ரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினீ என்ற நூலின் ஐந்தாம் பாகம்- ஐந்தாவது அலை நிறைவுற்றது)
.