த்யானம் – புடமிட்ட சொக்கத் தங்கம் போன்ற நிறத்தினள், ரவி, சந்திரன், அக்னி முறையே மூன்று கண்களாக உடையவள், வில், அம்புகளுடன், அங்குசம், பாசம், சூலம் இவைகளைத் தன் அழகிய புஜங்களில் தரித்தவள்.
பிறை சந்திரனுடன் சிவ சக்தி ரூபமானவள், காமேஸ்வரி, இவளை என் ஹ்ருதயத்தில் பூஜிக்கிறேன்.
ரிஷி சொன்னார் –
நிசும்பன் மாண்டதைக் கேள்விப்பட்ட சும்பன், வருந்தினான். உயிருக்கு உயிரானவன். தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபமாக வெளிப்பட்டது. தேவியைப் பார்த்துக் கத்தினான். துஷ்டே, கர்வப் பட வேண்டாம். மற்றவர்கள் பலத்தில் யுத்தம் செய்கிறாய். இதில் என்ன பெருமை உனக்கு. அனாவசியமாக கர்வப் படாதே.
தேவி சொன்னாள்.
நான் ஒருவளே தான். என்னுடைய விபூதி, ஆற்றல் பலவாக காட்சி அளிக்கும். நானே பலவாகவும் இருப்பேன். என்னிடம் அனைத்தையும் இணைத்துக் கொண்டு ஒருவளாக நிற்கிறேன். நீயும் ஸ்திரமாக நில்.
ரிஷி சொன்னார் – அதன் பின் யுத்தம் மூண்டது. தேவிக்கும், சும்பனுக்கும். தேவர்களும் அசுரர்களும் பார்த்துக் கொண்டு நின்றனர். பயங்கரமான யுத்தம். கூர்மையான சரங்கள் மழையாக பொழிந்தது. சஸ்திரங்கள், அஸ்திரங்கள், எல்லாமே புதுமையானவை, பயங்கரமானவையே. சர்வ லோகமும் நடுங்கும்படி, கோரமான யுத்தம் திரும்ப நடந்தது. நூற்றுக் கணக்கான திவ்யாஸ்திரங்களை அம்பிகை பிரயோகித்தாள். அவைகளை தைத்யேந்திரன் பிளந்தான். அதை எதிர்க்கும் செயலை திறமையாக செய்தபடி இருந்தாள் தேவி. திவ்யாஸ்திரங்களை அவன் பிரயோகித்தால், மாகேஸ்வரி தேவியும் ஹுங்காரத்தினாலேயே அவைகளை எதிர்த்தாள். அனாயாசமாக அவனை செயலிழக்கச் செய்தாள். தேவியை நாலாபுமும் சூழ்ந்து கவசம் போல மறைக்கும் படி நூற்றுக்கணக்கான சரங்களை விட்டான் அசுரன். அவனுடைய வில்லையே தன் சரங்களால் உடைத்து விட்டாள் தேவி. வில்லே முறிந்தது. தைத்ய ராஜன் சக்தியை கையில் எடுத்தான். அதையும் சக்ரத்தால் தேவி முறித்தாள். பின் வாளை எடுத்தான். சதசந்திரன் என்பது அதன் பெயர். பாதி சந்திரன் வடிவில் உள்ள அதை எடுத்துக் கொண்டு தேவியை நோக்கி ஓடி வந்தான். அவன் அப்படி ஓடும் பொழுதே வாளை முறித்தாள் சண்டிகா. தன் வில்லில் கூர்மையான அம்புகளை கோர்த்து, எதிரியினுடைய இளம் சூரியன் போல பிரகாசமாக இருந்த தோள் கவசத்தை அழித்தாள். குதிரை விழுந்தது. தைத்ய ராஜா, வில்லும் முறிந்து, சாரதியும் இன்றி முத்கரம் என்ற கோரமான அஸ்திரத்தை எடுத்தான். எப்படியும் தேவியை வதம் செய்வது என்று ஓடி வந்தான். அதையும் தன் கூர்மையான அம்புகளால் தேவி முறித்தாள். அப்படியும் முஷ்டியால் அடிக்க வந்தான். புறங்கையால் தேவி அதை தள்ளிவிட, அந்த கை பலத்தை தாங்காமல் பூமியில் விழுந்தான். விழுந்தவன் உடனே எழுந்து நின்றான். எழுந்தவன், தேவியைப் பற்றியபடி, வானத்தில் எழும்பி நின்றான். ஆதாரம் எதுவுமில்லாமல், அந்தரிக்ஷத்தில் நின்றபடி, அவனுடன் யுத்தத்தை தொடர்ந்து செய்தாள் சண்டிகா தேவி. சண்டிகாவும், அசுர ராஜனும் இப்படி வான வெளியில் சண்டையிட்டதைப் பார்த்து சித்த முனிவர்கள் முதல் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். அதே நிலையில் யுத்தம் தொடர்ந்தது. அசுரனை கீழே தள்ளி, சுழற்றி அடித்து பூமியில் வீசினாள். அப்படி விழுந்தவன் திரும்பவும் முஷ்டியை மடக்கிக் கொண்டு தேவியை தாக்க வந்தான். அந்த சர்வ தைத்ய ராஜனை சூலத்தால் மார்பில் அடித்து உயிரற்றவனாக பூமியில் விழச் செய்தாள் அம்பிகை. விழுந்த வேகத்தில், சமுத்திரங்கள், தீவுகள், மலைகள், கொண்ட பூமி முழுவதும் ஆடியது. உலகம் துராத்மா வதம் செய்யப் பட்டான் என்று அறிந்து பிரஸன்னமாகியது. தன் இயல்பான நிலைக்குத் திரும்பியது. மேகங்கள் விழுந்து, கெட்ட சகுனங்களான அக்னி பொறிகள் முதலியவற்றால் கலங்கியிருந்த வானம் நிர்மலமாக ஆயிற்று. நதிகள், சமுத்திரம் முதலியவை இயல்பாக ஆயின. தேவ கணங்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கந்தர்வர்கள் மெல்ல பாடலாயினர். அப்ஸர கணங்கள் நடனமாடின. மற்றவர்கள் வாத்யங்களை இசைத்தனர். காற்று புனிதமாக வீசியது. திவாகரனின் ஒளி சுத்தமாக இருந்தது. அக்னிகள் சாந்தமாக ஜொலித்தன. திக்குகளiல் எழுந்த நாதமும் சாந்தமாக ஆயின.
த்யானம் – ப3ந்தூ4க காஞ்சனம் போன்றவள், அழகிய அக்ஷ மாலை, பாசம், இரண்டு அங்குசங்கள் தரித்தவள், வரம் தருபவளாக, தன் புஜங்களே தண்டமாக, ஈசனின் பாதி பாகமாக, மூன்று கண்களுடன், பிறை சந்திரனைச் சூடியவளாக, உள்ள தேவியை வணங்குகிறேன்.
அரசன் சொன்னான் – பகவன்! இந்த கதையே விசித்ரமாக இருக்கிறது. ரக்த பீஜ வதம் பற்றிய தேவியின் சரித்திரத்தை விவரமாக சொன்னீர்கள். மேலும் கேட்க விரும்புகிறேன். ரக்த பீஜன் இறந்த பிறகு சும்பன் என்ன செய்தான் ? இருவரும் மகா கோபம் கொண்டிருப்பார்களே.
ரிஷி சொன்னார். ஆமாம். ரக்த பீஜன் இறந்தான் என்று கேட்டு சும்பனும் நிசம்பனும் மிக்க கோபம் அடைந்தனர். அவனோடு ஏராளமான அசுர வீர்ர்களும் மாண்டனரே. தங்கள் சைன்யம் கண் முன்னாலே அழிந்ததைக் கண்டு எதுவும் செய்ய முடியாமல் இருப்பதா? அதனால் கோபம் பன் மடங்காயிற்று. நிசும்பன் தன் படையுடன் ஓடினான். தேவியை அழித்து விட்டுத் தான் மறு வேலை என்பது போல, பல்லைக் கடித்தபடி, அவள் முன்னால், பின்னால், பக்கங்களில், அசுரர்கள் சூழ்ந்து கொண்டனர். தேவியை மற்ற மாத்ரு கணங்களுடன் கொல்வதே ஒரே குறியாக வந்து சேர்ந்தான். அதன் பின் தேவிக்கும், சும்ப நிசம்பர்களுக்கும் கடுமையான போர் மூண்டது. மேகத்திலிருந்து மழை பொழிவதைப் போல இரு தரப்பிலும் அஸ்திரங்கள், ஆயுதங்கள் விழுந்தன. அசுரனுடைய ஆயுதங்களை சண்டிகா தன் கை அம்பினால் தடுத்தாள். அவள் உடலிலேயே அசுரர்கள் இருவரும் அடித்தனர். நிசும்பன் ஒரு கூர்மையான வாளை, சர்ம என்பதையும் எடுத்து, சிங்கத்தின் தலையில் அடித்தான். தேவியின் உத்தமமான வாகனம் அது. அதை தாக்கியதை பொறுக்காத தேவி, க்ஷிப்ரம் என்ற கத்தியைக் கொண்டு நிசும்பனின் சர்மத்தை (கவசம்)கிழித்தாள். அஷ்டசந்த்ர என்ற அந்த கவசம் கிழிபட்டவுடன், கூடவே வாளும் விழவும், அவன் சக்தியை பிரயோகித்தான். அதையும் தன் சக்ரத்தால் தேவி தடுத்தாள். கோபம் தலைக்கேற நிசும்பன் சூலத்தை வீசினான். வேகமாக வந்த சூலத்தை தேவி தன் முஷ்டியாலேயே தவிடு பொடியாக்கினாள். உடனே க3தையை எடுத்து சுழற்றி தேவியின் மேல் வீசினான். அதை தேவி தன் திரிசூலத்தால் எதிர் கொண்டாள். அசுரனின் க3தை பஸ்மமாகி விட்டது. பின் பரசுவை எடுத்துக் கொண்டு வந்த அசுரனை, பாணங்களால் அடித்து கீழே விழச் செய்தாள். பீம பராக்ரமன் – மிகுந்த பலமுடையவன் என்று பெயர் பெற்ற நிசும்பன் பூமியில் விழுந்ததைப் பார்த்த சும்பன் அளவில்லா கோபம் கொண்டான். அம்பிகையை அழித்தே தீருவது என்று ஓடி வந்தான்.
உயரமான ரதத்தில் நின்றபடி பயங்கர ஆயுதங்களுடன், எட்டு புஜங்களோடு வானளாவி நின்றான். அவன் வருவதைப் பார்த்து தேவி, தன் சங்கத்தை ஊதினாள். வில்லின் நாணை விரல்களால் நிமிண்டி நாதம் வரச் செய்தாள். அதுவே தாங்க முடியாத பேரிரைச்சலாக இருந்தது. அது போதாதென்று தேவி தன் மணியையும் அடித்து ஆகாயத்தில் அதன் ஒலி அலைகளே நிரம்பச் செய்தாள். சமஸ்த தைத்ய சேனைகளும் இந்த சத்தங்களைக் கேட்டே தங்கள் தேஜஸை இழந்தவர்கள் போலானார்கள். உடனே சிங்கமும் தன் பங்குக்கு மகா நாதத்தை எழுப்பியது. மதம் கொண்ட யானைகள் கூட நடுங்கின. அதே போல பத்து திக்குகளிலும் எதிரொலிக்க பிளிறியது. காளி முன்னால் வந்து அதேபோல பூமிக்கும் வானத்துக்குமாக கேட்க கை தட்டினாள். இவளின் கை தட்டல் ஒலியில் இதற்கு முன் எழுந்த சத்தங்கள் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. சிவ தூதி அட்டகாசம் செய்தாள். சிவம் என்றால் மங்களம். அதுவோ தற்சமயம் அசிவமாக இருந்தது. இந்த சப்தங்களாலேயே அசுரர்கள் வெகுவாக பாதிக்கப் பட்டு வெகுண்டனர். சும்பனின் கோபம் அளவு கடந்தது. அதே சமயம் தேவியும் துராத்மன், நில் நில் என்று கூவினாள். உடனே வானத்திலிருந்து தேவர்கள் ஜய ஜய என்றனர். சும்பன் பிரயோகித்த சக்தி நெருப்பைக் கக்கி கொண்டு பயங்கரமாக வரும் பொழுதே, அதை மஹா உல்கா என்ற ஆயுதத்தால் அடக்கினாள் தேவி. சும்பன் தானும் சிங்கநாதம் செய்து மூவுலகையும் கலக்கினான். அரசனே! அவனுடைய கோரமான சப்தம் இதுவரை ஜய சப்தமாகத் தானே இருந்து வந்திருக்கிறது. சும்பனின் சரங்களை தேவியும், அவள் திருப்பி அடித்த சரங்களை சும்பனும் மாறி மாறி தடுத்து வீழ்த்தினர். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக சரங்கள். அதன் பின் சண்டிகா தன் சூலத்தால் அசுரனை அடித்தாள். அடிபட்டவன் மூர்ச்சையாகி பூமியில் விழுந்தான். உடனே நிசும்பன் வந்து, சரங்களால் போரைத் தொடர்ந்தான். காளியை, சிங்கத்தை அடித்தான். அதன் பின் தன் புஜங்களை ஆயிரக் கணக்காக பெருக்கி கொண்டான். திதியின் மகன் தைத்யன் (அசுரன்) தன் சக்ரத்தை எடுத்து, தேவியை பலம் கொண்ட மட்டும் அடித்தான். இதன் பின் மிகக் கொடிய துன்பங்களையும் தீர்ப்பவளான பகவதி துர்கா, அந்த சக்ரங்களை நொறுக்கினாள். தன் அம்புகளாலும், ஆயுதங்களாலும் அடித்து தூளாக்கினாள். பின் நிசும்பன் க3தையை எடுத்துக் கொண்டு, அசுர படை தொடர வந்தான். அவன் அருகில் வரு முன்னே தன் கூரான வாளினால் அந்த க3தையை முறித்து விட்டாள் தேவி. உடனே அவன் சூலத்தை எடுத்துக் கொண்டான். கையில் சூலத்துடன் ஓடி வரும் அந்த நிசும்பனை மார்பில் படும் படி தன் கை சூலத்தால் ஓங்கி அடித்தாள் தேவி. அவன் சூலம் நொறுங்கியது. அவன் இதயத்திலிருந்து வெளி வந்த ஒரு புருஷ உருவம், அதே போல மகா பலசாலியாக, மகா வீர்யவானாக, திஷ்ட திஷ்ட நில் நில் என்று கத்தியது. அப்படி வெளி வந்த உருவத்தைப் பார்த்து தேவி பலமாக சிரித்தாள். தன் வாளால் அதன் தலையை வெட்டினாள். அதுவும் பூமியில் விழுந்தது. உடனே சிங்கம் உக்ரமாக கர்ஜித்தது. தன் பற்களால் அசுரர்களை தலை வேறு, உடல் வேறு என்று ஆக்கியது. காளியும் சிவ தூதியும் மீதி இருந்தவர்களை நாசம் செய்ய, கௌமாரியின் கையில் இருந்த சக்தியால் பலர் மாண்டனர். ப்ரும்மாணீ மந்திரம் ஜபித்து தெளித்த நீரினால் சிலர் அழிந்தனர். மாகேஸ்வரியின் திரிசூலத்தால், பின்னமாகி கீழே விழுந்தவர் பலர், வராஹியின் கொம்பினால் அடிபட்டு சிலர் பொடிப் பொடியானார்கள். வைஷ்ணவியின் சக்ரத்தால், தானவர்கள் துண்டு துண்டானார்கள். ஐந்த்ரியின் கை வஜ்ரத்தால் பலர் அழிந்தனர். பெரும் காற்றினால் அலைக்கழிக்கப் பட்டு ஒரு சிலர் அழிந்தார்கள். பலர் காளி, சிவதூதி இவர்களால் விழுங்கப்பட்டனர்.
த்யானம் – அருண வர்ணத்தினாள், கருணைத் ததும்பும் கண்கள், கைகளில் பாசம், அங்குசம், பாணம், வில் முதலியவைகளோடு, அணிமாதி சக்திகள் சூழ நிற்பவளான ப4வானியை போற்றுகிறேன்.
ரிஷி சொன்னார்
சண்டனும் அழிந்தான். முண்டனும் வீழ்ந்தான். மிகப் பெரிய சைன்யம் என்று பெருமிதத்துடன் வந்த அசுரேஸ்வரன் ஒடுக்கப்பட்டான். சும்பன் தன் கோபத்தை அடக்க மாட்டாமல் தவித்தான். பிரதாப மிக்கவன், தோற்று அறியாதவன், கோபம் கண்களை மறைத்தது. தன் வீரர்களை அழைத்துக் கட்டளையிட்டான். 68 ஆயிரம் வீரர்கள் கொண்ட நம் படை புறப்படட்டும். எண்ணற்ற வீரர்கள், அசுர குலங்கள், தூம்ரனுடையவை கிளம்பட்டும். காலகா என்பவர்கள், தௌர்ஹ்ருதா என்பவர்கள், மௌர்யா என்பவர்கள், காளகேயர்கள், அசுரர்கள், யுத்தம் செய்ய தயாராக வரட்டும். இப்படி கட்டளைகளை பிறப்பித்து விட்டு அசுரத் தலைவன் தானும் படையோடு கிளம்பினான். பயங்கரமான வீர சேனையோடு அவன் வருவதை தேவி பார்த்தாள். தானும் ஜய கோஷம் செய்தாள். வானத்தையும் பூமியையும் இணைத்து, நாதத்தாலேயே நிரப்பியது போல அந்த ஜய கோஷம் ஓங்கி கேட்டது. கூடவே சிங்கமும் கர்ஜித்தது. அம்பிகையின் மணி சத்தமும் உடன் கேட்டது. வில்லை விரல்களால் மீட்டிய சப்தம், இனிமையாக திக்கெல்லாம் நிறைத்தது. தன் பெரிய வாயைத் திறந்தபடி காளியும் வந்தாள், பயங்கரமாக கத்தியபடி. இந்த சத்தங்களைக் கேட்டே அசுர சைன்யம் நாலா புறமும் சூழ்ந்தது போல உணர்ந்தார்கள். தேவி, சிங்கம், காளி, யுத்தம் செய்ய ஆவலுடன் பரிவாரங்கள். அரசனே, இதற்கிடையில் தேவ விரோதிகளின் அழிவுக்கு என்றே வந்தது போல விதி (ப்ரம்மா) – அமர – தேவர்களில் அதி வீர்ய பலம் உடைவர்களின், ப்ரம்மாவின், குஹனுடைய, விஷ்ணுவுடைய, மற்ற இந்திரன் முதலானோர் சக்திகள் அவர்கள் சரீரத்திலிருந்து வெளி வந்து, சண்டிகாவை வந்து அடைந்தன. எந்த தேவதையின் ரூபம் எப்படியோ, என்ன பூஷணம், வாகனமோ, அதே போல அந்த சக்திகள், அசுரர்களுடன் மோத தயாராக வந்து விட்டன. ஹம்ஸம் பூட்டிய விமானத்தின் மேல், அக்ஷ சூத்ரமும் கமண்டலுவுமாக, ப்ரும்மாவின் சக்தி வந்தாள், ப்ரம்மாணீ என்ற பெயருடன். மாகேஸ்வரி ரிஷப வாகனத்தில், உயர்ந்த திரிசூலத்துடன், பெரும் நாகங்கள் உடலைச் சுற்றி நிற்க, பிறை சந்திரன் அலங்கரிக்க, வந்தாள். குஹ ரூபிணியாக கௌமாரி, சக்தியை கையில் ஏந்தி, மயில் வாகனத்தில், போர் செய்ய தயாராக வந்தாள். அதே போல் வைஷ்ணவி, கருடன் பேரில், சங்க2, சக்ர, க3தா4, சார்ங்க4, க2ட்க3 ஹஸ்தாவாக வந்து சேர்ந்தாள். ஹரியினுடைய யக்ஞ வாராஹ ரூபத்தை ஏற்று, ஒப்பில்லாத வராஹ ரூபத்தோடு, வாராஹி என்ற சக்தி வந்து சேர்ந்தாள். நாரசிம்ஹியாக, ந்ருசிம்ஹனுக்கு சமமான உடலுடன் வந்தவள் தன் அட்டகாச சிரிப்பால், நக்ஷத்திர கூட்டமே ஆகாயத்திலிருந்து கீழே விழுந்து விடுமோ எனும் படி இருந்தாள். ஐந்த்ரி, இந்திரனுடைய வஜ்ரத்தை ஏந்தியவளாக, யானை மேல் ஏறி வந்தாள், நூறு கண்களுடன் இந்திரன் போலவே இருந்தாள். ஈசானன் தேவ சக்தி சூழ, சீக்கிரம் இந்த அசுர கூட்டத்தை அழிக்கலாம் என்று சண்டிகையிடம் சொன்னார். இப்படி தேவ சரீரங்களிலிருந்து, வெளி வந்த சக்திகளுடன் சண்டிகா தேவி அதி உக்ரமாக, சிவா என்ற உருவில் வந்தவள், அபராஜிதா – தோல்வியே அறியாத மகா சக்தியாக நின்றாள். பின், தூ4ம்ர ஜடிலன் என்ற தூதனிடம் சொன்னாள். தானவர்கள் அளவுக்கதிகமான கர்வத்துடன் வளைய வருகிறார்கள். இவனுடன் மற்ற தைத்யர்களும் போரிட என்று வந்து நிற்கின்றனர். ஹே தூதனே, நீ போய் சும்ப நிசும்பர்களிடம் இந்த செய்தியைச் சொல். மூவுலகையும் இந்திரனிடம் ஒப்படைத்து விடு. தேவர்கள் நிர்பயமாக வாழட்டும். நீங்கள் உங்கள் இருப்பிடமான பாதாளம் போங்கள். உயிருடன் வாழ விரும்பினால் இது தான் வழி. உடல் பலம் இருப்பதால் கர்வம் கொண்டு நீங்கள் யுத்தப் பிரியர்களாக வந்தால் வாருங்கள். என் படையினர் திருப்தியடையட்டும். சிவ பெருமானின் சக்தியே தான், தேவியால் நியமிக்கப்பட்டவளாக தானே தூது செல்ல கிளம்பியதால் சிவ தூதி என்றே உலகில் போற்றப் படுகிறாள்.
மகா அசுரன், தேவியின் செய்தியை சிவ சக்தி சொல்லக் கேட்டான். கோபம் தான் பொங்கி வந்தது. வேகமாக காத்யாயனி இருக்கும் இடம் வந்தான். அதற்கு முன்பே அவன் படை வீரர்கள், தேவியின் மேல் படையெடுத்து, சரங்கள், சக்தி, இஷ்டி, வ்ருஷ்டி இவைகளுடன் வந்து, தேவியைத் தாக்கினர். யுத்தப் பிரியர்கள் அசுரர்கள் என்பது தெரிந்தது தானே. அப்படி மேலே வந்து விழுந்த பாணங்களை, சூலம், சக்தி, பரஸ்வதங்களை விளையாட்டாகவே உடைத்து எறிந்தாள் தேவி. தேவியின் படையின் முன்னால் நின்றாள் காளி. சூலங்கள் பட்டு வருந்தியவர்களை மேலும் உடலோடு ஒட்டியிருந்த வாளுடன் அடித்து ஓட ஓட விரட்டினாள். சுற்றி சுற்றி வந்தாள். கமண்டலு தண்ணீரை அவர்கள் மேல் வீசி, அவர்கள் தேஜஸ், வீர்யம் இழக்கச் செய்தாள். ஓடுகிறவர்களை ப்ராம்மணீ அவர்களின் ஓஜஸ் என்ற சக்தியைப் பறித்தாள். மாகேஸ்வரி திரிசூலத்தால், வைஷ்ணவி சக்ரத்தால், கௌமாரி சக்தியினால், தைத்யர்களை வதைத்தனர். ஐந்த்ரி குலிசத்தை வீசி நூற்றுக் கணக்கான தைத்ய தானவர்களை, நிலை குலைய செய்து வீழ்த்தினாள். அவர்கள் ரத்தம் பெருக பூமியில் கிடந்தனர். துண்டம் என்ற ஆயுதத்தால் அடிபட்டு விழுந்தவர்கள், சக்ரத்தால் தாக்கப் பட்டவர்கள், நகங்களால் கிழி பட்டவர்கள் போக மீதி உள்ளவர்களை நாரசிம்ஹி என்ற சக்தி விழுங்கி விட்டாள். தன் அட்டகாச குரலால், திக்குகளை எல்லாம் நடுங்கச் செய்தபடி, யுத்த பூமியில் சஞ்சரித்தாள். இப்படி மாத்ரு கணம் (தேவர்களiன் சக்தி) கோபத்துடன் மகா அசுரர்களை தடுமாறச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, தேவ விரோதிகள் வேறு விதமான யுக்திகளை கையாண்டார்கள். ரக்த பீஜன் என்ற மகா அசுரன் வந்தான். மாத்ரு கணங்களின் தாக்குதலால் சிதறிப் போன சேனையை ஒன்று கூட்டி, போரைத் தொடர்ந்தான். இவனுடைய சரீரத்திலிருந்து ஒரு துளி ரத்தம் பூமியில் விழுந்தாலும் அதிலிருந்து அவனைப் போலவே உடலும், பலமும் கொண்ட வீரர்கள் புதிதாக முளைத்தனர். இவனைப் போலவே கையில் க3தை, இவர்கள் சேர்ந்து இந்திர சக்தியை எதிர்த்தனர். ஐந்த்ரீ தன் வஜ்ரத்தால் ரக்த பீஜனை அடித்தாள். அவனுடைய உடலிலிருந்து ரத்தம் ஆறாக பெருகி ஓடியது. அந்த ரத்த துளிகளில் இருந்து போர் வீரர்கள், அவனுடைய ரூபம், பராக்ரமம் இவற்றோடு, வந்தனர். ரத்தம் கீழே விழ விழ ஒவ்வொரு துளியிலும், ரக்தபீஜனைப் போன்ற வீரர்கள், போர்களத்தில் நிறைந்தனர். மாத்ருக்களுக்கு சமமாக உக்ரமான ஆயுதங்களை பலவிதமாக வீசினர். திரும்பவும் வஜ்ரத்தால் அடிபட்டு ரக்த பீஜனின் தலை கீழே விழுந்தது. அதிலிருந்தும் ரத்தம் பெருகவும் ஆயிரக் கணக்கான அசுர உருவங்கள் தோன்றின. உடனே வைஷ்ணவி தன் சக்ரத்தால் அவர்களை அடித்தாள். ஐந்த்ரீ கதையைக் கொண்டு அவர்களை அடித்தாள். வைஷ்ணவியின் சக்ரத்தால் பின்னமான சரீரங்கள் ஆயிரக் கணக்காக பூமியை நிறைத்தன. ஒவ்வொரு உருவமும், ரக்த பீஜனைப் போலவே, உடல் அமைப்பில், அதே அளவு பலம் என்று கணக்கில்லா சரீரத்துடன் அந்த ஒரு அசுரனே கதையால் தனித் தனியாக தேவர்களை அடித்தான்.
ரக்த பீஜனை அடித்தாலோ, சக்தியாலோ, சூலத்தாலோ அடித்து பூமியில் தள்ளினாலும், அவன் ரத்த துளி விழுந்த இடத்தில் எல்லாம் புதிதாக நூற்றுக் கணக்கான அசுரர்கள் எழுந்து நின்றனர். இப்படித் தோன்றியவர்களே உலகம் முழுவதும் நிறைந்தது. இதைக் கண்டு மன சோர்வும், பயமும், தேவர்களை ஆட்கொண்டன. இதைப் பார்த்த தேவி, சண்டிகா, காளியைப் பார்த்துச் சொன்னாள். சாமுண்டே, உன் வாயைத் திற. முடிந்த அளவு பெரிதாக்கிக் கொள். என் ஆயுதத்தால் நான் ரக்த பீஜனை அடித்து, அவன் ரத்தம் பூமியில் விழுமுன் நீ குடித்து விடு. அவன் உண்டாக்கிய வீரர்களை விழுங்கிக் கொண்டே வா. அப்பொழுது தான் இவன் உடலில் ரத்தம் தீரும். உன்னால் தின்று தீர்க்கப் பட்டவர்கள், திரும்ப உயிர் பெற முடியாது. இப்படி சொல்லி விட்டு தேவி, சூலத்தால் அவனை அடித்தாள். காளி தன் வாயால் அவன் ரத்தம் கீழே சிந்தாமல் ஏந்திக் கொண்டு விட்டாள். அவனும் தன் கை க3தையால், சண்டிகாவை அடித்தான். அந்த அடி அம்பிகைக்கு எந்த ஹானியையும் செய்யவில்லை. அடி பட்ட வேதனை கூட இல்லை. தேவி அடிக்க அடிக்க, அசுரனின் உடலில் ரத்தம் பெருக பெருக, காளி அவை கீழே சிந்த விடாமல், தன் வாயினுள் போகும் படி செய்து விட்டாள். இப்படி ரத்தம் முழுவதும் இறைத்த பிறகு, சூலத்தாலும், வஜ்ரத்தாலும் அடித்து, ரக்த பீஜனை, பாணங்களாலும், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களாலும் வதைத்தாள். ஏற்கனவே சாமுண்டா அவன் ரத்தம் முழுவதையும் இறைத்து விட்டாளே. ஆகவே அவன் மாண்டு பூமியில் விழுந்தான். தேவர்கள் அசுரன் அழிந்ததைக் கண்டு மகிழ்ந்தனர். ஆடிப் பாடிக் கொண்டாடினர். அவர்கள் மாத்ரு கணங்கள் வெற்றி பெற்றதால் மகிழ்ந்தனர்.
அத்யாயம் – 7
த்யானம் – ரத்ன பீடத்தில், தன் வளர்ப்பு கிளியுடன் அது தன் இனிமையான குரலில் ஏதோ சொல்வதை கேட்டபடி, அமர்ந்து இருக்கிறாள் தேவி. ஸ்யாமளமான வர்ணம். தாமரை மலரில் காலை வைத்திருக்கிறாள். பிறை சந்திரனை தலையில் சூடியிருக்கிறாள். வல்லகி என்ற வீணையை வாசித்தபடி, வெண் தாமரை மலர்களால் ஆன ஹாரம் அலங்கரிக்க, சிவந்த வஸ்திரங்களையும், அழகாக அமைந்த ஆடைகளை (சோளி) அணிந்தவளான மாதங்கியை, சங்க பாத்திரத்தில் மதுரமான மதுவை வைத்து குடிப்பதால், மதுவின் மயக்கத்தில் இருப்பவளும், வேலைப்பாடமைந்த ஆசனத்தில் இருப்பவளாக, தியானம் செய்கிறேன்.
ரிஷி சொல்கிறார். சண்ட, முண்டர்களுடன் வந்த வீரர்களுக்கு கடுமையான ஆணை பிறந்தது. சதுரங்க பலத்துடன், உயர்த்தி பிடித்த ஆயுதங்களுடன் நெருங்கி வந்தனர். மெய் சிலிர்க்க தேவியைக் கண்டனர். கண்களை கூசச் செய்யும் தங்க மயமான மலைச் சிகரம். அதில் தன் வாகனமான சிங்கத்தில் அமர்ந்தவளாக, அந்த பிரதேசம் முழுவதும் பரவி அவளாகவே நிற்பவளைக் கண்டனர். அருகில் போகத் தானே வேண்டும் என்று பெரும் பிரயாசையுடன் முன்னேறி வந்தனர். அருகில் போனவர்கள், அவள் கையில் இருந்த வில், அம்பு, வாளை வைக்கும் உரைகள், இவைகளாலேயே கவரப்பட்டனர். திடுமென இப்படி வந்த எதிரிகளைப் பார்த்து, தேவி, அம்பிகா பெரும் கோபம் கொண்டாள். கோபத்தில் அவள் முகம் மை போல் ஆயிற்று. அவளுடைய புருவ நெரிசலில், நெற்றியிலிருந்து, பரபரப்பாக, கருமையான வதனத்துடன், பயங்கரமான காளி வெளி வந்தாள். அவள் கையிலும் வாள், பாசம். விசித்திரமான வாள். அதை உடலில் ஆபரணமாக மாட்டிக் கொண்டிருந்தாள். மனித தலையால் ஆன கபால மாலை வேறு. அலங்காரமாக த்3வீபி (யானை) தோலால் ஆன உடையை அணிந்து, ரத்தத்தை உறையச் செய்யும் பயங்கரமான – பைரவியாக, விசாலமான முகம், நீண்டு தொங்கிய நாக்கு பயத்தை தந்தது. கண்கள் செக்கச் சிவக்க, எக்காளம் இட்டு ஓங்கி உரைத்தது, நாலு திக்குகளiலும் எதிரொலித்தது. வேகமாக குதித்து வந்தாள். அந்த வேகத்திலேயே மகா அசுரர்கள் என்று பெயர் பெற்ற அசுர வீரர்கள் அழிந்தனர். தேவ விரோதிகளான அவர்களுடைய சைன்யத்தை விழுங்கி விட்டது அவளுடைய படைகள். சிலருடைய கையில், பார்ஷ்ணீ என்ற ஆயுதம். சிலர் கையில் அங்குசம். பெரிய மணிகளை யுத்த களத்தில் பயன் படுத்த தயாராக உள்ளவர்கள் சேர்ந்து ஒரு முகமாக, யானைகளை அடித்துத் தீர்த்தனர். அதே போல யோத்3தா4 என்ற குதிரை வீரர்களை குதிரையுடன், ரதத்தில் வந்தவர்களை சாரதியுடன் கூட, வாயில் போட்டு பற்களால் கடித்து காணவே பயங்கரமாக தின்று தீர்த்தனர். ஒருவன் தலை கேசத்தை பிடித்து, மற்றவனை கழுத்தில் கை வைத்தும், மூன்றாமவனை பாதங்களால் உதைத்தும், ஒருவரோடொருவர் முட்டச் செய்தும், போரிட்டனர். அவர்கள் கைகளிலிருந்து விழுந்த சஸ்திரங்கள், மகா அஸ்திரங்களை எடுத்துக் கொண்டு, அசுரத் தலைவர்களைத் தாக்கினர். அசுர படை, பொறுக்கி எடுத்த வீரர்கள் கொண்டது, எதிர்த்து நிற்க முடியாமல் தவித்தது. மீதி இருந்த வீரர்களை நையப் புடைத்தனர். வாளினால் ஒரு சிலர் காயமடைந்து விழுந்தனர் என்றால் ஒரு சிலர் வாளால் அடிக்கப் பட்டனர். அசுரர்கள் ஒட்டு மொத்தமாக நாசம் அடைந்தனர். பெரும் பாலோர், பற்களால் கடிபட்டு சித்ரவதை அடைந்த அசுரர்களின் படை க்ஷண நேரத்தில் வீழ்ந்தது. அதைப் பார்த்து சண்டன் ஓடி வந்தான். பயங்கரமான தோற்றத்துடன் நின்ற காளியின் மேல் தன் கை வில்லில் பாணங்களை கோர்த்து மழையாக பொழிந்தான். மகா அசுரன் தான். ஆனால் யுத்த பூமியில் கண்கள் சிவக்க நின்றவளும் சாமான்யமானவள் இல்லையே. அவளை சக்ரங்களால் மூடி மறைப்பது போல நிரப்பினான். கீழே விழுந்த ஆயிரக்கணக்கான சக்ரங்களால் அவளுடைய முகம் மறைந்ததைக் காண, நீர் நிறைந்த கார் மேகத்தை, சூரியனுடைய பிம்பங்கள் சூழ்ந்து மறைப்பது போல இருந்தது. அந்த சமயம் அட்டகாசமாக சிரித்த காளி, பைரவ நாதினீ – (பயங்கரமாக நாதம் செய்தவள்) என்றே பெயர் பெற்றாள். அவள் வாயைத் திறந்த பொழுது உள்ளேயிருந்த பற்கள் பளீரென ஒளி வீசியது. சண்டனைத் துரத்தியபடி, ஓங்கிய வாளுடன் சென்றவள், அவன் கேசத்தைப் பிடித்து நிறுத்தி வாளினால் தலையைத் துண்டித்தாள். சண்டன் விழுந்ததைப் பார்த்து, முண்டன் ஓடி வந்தான். அவனையும் அதே வாளால் வீழ்த்தி பூமியில் விழச் செய்தாள். மீதியிருந்த சைன்யம், சண்டன் விழுந்ததையும் பின்னாலேயே முண்டனும் வந்து அடிபட்டு விழ, பயந்து ஓட்டம் பிடித்தது. காளி, அந்த சண்ட, முண்ட என்ற இருவரின் தலைகளையும் எடுத்துக் கொண்டு சண்டிகா தேவியிடம் வந்தாள். பெரும் பசுக்களாக இருந்த சண்ட முண்டர்களை இன்று அழித்து விட்டேன். யுத்த யக்ஞத்தில் சும்ப நிசும்பர்களை நீயே கொல்வாய் என்றாள்.
ரிஷி சொன்னார். காளி, மகா அசுரர்களான சண்ட முண்டர்களiன் தலையைக் கொய்து கொண்டு வந்ததைப் பார்த்து, பாராட்டி மென்மையாக வாழ்த்தினாள், சண்டிகா தேவி. சண்டனையும், முண்டனையும் கொண்டு வந்து என்னிடம் சமர்ப்பித்தாயே, அதனால், உலகில் சாமுண்டா என்று பெரும் புகழ் பெறுவாய் என்றாள்.
த்யானம் – சூழ்ந்திருக்கும் நாக ராஜ கூட்டங்களiன் படத்தில் விளங்கும் உயர்ந்த மணிகளின் ஒளி, காந்தி பட்டு ஜொலிக்கும், தேகத்தையுடையவள், சூரிய ஒளியே தானோ என்று பிரமிக்கும் படி இருப்பவள், மூன்று கண்களையுடையவள், மாலை, கும்பம், கபாலம், நீரஜம்-தாமரை அல்லது அல்லி மலர்கள், இவைகளை கைகளில், பிறை சந்திரனை தலையில் சூடாமணியாக தரித்தவள், ஸர்வக்ஞர் எனப்படும் பைரவரின், சிவ பெருமானின் உடலின் ஒரு பாகமாக சொல்லப்படுபவள், அந்த பத்3மாவதியை சிந்தயே – நினைக்கிறேன்.
ஓம். ரிஷி சொன்னார் (1)
தேவி இவ்வாறு சொல்லக் கேட்ட அசுரனுக்கு கோபம் தலைக்கேறியது. தைத்ய ராஜனிடம் சென்று அப்படியே விஸ்தாரமாக சொன்னான். தூதன் சொன்னதைக் கேட்டு மகா அசுரனும் மிக்க கோபத்துடன், தூ4ம்ராக்ஷன் என்ற வீரனை அழைத்து, ஹே, தூ4ம்ரலோசன, சீக்கிரம் பரிவாரத்தோடு போ. துஷ்டையான அவளை கேசத்தை பிடித்து, பலாத்காரமாக இழுத்துக் கொண்டு வா. அவளை பாதுகாக்க யாராவது வந்து போரிட்டாலும் அவர்களையும், யக்ஷனோ, கந்தர்வனோ யாராயிருந்தாலும், கொன்று விடு.
ரிஷி சொன்னார் (6)
இப்படி அசுரனால் கட்டளையிடப் பட்ட தூம்ரன், ஆறாயிரம் அசுரர்கள் கொண்ட படை சூழ, வேகமாக வந்தான். தேவியைக் கண்டான். பனி மூடிய மலையில் வாசம் செய்த தேவியை பார்த்து, சீக்கிரம் வா, சும்ப, நிசும்பர்கள் அழைக்கிறார்கள் என்று உரக்க கத்தினான். என் தலைவர்கள் இவர்கள். நீயே அன்புடன் வந்து விட்டால் சரி, இல்லாவிடில், கேசத்தை பிடித்து, நிலை குலைய இழுத்துச் செல்வேன், என்றான்.
தேவி சொன்னாள். (10)
அசுர ராஜன் அனுப்பி வந்தாயா, பலசாலி தான். படை பலத்தோடும் வந்திருக்கிறாயா, சரி, என்னை பலாத்காரமாக இழுத்துச் செல்வாயோ, சரி, செய், நான் என்ன சொல்ல. . . .
ரிஷி சொன்னார் (12)
தேவி இப்படிச் சொன்னதும், அந்த அசுரன் வேகமாக ஓடி வந்தான். அருகில் வருமுன் அந்த தூ4ம்ர லோசனனை தன் ஹுJங்காரத்தினாலேயே பஸ்மமாக ஆக்கி விட்டாள், அம்பிகா தேவி. இதைப் பார்த்து வெகுண்டெழுந்த அசுர வீரர்களை, தேவி தன் கூர்மையான அம்புகளாலும், சக்தி, பரஸ்வதம் என்ற ஆயுதங்களாலும் சரமாரியாக பொழிந்து தாக்கினாள். பார்த்துக் கொண்டிருந்த தேவியின் வாகனமான சிங்கம், தன் பிடரியை சிலிர்த்துக் கொண்டு, பயங்கரமாக கர்ஜித்தபடி, அசுர சேனையின் மேல் பாய்ந்தது. ஒரு சில அசுரர்களை, தன் கையால் அடித்து, சிலரை, வாயால் கடித்து, மற்றும் பலரை உதடுகளால் ஆக்ரமித்து, கொன்றது. அந்த கேஸரி (சிங்கம்), நகங்களால் நைய புடைத்தது. கைத்தலத்தால், அசுர கூட்டத்தினரில் பலரின் தலை அவர்கள் உடலை விட்டு கீழே விழச் செய்தது. மற்றும் சிலரை, புஜங்களiல், தலையில் அடி பட்டவர்களாக ஆக்கி, ரத்தத்தையும் குடித்தது. க்ஷண நேரத்தில் அசுர சைன்யம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று.
அத்யந்த கோபத்துடன் வாகனமான கேஸரி, (சிங்கம) செய்த வேலை இது.
மகா அசுரன் காதில் இவை விழுந்தன. தூ4ம்ர லோசனன் வீழ்ந்தான். படை பலமும் பெரும்பாலும் அழிந்தார்கள், என்று கேட்ட மகா அசுரன், உதடு துடிக்க சண்டண். முண்டன் என்ற தலைவர்களை அழைத்தான். ஹே சண்ட, ஹே முண்ட – ஏராளமான வீரர்களுடன், பெரும் படையுடன் போய் முற்றுகை இடுங்கள். எப்படியும் அவளை அழைத்து வாருங்கள். வெற்றி பெறுவோமா என்ற ஐயமே வேண்டாம். ஆயுதங்களோ, அசுர வீரர்களோ, வேண்டிய மட்டும் எடுத்துச் செல்லுங்கள். துஷ்டை, அவளை தோற்கடித்து, அவள் வாகனமான சிங்கத்தையும் கொன்று விட்டுத் திரும்பி வாருங்கள். சீக்கிரம். அம்பிகையை கட்டிப் பிடித்து தூக்கி வாருங்கள் என்றான்.
த்யானம் – மணி, சூலம், ஹுலம் (கலப்பை), சங்கம், சக்ரம், முஸலம், வில், அம்புகள் இவைகளை, பூ போன்ற தன் கைகளால் தரித்துக் கொண்டிருப்பவளும், இருளை அகற்றும் குளiர்ந்த நிலவொளி போன்ற ஒளியுடையவளும், கௌரியின் சரீரத்திலிருந்து தோன்றியவளும், மூவுலகத்திற்கும் ஆதாரமாக இருப்பவளும், மஹா என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவளுமான சரஸ்வதியை தினமும் வணங்குகிறேன். சும்பன் முதலான அசுரர்களை வதைத்தவள் இவளே.
ரிஷி சொன்னார் (1)
முன்னொரு காலத்தில், சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களால், சசிபதி= சசியின் பதியான இந்திரனிடமிருந்து மூவுலகமும், யாகத்தில் பங்கு பெறும் உரிமையும் அபகரிக்கப் பட்டன. அவர்களது அளவில்லாத உடல் பலமே இவ்வகையில் அக்கிரமம் செய்யத் தூண்டியது எனலாம். தவிர, இந்த இருவர்களே, சூரியனுடைய அதிகாரம், சந்திரனுடைய, குபேரனுடைய, யமனுடைய, வருணனுடைய அதிகாரங்களையும் கைப்பற்றினர். அந்த இருவரே வாயுவின் அதிகாரத்தையும் கைப்பற்றி, அக்னி காரியங்களையும் தாங்களே செய்யலாயினர். தேவர்கள் தவித்தனர். ராஜ்யம் போயிற்று. தோல்வியின் அவமானத்தால் வாடினர். அதிகாரங்களை இழந்து விட்டதால், உடன் இருந்த மற்ற தேவர்களாலேயே ஒதுக்கப் பட்டனர்.
அந்த சமயம் தேவியின் அருள் வாக்கு நினைவுக்கு வந்தது. ஆபத்து காலத்தில் நினைத்தாலே வந்து பாலிப்பதாக வரம் அளித்திருக்கிறாளே. எப்படிப்பட்ட ஆபத்தானாலும் அந்த க்ஷணத்திலேயே நாசம் செய்து விடுகிறேன் என்றல்லவா சொல்லியிருந்தாள். அவளே மற்ற யாராலும் வெல்ல முடியாத பராக்ரமம் உடையவள். மகா அசுரர்கள் இருவராலும் இந்த நிலைக்குத் தள்ளப் பட்டோம். இந்த சமயம் காப்பாற்றக் கூடியவள் அவளே. இந்த புத்தி வந்தவுடன், தேவர்கள் மலையரசனான ஹிமவானை நாடிச் சென்றனர். விஷ்ணு மாயையான தேவியை துதிக்கலானார்கள்.
தேவர்கள் சொன்னார்கள் – (8)
1. சிவா – சிவ பத்னியான, (மங்களமான) தேவியை வணங்குகிறோம். மகா தேவி அவளே. அவளை வணங்குகிறோம். ப்ரக்ருதி – இயற்கையாக இருப்பவள், ப4த்3ரா – நன்மைகளைத் தருபவள், அவளை என்றும் வணங்கி நிற்கிறோம்.
2. ருத்ரனுடைய குணம் உடைய ரௌத்ரா, நித்யா, கௌரீ, தா3த்ரி என்ற பெயர்களையுடைய தேவிக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். ஜ்யோத்ஸ்னா – Yசூரியனின் ஒளiயாக, சந்திரனின் உருவமாக, சுகா2 – சௌக்யமே உருவானவள்.
3. கல்யாணி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுபவள் இவள். வணங்கும் அடியார்களுக்கு நிறைந்த செல்வத்தை அளிப்பவளான இந்த தேவிக்கு திரும்பத் திரும்ப நமஸ்காரங்கள். நிர்ருதி (தென் மேற்கு திசை) யாக இருப்பவள், அரசர்களின் ஐஸ்வர்யமாக இருப்பவள், சர்வாணீ என்ற பெயருடையவளான உனக்குத் திரும்பத் திரும்ப நமஸ்காரங்கள்.
4. துர்கா, கடக்க முடியாத கோட்டைகளை கடக்க அருளுபவள், சாரா, (முழுமையானவள்) சர்வ காரிணீ, க்2யாதி (புகழ்) க்ருஷ்ணா, து4ம்ரா இந்த பெயர்களுடன் இருப்பவளைத் திரும்பத் திரும்ப வணங்குகிறேன்.
5. அதி சௌம்யமாக இருப்பவள். இவளே, சமயங்களiல், அதி ரௌத்ரமாகவும் காட்சி தருபவள், என்று உலகில் வணங்கப் படுபவள். அவளுக்கு நமஸ்காரம். உலகை நிலை நிறுத்தி வைப்பவள். தேவி, க்ருதி என்றும் சொல்லப்படுகிறாள். அவளுக்குப் பல பல நமஸ்காரங்கள்.
6. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களiல், மாயையாக இருப்பதால், விஷ்ணு மாயா என்று போற்றப் படுகிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம். அவளுக்கு நமஸ்காரம்.
7. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களiல் அறியும் உணர்வாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
8. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் புத்தி ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
9. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் நித்ரா ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
10. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் க்ஷுதா4 (பசி) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
11. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் சா2யா (நிழல்) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
12. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் சக்தி ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
13. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் த்ருஷ்ணா (தாகம்) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
14. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் க்ஷாந்தி ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
15. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் ஜாதி ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
16. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் லஜ்ஜா ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
17. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் சாந்தி ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
18. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் ஸ்ரத்தா (ஈடுபாடு) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
19. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் காந்தி (ஒளி) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
20. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் லக்ஷ்மி ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
21. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் வ்ருத்தி (தொழில்,செய்கை) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
22. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் ஸ்ம்ருதி (நினைவு) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
23. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் தயா (கருணை) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
24. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் துஷ்டி (திருப்தி) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
25. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் மாத்ரு (தாய்) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
26. எந்த தேவி, உலகில் உள்ள ஜீவன்களில் ப்4ராந்தி (மன பிரமை) ரூபமாக இருக்கிறாளோ, அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம், அவளுக்கு நமஸ்காரம்.
27. ஜீவன்கள் அனைத்துக்கும், அவர்கள் புலன்களை நடத்திச் செல்லும் சக்தியுடையவள், உலகம் முழுவதும் பரவி நிற்கும் (வியாபித்து நிற்கும்) வ்யாப்தி தேவியை, வணங்குகிறேன்.
28. சித் – என்ற ரூபத்துடன், உலகில் (சராசரங்கள்) ஒன்று விடாமல் நிறைந்து நிற்பவளான தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.
29. இவ்வாறு தேவர்கள் துதித்தனர். முன்பும் தங்கள் தேவைகள் நிறைவேற வேண்டி நாள் தோறும் துதித்தவன் தானே சுரேந்திரன். தற்சமயம், தேவர்கள் கூட்டமாக வந்து துதிக்கின்றனர். ஈஸ்வரி, அவள் தான் எங்களுக்கு நன்மை செய்யக் கூடியவள். ஆபத்துக்களை நீக்கி அருளை வழங்குபவள். அவளே எங்களுக்கு சுபமான ஆசிகளை வழங்கட்டும்.
இப்பொழுது நாங்கள் யாரை நமஸ்கரிக்கிறோமோ, அசுரர்களின் உபாதை தாங்காமல் வந்து நிற்கிறோமோ, அவள் எங்களுக்கு சொந்தமான தெய்வமேதான். அவளை நினைத்த மாத்திரத்தில் எல்லா ஆபத்துக்களையும் போக்கி விடுவாள். ஆகவே, பக்தியோடு, உடலும் உள்ளமும் இசைய வணங்குகிறோம்.
ரிஷி சொன்னார். (83)
இப்படி துதி செய்து கொண்டிருக்கும் பொழுதே, பார்வதி தேவி, ஸ்நானம் செய்ய கங்கை நதிக் கரைக்கு வந்தாள். அரசனே, அவள் அவர்களைப் பார்த்து, தேவர்களே, யாரை ஸ்தோத்திரம் செய்கிறீர்கள்? என்று கேட்டாள். அந்த சமயம் பார்வதியின் சரீரத்திலிருந்து, வெளி வந்த சிவா பதில் சொன்னாள். என்னைத் தான் துதிக்கிறார்கள். சும்பன் என்ற அசுரனால் துன்புறுத்தப் பட்டவர்கள். தேவர்கள் அனைவரையும் நிசும்பன் யுத்தத்தில் தோற்கடித்து விட்டான். இதன் பின், பார்வதியின் சரீர கோசத்திலிருந்து வந்தவள் ஆதலால், கௌசிகி என்று அழைக்கப் பட்டாள். அவள் வெளியேறியதும் பார்வதி தேவி, க்ருஷ்ணா – கரும் நிறத்தை அடைந்து விட்டாள். ஹிமாசலத்தில் வசிப்பவளாக, உலகில், காளிகா என்று புகழ் அடைந்தாள். இப்படி அம்பிகா, விசேஷமான ரூபம் தரித்து, தேவர்களை காக்க வந்ததை, சும்ப, நிசம்பர்களின் அடியாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும் கண்டனர். உடனே ஓடிச் சென்று சும்பனிடம் தெரிவித்தனர். ஒப்பற்ற அழகுடன், சௌந்தர்யமே உருக் கொண்டாற் போல ஒரு பெண், ஹிமாலயத்தையே ஒளி மயமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறாள், மகாராஜா. இது போல ஒரு ரூப லாவண்யத்தை கண்டதுமில்லை. கேட்டதும் இல்லை. யார் அந்த தேவி என்று தெரிந்து கொள்ளுங்கள். அவளை அபகரித்துக் கொள்ளுங்கள். அசுர ராஜனே, அவள் ஸ்திரீ ரத்னம். அத்யந்த அழகிய அவயவங்களை உடையவள். தன் அழகால் திசைகளை பிரகாசமாக்குகிறாள். தைத்யேந்திரா, அதோ, அவள் நின்று கொண்டிருக்கிறாள். அவளை தாங்கள் அவசியம் காண வேண்டும். ப்ரபோ, ரத்னங்களோ, மணிகளோ, யானை, குதிரைகளோ, மூவுலகிலும் எங்கு இருந்தாலும், உங்கள் வீட்டை அலங்கரிக்க வந்து விட்டன. புரந்தரனின் ஐராவதம் என்ற கஜரத்னம் அபகரிக்கப் பட்டது. பாரிஜாத மரமும், உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையும் அபகரிக்கப் பட்டது. ஹம்ஸம் பூட்டிய விமானம் இதோ, உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறது. மகா பத்மம் என்ற நிதி, குபேரனிடமிருந்து அபகரிக்கப் பட்டது. சமுத்திரம், என்றும் வாடாத தாமரை மலர்களால் ஆன மாலையையும், கிஞ்சல்கினீம் என்பவைகளையும், தந்தது. வருணனுடைய சத்ரம் உங்கள் வீட்டில் பொன் மயமான கதிர்களை வீசிய படி கிடக்கிறது. ரதங்களiல் சிறந்த இந்த ரதம், முன்பு பிரஜாபதியின் சொத்தாக இருந்தது. யமனிடமிருந்து, உத்3க்3ராத்தா என்ற சக்தியை, நாம் கைப் பற்றிக் கொண்டோம். அரசனே, சமுத்திர ராஜனுடைய பாசம், மற்றும் சமுத்திரத்தில் தோன்றும் எல்லா ரத்ன ஜாதிகளும் உன் சகோதரன் நிசும்பனுடைய வசம் ஆகி விட்டது. அக்னியை கூட விட்டு வைக்கவில்aல. அக்னியும் தன் பங்குக்கு, உன் வஸ்திரங்களில், தன் பரிசுத்த தன்மையைத் தந்தது. இப்படி தைத்யேந்திரா, உலகில் உள்ள மதிப்பு மிகுந்த வஸ்துக்கள் எங்கு இருந்தாலும் தன் வசமாக்கிக் கொள்பவன், ஸ்திரீ ரத்னம் இவள், இவளை ஏன் இன்னம் விட்டு வைத்திருக்கிறாய் ?
ரிஷி சொன்னார் (101)
சண்ட முண்டர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டு சும்பன், மகா அசுரனான சுக்ரீவன் என்பவனை தூதாக, தேவியிடம் அனுப்பினான். நான் சொன்னதாகச் சொல்லு. – இப்படி இப்படி என்று.- நீயே விரும்பி வந்து விட்டால் நல்லது. வேலை சுலபமாக ஆகி விடும். அவனும் தேவி இருக்கும் இடம் வந்து அழகிய மலையடியில் சந்தித்து, அதே போல சொன்னான். தேவியும் மதுரமான குரலில் இழுத்தாற் போல் பதில் சொன்னாள்.
தேவி சொன்னாள். வாஸ்தவம் தான். நீ சொன்னதில் தவறு ஏதுமில்லை. மூவுலக நாயகன் சும்பன், நிசம்பனும் தான். ஆனால் நான் ஒரு பிரதிக்ஞை செய்திருக்கிறேனே. அதை எப்படி மீற முடியும். கேளுங்கள். முன்னொரு காலத்தில், ஏதோ ஒரு வேகத்தில் பிரதிக்ஞை செய்தது. என்னை எவன் யுத்தம் செய்து ஜயிக்கிறானோ, அவனே என் கணவனாவான். எனக்கு சமமான வீரனாக இருந்து, என்னை அடக்குபவனே, நான் விரும்பும் மணாளன். போய் சொல்லுங்கள். சும்பனோ, நிசம்பனோ வரட்டும். என்னை ஜயித்து என் கை பிடிக்கட்டும்.
தூதன் சொன்னான். நீ இப்படி பேசக் கூடாது. விஷயம் தெரியாமல் பிதற்றுகிறாய். எங்கள் அரசன் முன்னால் நின்று போரிட யாரால் முடியும்? சும்ப நிசும்பர்கள் எப்படிப்பட்ட வீரர்கள் தெரியுமா ? மகா தைத்யர்களோ, தேவர்களோ, எதிரில் நிற்க கூட பயப்படுவார்கள். பெண்ணான நீ எம்மாத்திரம்? அதுவும் தனியாக. இந்திரன் முதலான தேவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அனைவருமாக ஓடி விட்டனர். சும்பன் முதலானவர்கள் முன் ஸ்த்ரீயான நீ எப்படி நின்று போரிடுவாய் ? நான் சொல்வதைக் கேள், வா என்னுடன். சும்ப நிசும்பர்களiடம் போவோம். இல்லையெனில் தலை கேசத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு போவோம் – தேவையா உனக்கு இந்த அவமானம் ?
தேவி சொன்னாள்.
அப்படியா, சும்பன் பலசாலி. நிசும்பனும் தான். ஆனால் யோசிக்காமல் செய்த பிரதிக்ஞை. அதனால் நீ போ, போய் நான் சொன்னபடி உன் எஜமானர்களiடம் சொல். அசுரேந்திரன், எது யுக்தமோ, அப்படி செய்யட்டும்.
(தேவர்கள் செய்யும் துதி-
த்யானம் – கார் மேகம் போன்ற வர்ணத்தினாள். கடாக்ஷத்தாலேயே எதிரி படையை கலங்கச் செய்பவள். தலையில் இளம் பிறையைச் சூடியவள். சங்கம், சக்ரம்,வாள், திரிசூலம் இவைகளை ஏந்தியவளாக, முக்கண்ணுடன், சிங்கத்தின் தோளில் வருபவள், மூவுலகையும் தன் தேஜஸால் நிரப்புவள், அப்படிப்பட்ட துர்கா தேவியை, ஜயா என்ற பெயருடையவளை, தேவதைகள் சூழ நிற்பவளை, தங்கள் விருப்பங்கள் நிறைவேறி, பல சித்திகளை அடைந்துள்ள யோகிகளுடன் தியானம் செய்ய வேண்டும்.
ரிஷி சொன்னார் (1)
2. பலசாலி என்று உலகை ஆட்டி வைத்த மகிஷனை வீழ்த்தி, வெற்றி வாகை சூடி நின்ற தேவியை இந்திரன் முதலான தேவர்கள் வாழ்த்தி தோத்திரம் செய்தனர். தலை வணங்கி மரியாதையுடன், மகிழ்ச்சி நிறைந்த குரலில், உடல் புல்லரிக்க வார்த்தைகளால் துதித்தனர்.
3. ஜகதாத்ம சக்தியோடு, தேவ கணங்களiன் சக்திகளை ஒட்டு மொத்தமாக ஏற்றுக் கொண்டு எந்த தேவி, செயற்கரிய செயலைச் செய்தாளோ, அந்த தேவியை அகில உலகில் தேவர்களும், மகரிஷிகளும் போற்ற நின்றவளை, நாங்கள் பக்தியுடன் தொழுகிறோம். எங்களுக்கு ஜயத்தை அருளுவாயாக.
4. எவளுடைய பிரபாவத்தை பகவான் அனந்தனோ, ப்ரும்மாவோ, ஹுரனோ கூட விவரித்துச் சொல்ல முடியாதோ, அந்த சண்டிகா, உலகம் முழுவதும் காக்கவும், அசுபங்களை நாசம் செய்யவும் முன் வரட்டும்.
5. எந்த தேவி, தானே நற்காரியங்களை செய்பவர்களின் ப4வனங்களில், இருக்கிறாளோ, பாபாத்மாக்களின் கிருஹத்தில் அவளே அலக்ஷ்மியாக இருக்கிறாள். நல்ல ஞானிகளின் ஹ்ருதயத்தில் அவளே, புத்தியாக இருக்கிறாள். நல்லவர்களுடைய ச்ரத்தாவாக – (மரியாதை, கட்டுப்பாடு என்ற குணங்களாக,), நற்குடி பிறந்தவர்களிடம், லஜ்ஜை என்ற குணமாக விளங்குகிறாளோ அந்த தேவியை வணங்குகிறோம். தேவி, உலகை காப்பாயாக.
6. உன் உருவத்தை நான் வர்ணிக்கப் போமோ – கற்பனைக்கும் எட்டாத ஒன்று அது. உன் அதிசயமான வீரத்தை வர்ணிக்க முடியுமா ? பயங்கரமான அசுரனையே அழித்தவள் நீ. யுத்தத்தில் நீ செய்த சாகஸங்கள் – அத்புதமான அந்த சாகஸங்களை நான் வர்ணிக்கவா – தேவி! அசுரர்கள் மட்டுமல்ல, தேவர்களே திகைத்து நின்றார்களே.
7. .உலக முழுவதற்கும் காரணமானவள் நீ. மூன்று குணங்களை உடையவள். குணத்தில் குறை உடையவர்கள் உன்னை அறிய முடியாது. ஹரி ஹரனுக்கும் அப்பாற்பட்டவள். நீயே அனைவருக்கும் ஆசிரயமானவள். பாதுகாப்பு அளிப்பவள். இந்த உலகம் உன் அம்சமாகத் தோன்றியது தானே. ஆத்யா – முதல்வளான நீ பரமா ப்ரக்ருதி என்று என்றும் அழியாமல் இருப்பவள்.
8. யாகங்களில் அவளையே முதல்வளாக போற்றிப் பாடுங்கள். அதில் அவள் திருப்தி அடைவாள். நீயே ஸ்வாஹாவாக இருக்கிறாய். பித்ரு கணங்களுக்கு திருப்தி உன்னாலேயே கிடைக்கிறது. அதனால் ஜனங்கள் உன்னை ஸ்வதா4 என்று சொல்கின்றனர்.
9. எந்த தேவி முக்தியளிக்க வல்லவளோ, அந்த தேவி கணக்கில்லாத விரதங்களை தானும் அனுசரிப்பவள். அவளை மோக்ஷத்தை வேண்டும் முனிவர்களும் துதிக்கிறார்கள். அவர்களோ, இந்திரிய நிக்ரஹம் செய்து, தத்வ விசாரம் செய்து, மனம் கனிந்து, தங்களிடம் உள்ள குறைகளை அடியோடு நீக்கியவர்கள். அவர்கள் வேண்டும் பொழுது பகவதியான வித்3யாவாக நிற்கிறாய் தேவி! பரா வித்யையும் நீயே தானே தேவி.
10. சப்த வடிவானவள் நீயே. விமலமான அர்க்யத்தை ஏற்கும் முனிவர்களிடம் குடி கொண்டவள். நல்ல ரம்யமான பாடல்கள், பதங்கள், என்று பாடுபவர்களின் எதிரில் தோன்றுகிறாய் தேவி. நீயே மூன்று வேத ஸ்வரூபமாக காட்சி தருகிறாய். ப4க3வதி, ப4வன் – சிவ பெருமானுடைய பா4வனையாக, வார்த்தையாக விளங்குகிறாய். நீயே உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் படும் பெரும் துன்பங்களை நீக்குபவளுமாக இருக்கிறாய் தேவி.
11. நீயே தான் மேதா4 எனும் புத்தி கூர்மை. அகில சாஸ்திரங்களையும் முழுமையாக அறிந்தவள். எளiதில் நெருங்க முடியாத துர்கையும் நீயே. கடக்க முடியாத ப4வ சாகரத்தை கடக்க உதவும் படகாக வருகிறாய். ஸ்ரீயும் நீ தானே. கைடபாரி எனும் விஷ்ணுவின் ஹ்ருதயத்தில் வசிப்பவளும் நீயே. கௌரியும் நீயே. பிறை சந்திரனை தலையில் சூடிய சிவபெருமானிடத்தில் மனத்தை அசையாமல் வைத்திருப்பவளும் நீயே.
12. மந்த சிரிப்புடன் கூடிய உன் முகம், அமலமான பூர்ண சந்திரன் போல உள்ளது. உத்தமமான தங்கத்தின் வசீகரிக்கும் நிறம். மிக அத்புதம். கோபத்துடன் பார்த்த பொழுது கூட மகிஷன், உன்னைக் கண்டவுடன், அந்த அவசரத்திலும் கூட உன் முகத்தின் காந்தியால் திகைத்து நின்று விட்டான். கோபத்துடன் புருவம் நெரிய இருந்த பொழுதிலும், அப்பொழுது தான் உதித்த சந்திரனின் ஒளியுடன் இருந்ததைக் கண்டவுடனேயே மகிஷனுடைய பிராணன் போய் விட்டது போலும். ஆச்சர்யம் தான். யார் தான் அந்தகனான யமன் கோபத்துடன் எதிரில் நிற்கும் பொழுது உயிர் வாழ ஆசைப் பட முடியும்.
13. தேவி ! தயை செய். நீ ப4வனுடைய பிரிய மனைவி. கோபம் கொண்டால், அந்த க்ஷணமே குலத்தோடு அழிக்க வல்லவள். இப்பொழுது தான் அதை உணருகிறோம். எப்படி என்றால் இந்த மகிஷனுடைய படை பலம், அளவில்லாதது என்று நினைத்ததை, நீ ஒருவளாக செயலிழக்கச் செய்து விட்டாயே.
14. அதே சமயம், தேவி, நீ யாரிடம் ப்ரஸன்னமாக இருக்கிறாயோ, அவர்களே த4ன்யர்கள். அவர்களே. நிறைய குழந்தைகளுடன், மனைவி, வேலைக்காரர்களுடன் மேன்மையாக வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தான் புகழ் தானே வந்து சேருகிறது. ஊருக்குள் கௌரவமாக வாழ்கிறார்கள். எல்லா வித செல்வங்களும் அவர்களை அடைவதில் பெருமை கொள்கின்றன. அவர்களும் தர்ம பரமாகவே இருப்பதால் எந்த வித துன்பமும் அவர்களை நெருங்குவதில்லை.
15. அவர்களே சுக்ருதி -தர்மங்களை முறையாக செய்பவன் என்று பெயர் பெறுகிறார்கள். தினந்தோறும் நற் காரியங்களை செய்து அதன் பலனாக சுவர்கம் போகிறார்கள். இதுவும் உன் அருளால் தானே ஸாத்யமாகிறது.
16. அதனால் தான் துர்கே தேவி, உன்னை நினைத்த மாத்திரத்தில், ஜீவ ஜந்துக்கள் பயம் என்பதிலிருந்து விடுபடுகிறார்கள். ஆரோக்யமானவர்கள் நினைத்தால், நல்ல சுபமான புத்தியைத் தருகிறாய். தரித்திரம், துக்கம், பயம் இவைகளை அழிப்பவள் உன்னையன்றி வேறு யார் ? அனைவருக்கும் ஏதாவது உபகாரமாக செய்ய நினைப்பவள் நீ. உன் சித்தமே கருணையில் தோய்ந்தது தானே.
17. இவர்களை வதைத்தாலே உலகம் நன்மை பெறும். இவர்கள் நரகத்தில் வெகு நாட்கள் பாப பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும். யுத்த களத்தில் மரணமடைந்ததால் தேவ லோகம் செல்லட்டும். இப்படி நினைத்து தான், உனக்கு கெடுதலை செய்பவர்களையும் வதைக்கிறாயோ தேவி.
18. இல்லாவிடில் கண் பார்வையிலேயே ப4ஸ்மமாக செய்து இருக்கலாமே. எதற்காக எதிரி என்று நிற்க வைத்து ஆயுதங்களை பிரயோகம் செய்தாய்.? எதிரிகளானாலும் உன் சஸ்திரங்களால் பாபம் தொலைந்து, தெளிந்து, நல்ல உலகங்களை சென்றடையட்டும் என்று நினைத்தாயோ. அதி சாத்4வி – மிக ஸாதுவான குணம் உள்ளவள் நீ. உன் மனம் இப்படித்தான் நினைக்கும். இதில் ஆச்சர்யம் என்ன?
19. இவர்களுக்கும் அருள நினைத்தாய் போலும். வாட்கள் ஒன்றொடொன்று உரசும் ஒலி, சூலத்தின் நுனியின் பிரகாஸம் இவைகளால் அசுரர்களின் பார்வையை உன் பக்கம் இழுத்தாய். தானாக வந்து தரிசனம் செய்யத் தெரியாத அவர்களை உன் பிறை சந்திரனைக் காட்டி உன் முகத்தை காணச் செய்தாயா.
20. தவறான வழியில் செல்கிறார்களே, இவர்களை நல் வழியில் திசை திருப்ப வேண்டும் என்று உன் சீலமான ரூபத்தை, மற்ற ஜனங்களுக்கு கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒப்புவமையற்ற உன் முகத்தை, தேவ பராக்ரமங்களை அழித்தவர்களையும் அழிக்க வல்ல வீர்யத்தைக் காட்டி உன் வசப்படுத்திக் கொண்டாய். எதிரிகளுக்கும் அருளும் இந்த தயை உன் இயல்பேயன்றோ.
21. உன் பராக்ரமத்துக்கோ, உன் ரூபத்துக்கோ யாரை உனக்கு சமமான உவமையாக சொல்ல முடியும். எதிரிகளை பயந்து நடுங்கச் செய்யும் உன் உள்ளத்தில் தயையே நிரம்பி இருக்கிறது என்பது தெரியாமல் யுத்தத்தின் கடுமையை மட்டும் கண்டவர்களும் பின்னால் தெரிந்து கொண்டனர். மூவுலகிலும் நீ தான் வரம் அருளுபவள் என்பதை உணர்ந்து கொண்டனர்.
22. எதிரிகளை அழித்ததால், மூவுலகமும் காப்பாற்றப் பட்டது. யுத்த களத்தில் முன் நின்று, அவர்களை வதைத்து, அதனாலேயே, அசுரர்களும் நல்ல கதியை அடைந்தனர். எங்களுக்கும் மதம் கொண்ட அசுரர்கள் என்ற பயம் நீங்கியது. தேவி, உன்னை வணங்குகிறோம்.
23. தேவி , எங்களை சூலத்தால் காப்பாய். வாள் முனையில் காப்பாய். அம்பிகே, உன் மணிகளின் நாதமே எங்களைக் காக்கட்டும். வில், அம்புகளiன் உரசல் சத்தம் காக்கட்டும்.
24. அம்பிகே, கிழக்கு திசையில் காப்பாற்று. சண்டிகே, மேற்கில், தெற்கிலும் உன் கை சூலத்தை சுழற்றி (காப்பாய்) ஈஸ்வரி, வடக்கிலும் காப்பாய்.
25. சௌம்யமான ரூபங்கள் யாவையோ, அவைகளைக் கொண்டு, உலகில் சஞ்சரிக்கும் பல அத்யந்த கோரமான ரூபங்கள், அவைகளிடமிருந்து உலகை, எங்களை காப்பாய்.
26. வாள், சூலம், கதை மற்றும் உன் அஸ்திரங்கள் என்னவெல்லாம் உண்டோ, உன் கோமளமான கைகளுடன் உறவாடும் ஆயுதங்கள் யாவையோ, அவைகளைக் கொண்டு எங்களை ரக்ஷiப்பாய்.
ரிஷி சொன்னார். (28)
இப்படி திவ்யமான ஸ்தோத்திரங்களால் துதித்து, நந்தன வனத்தின் மலர்களால் அர்ச்சனை செய்து, வாசனை திரவியங்களை உபசாரமாக அளித்து, தூப தீபங்களுடன் ஸமஸ்த தேவர்களும் வேண்டிக் கொண்டவுடன், தயை நிறைந்த தேவி, அவர்களைப் பார்த்து, சுமுகியாக ப்ரஸன்னமாக சொன்னாள்.
தேவி சொன்னாள் (32)
தேவர்களே, வேண்டும் வரங்களைக் கேளுங்கள்.
தேவர்கள் சொன்னார்கள்.
பகவதி, நீயே எல்லாமே கொடுத்து விட்டாய். எதுவுமே மீதியில்லை கேட்க. இந்த அசுரனை அழித்ததே பரம உபகாரம். இன்னமும் வரம் தருவதானால், மகேஸ்வரி, நாங்கள் உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் எங்களுடைய பெரிய பெரிய ஆபத்துகளை களைந்து அருளுவாய். எந்த மனிதர்கள், இந்த ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ, அவர்களுக்கு நிறைந்த செல்வத்தை, விப4வம்-நிறைவான வாழ்வை, த4ன, தா3ராதி ஸம்பத்துக்களை விருத்தியாக்குவாய். எப்பொழுதும் பிரஸன்னமாக எங்களையும் பாலிப்பாய். இது தான் நாங்கள் வேண்டுவது.
ரிஷி சொன்னார் (38)
அப்படியே ஆகட்டும் என்று சொல்லி தேவி மறைந்தாள். தங்களுக்காவும், உலகுக்காகவும் தேவர்கள் வேண்டியதை மகிழ்ச்சியுடன் அருளினாள்.
அரசனே, இது தான் தேவி தோன்றிய கதை. தேவ சரீரங்களிலிருந்து சக்தியை ஏற்று, மூவுலகமும் உய்ய வேன்டும் என்பதற்காக அவதரித்தாள். பின் ஒரு சமயம், சும்ப, நிசும்பர்கள் என்ற அசுரர்கள் தோன்றிய பொழுது, கௌரியாக, திரும்ப அவதரித்தாள். தேவர்களுக்கு நன்மை உண்டாகவும், உலகம் உய்யவும் அவதரித்த இந்த கதையையும் சொல்கிறேன் கேள், என்றார்.
த்யானம் – ஆயிரம் சூரியன்கள் ஏககாலத்தில் உதித்தது போல பிரகாசமானவள், அருண நிறத்தாள், பட்டாடை உடுத்தி தலையில் பூ மாலையை சூடியவள். குங்குமம் அப்பிய ஸ்தனங்களும், ஜப மாலையும் அபீதி, வித்யா என்ற உயர்ந்த அறிவுகளை, கல்வியே உருவகமாக விளங்கிய கைத் தாமரைகளில் தாங்கியவள், முக்கண்ணும், அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற பிரகாசமான வதன அழகும் உடைய தேவியை, கிரீடத்தில் பிறை சந்திரனை சூடியவளான தேவியை வணங்குகிறேன்.
ரிஷி சொன்னார் (1)
மகா அசுரன் தன் சைன்யம் அடி பட்டு மொத்தமாக அழிந்ததைக் கண்டான்.
சிக்ஷு என்ற சேனைத் தலைவன் கோபத்துடன் அம்பிகையுடன் யுத்தம் செய்ய முனைந்தான். அம்பிகையின் மேல் அம்புகளை வர்ஷித்தான். கார் மேகம் மேரு மலையின் உச்சியில் நீரால் அபிஷேகம் செய்வது போல இருந்தது. அவனை, விளையாட்டாகவே தேவி, தலையையும், கைகளையும் துண்டித்து, அவன் குதிரைகளையும் வீழ்த்தினாள். குதிரைகளை நடத்திச் சென்றவர்களும் மாண்டனர். வில் பொடிப் பொடியாகியது. கொடி அறுந்து விழுந்தது. வேகமாக வந்து விழுந்த அம்புகள், அவன் உடலை சல்லடையாக்கியது. தன் வில் ஒடிந்து, ரதம் வீழ்ந்து, குதிரையும் போய், அதை ஓட்டியவர்களும் அழிந்ததைக் கண்ட அந்த வீரன், கையில் கத்தியுடன் தேவியை நோக்கி ஓடி வந்தான். சிங்கத்தை அடித்து விட்டு, தேவியின் இடது புஜத்தை குறி பார்த்து அடிக்க வந்தான். அதற்குள் தேவியின் வாள் அவன் புஜங்களை வெட்டி வீழ்த்தி விட்டது. அப்படியும் சூலத்தால் தேவியைத் தாக்க வந்தான். ஆகாயத்திலிருந்து சூரிய தேவனே இறங்கி வந்தாற் போல் ஒளி வீசிக் கொண்டு அந்த சூலம் வந்தது. தேவியும் தன் சூலத்தால் பதிலடி கொடுத்து அந்த மகா அசுரன் தூள் தூளாக சிதறச் செய்தாள். மகிஷனுடைய முக்யமான படைத் தலைவர்களுள் ஒருவன், மாண்டதும், தேவர்களைத் துன்புறுத்துவதே தொழிலாகக் கொண்ட மகிஷனின் படை வீரர்களில் ஒருவனான சாமரன் என்பவன் யானை மேல் ஏறி அங்கு வந்தான். இவன் சக்தியை பிரயோகிக்கவும், தேவி, உடனே அவசரமாக ஹுங்காரம் செய்து, அந்த சக்தியை அடக்கி பூமியில் விழச்செய்தாள். சக்தி உடைந்து கீழே விழுந்ததைக் கண்ட சாமரன், தன் சூலத்தை எடுத்துக் கொண்டான். தேவி அவனது ஆயுதங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்து விட்டாள். அதன் பின் தேவியின் படை வீரன் சிம்ஹன் என்பவன் வந்து த்வந்த யுத்தம் செய்யவும் அவனை தலை வேறு, உடல் வேறு, என்று ஆக்கி விட அவன் மாண்டான். திரும்பவும் உத3க்4ரன் என்பவன் போர் முனைக்கு வந்தான். இவனை அழிக்க தேவி, மரங்களையும், கற்களையுமே ஆயுதமாக கொண்டாள். அதன் பின் வந்த கராளன், தேவியின் கைகளால், முஷ்டி, புறங்கை இவைகளால் அடி பட்டே மாண்டான். மேலும் மகிஷனுடைய படை வீர்ர்கள் வந்து கொண்டே இருப்பதைப் பார்த்து, க3தையை சுழற்றி அடித்தாள். பா4ஷ்கலன் என்பவன் மாண்டான். பிந்திபாலம் மற்றும் பாணங்களால் தாமரம், அந்தகன், உக்ராஸ்யம், உக்ர வீர்யம், மகா ஹனு என்பவர்களையும் வதைத்தாள். முக்கண்ணனுடைய திரிசூலத்தை கையில் எடுத்தவள், பி3டாலன், துர்தரன், துர்முகன், மற்றும் மீதமிருந்த பலரை யம லோகத்துக்கு அனுப்பி வைத்தாள். இவ்வாறு தன் சேனை வீரர்கள் நாசமாக, படை க்ஷீணமாவதைக் கண்டு மகிஷாசுரன் தானே மாகிஷமான (எருமை மாடு) ரூபத்துடன் தேவியை எதிர்த்து பயமுறுத்தியபடி வந்தான். ஒரு சிலரை அடித்தும், மற்றும் சிலரை தன் குளம்புகள் அதிர நடந்த நடையாலும், வாலை விசிறி அடித்து ஒரு சிலரை, கொம்புகளால் முட்டி கிழித்தும் வேகமாக வந்தான். அந்த வேகமே, சிலரை அலறச் செய்தது என்றால், சுற்றிச் சுற்றி வந்து உரத்த குரலில் கத்தியதில் சிலர் பயந்து ஓடினர். மூச்சுக்காற்றே பலரை பூமியில் விழச் செய்தது. கூட்டத்தின் இடையில் புகுந்து அந்த அசுரன் ஓடினான். தேவியின் சிம்ஹத்தை கொல்ல வந்த பொழுது தேவி கோபமடைந்தாள். அந்த அசுரனும் மகா வீரன். கோபத்துடன் தன் குளம்புகளால் பூமி அதிர நடந்த பொழுது, கொம்புகளால் மலைச் சிகரங்களை ஆட்டி விழச் செய்ததோடு, உரத்த குரலில் சப்தம் செய்தான். அவன் வேகமாக நடந்ததில் பூமி அதிர்ந்தது. வாலினால் அடித்து சமுத்திரத்தை கலக்கினான். மேகத்தை தன் கொம்புகளால் கிழித்து துண்டு துண்டாக்கினான். அவனுடைய மூச்சுக்காற்றாலேயே மலைகள், ஆகாயத்தில் விசிறி எறியப்பட்டன. இனி தாமதிக்க கூடாது என்று எண்ணிய தேவி பாசத்தை வீசி அவனைக் கட்டினாள். பாசத்தால் கட்டிய உடனேயே மாகிஷ எருமை மாட்டு உருவம் மறைந்து விட்டது. சிங்க முகமாக மாறியது. அந்த தலையை துண்டித்தவுடன், மனித உருவமாக கையில் வாளுடன் நின்றான். அந்த மனித உருவத்தை தேவி பல அம்புகளைப் போட்டு வதம் செய்தாள். அந்த உருவம் கையில் வாளுடனேயே மகா கஜமாயிற்று. கைகளால் மகா சிங்கமான அவனைப் பிடித்து வாளுடன் கையைத் துண்டித்தாள். அந்த மகா அசுரன் திரும்பவும் மாகிஷ உருவத்தை அடைந்தான். பழையபடி மூவுலகையும் துன்புறுத்த ஆரம்பித்தான். ஜகன்மாதா உத்தமமான பானத்தைக் குடித்து விட்டு பலமாக சிரித்தாள். கண்கள் சிவந்து விட்டன. அசுரனும் தன் பலம், வீர்யம், மதம் வெளிப்பட கொம்புகளால் மரங்களை வீழ்த்தி சண்டிகா பேரில் வீசினான். அப்படி வந்த மரங்கள் தன் அருகில் வருமுன் தன் கை சரங்களால் பொடிப் பொடியாக்கினாள் தேவி. மதுவினால் சிவந்த கண்களும், வாயுமாக அவனைப் பார்த்து சொன்னாள்.
தேவி சொன்னாள். (37)
மூடனே, நன்றாக கத்து. நான் மதுவை குடித்துவிட்டு வருகிறேன். இதோ பார், என் கையால் வதமாகப் போகிறாய். அதைக் கண்டு தேவர்கள் இதை விட உரக்கச் சிரிக்கப் போகிறார்கள்.
ரிஷி சொன்னார் (39)
இப்படி சொன்னவள், அந்த மகிஷத்தின் மேல் ஏறி நின்று கால்களால் கழுத்தில், சூலத்தால் உடலில் அடித்தாள். அவனும் அசைய முடியாத அந்த நிலையிலும், தன் முகத்தைத் தூக்கி பாதி நடந்த நிலையிலேயே, தேவியின் கையால் வதைபட்டவனாக, நின்று விட்டான். மீதி இருந்த அவனது இயக்கமும், தேவி வாளால் அவன் சிரத்தை துண்டித்ததும் நின்றது. உடனே சைன்யங்களின் ஹா ஹா என்ற ஆரவாரம் எழுந்தது. தைத்ய சைன்யம் நாசமடைந்தது. தேவதா கணங்கள் மகிழ்ச்சியுடன் தேவியைத் துதித்தனர். மகரிஷிகளும், மற்றவர்களும் சேர்ந்து துதி செய்தனர். கந்தர்வர்கள் பாடலாயினர். அப்சர கணங்கள் நடனமாடினர். (44)
த்யானம் – அக்ஷமாலை, பரசு (கோடாலி) , க3தை4, இக்ஷு, குலிஸம், பத்மம், த4னுஷ், த3ண்டம், அம்புறாத் தூணீ, சக்தி, அஸி என்ற வாள், மான் தோல், தாமரைப் பூ, சூலம், பாசம், சுத3ர்ஸனம் இவ்வளவும் இவள் ஆயுதங்களே. சைரிப4 மர்தி3னி இவள். பிரஸன்னமாக தாமரை மலரில் வசிப்பவளான மகாலக்ஷ்மி என்ற தேவியை வணங்குகிறேன்.
முன் ஒரு காலத்தில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கடும் யுத்தம் தோன்றியது. இந்திரன் தலைமையில் தேவர்கள், மகிஷன் தலைமையில் அசுரர்கள். மகா பலம் பொருந்திய அசுரர்கள் தேவர்களைத் தோற்கடித்தனர். தேவர்கள் அனைவரையும் ஜயித்த மகிஷன், தானே இந்திரனானான். தோற்ற தேவர்கள், பிரஜாபதி என்றும், பத்மயோனி என்றும் அழைக்கப்படும் ப்ரும்மாவின் தலைமையில், பகவான் விஷ்ணுவும், ஈசனும் இருக்குமிடம் சென்றனர். இருவரிடமும் நடந்ததைச் சொன்னார்கள் மகிஷாசுரனால் தேவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைச் விஸ்தாரமாக சொன்னார்கள். சூரியன், இந்திர, அக்னி, வாயு, சந்திரன், யமன், வருணன், மற்றும் பலருடைய அதிகாரங்களைக் கைப்பற்றி தான் ஒருவனே ஆட்டிப் படைக்கிறான். அந்த தேவ கணங்கள் சுவர்கத்திலிருந்து விரட்டப்பட்டு பூமிக்கு வந்தனர். மனிதர்கள் போல நடமாடுகின்றனர். மகிஷன் மிகவும் பொல்லாதவன். தேவ விரோதி. அட்டகாசம் செய்கிறான். உங்களை சரணமடைகிறோம். அவனை அடக்கி எங்களைக் காக்க வேண்டுகிறோம்.
மதுசூதனன் தேவர்கள் சொன்னதை பொறுமையாக கேட்டார். ஈசனும் கேட்டார். இருவரும் மகிஷனிடம் கோபம் கொண்டதில், புருவம் நெரிய, முகம் சிவக்க ஆனார்கள். சக்ரதாரியான விஷ்ணுவின் கோபம் கொண்ட முகத்திலிருந்து, மகத்தான தேஜஸ் வெளி வந்தது. அத்துடன், சங்கரனுடைய, ப்ரும்மாவுடைய தேஜஸும் கலந்தது. மற்ற தேவர்கள், இந்திரன் முதலானோர், சக்தியும் அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்டு, அத்துடன் ஐக்யமாயின. இந்த சக்திகளின் சேர்க்கை கொழுந்து விட்டு எரியும் எரிமலை போல, பிரகாஸமாகத் தெரிந்தது. அனைவரும் இந்த ஜோதி ஸ்வரூபத்தை திகைத்தபடி பார்த்தனர். திசைகளை சூழ்ந்து பரவி நின்ற பெருந்தீ. அந்த சக்திக்கு உவமானமாக எதைச் சொல்ல முடியும். அனைத்து தேவர்களின் உடல்களிலிருந்து வெளிப்பட்ட சக்தி சமூகம். கண் எதிரில் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அது ஒரு பெண் உருக் கொண்டது. மூவுலகையும் வியாபித்து தன் ஒளியால் பிரகாசமாக்கியபடி நின்றது. அதில் சம்பு4வின் தேஜஸ் அந்த பெண்ணின் முகமாகியது.
யமனுடைய தேஜஸ் கேசமாகியது. விஷ்ணுவின் தேஜஸ் புஜங்களாயின. சந்திரனுடைய தேஜஸ் இரண்டு ஸ்தனங்களாயின. இந்திரனின் தேஜஸ் இடுப்பு பாகமாயிற்று. வருணனின் தேஜஸ் துடைகளாக, ப்ருஷ்ட பாகமாக ஆயின. ப்ரும்மாவின் தேஜஸ் கால்களாயின. சூரியனின் தேஜஸ் கால் விரல்களாயின. வசுக்களின் தேஜஸ் கை விரல்களாயின. குபேரனின் தேஜஸ் மூக்காக, ப்ரஜாபதியின் தேஜஸ் பற்களாக, அக்னியின் தேஜஸ் மூன்று கண்களாயின. ஸந்த்யா காலங்களின் தேஜஸ் புருவங்களாக, வாயுவின் தேஜஸ் காதுகளாக, மற்ற தேவர்களின் சக்திகளும் சேர்ந்து சிவா என்ற புதிய சக்தி பிறந்தது. சமஸ்த தேவர்களின் தேஜஸும், சக்தியும் சேர்ந்த கலவையாக தோன்றிய அவளைப் பார்த்து, தேவர்கள், மகிழ்ந்தனர். இதுவரை மகிஷனால் பட்ட துன்பங்களை மறந்தனர். பினாக பாணியான சிவன், தன் சூலத்திலிருந்து பிரித்து எடுத்து ஒரு சூலத்தை தந்தார். பகவான் கிருஷ்ணன், தன் சக்ரத்திலிருந்து புது சக்ரத்தை உருவாக்கி கொடுத்தார். வருணன் சங்கத்தையும், அக்னி சக்தி என்ற ஆயுதத்தையும், தந்தனர். வாயு வில்லையும் பாணங்கள் நிரம்பிய துaணியையும் தந்தான். இந்திரன் வஜ்ரத்தை குலிசம் என்ற ஆயுதத்தால் பிளந்து தந்தான். மேலும், ஆயிரம் கண்கள் உடைய அவன், ஐராவத யாணையின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளைத் தந்தான். கால தண்டத்திலிருந்து புதிய தண்டம் உண்டாக்கி யமன் தந்தான். சமுத்திர ராஜன் பாசத்தை தந்தான். பிரஜாபதி ப்ரும்மா அக்ஷமாலையையும், கமண்டலுவையும் கொடுத்தார். திவாகரன், அவளுடைய ரோமக் கால்களில், தன் ஒளிக் கதிர்களை சமர்ப்பித்தான். காலன் வாளைத் தந்தான். நிர்மலமான தோற்றம் வர தோல் பகுதிகளை பளபளக்கச் செய்தான். பாற்கடலில் தோன்றிய என்றும் வாடாத, தூய்மையான மாலையை, ஆடைகள், சூடாமணிகள், குண்டலங்கள், கை கடகங்கள், பிறை சந்திரனையும், அதே போல வெண்மையான கேயூரங்கள், புஜங்களில் தரிக்க என்றும், அதே போல உத்தமமான வெண்மையான நூபுரங்கள், எல்லா விரல்களிலும் பொருத்தமான ரத்னங்கள் பதித்த மோதிரங்கள் என்று ஆபரணங்களை விஸ்வகர்மா கொடுத்தார். அத்துடன் பரசு (கோடாலி) என்ற ஆயுதத்தையும் கொடுத்தார். உடைக்க முடியாத பல அஸ்திரங்கள், த3ம்ஸனம் (அடக்குவது-அதற்கான ஆயுதம்), வாடாத மலர் மாலைகள், தலையில் தரித்துக் கொள்ள, என்று சமுத்திரம் கொடுத்தது. அதன் அழகு கண்களைப் பறித்தது. ஹிமவான் சிம்ஹ வாகனத்தையும், பலவிதமான ரத்னங்களையும் கொடுத்தார். த4னாதிபனான குபேரன், பான பாத்ரம் – என்றும் குறையாத மது நிறைந்த பாத்திரத்தை தந்தான். நாகங்களின் தலைவனான நாகேசன், மகாமணிகள் பிரகாசித்த நாக ஹாரத்தைத் தந்தான். பூமியைத் தாங்கும் மகா நாகங்கள் அவை. மற்ற தேவர்களும், பூ4ஷணங்கள், ஆயுதங்கள் என்று தேவியிடம் சமர்ப்பித்தனர். இப்படியாக, அனைத்து தேவர்களின் அன்பும், மதிப்பும் கிடைக்கப் பெற்ற தேவி, தான் செய்ய வேண்டிய செயலின் ஆரம்பமாக, சங்கநாதம் எழுப்பினாள். மகத்தான இந்த ஒலி மேலும் மேலும் பயங்கரமாக பரவியது. அதைவிட பயங்கரமாக அதன் எதிரொலி கேட்டது.
ஆகாயம் முழுவதையும் நிரப்பிய பயங்கரமான நாதம். உலகம் முழுவதும் நடுங்கியது. சமுத்திரம் கலங்கியது. பூமி ஆடியது. கூடவே மரங்கள், மலைகள் ஆடின. அதையும் மீறி தேவர்களின் ஜய சப்தம் வானளாவியது. மிகுந்த சந்தோஷத்துடன் சிம்ஹ வாஹிணியான தேவியை வரவேற்று போற்றினர். தேவர்களின் எதிரிகள், திடுமென எழுந்த இந்த கோலாகலத்தைக் கண்டு திகைத்தனர். தங்கள் படை வீர்ர்களை கிளப்பி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்குத் தயாராக கிளம்பினர். மகிஷாசுரன், ஆ, இது என்ன? என்று கோபத்துடன் இரைந்தான். சற்று முன் கேட்ட நாதத்தை குறி வைத்து ஓடினான். அவனைச் சார்ந்த அசுரர்கள் உடன் ஓடினர். தேவியைக் கண்டான். மூவுலகிலும் பரவிய ஒளி மயமாக நின்றவளைக் கண்டான். தன் பாதங்களில் பூமி வணங்கி நிற்க, கிரீடத்தால் வானத்தை தொடுபவளாக, பாதாளம் வரை நீண்டிருந்த வில், அம்பு, இவைகளுடன், வில்லின் நாண் எழுப்பிய தொனி திசை எங்கும் பரவ நின்றவளைக் கண்டான். ஆயிரம் புஜங்கள், திசைகளை ஆக்ரமித்திருந்தன. அதன் பின் இந்த தேவியும் தேவ விரோதிகளான அசுரர்களுடன் போர் புரிய தயாரானாள். பலவிதமான அஸ்த்ர ஸஸ்த்ரங்களை பிரயோகித்தாள். அஸ்த்ரங்களின் உரசலால் தோன்றிய ஒளி எட்டெட்டு திக்குகளிலும் பரவியது. மகிஷாசுர சேனையிலிருந்து சேனைத் தலைவன் சிக்ஷ என்ற மகாசுரன் சதுரங்க பலத்துடன் வந்தான். அமரர்களுடன் போரைத் துவக்கினான். பன்னிரெண்டாயிரம் ரதங்களுடன் உதக்ரன் என்ற மகாசுரன் வந்தான். ஆயிரமாயிரம் வீரர்களுடன் மகாஹனு- பெரிய திமிலையுடையவன் வந்தான். 55 ஆயிரம் வீர்ர்களுடன் அஸிலோமா என்ற மகாசுரன் வந்தான். இரு நூறாயிரம் வீரர்களுடன் பாஷ்கலோ என்பவன் யுத்தம் செய்ய வந்தான். யானைகள், குதிரைகள், ஆயிரக் கணக்காக சூழ்ந்து நின்று கொண்டன. கோடிக்கணக்கான ரதங்கள். பி3டாலன் என்பவனும் தன் படையோடு வந்து சேர்ந்து கொண்டான். இவன் ரதங்கள் வேறு தனியாக வந்து சேர்ந்து கொண்டன. இவைகளில், யானை பூட்டியவை, குதிரை பூட்டியவை என்று வரிசை வரிசையாக வந்தபடி இருந்தன. மகிஷாசுரனும் குதிரைகள் பூட்டிய ரதத்தில் வந்து சேர்ந்தான். அவன் கையிலும் தோமரங்கள், பிந்தி பாலங்கள், சக்திகள், முஸலங்கள் என்ற ஆயுதங்கள், தேவியுடன் போரிட இவை போதாது என்று நினைத்தோ, வாட்கள், பரசு, பட்டிஸங்கள் என்ற ஆயுதங்களையும் தாங்கி வந்தான். ஒரு சிலர் சக்தியைச் செலுத்தினர். ஒரு சிலர் பாசங்களை வீசினர். தேவியை இடை விடாது வாட்களால் அடித்தனர். அவளை கொல்லும் எண்ணத்துடன் முன்னேறி வந்தவர்களை தேவி பார்த்தாள். அவர்களுடைய அஸ்த்ர ஸஸ்த்ரங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தாள். விளையாட்டாகவே, தன் அஸ்த்ரங்களை மழையாக பொழிந்தபடி, ஏறிட்டு நோக்கினாள். தேவர்களும், ரிஷிகளும் இடைவிடாது ஸ்தோத்திரம் செய்யலானார்கள். ஈஸ்வரி பல அஸ்த்திரங்களை அசுரர்கள் தேகங்களில் பட வீசினாள். தேவியின் வாகனமான சிங்கம், காடுகளில் காட்டுத் தீ பரவுவது போல, தன் பிடறி மயிரை சிலிர்த்தபடி, நடந்தது. ரணகளத்தில் அம்பிகை விட்ட பெரு மூச்சுகளே, உடனுக்குடன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பூத கணங்களாக மாறின. அவர்களும், பரசுகளையும், பிந்தி பாலங்களையும் கத்தி, பட்டிசங்களையும் கொண்டு அசுர சேனையை நாசம் செய்தன. இவர்களையும் பின் நின்று இயக்கியது தேவியின் சக்தியேயன்றோ.. இந்த பூத கணங்களில் சிலர் சங்கத்தை ஊதினர். சிலர் மிருதங்கத்தை வாசித்தனர். சிலர் படகங்களை வாசித்தனர். யுத்தமே மகோத்ஸவமாக, அவர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பின் தேவி, திரி சூலத்தால், க3தை4யினால், சக்தி இவைகளை மழையாக பொழிந்து, மகாசுரர்களை நூற்றுக் கணக்கானவர்களை வதைத்தாள். மற்றவர்கள் வீழ்ந்தனர். அவளுடைய க4ண்டா மணியின் நாதத்தாலேயே, பயந்து அலறி முர்ச்சையடைந்தவர்கள் பலர். அப்படி விழுந்தவர்களை பாசத்தால் கட்டி, மற்றவர்களைத் தேடிப் போனபடி இருந்தாள். கத்தி பட்ட மாத்திரத்தில் ஒரு சிலர் இரண்டாக பிளந்து விழுந்தனர். ஒரு சிலரை க3தையால் ஒதுக்கித் தள்ளiயதாலேயே பூமியில் விழுந்தனர். விழுந்து கிடந்தவர்களின் உடலிலிருந்து ரத்தம் பெருகியது. முஸலத்தால், சூலத்தால் அடி வாங்கியவர்கள், சிதறி துண்டு துண்டாக விழுந்தனர். யுத்த பூமியில் இடை விடாது பட்ட அடியால் மாண்டவர் பலர். த்ரிதஸா என்று அழைக்கப்படும் தேவர்களை வாட்டி வதைத்தவர்களில் பலர், தங்கள் பிராணனை கழுகுக்கு இரையாக்கினர். பலருக்கு புஜங்கள் இற்று விழுந்தன. சிலருக்கு கழுத்து துண்டிக்கப்பட்டது. தலைகள் கீழே விழுந்தன, இடையில் அடி பட்டவர்கள், இரண்டு துண்டானார்கள். மகா அசுரர்களiல் மீதி இருந்தவர்கள், ஒரு கண், ஒரு கால் உடையவர்களாக தவித்தனர். தேவியின் ஆயுதங்களால் அடி பட்டு தலை கீழை விழுந்த பின்னும் கப3ந்த உருவங்கள் யுத்தம் செய்ய வந்தனர். தேவியின் கையிலிருந்த உயர்ந்த ஆயுதங்கள் கூட அவர்களின் மனோ பலத்தை குறைக்கவில்லை. துரிய லயம் இவற்றுடன் நாட்டியமாடினர் சிலர். இந்த கபந்த உருவங்கள் தேவியை நில், நில் என்று கத்தியபடி துரத்தினர். தலையில்லாத இவைகளின் கைகளில் தூக்கிப் பிடித்த வாளும், சக்தி, இஷ்டி போன்ற ஆயுதங்கள் வேறு. வசுந்தரா என்ற பூமி கீழே விழுந்த யானைகள், குதிரைகள், உடைந்த ரதங்கள் ஆகியவைகளால் நிறைந்தது. ரணகளத்தில் கால் வைக்க இடமில்லை. மாபெரும் யுத்தம் மேலும் தொடரவும், வற்றிக் கிடந்த மகா நதிகள் பெருக்கெடுத்து ஓடின. அசுர சைன்ய மத்தியில், அசுர, யானை. குதிரை சடலங்களுக்கிடையில் பிரவகித்து ஓடியது. க்ஷண நேரத்தில் அந்த மகா சைன்யம் மிச்சமின்றி தேவியால் அழிக்கப்பட்டது. அக்னி, உலரந்த புல், கட்டைகளை எரிப்பது போல. தேவியின் வாகனமான சிங்கமும், பிடறியை சிலிர்த்து, பெரும் கர்ஜனை செய்தபடி ரணகளத்தில், நடமாடியதைப் பார்க்க அசுர உடல்களில் உயிர் மீதம் உள்ளதா என்று தேடுவது போல இருந்தது. தேவியின் கணங்களும் –வீரர்களும்- பயங்கரமாக யுத்தம் செய்ததை கொண்டாடி தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
தேவி மாஹாத்ம்யம் – தேவியின் மகிமை
சண்டிகா தேவியை வணங்குகிறேன் — என்று துவங்குகிறது இந்த துதி பாடல். இதை முதலில் சொன்னவர் மார்கண்டேய ரிஷி. ஒரு சமயம் அவர் சொன்னார். – மனுவின் வம்சத்தில் எட்டாவது மனு – சூரியனின் மகன் சாவர்ணீ என்பவன் சாதாரணமாக சூரிய புத்திரனாக தோன்றியவன் தான். அவனை ஒரு மன்வந்திரம் எனும் காலம், அரசனாக உயர்த்தி வைத்தது தேவியின் கருணை. அந்த கதையை விவரமாக சொல்கிறேன் கேள்.
வெகு நாட்களுக்கு முன் சித்திர வம்சம் என்ற வம்சத்தில் பிறந்த சுரதன் என்பவன் அரசனாக பூமியை ஆண்டு வந்தான். தன் பிரஜைகளை தன் புத்திரர்களாகவே கருதி, நியாயமாக ஆண்டு வந்தான். விதி அவனையும் விட்டு வைக்கவில்லை. கோலாவித்4வம்சகர்fகள் என்ற சத்ருக்கள் படையெடுத்து வந்து பயங்கரமாக யுத்தம் செய்தனர். இத்தனைக்கும் அவர்கள் படை பலமும் மிகக் குறைவே. சுரதன் அவர்களiடம் தோற்றதில் அவமானம், துக்கம் அடைந்தாலும், திரும்ப ஊர் வந்து ராஜ்ய பாலனத்தை செய்து வந்தான். ஆனால் எதிரிகள் தந்திரமாக, அவனுடைய மந்திரிகளை தன் வசப்படுத்திக் கொண்டு, நாலா புறமும் சூழ்ந்து கொண்டனர். இது வரை விசுவாசமாக இருந்த மந்திரிகளே துஷ்டர்களாக, துராத்மாக்களாக ஆனார்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தனர். அரசனுடைய பொக்கிஷம் சூறையாடப்பட்டது. படைகள், சேனை வீர்ர்களை அபகரித்தனர். தன் ஊரிலேயே அன்னியனாக நடத்தப் பட்டான். மனம் நொந்து போன அரசன் வேட்டையாடும் சாக்கில் காட்டுக்கு வந்தான். அரசனாக, மதிப்புடன் வாழ்ந்தவன், அந்த ராஜ மரியாதை பறி போனபின் திரும்ப ராஜ்யத்திற்கு போக விரும்பாமல், தான் எறி வந்த குதிரையில் அடர்fந்த கானகம் வந்து சேர்ந்தான். அமைதியான சூழ்நிலையில் சிஷ்யர்கள் புடை சூழ இருந்த ஒரு முனிவரைக் கண்டான். சிறந்த அறிஞர்
அந்த முனிவர் என்பதும் தெரிந்தது. இதமான அந்த சூழ்நிலையே அவன் மனதுக்கு ஆறுதல் அளiத்ததால் அங்கேயே தங்கினான். முனிவரும் இனிமையாகப் பேசி உபசாரம் செய்தார். ஆசிரமத்துள் மனம் போனபடி சுற்றிச் சுற்றி வந்த சமயம் மனம் மட்டும் கொந்தளiத்த வண்ணமே இருந்தது. எப்படி இருந்த தன் மக்கள். பாசத்தைக் கொட்டி வளர்த்தது எல்லாமே வீணா ? என் முன்னோர்கள் பாலித்த நகரம் என்னால் அழிந்து விட்டதே. என் மக்களும், குழந்தைகளும் எப்படி இருக்கிறார்களோ ? மந்திரிகளும், அதிகாரிகளும் நியாயமாக ஆள்கிறார்களோ இல்லையோ, சூரஹுஸ்தி தான் பிரதான மந்திரி. எப்பeaழுதும் மதாந்தமாகவே இருப்பவன். அவனும் எதிரி வசம் ஆகி விட்டானோ? என்னை அண்டி எவ்வளவு சுகங்களை அனுபவித்தார்கள். தனம், போஜனம், என் செல்வாக்கு எல்லாவற்றையும்
அனைத்தையும் கொடுத்தேனே. இfப்பொழுதும் அதே போல் வேறு ஏதோ அரசனுக்கு அடிபணிந்து வாழ்வார்கள். செலவாளiகள். வேண்டாத இடத்தில் காசை கரியாக்குவார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு பொக்கிஷத்தை பாதுகாத்து நிரப்பி வைத்திருந்தேன். அவ்வளவும் வீணாகப்போகிறது. இவ்வாறு எண்ணி எண்ணி மாய்ந்தான். ஒரு நாள், ஆசிரமத்தில் ஒரு புது முகம். வைஸ்யன் ஒருவனை சந்தித்தான். யார் நீங்கள் ? இங்கு வரக் காரணம் என்ன ? என்று கேட்டான். உங்களைப் பார்ததால் கஷ்டத்தில் அடி பட்டவராகத் தெரிகிறது. முகம் வாடி இருக்கிறீர்கள். எதனால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டீர்களோ? இவ்வாறு உள்ளன்போடு அரசன் வினவியதும், அந்த வைஸ்யன் உணர்ச்சி வசப்பட்டான். அரசனை வணங்கி தலை குனிந்தவாறு தன் கதையைச் சொல்லலானான்.
வைஸ்யன் சொன்னான் –
என் பெயர் சமாதி4. வியாபாரி. பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.
மனைவி. மக்கள் எல்லாம் உண்டு. என் போதாத காலம், அவர்களுக்கு செல்வம் பெரிதாகி விட்டது. என்னை உதறி விட்டார்கள். அறிவிலிகள். அன்போ, இரக்கமோ இல்லாத அசடுகள். என்னால் தாங்கவே முடியவில்லை. தன்னைச் சார்ந்தவர்கள் என்று நம்பிய என்னை இப்படிக் கூட அலட்சியம் செய்வார்களா? மனம் வெறுத்து தான் காட்டுக்கு வந்தேன். ஆனால் இங்கும் அவர்களையே எண்ணி கவலைப்படுகிறேன். எப்படி இருக்கிறார்களோ ? என் மகனும், மற்றவர்களும் நலமாக இருக்கிறார்களா? என்ன செய்வார்கள் ? வீட்டு நிலைமை சீராக இருக்கிறதா? என் மகன்கள் திருந்தினார்களா? அல்லது அதே போல் துஷ்டர்களாக மனம் போனபடி போகிறார்களா, இதே கவலை என் மனதை வாட்டுகிறது என்றான்.
அரசன் சொன்னான் –
லோபிகள் என்று சொல்லி விட்டீர்கள். உங்களையும் அலட்சியம் செய்து துரத்தி விட்டார்கள். அவர்களiடம் உங்களுக்கு ஏன் இந்த பாசமும், பந்தமும் உங்களுடைய இந்த கவலையும், அங்கலாய்ப்பும் அவர்களுக்கு உரியதேயல்ல.
வைஸ்யன் சொன்னான் –
நீங்கள் சொல்வது சரிதான். என்ன செய்வேன். அவர்களுடைய அலட்சியமும் அட்டகாசமும் கூட, நான் அவர்களiடம் கொண்டிருந்த பாசத்தை அழிக்கவில்லையே. தந்தை, குடும்பத் தலைவன் என்ற மரியாதை கூட இல்லாமல் பணம் தான் பெரிது என்று என்னை விரட்டியவர்கள் தான். கணவன் என்றோ, உறவினன் என்றோ மற்றவர்களும் நினைக்கவில்லையே. ஆனாலும் என் மனம் அவர்களையே நினைத்து வாடுகிறது. நீங்கள் மகானாகத் தெரிகிறீர்கள். அறிவு உடையவர். ஏன் என் மனம் இப்படி அலை பாய்கிறது? குணம் இல்லாதவர்கள் அவர்களை இன்னமும் ஏன் உறவினன் என்றும் பந்துக்கள் என்றும் நம்புகிறேன். கவலைப்படுகிறேன். ஏன் ? என்ன செய்தால் எனக்கு மன அமைதி கிடைக்கும் சொல்லுங்கள். இருவருமாக பேசிக் கொண்டே முனிவரிடம் வந்தனர். சமாதி4 என்ற வைஸ்யனும், சுரதன் என்ற அரசனும் முனிவரை வணங்கி அவர் அருகில் அமர்ந்தனர். அரசன் முனிவரைக் கேட்டான்.
பகவன் , உங்களை ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். பதில் சொல்வீர்களா ? என் மனதில் ஏன் இந்த துக்கம் ? என் மனதை அடக்கவே முடியவில்லையே. என்னுடையது என்று இருந்தது அனைத்தையும் இழந்து விட்டேன். ராஜ்யம் போயிற்று. அரசு சம்பந்தமான எல்லாம் விலகியது. எனக்குத் தெரிந்தும், அறிவிலி போல ஏன் இப்படித் தவிக்கிறேன் ? இதோ இந்த வைஸ்யனும் தன் மனைவி, குழந்தைகள், சுற்றத்தார்களாலேயே துரத்தப்பட்டிருக்கிறான். இவனும், தன்னைத் தியாகம் செய்து விட்ட பந்துக்களையே நினைத்து வாடுகிறான். இவனுக்கும் அவர்கள் இழைத்த துரோகம் பெரிது. நாங்கள் இருவருமே வருத்தத்துடன், என் மக்கள், என் பந்துக்கள் என்ற எண்ணங்களால் அலைக்கழிக்கப் படுகிறோம். தவறு அவர்களுடையது தான். விலகி இருக்கவே காட்டுக்கு வந்தோம். ஆனால் மோகம் எங்களை விடவில்லை. விவேகம் கை கொடுக்கவில்லை. மூடத்தனம் தான் எங்கள் இருவரையும் ஆட்டிப் படைக்கிறது. என்ன செய்வோம் ?
ரிஷி சொன்னார். (46)
ஞானம் என்பது அனைத்து ஜந்துக்களுக்கும் உண்டு. புலன்களுக்கு புலனாகும் விஷயங்கள் ஜீவனை தன் வழியில் இழுத்துச் செல்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தன் பக்கம் ஜீவனை இழுப்பதால் தடுமாறுகிறான். சில பிராணிகள் பகலில் குருடாக இருக்கின்றன, மற்றவை இருள் சூழ்ந்தால் கண் தெரியாமல் தவிக்கின்றன. பார்க்கப் போனால், ஞானி என்பவனும் மனிதனே. பசு, பக்ஷி, மிருகங்களோ, மனிதனோ, ஞானியோ எல்லாமே ஒன்று தான். பக்ஷி, மிருகங்களுக்குத் தேவையான அறிவு அவைகளுக்கு வாய்த்திருப்பது போலவே, மனிதர்களுக்குத் தேவையான அறிவை நிரம்பப் பெற்றிருப்பவன் ஞானி. ஒரு விதத்தில் இரண்டும் சமமே. இவைகளைப் பாருங்கள். பறவைகள் தன் குஞ்சுகளுக்கு அலகால் ஊட்டி வளர்க்கிறது. இது அறிவு இல்லையா? க்ஷண நேரம் தாய் பறவை பிரிந்தாலும் பசியால் வாடி அலறுகின்றன அந்த குஞ்சுகள். மனிதனும் அப்படித்தான். வ்யாக்ரம் என்ற புலி போல கவனமாக ஆண்டதாக சொல்கிறாயே, ராஜன், மனிதர்களும், தங்கள் புத்திரர்கள், சுற்றத்தார் என்ற பாசப் பிணைப்பு உள்ளவர்களே. பிரதி உபகாரம் எதிர்பார்த்தா அன்பு செலுத்தினாய் ? யோசித்துப் பார். இருந்தும், என்னுடையவர்கள், நான் சேமித்து வைத்தது என்று உன் மனம் அலை பாய்கிறது. மோகத்தில் ஆழ விழுந்து விடுகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? மகாமாயை என்ற நம் சித்தத்திற்கு எட்டாத அளவில்லாத சக்தி எனும் தேவி தான். அவள் பிரபாவம் தான், ஸம்ஸாரம், ஸ்திதி, (ஸம்ஹாரம்) என்ற நிலைகளை உருவாக்குகிறது. அதனால் நடக்கக்கூடாதது உங்களுக்கு மட்டும் தான் நடந்து விட்டதாக எண்ணி கவலைப்படாதீர்கள். இவள் உலக நாயகனான பகவான் விஷ்ணுவின் யோக நித்ரா எனப்படுவாள். ஹரியினுடைய மகாமாயை – உலகை மயக்குபவள் இவளே. நல்ல அறிஞர்களுடைய மனதையும், இந்த தேவி, பலாத்காரமாக திருப்பி மோகத்தில் ஆழ்த்துகிறாள். எதற்கு ? அவளால் தான் இந்த சராசரமான – அசையும், அசைவில்லாத -உலகம் முழுவதும் ஆட்டி வைக்கப்படுகிறது. இவளே மனமிரங்கி வரங்களும் தருவாள். அரசர்களiன் கஷ்டங்களைத் தீர்ப்பாள். சனாதனீ – என்றும் அழியாமல் இருப்பவள் – இவள் தான் அறிய வேண்டிய அறிவின் எல்லை. சர்வேஸ்வரியான இவள் தான் ஸம்ஸாரம், பந்தம் இவைகளுக்கு காரணம்.
அரசன் கேட்டான் (59)
பகவன், யாரது? யாரை நீங்கள் மகாமாயா என்று சொல்கிறீர்கள்? பெரியவரே, எங்கு தோன்றியவள் ? என்ன செயல் அவளுடையது ? எப்படி அவளுக்கு இந்த அளவு சக்தி வந்தது? எப்படி இருப்பாள் ? உருவம் என்ன? அவள் பிறப்பிடம் எது? எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுங்கள். தாங்கள் ப்ரும்ம ஸ்ரூபத்தை அறிந்த ஞானிகளiலும் சிறந்த ஞானி என்பதை அறிவேன் என்றான்.
ரிஷி சொன்னார் (63)
நித்யமான வஸ்து என்றால், இந்த மகாமாயா தான். உலகில் இவளால் தான் இயக்கம், அதாவது செயல் என்பதே வந்தது எனலாம். எப்படித் தோன்றினாள், சொல்கிறேன் கேளுங்கள். தேவர்களின் காரிய சித்திக்காக இவள் தோன்றினாள் – ஆவிர்பவித்தாள். நித்யா என்ற இவள் கதையை நான் கேட்டபடி சொல்கிறேன்.
சமுத்திர மத்தியில் பகவான் விஷ்ணு சயனித்து இருந்தார். கண் மூடி யோக நித்ரையில் ஆழ்ந்து இருந்தார். கல்ப முடிவு நெருங்கும் நேரம். இரண்டு அசுரர்கள் தோன்றினர். மது, கைடபன் என்ற பெயருடன். கோரமானவர்கள். பகவான் விஷ்ணுவின் காது அழுக்கில் தோன்றியவர்கள். ப்ரும்மாவையே அடிக்கக் கிளம்பினர். பகவானுடைய நாபி கமலத்தில் ப்ரும்மா இருப்பது தெரிந்திருக்கும். அவர் தான் பிரஜாபதி. ஸ்ருஷ்டித் தொழில் அவருடையது. இந்த அசுரர்களைப் பார்த்தவுடன் பகவான் தூங்குகிறாரே என்று நினைத்தவர், பதட்டத்துடன் யோக நித்ரா என்ற தேவியை எழுப்பினார். பகவானை எழுப்பு என்று சொல்ல. இவள் வசிப்பது எங்கே தெரியுமா? ஹரி என்ற பகவானின் கண்கள் தான் இவள் இருப்பிடம். இவள் விஸ்வேஸ்வரி. உலகை காப்பவள் இவள் தான். இவளே ஸ்திதி ஸம்ஹார காரிணி. பகவான் விஷ்ணுவின் நித்திரை – இவளே நித்திரா தேவி. பகவானுடைய அளவில்லா தேஜஸால் இவள் பலம் பெற்றாள்.
ப்ரும்மா சொல்கிறார் (72)
தேவி, நீதான் ஸ்வாஹா, நீயே ஸ்வதா, வஷட்காரமும் நீயே, வேதத்தின் ஸ்வரமாக இருப்பவளும் நீயே. சுதா என்ற அம்ருதமும் நீயே. 51 அக்ஷரங்களும் நீயே. மூன்று விதமாக அக்ஷரங்களுள் நீ விளங்குகிறாய். அந்த அக்ஷரத்தின் அரை மாத்திரையிலும் நீ நித்யாவாக விளங்குகிறாய் என்று விசேஷமாக உன்னைச் சொல்வார்கள். நீ தான் ஸந்த்3யா, ஸாவித்திரி, நீ தான் ஜனனீ – தாயாக இருப்பவள். இந்த உலகம் நிலை பெற்று இருப்பது உன்னால் தான். உன்னால் தான் உலகில், பிறப்பும், படைத்தலும் நடக்கின்றன. உலகை காப்பவள் நீயே. இதன் முடிவும் நீயே. நீ ஸ்ருஷ்டி ரூபமாக இருக்கும் பொழுது, உலகம் தோன்றியது. ஸ்திதி ரூபமாக இருக்கும் பொழுது உலகம் பாலிக்கப் படுகிறது. முடிவில் ஸம்ஹ்ருதி ரூபமாக விளங்குகிறாய். இந்த உலகமே உன் ஸ்வரூபம் தான் தாயே, நீயே மகா வித்3யா, மகாமாயா, மகா மேதா4 (அறிவு) , மகா ஸ்ம்ருதி (நினைவாற்றல்), மகா மோகா, மகா தேவி, மகாசுரி. உலகின் இயல்பே நீதான். முக்குணங்களாக விளங்குகிறாய் தாயே. கால ராத்திரி, மகா ராத்திரி, மோக ராத்திரி என்று பயங்கரமாகவும் காட்சி தருகிறாய். நீ தான் ஸ்ரீ என்ற லக்ஷ்மி, ஈஸ்வரி நீயே, ஹ்ரீ எனும் புத்தியும் நீயே. அறிவைத் தருவதும் உன் அடையாளமே. லஜ்ஜை, புஷ்டி, துஷ்டி, சாந்தி, க்ஷாந்தி என்றும் உன்னை குறிப்பிடுவர். சௌம்யமாக இருக்கும் பொழுது நீ பரமேஸ்வரி. அதே சமயம், கோரமான ஒரு உருவமும் உனக்கு உண்டு. அந்நிலையில், கையில் வாள், சூலம், ஏந்தி பயங்கரமாகத் தெரிவாய். க3தை4. சக்ரம்,. சங்கம், அம்பு , வில், பு4சுண்டி, பரிக4ம் என்ற மரக்கட்டை இவைகளும் உன் ஆயுதமே. உலகில் உள்ள நல்லதோ, பொல்லாதோ, எந்த பொருளில் எந்த சக்தி உள்ளதோ, அந்த சக்தி நீ தான். இப்படித்தான் உன்னைத் துதிக்கிறார்கள். உன்னை யாரால் துதிக்க முடியும் ? விஷ்ணுவோ உறங்கிக் கொண்டிருக்கிறார். என்னையும், ஈசனையும் தோற்றுவித்து, கடமைகளை கொடுத்த அவரே தான், உன்னை ஏவ முடியும். அவரையன்றி நாங்கள் துதி செய்யக் கூட தயங்கி, உன் பிரபாவம், சக்தியை அறிந்ததால் வேண்டிக் கொள்கிறோம்.
தேவி, தயை செய். இந்த அசுரர்களை மோகத்தில் ஆழ்த்து. மது4, கைடப4ர்கள், அளவில்லாத பலம் உடையவர்கள். இவர்களை வதைக்க ஜகன்னாதனான பகவானை எழுப்பு, சீக்கிரம். அவரால் தான் முடியும் இவர்களை நிக்ரஹம் செய்யச் சொல்.
ரிஷி சொன்னார் (88)
இப்படி அவர்கள் துதி செய்யவும், தாமஸி என்பவளாக, மது4, கைடப4ர்களை அழிக்க, விஷ்ணுவை எழுப்ப வேண்டுமே , அதனால், அவருடைய கண்கள், முகம், மூக்கு, புஜங்கள், ஹ்ருதயம், வயிற்று பாகங்களiல் புகுந்து புறப்பட்டு கண்களiலிருந்து விலகி நின்றாள். அவள் விலகியதும், ஜகந்நாதன் எழுந்தார். தூக்கம் கலைந்து ஜனார்த3னன் விழித்துக் கொண்டார். கடல் நடுவில் பாம்பு படுக்கையில் படுத்த நிலையிலேயே அந்த இருவரையும் கண்டார். துராத்மாக்களான மது கைடபர்கள். நிரம்ப பலமும் வீர்யமும் உடையவர்கள். கோபத்தால் சிவந்த கண்களுடன், கொல்லத் தயாராக, ப்ரும்மாவை துரத்தியபடி இருந்தவர்களைக் கண்டார். உடனே நன்றாக எழுந்து, ஹரியான பகவான், தானே அவர்களை எதிர்த்தார்.
ஐயாயிரம் ஆண்டுகள் இருவரும் கை கலந்தனர். மகா மாயாவினால் மோகத்தில் தள்ளப் பட்டவர்கள் அதிசயமான பலத்துடன் மதம் கொண்டவர்களாக ஆனார்கள். கேசவா, என்ன வரம் வேண்டும் கேள் என்று அகங்காரமாக உரைத்தனர்.
ஸ்ரீ பகவான் சொன்னார் (96)
நீங்கள் இருவரும் என் கையால் மாளப் போகிறீர்கள். ஆனாலும் திருப்தியாக சாகுங்கள். எனக்கே வரம் தரத் துணிந்தவர்கள். எனக்கென்ன வரம் வேண்டும். – இது தான் – என் கையால் உங்களை வதைக்க வேண்டும் என்றார்.
ரிஷி சொன்னார் (99)
ஆகா, ஏமாந்தோமே, என்று இருவரும் திகைத்தனர். நாலாபுறமும் நீர் சூழ்ந்து கிடந்த அந்த சமுத்திர மத்தியில், தைரியம் கை கொடுத்தது. ஆகட்டும். தண்ணீர் சூழ இல்லாத இடத்தில் எங்களை கொல்வாயாக என்றனர்.
ரிஷி சொன்னார் (102)
அப்படியே ஆகட்டும் என்ற பகவான், சங்கம், சக்ரம், கதை என்ற ஆயுதங்களை ஏந்தியவர், தன் துடையிலேயே இருவரையும் சக்ரத்தால் துண்டித்தார். இப்படி ப்ரம்மா துதித்து தன்னை வெளிப் படுத்திக் கொண்டவள் தான் இந்த மகா மாயா. இவள் சக்தி பற்றி இன்னமும் சொல்கிறேன், கேளுங்கள்.
(ஊர்வி – பூமி. அவர்கள் கேட்டது, நீர் சூழாத பூமியில். ஊரு-துடை, ஊர்வி- துடையில் என்று பொருள் பெறும். வார்த்தையில் விளையாடி, மது கைடபர்களை அழித்ததாக ஆகும்.)